Jump to content

மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பெண்களுக்கு ‘கசையடி’ கொடுத்த தலீபான்கள்

கிருபன்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பெண்களுக்கு ‘கசையடி’ கொடுத்த தலீபான்கள்

7-18.jpg

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் பெண்களின் சுதந்திரம் முற்றிலும் தடைபட்டது. பெண்கள் சுதந்திரம், கல்வி, ஆடை சுதந்திரம் உள்பட பல்வேறு துறையிலும் பெண்கள் மீது தலீபான்கள் அடக்குமுறையை கட்டவிழ்ந்து விட்டுள்ளது. அதேபோல், இஸ்லாமிய மத சட்டங்களை ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அமல்படுத்தி வருகின்றனர். இந்த சட்டங்கள் மூலம் கடுமையான கட்டுப்பாடுகள், தண்டனைகளும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் லோகர் மாகாணத்தின் பல் ஆலம் நகரில் மைதானத்தில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் பெண்கள் உள்பட 12 பேருக்கு தலீபான்கள் கசையடி தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு, பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 3 பெண்கள் 9 ஆண்கள் என மொத்தம் 12 பேர் பல் ஆலம் நகரில் உள்ள மைதானத்திற்கு இன்று காலை அழைத்து வரப்பட்டனர்.

அந்த மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள் குவிந்திருந்தனர். தண்டனை வழங்கப்படுவதை பார்வையிட வருமாறு டுவிட்டர் உள்பட சமூகவலைதளம் அழைப்பு விடுப்பட்டது. இதனை தொடர்ந்து காலை மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள் குவிந்தனர். அங்கு குற்றஞ்சாட்டப்பட்ட 3 பெண்கள் உள்பட 12 பேரும் மைதானத்தில் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டனர். அங்கு குற்றத்தின் அடிப்படையில் 12 பேருக்கும் தலீபான்கள் 21 முதல் 39 கசையடிகள் தண்டனையாக வழங்கினர். தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமல்படுத்தி கடுமையான தண்டனைகள் விதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
https://akkinikkunchu.com/?p=231332

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதுவும் மேற்கில் இருக்கும் ஜனநாயகம் போல் ஒரு ஆட்சி முறைதான்.

தனியே மேற்க்கு எமக்கு ஊட்டி விட்ட அடிமை மனப்பான்மையில் ஏனைய நாடுகளின் சிஸ்டங்களை தர குறைவாக எண்ண கூடாது, கூவ கூடாது.

இதே போல் இலங்கையில் பெளத்த சிங்கள இனவாதம்தான் சிஸ்டம்.

இலங்கையில் பிறந்த, ஆசியரான நமக்கு மேற்கின் rules ஆன, போர்குற்றம், இனப்படுகொலை, மனிதகுல விரோத குற்றங்கள் இவை எல்லாம் தேவையில்லாத ஆணிகள்.

வெள்ளை வானில் தூக்குவது இலங்கையின் அரசியல் கலாச்சாரம். சும்மா மேற்கு படிப்பித்த மனித உரிமை மண்ணாங்கட்டிய தூக்கி கொண்டு வர வேண்டாம். 

பொம்பிளையை நடு ரோட்டில போட்டு விளாறுவது - மனித குல விரோதம் என்பதெல்லாம் மேற்கின் கப்ஸா.

எப்படி மேற்கில் வரிசையில் நிண்டு வாக்கு போடுவார்களா அப்படி ஆப்கானிஸ்தானில் வரிசையில் நிண்டு முதுகில விளாசல் வேண்டுவார்கள்.

சும்மா மேற்கின் பொய் பிரச்சாரத்தை நம்பி கூவாமல் - ஜனநாயகம் போல இவையும் தகுந்த ஆட்சி முறைகளே என்பதை உணருங்கள்.

