நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
தலைப்பிலேயே எழுத்துப்பிழை இருக்கின்றது! 🤪 காணோளி - தவறு காணொளி, காணொலி - இன்னதில் எது சரியாகும்? `காணொளி` என்பதுதான் சரியானது. அச் சொல்லே நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது. அண்மையில்தான் `காணொலி` என மிகைத் திருத்தம் செய்துள்ளார்கள். `Video` என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லாகவே `காணொளி` என்ற சொல்லாக்கம் செய்யப்பட்டது. `Video` என்ற சொல்லின் வேர்ச்சொல்லும் காண் (videre > see ) என்ற பொருளிலேயே வந்துள்ளது. பின்னர் இச் சொல்லிருந்தே பல ஆங்கிலச் சொற்கள் உருவாகின. அந்த வகையில் காணொளி எனச் சரியாகவே எழுதி வந்த எம்மைச் சிலர் Video இல் காண்பதுடன் கேட்கவும் செய்கின்றோமே என்று சொல்லி, `காணொலி`என மிகைத் திருத்தம் செய்துவிட்டார்கள். இதற்கு இவர்கள் `வானொலி` என்ற எடுத்துக்காட்டினைக் காட்டுவார்கள். வானிலிருந்து வந்த ஒலி என்ற வகையிலும், அதில் கேட்டலே முதன்மை என்பதாலும் அச் சொல் சரியானதே. இங்கு காணொளியில் காட்சியே முதன்மையானது. தமிழில் இரு சொற்கள் சேரும் போது இரண்டாவது சொல்லின் பொருளே முதன்மை பெறும் (எ.கா = பேருந்து ). இதற்கமைய `காணொலி` என்றால் அங்கு ஒலியே முதன்மையாகிவிடுமல்லவா! அது தவறு. காட்சியே முதன்மை. எனவே காணொளி தான் சரியானது. தமிழில் `எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே` என்கின்றது தொல்காப்பியம். அந்த விதிக்கமையச் சொல்லாக்கினால்; ஒளியினைத் தான் காண முடியும், காணும் ஒளி (காண் + ஒளி = காணொளி) என்ற பொருளில் காணொளி என்பதே சரியாகும். "காண் ஒளி என்பது கண்ட ஒளி, காண்கின்ற ஒளி, காணும் ஒளி என்று வினைத்தொகையாய் அமைந்து தெளிந்த பொருள் தருகிறது" என்பார் கவிஞர் மகுடேசுவரன். "காண்+ஒலி=காண்கின்ற ஒலியாகி, பொருளே மாறி விடும்" என்பார் முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான். எனவே முடிவாகக் கூறினால் `காணொளி` என்பதே சரியான தமிழ்ச்சொல்லாகும். ஆதாரம்: குவேரா https://qr.ae/prMaay
-
ஆனால் தமிழர்கள் அரியவகையில் சேர்மதி இல்லை!🤭
-
இந்த கருத்து தை 20 திகதியில் இட்டிருந்தேன், தங்கம் தொடர்பான எனது அப்போதய அபிப்பிராயமாக இருந்தது, 1900 இனை விலை உடைத்து கீழிறங்கும்போது விற்க தீர்மானித்தேன். தற்போது தங்கத்தினை விற்கும் வர்த்தகம் மட்டும் தற்காலிகமாக செய்யும் எண்ணம் உள்ளது விலை உயரும் போது தங்கத்தினை விற்கவுள்ளேன்.
-
தங்கம் 1950 விலையினை Re test (Bull trap) செய்து பின்னர் முக்கிய வலயமான 1900 வலயத்தினை விட்டு கீழிறங்கியுள்ளது. விலை 1926 வலயத்தில் குறுகிய வலயத்திற்குள் விற்பனையாகி கொண்டிருந்த போது விலை 1950 அல்லது 1900 இல் உடைத்த பின்பு வர்த்தகம் செய்வது ஒப்பீட்டளவில் சாதகமானது. எதிர் வரும் வாரத்தில் தங்கத்தினை விற்கவுள்ளேன், ஆனால் விலை 1900 மீண்டும் வரும் போது(Test). https://www.tradeguider.com/mtm_251058.pdf Wyckoff வகையான ஆய்வு, இவர்களது தளத்தில் மின்னஞ்சல் பதிவு செய்தால் புதிய புத்தகம் இலவசமாக வழங்குவார்கள், இந்த புத்தகத்தில் உள்ள விடயங்கள்த்தான். இந்த புத்தகம் சுவாரசியமாக இருக்கும் வாசித்து பாருங்கள்.
-
By பாலபத்ர ஓணாண்டி · Posted
நன்றி தலைவரே இந்த கண்கொள்ளா காணொளிக்கு… ஞான் முக்தி அடைஞ்சு..😂
-
Recommended Posts