Jump to content

நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Courtesy: கட்டுரை: யதீந்திரா

சிங்களவர்களை விடவும் தமிழர்கள்தான் புத்திசாலிகள். இப்படியொரு பார்வை நம்மவர்கள் மத்தியிலிருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண மத்திய தரவர்க்கத்தினர் மத்தியில் அவ்வாறானதொரு பார்வையிருந்தது.

மோட்டுச் சிங்களவர்கள் என்று சிலர் சாதாரணமாக கூறிச்செல்வதை, எனது சிறிய வயதில், பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கின்றேன். இது சரியானதொரு பார்வைதானா -என்னும் கேள்வி இருந்துகொண்டேயிருந்தது.

2002இல், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், மானுடத்தின் தமிழ் கூடல் இடம்பெற்றது. முதல் நாள் நிகழ்வில் மு. திருநாவுக்கரசு (திருமாஸ்டர்) பேசுகின்றார். நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று சிங்களவர்கள் மூடர்கள் அல்லர்.

அவர்களின் இராஜதந்திர ஆற்றல் அபரிமிதமானது. மேற்குலகில் மக்கியவல்லியையும் பிஸ்மார்க்கையும் படித்த ஜே.ஆர்ஜெவர்த்தன, கீழைத்தேயத்தின் கௌடில்யரையும் படித்தார். கௌடியல்யர் கூறுகின்றார்.

உனக்கு இரண்டு எதிரிகள் இருந்தால், ஒரு எதிரியை நண்பணாகிக்கி, இன்னொரு எதிரியுடன் மோதவிடு, இறுதியில் உனது இரண்டு எதிரிகளும் இல்லாமல் போவார்கள். இதுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும்.

நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்! | Sri Lankan Political Crisis Tamil People India

ஒரு எதிரியான இந்தியாவை நண்பணாக்கி, இன்னொரு எதிரியான விடுதலைப்புலிகளுடன் மோதச் செய்தனர். சிங்களவர்களின் அபாரா இராஜதந்திர ஆற்றல் தொடர்பில் பார்வையாளார்களை, திரு திக்குமுக்காடச் செய்தார். அதே போன்று, வரலாற்றியலாளர் பேராசிரியர். இந்திரபாலா கூறிய ஒரு கருத்தையும் திருநாவுக்கரசு, நினைவுபடுத்தியிருந்தார்.

அதாவது, ஒரு குட்டித் தீவு, பிரமாண்டமான இந்தியாவிற்கு அருகில், இரண்டாயிரம் வருடங்கள் தனித்துவமாக தப்பிப்பிழைக்க முடிந்திருக்கின்றதென்றால், அது மூளையினால்தான் சாத்தியப்பட்டது. சிங்களவர்களின் அறிவாற்றல் தொடர்பில் விடுதலைப் புலிகளின் மேடையிலேயே திருநாவுக்கரசு புகழ்ந்து கொண்டிருந்தார்.

எனக்குள் எழுந்த கேள்வி, சரி, அவர்கள் மிகவும் திறமைசாலிகள் ஆனால் ஏன் இவற்றை தமிழர்களால் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியாமல் போனது? நாங்கள் புத்திசாலிகளல்லவா! சீன போரியல் நிபுணர் சன் சூ, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூறியது. நீ ஒவ்வொரு போரில் தோற்கின்ற போதும், எதிரி உன்னைவிட பலமானவனாக இருந்தனால்தான் நீ தோற்றுப் போனாய் என்று கூறாதே, நீ பலவீனமாக இருந்ததால் தோற்றுப் போனாய் என்று கூறு. ஆனால் நமது சூழலில் ஒரு பார்வைக் குறைபாடு உண்டு.

நாம் தோல்வியடையும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் மற்றவர்கள் மீதே விரல் நீட்டுகின்றோம். இந்தியாவின் மீது விரல் நீட்டுகின்றோம். அமெரிக்காவின் மீது விரல் நீட்டுகின்றோம். இல்லாவிட்டால், ஒட்டுமொத்த உலகத்தின் மீதும் விரல் நீட்டுகின்றோம். இது எவ்வாறென்றால், பரீட்சையில் சித்தியடைந்தால், அது மாணவனின் கெட்டித்தனம், பரீட்சையில் தோல்விடைந்தால், அது ஆசிரியரின் பிரச்சினை. இந்த சிந்தனைப் போக்கே எங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது.

2009இற்கு முன்னர் நம் அனைவரது விருப்பமும் விடுதலைப்புலிகள் வெற்றியடை வேண்டும் என்பதாகவே இருந்தது. 95 வீதமான தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளின் வெற்றியை எதிர்பார்த்திருந்தனர். ஏதாவது அதிசயங்கள் நடந்தாவது அவர்கள் வென்றுவிடுவார்கள் என்பதே சாமானிய தமிழனின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இறுதியில் அனைத்தும் நிராசையானது.

உண்மையில் அது வெறும் தோல்வியல்ல. நாம், நமது அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், சிந்திப்பதற்கும் கிடைத்த அரியதொரு சந்தர்ப்பம். ஆனால் அவ்வாறானதொரு தேடலை செய்ய நம்மால் முடியவில்லை. நமது தவறான அரசியல் புரிதல்களும், இயலாமைகளும் நம்மை தடுத்தது. இன்று யுத்தம் முடிவுற்று பதின்மூன்று வருடங்களாகிவிட்டது. இப்போதும் கூட, சுலோகங்களை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் முன்வைக்கும் சுலோகங்களில் எவற்றையுமே எங்களால் சாத்தியப்படுத்த முடியவில்லை.

இப்போதும் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றோம். சமஸ்டிதான் தேவையென்பதில் எவருக்கு முரண்பாடுண்டு? ஆனால் அதனை எவ்வாறு அடையப் போகின்றோம்? 1949இல், இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட போது, அதன் இலக்கு சமஸ்டி அடிப்படையிலான அரசியல் ஏற்பாடொன்றை பெறுவதுதான். ஆனால் அதனை அடைவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை செல்வநாயகம் புரிந்து வைத்திருந்தார்.

இதன் காரணமாகவே, ஆகக்குறைந்தளவிலாவது, சில அரசியல் எற்பாடுகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில், பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்பாடுகளுக்கு சென்றார். ஆனால் தென்னிலங்கையின் சிங்கள இனவாத அரசியல் சூழல், அதனை உள்வாங்கிக்கொள்ளவில்லை.