 • Haha 1
 • Confused 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இதே போல் தான் சவூதியிலும் நடக்கின்றது. ஆனால் மேற்குலக மனித உரிமை  மாணிக்கங்கள் வாயே திறக்க மாட்டார்கள்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இதே போல் தான் சவூதியிலும் நடக்கின்றது. ஆனால் மேற்குலக மனித உரிமை  மாணிக்கங்கள் வாயே திறக்க மாட்டார்கள்.

திறப்பார்கள் ஆனால் கொஞ்சம் மெதுவாக🤣

ஓவராய் திறந்தால் - எம் பி எஸ், எம்பி புட்டினோடு ஒரு ஹை பை கொடுப்பார் - என்ணை விலை பரலுக்கு $100 டொலருக்கு மேல் எகிரும்.

மேற்கு இரெட்டை வேடம் போடுவதை, தமக்கு ஏற்றது போல கதைப்பதை யாரும் மறுப்பதில்லை.

ஆனால் அதை வைத்து 

மேற்கில் இருக்கும் ஜனநாயகம் = புட்டினின் மாபியா ஆட்சி = சீனாவின் சர்வாதிகாரம் = தலிபானின், சவுதியின் காட்டாட்சி என நிறுவ முடியாது.

பைடன் சல்மானை சந்தித்தால், “எமது மனித உரிமை பற்றிய கரிசனையை சொன்னோம்” என கூறவாவது செய்வார்.

புட்டின், ஷீ சந்தித்தால் ?

இதுதான் வித்தியாசம்.

மேற்கின் அழுத்தம்தான் சவுதியை பெண்கள் காரோட்டலாம் என்ற நிலைக்காவது இறங்கி வர வைத்தது.

ரஸ்யா சீனா போன்ற நாடுகள் சவுதி, ஆப்கான், இலங்கைக்கு கொடுப்பது blank Cheque. 

இரெண்டு அணுகுமுறைக்கும் வித்தியாசம் இருக்கு.

மேற்கின் அணுகுமுறை perfect இல்லை. ஆனால் சீனா, ரஸ்யாவின் அணுமுறையோடு ஒப்பிட்டால எவ்வளவோ திறம்.

———-

அதேபோல் சீனாக்காரன் தன் நன்மை கருதி, போர்குற்றம், இனபடுகொலை, மனித குல விரோத குற்றங்கள் எல்லாம் மேற்கு கண்டு பிடித்த விதிகள், இவை சர்வதேச விதிகள் இல்லை என சொன்னால்

நாம் இந்த விதிகளைதாம் நாம் எமது எதிரிக்கு எதிராக கையில் எடுத்திருக்கிறோம் என்பதை கூட மனதில் எடுக்காமல்

சீனாக்காரனுக்கு சிங்கி அடித்து (இலங்கைக்கு) சேம் சைட் கோல் அடித்து கொடுப்பது எல்லாம் - புத்திசாலி தனத்தின் அடுத்த கட்டம்.

# வேற லெவல்🤣

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இதே போல் தான் சவூதியிலும் நடக்கின்றது. ஆனால் மேற்குலக மனித உரிமை  மாணிக்கங்கள் வாயே திறக்க மாட்டார்கள்.

இரட்டைவேடம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது . அதை நான் பார்க்கவும் இல்லை. கேட்கவும் இல்லை. பேசவும் மாட்டேன்....🤣

உத நாஞ் சொன்னாக்கா , என்னப் பயித்தியக்காறன் என்னுறாங்க...😉

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

இரட்டைவேடம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது . அதை நான் பார்க்கவும் இல்லை. கேட்கவும் இல்லை. பேசவும் மாட்டேன்....🤣

உத நாஞ் சொன்னாக்கா , என்னப் பயித்தியக்காறன் என்னுறாங்க...😉

இந்த  பூமியில்  எல்லாமே  பைத்தியக்காறத்தனமும் முட்டாளாக்கும்  நாடகமேடையும்  தானுங்க

இதுக்குள்ள  துரும்பை நூலை  பிடித்து  உயிரைக்காப்பாத்திறவன்  கொஞ்சம்  வடிவாக  நடித்தவனாகிறான்

அம்புட்டுத்தான்🤣

அப்ப  வரட்டே???

