Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் மாற்றங்களுக்கு மக்கள் விரைந்து இசைவாக்கத்தக்க வகையில் ஊடகங்களும்.. சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களும்... உயர்கல்வி நிறுவனங்களும் செயற்படனும்.

நான் அறிய ஊரில் கடும் மழை காலத்தில் கால்நடைகளை மேடை அமைந்த கொட்டகைகளில் கட்டுவதோடு.. உலர்ந்த சாக்கை விரித்து விடுவார்கள். உலர்ந்த சாக்கால் அதன் உடலை போர்த்திக் கட்டுவதோடு.. நிறை உணவை வழங்குவார்கள். கழிவுகளால் ஏற்படும் ஈரத்தன்மையை நீக்கும் வகையில் தினமும் காலையில் சுத்தம் செய்வார்கள். மீண்டும் உலர்ந்த சாக்கை நிலத்தில் விரிப்பது அல்லது வைக்கோல் போட்டு விடுவார்கள்.

இதே தான் மேற்கு நாடுகளிலும் கொஞ்சம் மேம்படுத்திய வகையில் செய்வதோடு.. கூடிய குளிர் என்பதால் மூடிய கொட்டகைகளில் கால் நடைகளை வைத்துக் கொள்வார்கள் குளிர்காலத்தில். மேலும் கால்நடைகளின் உடலைச் சுற்றி போர்வை போர்த்தி விடுவார்கள்.

இது ஊருக்கும் பொருந்தும். 

Raising calves that thrive in the winter | UMN Extension

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2022 at 15:55, குமாரசாமி said:

நான் ஊரிலை இருக்கேக்கை  குளிர் நேரம் தென்னம் கோம்பை மூட்டி குளிர் காய்ஞ்சிருக்கிறன்....

என்னண்ண சொல்லுறீங்க.. இந்த திருவெம்பாவைக்குள்ள குளிருக்க நடுங்கிக் கொண்டு தானே கோயிலுக்கு போறது. விடிய சுடுதண்ணி வைச்சு தானே குளிக்கிறது. 

ஏதோ ஊரில.. இப்ப தான் இதெல்லாம் என்ற மாதிரி சனம் படோபகாரம்.. பண்ணுது. மாசிப் பனி மூசிப் பெய்யும் என்ற பழமொழி கூட உண்டு. 

என்ன முந்திய தலைமுறை பெரியவர்களின் வழிநடத்தலில் காலநிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ளும். இப்ப ஆக்கள் எல்லாம்.. ஒரு முன்னேற்பாடும் செய்வதில்லை. முன்னர் மாரி காலம் என்றால்.. விறகு சேகரித்து வைப்பார்கள். உலர் ஊமல்.. கோம்பை சேகரித்து வைப்பார்கள். வைக்கோல் சேகரித்து வைப்பார்கள். மாடு ஆடுகளை மேடை போட்டு கொட்டகை அமைச்சு கட்டுவினம். இதெல்லாம் எல்லாம் வீட்டிலும் ஒரு நடைமுறையா இருந்திச்சு. சனம் ஒருவருக்கு ஒருவர் இதுக்கு இன்னதுதான் நடைமுறை என்பதை அறிந்து கொள்ளுவினம். ஊர் கிழவிங்க.. கூடிக் கதைச்சு பரிமாறிக் கொள்ளுவினம். இதில் திண்ணைப் பேச்சினால் நன்மைகள் விளைவதும் உண்டு. 

Edited by nedukkalapoovan
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நுளம்புக்காக வேப்பம் கொட்டைகளை கூட சேர்த்து வைப்பார்கள். இப்ப இதைச் சொல்லிக் கொடுக்க ஆக்களும் இல்லை.. நாட்டமும் இல்லை. இவற்றின் பாதிப்புக்களை சமூகத்தில் பல வகைகளில் காணலாம். அதில் இவையும் அடங்கும். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கால் நடைகள்pன் இறப்பு வன்னியில்தான் இறப்பு அதிகாமாகி இருக்கிறது. அங்கே கால்நடைகளும் அதிகம். அத்துடன் திறந்த வெளிகளில் அவற்றை விடுவதும் ஒரு காரணம். எனைய இடங்கில் மழைக்காலங்களில் கொட்டில்களில் விடுவதால் மழையில் நனைவதும் அந்த ஈரத்தன்மை காரணமாக குளிரில் தவிப்பதும் தடுக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் 1660 கால்நடைகள் உயிரிழப்பு - விவசாயத்துறை அமைச்சு

By VISHNU

12 DEC, 2022 | 07:55 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் கடந்த வாரம் நிலவிய கடும் குளிருடனான காலநிலை காரணமாக இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரை 1660 மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள கடைகள் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தன.

கிழக்கு மாகாணத்தில் இறந்த கால்நடைகள் மற்றும் ஆடுகளை மனித நுகர்வுக்கு விற்க முயற்சிப்பதாக வதந்திகள் பரவின.

இதன்மூலம், இவ்வாறான முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலசிய சீரற்ற காலநிலை காரணமாக இன்று நண்பகல் 12 மணி வரை மாடுகள் மற்றும் ஆடுகள் உட்பட மொத்தம் 1660 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/142935

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

வடக்கு, கிழக்கில் 1660 கால்நடைகள் உயிரிழப்பு - விவசாயத்துறை அமைச்சு

இயற்கை கூட….. தமிழ்ப் பகுதிகளைத்தான் வஞ்சிக்கின்றது.
சுனாமி, புயல், குளிர், மக்களின் வாழ்வாதரமான கால்நடைகள் இறப்பு என்று 
ஓரே தொடர்கதைதான். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கால்நடைகளின் அழிவைப் பார்க்க மனசை என்னவோ செய்கிறது......!  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவலையான விடயங்கள்.

இருந்தாலும் ஒரு கேள்வி
இலங்கையில் இப்போது என்ன வெப்ப நிலை? இணையத்தில் தேடிய போது இப்போது 23 - 24 பாகை என காட்டுகின்றதே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கவலையான விடயங்கள்.

இருந்தாலும் ஒரு கேள்வி
இலங்கையில் இப்போது என்ன வெப்ப நிலை? இணையத்தில் தேடிய போது இப்போது 23 - 24 பாகை என காட்டுகின்றதே?

போன 6ம் திகதி வவுனியாவில் 8 டிகிரிக்கு குறைந்துள்ளது. வன்னியின் ஏனைய பகுதியிலும் இப்படி ஆகீருக்கலாம்.

https://www.accuweather.com/en/lk/vavuniya/308927/december-weather/308927

 

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.