இதன் காரணமாகவே செல்வநாயகம் தனிநாட்டு கோரிக்கையை நோக்கி நகர்ந்தார். ஆனால் அதனை எவ்வாறு அடைவதென்னும் வழிமுறை அவருக்கு தெரியாது. அது என்ன வழிமுறை? இந்தக் கேள்விக்கு பதிலாக வந்ததுதான், தமிழ் ஆயுத இயக்க அரசியலாகும்.

தமிழர் அரசியல் எப்போது, ஆயுதவழிமுறையை தழுவிக் கொண்டதோ, அப்போதே அன்னிய தரப்புக்களின் தலையீடுகளும் தமிழ் அரசியலுக்குள் நுழைந்துவிட்டது. ஆயுத பயிற்சிக்காக பலதரப்பட்ட அன்னியர்களை அணுகும் போக்கும் உருவாகியது. தெரிந்தும், தெரியாமலும் பல்வேறு முகவர்கள் தமிழர் அரசியலுக்குள் பிரவேசித்தனர்.

இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் அதிகாரியான விக்டர் ஒட்ரோவ்ஸ்கி எழுதிய நூல், அந்தக் காலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. மொசாட் ஒரே நேரத்தில், இலங்கை இராணுவத்திற்கும் பொதுவாக புலிகளென்று அறியப்படும் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் பயிற்சியளித்தமை வெளிச்சத்திற்கு வந்தது.

அந்தக் காலத்தில் புலிகளென்று அறியப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான். அன்றைய உலக அரசியல் சூழலில், தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்குள், எவ்வாறெல்லாம் அன்னிய தரப்புக்கள் உள்நுழைந்தன என்பதற்கு, இதுவொரு சிறந்த உதாரணமாகும்.

எந்தவொரு அன்னிய தரப்பும் தங்களின் நலன்களை புறம்தள்ளி செயற்படாது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இந்தியா, ஈழத் தமிழர் பிரச்சினையில் நேரடியாக தலையீடு செய்தது. தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தது.

இதன் தொடர்சியாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றது. தமிழர்களின் நண்பனாக வடக்கு கிழக்கில் கால்பதித்த இந்திய அமைதிப் படையினர், எதிரியாக நாட்டைவிட்டு வெளியேறும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது.

இதன் பின்னரான மூன்று தசாப்த கால விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது.

முள்ளிவாய்காலுக்கு பின்னரான அரசியல் முற்றிலும் சம்பந்தனின், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் காலத்தை சம்பந்தனால் சரியாக கையாள முடிந்ததா? மீண்டும் தோல்வி தொடர்பிலேயே விவாதிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை உருவாகியது.

மகிந்த ராஜபக்ச காலத்தின் விடயங்கள் தொடர்பில் பேசுவதில் பயனில்லை. மகிந்த ராஜபக்ச முற்றிலும் வெற்றிப் பெருமிதத்தோடு மட்டும்தான் விடயங்களை அணுகியிருந்தார். எனவே மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கூட்டமைப்பால் விடயங்களை நகர்த்த முடியவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

ஆனால் 2015இல் தமிழர்களின் ஆதரவுடன் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் அப்படியல்ல. அது சில சாதகமான வாய்ப்புக்களை வழங்கியிருந்தது. இந்தியாவின் உதவியோடு சில விடயங்களை முன்னெடுப்பதற்கான வாய்புக்கள் ஏற்பட்டது. ஆனால் சம்பந்தன் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை. சாத்தியமற்ற புதிய அரசியல்யாப்பின் பெயரில் காலத்தை விரயம் செய்திருந்தார்.

அப்போது இந்தக் கட்டுரையாளர் உட்பட, பலரும் ஒரு விடயத்தை வலியுறுத்தியிருந்தனர். அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையை பலப்படுத்த முயற்சியுங்கள்.

இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதற்கு இந்தியாவின் உதவியை கோராலாம். ஏனெனில், யுத்தம் முடிவுற்ற பின்னர், 2009இல், இலங்கை அரசாங்கத்தை பாராட்டி மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், 13வது திருத்தச்சட்டம் அதற்கான அடிப்படையாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுற்ற உடனேயே ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் 13வது திருத்தச்சட்டம் வலியுறுத்தப்பட்டதிலிருந்து, விடயங்களை சம்பந்தன் தரப்பு புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

அதனை கவனமாக பற்றிப்பிடித்திருக்க வேண்டும். இங்கு 13இல் என்ன இருக்கின்றது, என்ன இல்லை என்பதல்ல விடயம். கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, பற்றிப்பிடிப்பதற்கு ஏதாவது ஒன்று வேண்டும். அது மரக்கட்டையாக கூட இருக்கலாம். கரை சேர்வதே முதல் தேவையாகும்.

ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதிய அரசியல் யாப்பு என்னும் பெயரில், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சம்பந்தன் நாசமாக்கினார். நாங்கள், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிக தூரம் பயணித்துவிட்டோம். புதிய அரசியல் யாப்பை நெருங்கிவிட்டோம், என்றவாறு கதைகள் சொன்னார். இறுதியில் அனைத்தும் புஸ்வானமாகியது. மீண்டும் தமிழர் அரசியல் நகர்வுகள் தோல்விலேயே முடிந்தது.

இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் தோல்வி பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கப் போகின்றோம். தோல்வி பற்றியே விமர்சித்துக் கொண்டிருப்பது? தோல்வி பற்றியே அங்கலாய்த்துக்கொண்டிருப்பது? நமது இயலாமைகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்திக்கொண்டிருப்பது? ஏன் நமது அரசியல் நகர்வுகள் தொடர்ந்தும் தோல்வியடைந்து கொண்டெயிருக்கின்றது?

ஒன்றில் நமக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லையா அல்லது நல்ல தலைவர்களை தமிழ் சமூகத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது தமிழர் அரசியல் ஏதோவொரு முள்ளில் சிக்கியிருக்கின்றதா, அதனை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? ஆனால் ஒவ்வொரு தோல்வியின் போதும், தமிழர்கள் அரசியல் ரீதியில் மட்டுமல்ல, சமூக பொருளாதார நிலையில் மேலும் பின்நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்களின் விளைவுகளை ஒரு சொல்லில் மதிப்பிடுவதனால், தீர்வும் இல்லை முன்னேற்றமும் இல்லை. சமூகரீதியான முன்னேற்றம் தொடர்பிலேயே இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. நாம் ஓய்வில்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றோம். எழுதிக் கொண்டிருக்கின்றோம். விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம். ஏன்? தமிழ் சமூகம் இதற்கான பதிலை கண்டடையாவிட்டால், தோல்விகள் மட்டுமே நமது கதையாக நீண்டுசெல்லும். 

https://tamilwin.com/article/sri-lankan-political-crisis-tamil-people-india-1669133422

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு பிடிக்காத பந்தியும் இதில் உண்டு.பார்ப்போம் திரி எப்படி எரயுத என்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தமான பலவிடயங்களை கட்டுரை தொட்டுச் செல்கிறது. 