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

இந்த  பூமியில்  எல்லாமே  பைத்தியக்காறத்தனமும் முட்டாளாக்கும்  நாடகமேடையும்  தானுங்க

இதுக்குள்ள  துரும்பை நூலை  பிடித்து  உயிரைக்காப்பாத்திறவன்  கொஞ்சம்  வடிவாக  நடித்தவனாகிறான்

அம்புட்டுத்தான்🤣

அப்ப  வரட்டே???

உங்க கருத்தோட உடம்படுறேனுங்க 😀

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

உங்க கருத்தோட உடம்படுறேனுங்க 😀

நான் பைத்தியம் என்ற  கருத்துடன் தானே??

கோபம் வராதுங்க

பழகிப்போச்சு (சும்மா  தமாசுக்காக  மட்டும்😂)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களாவது கசையடியோடு நிறுத்திட்டினம். மேற்குலக சார்பு சவுதி தலையே கொய்திடும். அண்மையில் கூட படுகொலை குற்றம் சுமத்தப்பட்ட சவுதி இளவரசருக்கு அமெரிக்கா பொதுமன்னிப்பு அளிச்சிருக்காம். இது எந்த வகை மனித உரிமையுங்கோ..??! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

திறப்பார்கள் ஆனால் கொஞ்சம் மெதுவாக🤣

அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு எத்தனை மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றது?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு எத்தனை மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றது?

அண்ணை மரண தண்டனை ஒரு நாட்டில் இருக்கா இல்லையா என்பதை வைத்து நாம் இங்கே எதையும் தீர்மானிக்க முடியாது.

உதாரணமாக இலங்கையில் பல பத்தாண்டுகளாக மரண தண்டனை சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையில் இல்லை. கேட்டால் அது பெளத்த காருண்ய நாடாம்.

அதற்காக இலங்கை அமெரிக்காவை விட சிறந்த மனிதாபிமானத்தை, மனித உரிமையை, ஜனநாயகத்தை மதிக்கும் நாடு என சொல்லமாட்டோம் தானே?

இங்கே நான் ஆப்கானிஸ்தானில், சவுதியில் மரண தண்டனை சட்டம் இருப்பதால் அவை மோசமான நாடுகள் என எழுதவில்லை.

தண்டனைகள் வழங்கப்படும் விதமும், அவை என்ன குற்றங்களுக்காக வழங்க படுகிறன என்பதும்,  எவை எல்லாம் (பெண்கள் தனியே வீதியில் போவது, வேலைக்கு போவது, படிக்க முனைவது) குற்றமாக அறிவிக்க பட்டிருக்கிறது என்பதும்தான் அந்த நாட்டை அதன் சிஸ்டத்தை எடை போட வல்ல குறிகாட்டிகள்.

ஒரே ஒரு கேள்வி ஆம் அல்லது இல்லை என பதில் சொல்லுங்கள்.

ஆப்கானிஸ்தான்/ சவுதியின் ஆட்சி முறையானது மேற்கில் இருக்கும் ஜனநாயக ஆட்சி முறையிலும் பார்க்க,

மனிதாபிமானத்தை, மனித உரிமையை, ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சிமுறை என நீங்கள் கருதுகிறீகளா?

உங்கள் பதிலை தொடர்ந்து மிச்சத்தை எழுதுகிறேன்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கு எங்கு அடி பட்டாலும் காலைத்தான் துக்குமாம்.இங்கை யாழிலும் அதேதான்.😂

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ஒரே ஒரு கேள்வி ஆம் அல்லது இல்லை என பதில் சொல்லுங்கள்.

