Jump to content

ஸ்கொட்லாந்து பிரிவினை குடியொப்பம் நடாத்த ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பங்குச்சந்தை மற்றும் சூதாட்டம் மூலம் பணம் பார்தவரின் மகனான டேவிட் கமரோன் பிரதமராக இருந்த போது இரண்டு சூதாட்ட முடிவுகளை எடுத்தார்.

ஒன்று ஸ்கொட்லாந்து குடியொப்பம், இரண்டாவது ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நீங்குதல்.

முதலாவதில் மயரிலையில் தப்பினார். இரண்டாவதில் என்ன நடந்தது என்று தெரியும்

அண்மையில் ராணியம்மா இறந்த பின்னர், இரண்டு விடயமும் தன்னிடம் ஆலோசணை செய்யாமல், அறிவித்த பின்னர் தான் தெரியப்படுத்தியதாக, கடும் கண்டனத்தை தெரிவித்தார் என்று சொல்லியிருந்தார்.

அவருக்கு பின்னர் வந்த சகல பிரதமருக்கும் ராணியம்மா, ஒன்றியத்தை பிரிக்கும் இது போன்ற முட்டாள்தனம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருந்தாலும் ஸ்கொட்லாந்து முதல்வர் குடியொப்பம், தனிநாடு என்று அரற்றுவதில் அக்கறை கொண்டிருந்தார். பொருளாதாரத்துக்கு முற்றும் முமுதாக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் ஸ்கொட்லாந்து, வடகடல் எண்ணைய் கை கொடுக்கும் என்று சொல்லி வந்தார். அதை நோர்வே அதிகமாக உறிஞ்சி விட்டதால், அங்கே அதிகம் இல்லை என்று துறை வல்லுனர்கள் தெரிவித்து விட்டனர்.

இன்னிலையிலும், ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி அடுத்தாண்டு ஒக்டோபர் மாதம் குடியொப்பம் வைக்கப் போவதாகவும் அது சட்டவலுவானதா என்று இலண்டணில் உள்ள உச்ச நீதிமன்றம் சென்றார் அம்மணி.

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்துக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது.

அதாவது, தமிழக சட்மன்றில் தீர்மானம் போட்டு தமிழகத்தில் குடியொப்பம் நிகழ்த்தி பிரிந்து போவது போன்றது.

அம்மணி ரிசியை மடக்கப் பார்ப்பார். அவர் மசியார்.

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.