சண்டைக்குப் பின்னர் வந்து சேர்கிறேன் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சிங்களவர்களை விடவும் தமிழர்கள்தான் புத்திசாலிகள். இப்படியொரு பார்வை நம்மவர்கள் மத்தியிலிருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண மத்திய தரவர்க்கத்தினர் மத்தியில் அவ்வாறானதொரு பார்வையிருந்தது.

மோட்டுச் சிங்களவர்கள் என்று சிலர் சாதாரணமாக கூறிச்செல்வதை, எனது சிறிய வயதில், பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கின்றேன்.

கட்டுரையை இணைந்த பெரும்ஸ் அடிக்கடி இப்போதும் யாழில் இதை பிரஸ்தாபிப்பார்.

1 hour ago, பெருமாள் said:

நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று சிங்களவர்கள் மூடர்கள் அல்லர்.

அவர்களின் இராஜதந்திர ஆற்றல் அபரிமிதமானது.

இதை இங்கே நான் பல சமயங்களில் கூறிய போது - சிங்கள அடிவருடி என தூற்றப்படேன் (படுவேன்)🤣.

கொவிட் - பொருளாதார வீழ்ச்சி நேரம் - பார்தீர்களா அவர்கள் மூடர்கள்தான் என கூறவும் பட்டது.

ஆனால் இன்றுவரை - அவர்களுக்கு என்ன நடந்தும், அவர்களை வெல்ல, இல்லை வெல்லும் திசையில் ஒரு மைல் தன்னும் நகராமல் நாம் இருக்கிறோம் என்பது மட்டும் எப்போதும் யாருக்கும் உறைத்ததே இல்லை.

1 hour ago, பெருமாள் said:

ஒன்றில் நமக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லையா

கிடைக்கவில்லை

1 hour ago, பெருமாள் said:

நல்ல தலைவர்களை தமிழ் சமூகத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லையா

இதுவும்தான். Every country gets a leader it deserves.

1 hour ago, பெருமாள் said:

அல்லது தமிழர் அரசியல் ஏதோவொரு முள்ளில் சிக்கியிருக்கின்றதா,

ஆம்

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அதனை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?

இல்லை.

அது மட்டும் இல்லை அந்த முள் என்ன என்பதை நாங்கள் இன்னமும் இனங்காணவே ஆரம்பிக்கவில்லை.

1 hour ago, பெருமாள் said:

ஆனால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம். ஏன்?

குட் கொஸ்டீன்.

யாழ்கள உறவுகள் என்ன சொல்கிறார்கள் எனப்பார்ப்போம்.

பின் எனது கருத்தை வைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

அவர்களின் இராஜதந்திர ஆற்றல் அபரிமிதமானது.

தமிழர்களை அடக்கி ஆள்வதில் உள்ள ராஜதந்திர ஆற்றல் அபரிதமானது அதில் மாற்று கருத்து கிடையாது . ஆனால் அதே ராஜதந்திரம் இலங்கையை அபிவிருத்தி செய்வதில் பயன்படுகிறதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி முன்னரும் ஒரு நீண்ட பதிவு எழுதிய ஞாபகம், ஆனால் மீண்டும் சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்:

1. தமிழ் கட்சித் தலைமைகள் முக்கியமான விடயங்கள் என்ன என்று ஒரு பட்டியல் (priority list) போட வேண்டும். இதை வைத்துக் கொண்டு தான் யாரிடமும் பேசப் போக வேண்டும் - இலங்கை அரசோ, இந்தியாவோ, அமெரிக்காவொ, ரஷ்யாவோ (😎).

2. கூட்டமைப்பு முதன்மை தரும் விடயம், ஏனைய தரப்புகளால் முதன்மை தரும் விடயமாக இருக்காது, ஆனால் அப்படி இருந்தாலும் பாதகமில்லை. எதற்கு முன்னுரிமை என்ற போட்டியை பொது வெளியில் காழ்ப்புணர்ச்சிப் போட்டியாக ஒரு தமிழர் தரப்பும் முன்னிறுத்தக் கூடாது.

3. மேலே தீர்வு பற்றிய கோல் போஸ்ட் அடிக்கடி மாற்றப் பட்டிருப்பது ஒரு குறைபாடாகச் சுட்டிக் காட்டப் படுகிறது. என் கருத்து, வெளிக்காரணிகளால் நாம் பாதிக்கப் படுவதும் கோல் போஸ்டை மாற்றுவதும் தவிர்க்க இயலாதது. இதை ஒரு தரப்பின் குறைபாடாகத் தூக்கிப் பிடிக்காமல் முன்னகர வேண்டும்.

 தமிழர்களைப் பொறுத்த வரையில், அடுத்த தலைமுறையிலும் சரி, அதற்கடுத்த தலைமுறையிலும் சரி இனி தலைமையேற்க வரும் ஆட்களின் எண்ணிக்கை குறையுமேயொழிய அதிகரிக்காது. இதற்கு ஒரு காரணம், தற்காலத் தலைவர்களை நாம் விமர்சிக்கும் தீவிரம். உண்மையான காரணங்களுக்காக விமர்சிப்பதை விடுத்து, பிழையான உள் நோக்கங்களுக்காகவும், காழ்ப்புணர்ச்சியோடும் செய்யப் படும் விமர்சனம், தமிழர்களிடையே புதிய தலைவர்கள் உருவாக ஒரு தடையாக இருக்கும் (chilling effect).