ஆப்கானிஸ்தான்/ சவுதியின் ஆட்சி முறையானது மேற்கில் இருக்கும் ஜனநாயக ஆட்சி முறையிலும் பார்க்க,

மனிதாபிமானத்தை, மனித உரிமையை, ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சிமுறை என நீங்கள் கருதுகிறீகளா?

மேற்குலகு ஜனநாயக நாடுகள் தான். இருந்தாலும் இவர்கள் ஜனநாயகத்திலும் பல்லாயிரம் குளறிபடிகள்.தங்கள் அரசியலுக்கேற்ப ஜனநாயகத்தை மாற்றுவார்கள். துர்ஷ்பிரயோகம் செய்வதில் வல்லவர்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2022 at 15:35, குமாரசாமி said:

மேற்குலகு ஜனநாயக நாடுகள் தான். இருந்தாலும் இவர்கள் ஜனநாயகத்திலும் பல்லாயிரம் குளறிபடிகள்.தங்கள் அரசியலுக்கேற்ப ஜனநாயகத்தை மாற்றுவார்கள். துர்ஷ்பிரயோகம் செய்வதில் வல்லவர்கள்.

அண்ணை நீங்கள் விரும்பிய கேள்விக்கு பதில் எழுதாமல் நான் கேட்ட கேள்விக்கு பதில் ஆம்/இல்லை எனத்தாருங்கள்🙏🏾.

On 26/11/2022 at 01:57, goshan_che said:

ஆப்கானிஸ்தான்/ சவுதியின் ஆட்சி முறையானது மேற்கில் இருக்கும் ஜனநாயக ஆட்சி முறையிலும் பார்க்க,

மனிதாபிமானத்தை, மனித உரிமையை, ஜனநாயகத்தை மதிக்கும் ஆட்சிமுறை என நீங்கள் கருதுகிறீகளா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அண்ணை நீங்கள் விரும்பிய கேள்விக்கு பதில் எழுதாமல் நான் கேட்ட கேள்விக்கு பதில் ஆம்/இல்லை எனத்தாருங்கள்🙏🏾.

பாங்கில கடன் தாறவன் கூட உவ்வளவு கறாராய் நிக்கமாட்டான் ....🤣 

இல்லை.:cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

இல்லை

உதத்தான் நானும் சொல்லுறன். பிறகேன் புடுங்குபடுவான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

உதத்தான் நானும் சொல்லுறன். பிறகேன் புடுங்குபடுவான்.

சட்டத்தை மதிக்காதவர்களுக்கு தண்டனை எங்கும் உண்டு தானே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

சட்டத்தை மதிக்காதவர்களுக்கு தண்டனை எங்கும் உண்டு தானே?

மேலே நீங்கள் “இல்லை” என்று அளித்த பதிலின் காரணங்களில் ஒன்று சட்டம் எதை குற்றம் என்றாக்குகிறது, அதை எப்படி விசாரிக்கிறது, எப்படி தீர்கிறது, என்ன தண்டனையை எப்படி கொடுக்கிறது என்பதில் இந்த இரு நாட்டு குழுக்களுக்கு இடையே உள்ள வேறுபாடு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

மேலே நீங்கள் “இல்லை” என்று அளித்த பதிலின் காரணங்களில் ஒன்று சட்டம் எதை குற்றம் என்றாக்குகிறது, அதை எப்படி விசாரிக்கிறது, எப்படி தீர்கிறது, என்ன தண்டனையை எப்படி கொடுக்கிறது என்பதில் இந்த இரு நாட்டு குழுக்களுக்கு இடையே உள்ள வேறுபாடு.

நாடுகளுக்கேற்ற/மக்களுக்கேற்ற மாதிரி சட்டங்களும் தண்டனைகளும் அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நாடுகளுக்கேற்ற/மக்களுக்கேற்ற மாதிரி சட்டங்களும் தண்டனைகளும் அவ்வளவுதான்.

இது வெளிப்படையான உண்மை. ஒரு சின்ன உதாரணம்.

