Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"அஜினோமோட்டோ" பற்றி... நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
No photo description available.   
 
*அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?*
*அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?*
அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...!
பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி,
நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்...
 
அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும்.
ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று...
ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?
 
அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...
அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது..
 
உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,
இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்..
ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சிவோவை தலைமையிடமாக கொண்டு,
கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,
 
அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed )
வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும்.
முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர் தரமானதாக இருந்தது.
 
ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்து,
வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும்,
அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..
 
Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரியமாகும்..
ஒரு முறை உண்டால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..
முதலில் இந்த glutamate ஐ உபயோகித்து, Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர்.
 
பிறகு இதன் அபாயமறிந்து, அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர்.
ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.
இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில், தவறாமல் இடம்பெறும் இந்த
அஜினோமோட்டோ உப்பை, பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்..
சாலையோர கடைகள் தொடங்கி, மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் வரை..
சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும்,
இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை..
 
முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான், அஜினோமோட்டோ தூவப்படும்
என்ற மாயை போய், தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்...
 
அது நாம் விரும்பியும், விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது,
குறிப்பாக குழந்தைகள்... அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ், கிரீம் பிஸ்கட்,
சாதாரண பிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள்,
டின்னில் வரும் மீன், சிக்கன்,ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, சமோசா,பப்ஸ்,
சாஸ் வகைகள், சோயா பொருட்கள், சாக்லேட்கள், KFC, Pizza , Maggi மற்றும்
சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,
 
*உண்பதால் வரும் பக்க விளைவுகள்:-*
1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி
 
2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால், அதிகமான பசி எடுக்கிறது.
நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது,
பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால்,
தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.
 
3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்..
ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.
 
4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும்.
 
5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சில நேரம் வலியும் உருவாக்கும்.
 
6. முகத்தில் எந்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள்,
அரிப்பும் தோன்றும், சிலரது முகம் கருத்திருக்கும்.
 
7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை ,
அதீத வியர்வை சுரப்பியால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல்,
கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.
 
8. இவை எல்லாம் ஒரு நாள், நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..
 
அஜினோமோட்டோவை தவிர்ப்போம்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தலைப்பிலேயே எழுத்துப்பிழை இருக்கின்றது! 🤪 காணோளி - தவறு     காணொளி, காணொலி - இன்னதில் எது சரியாகும்? `காணொளி` என்பதுதான் சரியானது. அச் சொல்லே நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது. அண்மையில்தான் `காணொலி` என மிகைத் திருத்தம் செய்துள்ளார்கள். `Video` என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லாகவே `காணொளி` என்ற சொல்லாக்கம் செய்யப்பட்டது. `Video` என்ற சொல்லின் வேர்ச்சொல்லும் காண் (videre > see ) என்ற பொருளிலேயே வந்துள்ளது. பின்னர் இச் சொல்லிருந்தே பல ஆங்கிலச் சொற்கள் உருவாகின.     அந்த வகையில் காணொளி எனச் சரியாகவே எழுதி வந்த எம்மைச் சிலர் Video இல் காண்பதுடன் கேட்கவும் செய்கின்றோமே என்று சொல்லி, `காணொலி`என மிகைத் திருத்தம் செய்துவிட்டார்கள். இதற்கு இவர்கள் `வானொலி` என்ற எடுத்துக்காட்டினைக் காட்டுவார்கள். வானிலிருந்து வந்த ஒலி என்ற வகையிலும், அதில் கேட்டலே முதன்மை என்பதாலும் அச் சொல் சரியானதே. இங்கு காணொளியில் காட்சியே முதன்மையானது. தமிழில் இரு சொற்கள் சேரும் போது இரண்டாவது சொல்லின் பொருளே முதன்மை பெறும் (எ.கா = பேருந்து ). இதற்கமைய `காணொலி` என்றால் அங்கு ஒலியே முதன்மையாகிவிடுமல்லவா! அது தவறு. காட்சியே முதன்மை. எனவே காணொளி தான் சரியானது. தமிழில் `எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே` என்கின்றது தொல்காப்பியம். அந்த விதிக்கமையச் சொல்லாக்கினால்; ஒளியினைத் தான் காண முடியும், காணும் ஒளி (காண் + ஒளி = காணொளி) என்ற பொருளில் காணொளி என்பதே சரியாகும். "காண் ஒளி என்பது கண்ட ஒளி, காண்கின்ற ஒளி, காணும் ஒளி என்று வினைத்தொகையாய் அமைந்து தெளிந்த பொருள் தருகிறது" என்பார் கவிஞர் மகுடேசுவரன். "காண்+ஒலி=காண்கின்ற ஒலியாகி, பொருளே மாறி விடும்" என்பார் முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான். எனவே முடிவாகக் கூறினால் `காணொளி` என்பதே சரியான தமிழ்ச்சொல்லாகும். ஆதாரம்: குவேரா https://qr.ae/prMaay
    • ஆனால் தமிழர்கள் அரியவகையில் சேர்மதி இல்லை!🤭    
    • இந்த கருத்து தை 20 திகதியில் இட்டிருந்தேன், தங்கம் தொடர்பான எனது அப்போதய அபிப்பிராயமாக இருந்தது, 1900 இனை விலை உடைத்து கீழிறங்கும்போது விற்க தீர்மானித்தேன். தற்போது தங்கத்தினை விற்கும் வர்த்தகம் மட்டும் தற்காலிகமாக செய்யும் எண்ணம் உள்ளது விலை உயரும் போது தங்கத்தினை விற்கவுள்ளேன்.
    • தங்கம் 1950 விலையினை Re test (Bull trap) செய்து பின்னர் முக்கிய வலயமான 1900 வலயத்தினை விட்டு  கீழிறங்கியுள்ளது. விலை 1926 வலயத்தில்  குறுகிய வலயத்திற்குள் விற்பனையாகி கொண்டிருந்த போது விலை 1950 அல்லது 1900 இல் உடைத்த பின்பு வர்த்தகம் செய்வது ஒப்பீட்டளவில் சாதகமானது. எதிர் வரும் வாரத்தில் தங்கத்தினை விற்கவுள்ளேன், ஆனால் விலை 1900 மீண்டும் வரும் போது(Test). https://www.tradeguider.com/mtm_251058.pdf Wyckoff வகையான ஆய்வு, இவர்களது தளத்தில் மின்னஞ்சல் பதிவு செய்தால் புதிய புத்தகம் இலவசமாக வழங்குவார்கள், இந்த புத்தகத்தில் உள்ள விடயங்கள்த்தான். இந்த புத்தகம் சுவாரசியமாக இருக்கும் வாசித்து பாருங்கள்.
    • நன்றி தலைவரே இந்த கண்கொள்ளா காணொளிக்கு… ஞான் முக்தி அடைஞ்சு..😂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.