அனேகமாக, இன்னும் 10 ஆண்டுகளில், 90 களில் இருந்தது போன்ற "பணம் வாங்கிக் கொண்டு வேலை, பொலிஸ் றிப்போர்ட் வாங்கிக் கொடுக்கும்" ஏஜென்சி ரைப், பா. உக்களே  தமிழ் பா. உக்களாக இருப்பர்!😂

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

அனேகமாக, இன்னும் 10 ஆண்டுகளில், 90 களில் இருந்தது போன்ற "பணம் வாங்கிக் கொண்டு வேலை, பொலிஸ் றிப்போர்ட் வாங்கிக் கொடுக்கும்" ஏஜென்சி ரைப், பா. உக்களே  தமிழ் பா. உக்களாக இருப்பர்!😂

இது ஏற்கனவே இருக்கு அண்ணை. பணம் வாங்கி வேலை வாய்ப்பு, தான் வெல்லக் கூடிய பிரதேசங்களில் வீதி புனரமைப்பு, பொது அமைப்புகளுக்கான கட்டிடங்கள் அமைப்பது போன்ற பணிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

தமிழர்களை அடக்கி ஆள்வதில் உள்ள ராஜதந்திர ஆற்றல் அபரிதமானது அதில் மாற்று கருத்து கிடையாது . ஆனால் அதே ராஜதந்திரம் இலங்கையை அபிவிருத்தி செய்வதில் பயன்படுகிறதா ?

இல்லை. ஆனால் அவர்களின் பிரதான இலக்கு நாட்டை சிங்கள, பெளத்த நாடாக பேணுவதே. 

அதை தவிர வேறு எந்த பொது நோக்கமும் இல்லை. அவரவர் தனி தனியே முன்னேறுவது மட்டுமே இலக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

இல்லை. ஆனால் அவர்களின் பிரதான இலக்கு நாட்டை சிங்கள, பெளத்த நாடாக பேணுவதே. 

அதை தவிர வேறு எந்த பொது நோக்கமும் இல்லை. அவரவர் தனி தனியே முன்னேறுவது மட்டுமே இலக்கு.

அந்த இலக்கு நிறைவேறிவிட்டது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்தியை வாசிக்கல இருந்தாலும் அவனுகள மோடன் என சொல்லி நாம அந்த பட்டத்தை பெற்று மோடன் ஆகியதுதான் மிச்சம் 

இதே போல கட்டுரையை முதலும் வாசித்த நியாபகம் இருந்தாலும் நாம் பல வற்றை கற்றுக்கொண்டாலும் மீளாமலே  இருக்கின்றோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

Courtesy: கட்டுரை: யதீந்திரா

சிங்களவர்களை விடவும் தமிழர்கள்தான் புத்திசாலிகள். இப்படியொரு பார்வை நம்மவர்கள் மத்தியிலிருந்தது. குறிப்பாக யாழ்ப்பாண மத்திய தரவர்க்கத்தினர் மத்தியில் அவ்வாறானதொரு பார்வையிருந்தது.

மோட்டுச் சிங்களவர்கள் என்று சிலர் சாதாரணமாக கூறிச்செல்வதை, எனது சிறிய வயதில், பல்வேறு சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கின்றேன். இது சரியானதொரு பார்வைதானா -என்னும் கேள்வி இருந்துகொண்டேயிருந்தது.

2002இல், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், மானுடத்தின் தமிழ் கூடல் இடம்பெற்றது. முதல் நாள் நிகழ்வில் மு. திருநாவுக்கரசு (திருமாஸ்டர்) பேசுகின்றார். நம்மில் சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போன்று சிங்களவர்கள் மூடர்கள் அல்லர்.

அவர்களின் இராஜதந்திர ஆற்றல் அபரிமிதமானது. மேற்குலகில் மக்கியவல்லியையும் பிஸ்மார்க்கையும் படித்த ஜே.ஆர்ஜெவர்த்தன, கீழைத்தேயத்தின் கௌடில்யரையும் படித்தார். கௌடியல்யர் கூறுகின்றார்.

உனக்கு இரண்டு எதிரிகள் இருந்தால், ஒரு எதிரியை நண்பணாகிக்கி, இன்னொரு எதிரியுடன் மோதவிடு, இறுதியில் உனது இரண்டு எதிரிகளும் இல்லாமல் போவார்கள். இதுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும்.

நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்! | Sri Lankan Political Crisis Tamil People India

ஒரு எதிரியான இந்தியாவை நண்பணாக்கி, இன்னொரு எதிரியான விடுதலைப்புலிகளுடன் மோதச் செய்தனர். சிங்களவர்களின் அபாரா இராஜதந்திர ஆற்றல் தொடர்பில் பார்வையாளார்களை, திரு திக்குமுக்காடச் செய்தார். அதே போன்று, வரலாற்றியலாளர் பேராசிரியர். இந்திரபாலா கூறிய ஒரு கருத்தையும் திருநாவுக்கரசு, நினைவுபடுத்தியிருந்தார்.

அதாவது, ஒரு குட்டித் தீவு, பிரமாண்டமான இந்தியாவிற்கு அருகில், இரண்டாயிரம் வருடங்கள் தனித்துவமாக தப்பிப்பிழைக்க முடிந்திருக்கின்றதென்றால், அது மூளையினால்தான் சாத்தியப்பட்டது. சிங்களவர்களின் அறிவாற்றல் தொடர்பில் விடுதலைப் புலிகளின் மேடையிலேயே திருநாவுக்கரசு புகழ்ந்து கொண்டிருந்தார்.

எனக்குள் எழுந்த கேள்வி, சரி, அவர்கள் மிகவும் திறமைசாலிகள் ஆனால் ஏன் இவற்றை தமிழர்களால் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற முடியாமல் போனது? நாங்கள் புத்திசாலிகளல்லவா! சீன போரியல் நிபுணர் சன் சூ, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூறியது. நீ ஒவ்வொரு போரில் தோற்கின்ற போதும், எதிரி உன்னைவிட பலமானவனாக இருந்தனால்தான் நீ தோற்றுப் போனாய் என்று கூறாதே, நீ பலவீனமாக இருந்ததால் தோற்றுப் போனாய் என்று கூறு. ஆனால் நமது சூழலில் ஒரு பார்வைக் குறைபாடு உண்டு.

நாம் தோல்வியடையும் ஒவ்வொரு சந்தர்பங்களிலும் மற்றவர்கள் மீதே விரல் நீட்டுகின்றோம். இந்தியாவின் மீது விரல் நீட்டுகின்றோம். அமெரிக்காவின் மீது விரல் நீட்டுகின்றோம். இல்லாவிட்டால், ஒட்டுமொத்த உலகத்தின் மீதும் விரல் நீட்டுகின்றோம். இது எவ்வாறென்றால், பரீட்சையில் சித்தியடைந்தால், அது மாணவனின் கெட்டித்தனம், பரீட்சையில் தோல்விடைந்தால், அது ஆசிரியரின் பிரச்சினை. இந்த சிந்தனைப் போக்கே எங்களுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றது.