ஆப்கானிஸ்தானில் ஒரு பெண் ஒரு அலுவலக அதிகாரியாக பணி செய்வதை, அல்லது படிப்பதை சட்டம் தடுக்கிறது. அது அவர்கள் பிர்ச்சினை. 

ஆனால் ஒது பொது பார்வையில் நாம் எல்லோரும் அதை பிழை என ஏற்போம்(அப்படித்தானே?).

பெண்ணிற்கு இந்த கட்டுபாடுகளை விதிக்காமல் மட்டும் அல்ல, அதை உறுதி செய்யும் சட்டத்தை போட்டு அந்த பெண்ணை பாதுகாக்கும் சட்டம் இருக்கும் நாட்டை மேம்பட்ட ஜனநாயக நாடக கருதுகிறோம்.

பெண்ணிற்கு கல்வி, வேலை செய்யும் உரிமை என்பது மேற்கின் சட்டம் அல்ல. அது அடிப்படையாக முன்னேறிய மனித இனங்கள் எல்லாமும் கைக்கொள்ள வேண்டிய விழுமியங்கள்.

ஆகவே சட்டம் போட்டு இதை தடுக்கும் நாடுகளை ஒரு போதும் சட்டம் போட்டு இதை ஆதரிக்கும் நாட்டுடன் ஒப்பிட்டு பேச முடியாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

நீங்கள் குறிப்பிடும் வளர்ந்த, பெண்ணுரிமையில் முன்னணியில் நிற்கும்  நாடுகளிலும்  தாய்க்குலங்கள் தங்களுக்கு இன்னும் ஆண்களுக்கு நிகரான சம உரிமை இல்லை என கதறிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.. அதை விட கொடுமை என்ன வென்றால் ஜனநாய்க மேற்குலக நாடுகளில் பெண்களுக்கு ஓரளவு சம உரிமை கிடைத்து 70 வருடங்கள் கூட ஆகவில்லை.🤣
நிலமை இப்படியிருக்க  ஆப்கானிஸ்தானுக்கு சனநாயக பாடம் எடுப்பது மகா கொடுமை கண்டியளோ?🤪

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நீங்கள் குறிப்பிடும் வளர்ந்த, பெண்ணுரிமையில் முன்னணியில் நிற்கும்  நாடுகளிலும்  தாய்க்குலங்கள் தங்களுக்கு இன்னும் ஆண்களுக்கு நிகரான சம உரிமை இல்லை என கதறிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.. அதை விட கொடுமை என்ன வென்றால் ஜனநாய்க மேற்குலக நாடுகளில் பெண்களுக்கு ஓரளவு சம உரிமை கிடைத்து 70 வருடங்கள் கூட ஆகவில்லை.🤣
நிலமை இப்படியிருக்க  ஆப்கானிஸ்தானுக்கு சனநாயக பாடம் எடுப்பது மகா கொடுமை கண்டியளோ?🤪

இங்கேதான் நீங்கள் பிசிறுகிறீர்கள்.

யாரும் யாருக்கும் பாடம் எடுக்கவில்லை. மேற்கில் பெண்ணுரிமையின் வரலாறு பற்றியும் பேசவில்லை.

அது முழுமையாகி விட்டதா அல்லது இன்னும் வேண்டுமா? என்பது பற்றியும் இல்லை.

இன்று எது மேம்பட்ட நிலை? என்பதுதான் விடயம்.

இன்று பெண் குழந்தைகள் கல்வி கற்பதை அடிப்படை உரிமையாக ஏற்கிறோமா? ஆம்.

இது மேற்கின் கண்டுபிடிப்பா அல்லது கேற்கிற்கு மட்டும் உரியதா? இல்லை 

இதை தடுக்கும் சட்டம் போடும் அரசாட்சி முறையை இதை ஊக்குவிக்க சட்டம் போடும் அரசாட்சி முறையோடு ஒப்பிடலாமா? இல்லை.

எது மேம்பட்டது?2வது

அவ்வளவுதான். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.