2009இற்கு முன்னர் நம் அனைவரது விருப்பமும் விடுதலைப்புலிகள் வெற்றியடை வேண்டும் என்பதாகவே இருந்தது. 95 வீதமான தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளின் வெற்றியை எதிர்பார்த்திருந்தனர். ஏதாவது அதிசயங்கள் நடந்தாவது அவர்கள் வென்றுவிடுவார்கள் என்பதே சாமானிய தமிழனின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இறுதியில் அனைத்தும் நிராசையானது.

உண்மையில் அது வெறும் தோல்வியல்ல. நாம், நமது அரசியல் வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், சிந்திப்பதற்கும் கிடைத்த அரியதொரு சந்தர்ப்பம். ஆனால் அவ்வாறானதொரு தேடலை செய்ய நம்மால் முடியவில்லை. நமது தவறான அரசியல் புரிதல்களும், இயலாமைகளும் நம்மை தடுத்தது. இன்று யுத்தம் முடிவுற்று பதின்மூன்று வருடங்களாகிவிட்டது. இப்போதும் கூட, சுலோகங்களை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கின்றோம். நாம் முன்வைக்கும் சுலோகங்களில் எவற்றையுமே எங்களால் சாத்தியப்படுத்த முடியவில்லை.

இப்போதும் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றோம். சமஸ்டிதான் தேவையென்பதில் எவருக்கு முரண்பாடுண்டு? ஆனால் அதனை எவ்வாறு அடையப் போகின்றோம்? 1949இல், இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட போது, அதன் இலக்கு சமஸ்டி அடிப்படையிலான அரசியல் ஏற்பாடொன்றை பெறுவதுதான். ஆனால் அதனை அடைவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை செல்வநாயகம் புரிந்து வைத்திருந்தார்.

இதன் காரணமாகவே, ஆகக்குறைந்தளவிலாவது, சில அரசியல் எற்பாடுகளை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில், பண்டா-செல்வா, டட்லி-செல்வா உடன்பாடுகளுக்கு சென்றார். ஆனால் தென்னிலங்கையின் சிங்கள இனவாத அரசியல் சூழல், அதனை உள்வாங்கிக்கொள்ளவில்லை.

இதன் காரணமாகவே செல்வநாயகம் தனிநாட்டு கோரிக்கையை நோக்கி நகர்ந்தார். ஆனால் அதனை எவ்வாறு அடைவதென்னும் வழிமுறை அவருக்கு தெரியாது. அது என்ன வழிமுறை? இந்தக் கேள்விக்கு பதிலாக வந்ததுதான், தமிழ் ஆயுத இயக்க அரசியலாகும்.

நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்! | Sri Lankan Political Crisis Tamil People India

தமிழர் அரசியல் எப்போது, ஆயுதவழிமுறையை தழுவிக் கொண்டதோ, அப்போதே அன்னிய தரப்புக்களின் தலையீடுகளும் தமிழ் அரசியலுக்குள் நுழைந்துவிட்டது. ஆயுத பயிற்சிக்காக பலதரப்பட்ட அன்னியர்களை அணுகும் போக்கும் உருவாகியது. தெரிந்தும், தெரியாமலும் பல்வேறு முகவர்கள் தமிழர் அரசியலுக்குள் பிரவேசித்தனர்.

இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் அதிகாரியான விக்டர் ஒட்ரோவ்ஸ்கி எழுதிய நூல், அந்தக் காலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. மொசாட் ஒரே நேரத்தில், இலங்கை இராணுவத்திற்கும் பொதுவாக புலிகளென்று அறியப்படும் அமைப்பின் உறுப்பினர்களுக்கும் பயிற்சியளித்தமை வெளிச்சத்திற்கு வந்தது.

அந்தக் காலத்தில் புலிகளென்று அறியப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்புத்தான். அன்றைய உலக அரசியல் சூழலில், தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்குள், எவ்வாறெல்லாம் அன்னிய தரப்புக்கள் உள்நுழைந்தன என்பதற்கு, இதுவொரு சிறந்த உதாரணமாகும்.

எந்தவொரு அன்னிய தரப்பும் தங்களின் நலன்களை புறம்தள்ளி செயற்படாது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், இந்தியா, ஈழத் தமிழர் பிரச்சினையில் நேரடியாக தலையீடு செய்தது. தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்தது.

இதன் தொடர்சியாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றது. தமிழர்களின் நண்பனாக வடக்கு கிழக்கில் கால்பதித்த இந்திய அமைதிப் படையினர், எதிரியாக நாட்டைவிட்டு வெளியேறும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டது.

இதன் பின்னரான மூன்று தசாப்த கால விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் 2009இல் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது.

முள்ளிவாய்காலுக்கு பின்னரான அரசியல் முற்றிலும் சம்பந்தனின், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இந்தக் காலத்தை சம்பந்தனால் சரியாக கையாள முடிந்ததா? மீண்டும் தோல்வி தொடர்பிலேயே விவாதிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை உருவாகியது.

நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்! | Sri Lankan Political Crisis Tamil People India

மகிந்த ராஜபக்ச காலத்தின் விடயங்கள் தொடர்பில் பேசுவதில் பயனில்லை. மகிந்த ராஜபக்ச முற்றிலும் வெற்றிப் பெருமிதத்தோடு மட்டும்தான் விடயங்களை அணுகியிருந்தார். எனவே மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கூட்டமைப்பால் விடயங்களை நகர்த்த முடியவில்லை என்பதை புரிந்துகொள்ளலாம்.

ஆனால் 2015இல் தமிழர்களின் ஆதரவுடன் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் அப்படியல்ல. அது சில சாதகமான வாய்ப்புக்களை வழங்கியிருந்தது. இந்தியாவின் உதவியோடு சில விடயங்களை முன்னெடுப்பதற்கான வாய்புக்கள் ஏற்பட்டது. ஆனால் சம்பந்தன் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை. சாத்தியமற்ற புதிய அரசியல்யாப்பின் பெயரில் காலத்தை விரயம் செய்திருந்தார்.

அப்போது இந்தக் கட்டுரையாளர் உட்பட, பலரும் ஒரு விடயத்தை வலியுறுத்தியிருந்தனர். அதாவது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையை பலப்படுத்த முயற்சியுங்கள்.

இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதற்கு இந்தியாவின் உதவியை கோராலாம். ஏனெனில், யுத்தம் முடிவுற்ற பின்னர், 2009இல், இலங்கை அரசாங்கத்தை பாராட்டி மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், 13வது திருத்தச்சட்டம் அதற்கான அடிப்படையாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டிருந்தது. யுத்தம் முடிவுற்ற உடனேயே ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் 13வது திருத்தச்சட்டம் வலியுறுத்தப்பட்டதிலிருந்து, விடயங்களை சம்பந்தன் தரப்பு புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

அதனை கவனமாக பற்றிப்பிடித்திருக்க வேண்டும். இங்கு 13இல் என்ன இருக்கின்றது, என்ன இல்லை என்பதல்ல விடயம். கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, பற்றிப்பிடிப்பதற்கு ஏதாவது ஒன்று வேண்டும். அது மரக்கட்டையாக கூட இருக்கலாம். கரை சேர்வதே முதல் தேவையாகும்.

ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில், புதிய அரசியல் யாப்பு என்னும் பெயரில், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சம்பந்தன் நாசமாக்கினார். நாங்கள், 13வது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிக தூரம் பயணித்துவிட்டோம். புதிய அரசியல் யாப்பை நெருங்கிவிட்டோம், என்றவாறு கதைகள் சொன்னார். இறுதியில் அனைத்தும் புஸ்வானமாகியது. மீண்டும் தமிழர் அரசியல் நகர்வுகள் தோல்விலேயே முடிந்தது.

இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழர்களின் தோல்வி பற்றியே நாம் விவாதித்துக் கொண்டிருக்கப் போகின்றோம். தோல்வி பற்றியே விமர்சித்துக் கொண்டிருப்பது? தோல்வி பற்றியே அங்கலாய்த்துக்கொண்டிருப்பது? நமது இயலாமைகளுக்கான பழியை மற்றவர்கள் மீது சுமத்திக்கொண்டிருப்பது? ஏன் நமது அரசியல் நகர்வுகள் தொடர்ந்தும் தோல்வியடைந்து கொண்டெயிருக்கின்றது?

ஒன்றில் நமக்கு நல்ல தலைவர்கள் கிடைக்கவில்லையா அல்லது நல்ல தலைவர்களை தமிழ் சமூகத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது தமிழர் அரசியல் ஏதோவொரு முள்ளில் சிக்கியிருக்கின்றதா, அதனை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? ஆனால் ஒவ்வொரு தோல்வியின் போதும், தமிழர்கள் அரசியல் ரீதியில் மட்டுமல்ல, சமூக பொருளாதார நிலையில் மேலும் பின்நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்களின் விளைவுகளை ஒரு சொல்லில் மதிப்பிடுவதனால், தீர்வும் இல்லை முன்னேற்றமும் இல்லை. சமூகரீதியான முன்னேற்றம் தொடர்பிலேயே இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது. நாம் ஓய்வில்லாமல் பேசிக் கொண்டிருக்கின்றோம். எழுதிக் கொண்டிருக்கின்றோம். விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம். ஏன்? தமிழ் சமூகம் இதற்கான பதிலை கண்டடையாவிட்டால், தோல்விகள் மட்டுமே நமது கதையாக நீண்டுசெல்லும். 

https://tamilwin.com/article/sri-lankan-political-crisis-tamil-people-india-1669133422

ஹாஹா பெருமாளே இந்த கட்டுரையை கொண்டு வந்து இணைச்சதை நினைக்க சிரிப்பாய் இருக்கு🤣🤣🤣 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இல்லை.

அது மட்டும் இல்லை அந்த முள் என்ன என்பதை நாங்கள் இன்னமும் இனங்காணவே ஆரம்பிக்கவில்லை.

குட் கொஸ்டீன்.

யாழ்கள உறவுகள் என்ன சொல்கிறார்கள் எனப்பார்ப்போம்.

பின் எனது கருத்தை வைக்கிறேன்.

ஒற்றுமையின்மை 
நீ என்ன சொல்றது ,நான் என்ன கேட்க்கிறது என்ற  திமிர்/ஈகோ 
டக்கி ....போன்றோர் விட்ட பிழைகளை இன்னும் சொல்லிக் கொண்டு நக்கலடித்து கொண்டு இருப்போம்....ஆனால் புலிகள் விட்ட பிழைகளை பற்றி மூச்சும் விட மாட்டோம்.
யாழ்ப்பாணத்தாரின் நினைப்பு எப்பவும் தாங்கள் மட்டும் தான் அறிவாளி .தங்களுக்கு கீழ் தான் மற்றவர்கள் அடங்கி இருக்க வேண்டும்

தமிழர்கள் கடைந்தெடுத்த சுயநலவாதிகள்...சக தமிழன் முன்னேறினால் தாங்களே காலால் தட்டி விடுவார்கள்
சிங்களவர்களுக்குள் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், இனம் என்று வரேக்குள்ள ஒத்து நிப்பார்கள். அதே தமிழர்கள் என்றால் இனமாவது ,மண்ணாவது என்ட  சுயநலம் எனக்கு முக்கியம் என்று போய்கிட்டே இருப்பார்கள் 
ஊரில் இருக்கும் கடைசி தமிழன் செத்தாலும் பரவாயில்லை .ஆனால், எங்களுக்கு நாடு மட்டும் வேண்டும் ...நானோ என் பிள்ளைகளோ அங்கு போய் இருக்கப்போவதுமில்லை ..நாட்டுக்காய் ஒரு ம ...கொடுக்க போவதுமில்லை 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இதைப் பற்றி முன்னரும் ஒரு நீண்ட பதிவு எழுதிய ஞாபகம், ஆனால் மீண்டும் சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்:

1. தமிழ் கட்சித் தலைமைகள் முக்கியமான விடயங்கள் என்ன என்று ஒரு பட்டியல் (priority list) போட வேண்டும். இதை வைத்துக் கொண்டு தான் யாரிடமும் பேசப் போக வேண்டும் - இலங்கை அரசோ, இந்தியாவோ, அமெரிக்காவொ, ரஷ்யாவோ (😎).

2. கூட்டமைப்பு முதன்மை தரும் விடயம், ஏனைய தரப்புகளால் முதன்மை தரும் விடயமாக இருக்காது, ஆனால் அப்படி இருந்தாலும் பாதகமில்லை. எதற்கு முன்னுரிமை என்ற போட்டியை பொது வெளியில் காழ்ப்புணர்ச்சிப் போட்டியாக ஒரு தமிழர் தரப்பும் முன்னிறுத்தக் கூடாது.

3. மேலே தீர்வு பற்றிய கோல் போஸ்ட் அடிக்கடி மாற்றப் பட்டிருப்பது ஒரு குறைபாடாகச் சுட்டிக் காட்டப் படுகிறது. என் கருத்து, வெளிக்காரணிகளால் நாம் பாதிக்கப் படுவதும் கோல் போஸ்டை மாற்றுவதும் தவிர்க்க இயலாதது. இதை ஒரு தரப்பின் குறைபாடாகத் தூக்கிப் பிடிக்காமல் முன்னகர வேண்டும்.

 தமிழர்களைப் பொறுத்த வரையில், அடுத்த தலைமுறையிலும் சரி, அதற்கடுத்த தலைமுறையிலும் சரி இனி தலைமையேற்க வரும் ஆட்களின் எண்ணிக்கை குறையுமேயொழிய அதிகரிக்காது. இதற்கு ஒரு காரணம், தற்காலத் தலைவர்களை நாம் விமர்சிக்கும் தீவிரம். உண்மையான காரணங்களுக்காக விமர்சிப்பதை விடுத்து, பிழையான உள் நோக்கங்களுக்காகவும், காழ்ப்புணர்ச்சியோடும் செய்யப் படும் விமர்சனம், தமிழர்களிடையே புதிய தலைவர்கள் உருவாக ஒரு தடையாக இருக்கும் (chilling effect).

அனேகமாக, இன்னும் 10 ஆண்டுகளில், 90 களில் இருந்தது போன்ற "பணம் வாங்கிக் கொண்டு வேலை, பொலிஸ் றிப்போர்ட் வாங்கிக் கொடுக்கும்" ஏஜென்சி ரைப், பா. உக்களே  தமிழ் பா. உக்களாக இருப்பர்!😂

அதே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமது தறுகளை புரிந்து கொள்வதே முதலாவது, பின் அதற்கான தீர்வுகளை தேடும்போது ஒன்றில் தோல்வி என்றால் அதற்கு நேரெதிரான ஒன்றை தேர்ந்தெடுப்பது அதாவது A தவறெனில் B எனும் நிலைப்பாடு, ஏன் இரண்டு தெரிவுகள் மாத்திரமா உள்ளது?

ஆனால் மனிதர்களின் பொதுவான சிந்தனை வெளிபாடு அவர்களது கல்வி மூலம் இவ்வாறான பெட்டிக்குள் சிந்திக்கும் மனப்பான்மையினை வளர்த்துவிட்டது.

4 hours ago, ரதி said:

ஹாஹா பெருமாளே இந்த கட்டுரையை கொண்டு வந்து இணைச்சதை நினைக்க சிரிப்பாய் இருக்கு🤣🤣🤣 
 
முதலாவது பதில் 

நேற்று இருந்த அரசியல் முலோபாயங்கள் இன்று இருக்காது இன்று கண்ணெதிரே நடக்கும் அரசியல் நாளை வேறுவிதமான அரசியல் முலோபாயத்தை கொண்டு இருக்கும் எப்படி என்றால் புலிகளின் 3௦ வருட வீர போராட்டத்தில் ஏன் கனக்க பழைய யாழை பார்த்தால் தெரியும் 2௦௦9 வரை அநேக தமிழருக்கு மோட்டு சிங்களவநாய் பார்த்தவர்களுக்கு மே 18க்கு பின் புத்திசாலியாய் தெரிவதில் ஆச்சரியம் இல்லை இன்னும் உலக அரசியல் எதை நோக்கி நகரும் என்பதை கணிக்க முடியாதவர்களுக்கு மோட்டுசிங்களவன் என்று சொல்பவர்களை பார்த்து கோவம் வருவது இயல்பானது மேலே கோசனுக்கு அளித்தபதிலில் எங்களுக்கு புத்திசாலி சிங்களவன் ஆக தெரிபவன் தன்னுடைய இனத்துக்கு நிம்மதியான வாழ்வை கொடுத்தானா ? என்றால் இல்லை முதலில் யாரால் நாங்கள் மோடர் ஆக்கபடுகின்றோம் இந்தியா எனும் நாசகார நாட்டால் பலதேசம்களின் ஒட்டு மொத்த கலவையே இந்தியா இன்றைய உலக அரசியலில் உக்கிரேன் போரின் போது இந்திய கொள்கை மேற்குலகு ரசிப்பதாக இல்லை என்று அரசியல் ஆய்வு கூட்டம் சொல்லுது எனவே நாளைய உலக அரசியல் எதுவும் நடக்கலாம் .😀

இரண்டாவது பதில் .

சரி நாங்களும் உங்களை போல் அப்டேட் ஆகிவிட்டம் அறிவுசாலி சிங்களவன் என்று ஒத்துகொள்கிரம் ஓகேயா ?

மேலே உள்ள இரண்டு கருத்துக்களை எடுத்து கொள்வது அவரவர் மூளை திறனுக்கு ஏற்றவாறு எடுத்து கொள்ளவும் ஏதாவது ஒன்றை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு உண்மைகளை பேசும் கட்டுரை வந்தது வியப்பாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

அல்லது தமிழர் அரசியல் ஏதோவொரு முள்ளில் சிக்கியிருக்கின்றதா, அதனை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? ஆனால் ஒவ்வொரு தோல்வியின் போதும், தமிழர்கள் அரயல்ரீதியில் மட்டுமல்ல, சமூக பொருளாதார நிலையில் மேலும் பின்நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர். தமிழர்களின் அரசியல் முன்னெடுப்புக்களின் விளைவுகளை ஒரு சொல்லில் மதிப்பிடுவதனால், தீர்வும் இல்லை முன்னேற்றமும் இல்லை.

சரியான கேள்வி 
இதற்கான பதில் நாம்  இந்திய proxy அரசியல்வியாதிகளை தலைவர்களாக வைத்துக்கொண்டு கூத்தடிக்கும் கூட்டம். அதாவது இந்தியன் பொங்கித்தின்ன நாங்கள் விறகுக்கட்டைகள்.
முதலில் கூத்தமைப்பின் கூடாரம் காலியாகட்டும் அப்புறம் பார்க்கலாம். கூத்தமைப்பு காலியாகாதவரை அங்கஜன் ,வியாளன், கருணா, பிள்ளையான் மற்றும் டக்கி காடுகளில் அடைமழை தான்.
ஒருவகையில் இவர்களது அரசியல் இருப்பிற்கு காரணமே கூத்தமைப்பு தான்       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில்…. புலிகளின் செயல்களை கண்டித்தவர்கள்,
காட்டிக் கொடுத்தவர்கள் எல்லாம்…. 
அரசுடன்  இணைந்து இருந்த நிலையிலும்,
தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாமல்….
தமிழ் மக்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார்கள் என்று தெரியுதா?

போதைப் பொருள் பாவனை,  தினமும் நிகழும் வாள் வெட்டு, பாலியல் வன்முறை,
பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்க சீர்கேடு, திருடர் தொல்லை…..
என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

புலிகளில் பிழை பிடித்தவர்கள்… இப்போ தாங்கள் அதை சரியாக செய்யாமல்,
அதே தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாழாக்குவது எந்த வகையை சேர்ந்தது.

தங்களால் செய்ய முடியாவிட்டால்…. புலிகளை எதிர்த்து இருக்கத் தேவையில்லை.
ஒழுங்காக செய்து கொண்டு இருந்தவனையும் குழப்பி, 
தாங்களும் செய்யத் தெரியாமல், நிற்கிறார்கள்.

இப்போ இருக்கும் நிலையில்…. ஒட்டு மொத்த தமிழ் அரசியல் தலைமையும்
தமது தோல்விக்கு, தார்மீக பொறுப்பேற்று விலக வேண்டும்.

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/11/2022 at 23:23, பெருமாள் said:

முதலாவது பதில் 

நேற்று இருந்த அரசியல் முலோபாயங்கள் இன்று இருக்காது இன்று கண்ணெதிரே நடக்கும் அரசியல் நாளை வேறுவிதமான அரசியல் முலோபாயத்தை கொண்டு இருக்கும் எப்படி என்றால் புலிகளின் 3௦ வருட வீர போராட்டத்தில் ஏன் கனக்க பழைய யாழை பார்த்தால் தெரியும் 2௦௦9 வரை அநேக தமிழருக்கு மோட்டு சிங்களவநாய் பார்த்தவர்களுக்கு மே 18க்கு பின் புத்திசாலியாய் தெரிவதில் ஆச்சரியம் இல்லை இன்னும் உலக அரசியல் எதை நோக்கி நகரும் என்பதை கணிக்க முடியாதவர்களுக்கு மோட்டுசிங்களவன் என்று சொல்பவர்களை பார்த்து கோவம் வருவது இயல்பானது மேலே கோசனுக்கு அளித்தபதிலில் எங்களுக்கு புத்திசாலி சிங்களவன் ஆக தெரிபவன் தன்னுடைய இனத்துக்கு நிம்மதியான வாழ்வை கொடுத்தானா ? என்றால் இல்லை முதலில் யாரால் நாங்கள் மோடர் ஆக்கபடுகின்றோம் இந்தியா எனும் நாசகார நாட்டால் பலதேசம்களின் ஒட்டு மொத்த கலவையே இந்தியா இன்றைய உலக அரசியலில் உக்கிரேன் போரின் போது இந்திய கொள்கை மேற்குலகு ரசிப்பதாக இல்லை என்று அரசியல் ஆய்வு கூட்டம் சொல்லுது எனவே நாளைய உலக அரசியல் எதுவும் நடக்கலாம் .😀

இரண்டாவது பதில் .

சரி நாங்களும் உங்களை போல் அப்டேட் ஆகிவிட்டம் அறிவுசாலி சிங்களவன் என்று ஒத்துகொள்கிரம் ஓகேயா ?

மேலே உள்ள இரண்டு கருத்துக்களை எடுத்து கொள்வது அவரவர் மூளை திறனுக்கு ஏற்றவாறு எடுத்து கொள்ளவும் ஏதாவது ஒன்றை .

பெருமாள், எனக்கு தெரியாத அல்லது புரியாத விடயத்தை யாராவது எனக்கு பிடிக்காதவர்  என்னிடம் வந்து சொன்னால் எனக்கு பயங்கர கடுப்பாய் இருக்கும் ...என்ன விசர் எனக்கு வந்து இதை சொல்லுது என்று நினைப்பேன் ..கொஞ்சம் பக்குவம் வர, வர  அட இதற்கு தான் இவர்கள் இதை சொல்கிறார்கள் என விளங்கி கொண்டேன்.
மாற்றுக கருத்துக்காரரும், அரசுடன் ஆரம்பத்தில் இருந்தே சேர்ந்து இயங்குபவர்களும் ஆரம்பத்தில் இருந்தே புலிகள் அழிய போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்..
ஒரு தடவை நின்று ,நிதானமாய் அவர்கள் எதற்காய் இதை திரும்ப,திரும்ப இதை சொல்கிறார்கள் என்று ஆராய்ந்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது 
அரசுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டு குழுக்கள் சொல்லி நாங்கள் என்ன கேட்பது என்ற ஈகோ தான் எம்மை இங்கே கொண்டு  வந்து நிறுத்தியது 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அரசுடன் சேர்ந்து இயங்குபவர்கள் தமிழர்களுக்கு தீர்வு வரப்போகிறது என்றும் கூவினார்களே???

Edited by MEERA
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, MEERA said:

அரசுடன் சேர்ந்து இயங்குபவர்கள் தமிழர்களுக்கு தீர்வு வரப்போகிறது என்றும் கூவினார்களே???

புலிகளுக்குத்தான் அவர்கள்  அறிவுரை  சொல்லும் அறிவுயீவிகள்

மக்களுக்கு  ஏமாற்றுப்பேர்வழிகள்....😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/11/2022 at 12:30, MEERA said:

அரசுடன் சேர்ந்து இயங்குபவர்கள் தமிழர்களுக்கு தீர்வு வரப்போகிறது என்றும் கூவினார்களே???

அரசுடன் சேர்ந்து இயங்குபவர்கள் தீர்வு எடுத்து கொடுக்க உங்கள் கூட்டமைப்பினர் விடுவினமா மீரா?...ஊர் நிலவரம் உங்களுக்கு தெரியாதது அல்ல🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

புலிகளுக்குத்தான் அவர்கள்  அறிவுரை  சொல்லும் அறிவுயீவிகள்

மக்களுக்கு  ஏமாற்றுப்பேர்வழிகள்....😭

போட்டியில் தோத்த பிறகும் சமவுரிமை தாறதுக்கு அவன் என்ன இளிச்சவாயனா அண்ணா ?...இதெல்லாம் போருக்கு போக முன் யோசித்திருக்க வேண்டும்...போருக்கு முன் நடந்தவை பற்றித் தான் கதைக்கிறேன்....உங்களுக்கு இப்பவும் தீர்வு வேண்டுமானால் புலிகளால் தெரிவு செய்யப்படட கூத்தமைப்பினருடம் கேளுங்கோ ...எடுத்து தருவினம் .

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.