Jump to content

உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல்


nochchi

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல்

By DIGITAL DESK 2

24 NOV, 2022 | 10:41 AM
image

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் பிற பகுதிகளில் நேற்று புதன்கிழமை (நவ. 23) ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல் நடத்தியுது.

இது குறித்து கீவ் நகர மேயா் வெளியிட்டுள்ள டெலிகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வான்வழித் தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை ஒலி தொடா்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் தங்களது பதுங்கு குழிகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கீவ் நகரின் முக்கிய கட்டமைப்பு தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், எந்தக் கட்டமைப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து அவா் விளக்கமாகக் கூறவில்லை.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது, அந்த நாட்டின் கிரீமியா தீபகற்பத்தின் மீது ரஷ்யா படையெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்டது.

அதனைத் தொடா்ந்து, ரஷ்யாவுக்கும் கிரீமியாவுக்கும் இடையே சுமாா் 19 கி.மீ. நீளமுடைய பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலத்தை ஜனாதிபதி விளாதிமீா் புட்டின் கடந்த 2018ஆம் ஆண்டு திறந்துவைத்தாா்.

கடந்த மாதம் 8ஆம் திகதி நடத்தப்பட்ட லொறி குண்டுவெடிப்பில் அந்தப் பாலம் பலத்த சேதமடைந்தது. இதில் 3 போ் உயிரிழந்தனா்.

Ukraine-Russia-01.jpg

அந்த குண்டுவெடிப்புக்கு பதிலடியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு உக்ரைன் நகரங்களில் கடந்த சில வாரங்களாக ரஷ்யா தீவிர ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் குடியிருப்புகளிலும் சில ஏவுகணைகள் விழுந்து பலா் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முதலில் நடத்தப்பட்ட ஏவுகணை வீச்சைத் தொடா்ந்து, யுக்ரைன் மீது இனி தாக்குதல் நடத்தத் தேவையில்லை எனவும், அந்த நாட்டை அழிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை எனவும் ஜனாதிபதி விளாதிமீா் புட்டின் கடந்த மாதம் கூறினாா்.

Ukraine-Russia-02.jpg

எனினும், அதனையும் மீறி கீவ் நகர பிராந்தியத்தில் ஆளில்லா வெடிகுண்டு விமானங்கள் மூலம் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியது.

அந்த விமானங்களில், ஈரானில் தயாரிக்கப்பட்ட ‘ஷஹீத்’ வகை விமானங்களும் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.  உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும், குடிநீா் மையங்களிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்த நாட்டில் மின்சார மற்றும் குடிநீா் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி வொலோதிமீா் செலென்ஸ்கி தற்போது குற்றம் சாட்டி வருகிறாா்.

கடும் குளிா்காலம் நெருங்கி வரும் நிலையில், மின் நிலையங்களை ரஷ்யா தாக்குவது, உக்ரைனியா்கள் குளிரில் உறைந்து உயிரிழக்க வேண்டும் என்று அந்த நாடு விரும்புவதைக் காட்டுகிறது என்று சாடி வருகிறாா். இந்த நிலையில், உக்ரைனின் கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷ்யா  நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதல் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் காலத்திற்கு… உக்ரேனுக்கு,
சணல் அடி விழும் என்று…. முன்பே  யாழ். களத்திலேயே தெரிவிக்கப் பட்டது தானே.
அதற்கு ஏற்ற மாதிரி… செலென்ஸ்கி, நாவடக்கத்துடன் இருந்திருக்க வேண்டும்.

வெள்ளைக்காரனை நம்பி வாயை காட்டினால்….
அடி வாங்கவும் தயாராக இருக்க வேண்டும்.
அதி உத்தமர், மாண்புமிகு புட்டின் அவர்கள் செய்வதில் எந்தப் பிழையும் இல்லை. 👍🏼 💪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

குளிர் காலத்திற்கு… உக்ரேனுக்கு,
சணல் அடி விழும் என்று…. முன்பே  யாழ். களத்திலேயே தெரிவிக்கப் பட்டது தானே.
அதற்கு ஏற்ற மாதிரி… செலென்ஸ்கி, நாவடக்கத்துடன் இருந்திருக்க வேண்டும்.

வெள்ளைக்காரனை நம்பி வாயை காட்டினால்….
அடி வாங்கவும் தயாராக இருக்க வேண்டும்.
அதி உத்தமர், மாண்புமிகு புட்டின் அவர்கள் செய்வதில் எந்தப் பிழையும் இல்லை. 👍🏼 💪

நீங்க சொன்ன மாதிரி நாவட்டத்துடன் இருந்திருந்தால் சிங்களவனிட்ட சணல் அடி வாங்காமல் தப்பியிருந்திருக்கலாம்  என்ன?  லேற்றா தான் எல்லாம் புரியுது. 😭

  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

நீங்க சொன்ன மாதிரி நாவட்டத்துடன் இருந்திருந்தால் சிங்களவனிட்ட சணல் அடி வாங்காமல் தப்பியிருந்திருக்கலாம்  என்ன?  லேற்றா தான் எல்லாம் புரியுது. 😭

உங்களுக்கு... நாவடக்கம் என்பதன் அர்த்தம் தெரியுமா.
அதனை தெரிந்து கொண்டு... எதை, எதனுடன் ஒப்பிடுவது என்று அறிந்து கொள்ளுங்கள்.
சும்மா.... கருத்து, எழுத வேண்டும் என்பதற்காக,  கண்டதையும் எழுதப் படாது. 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, island said:

நீங்க சொன்ன மாதிரி நாவட்டத்துடன் இருந்திருந்தால் சிங்களவனிட்ட சணல் அடி வாங்காமல் தப்பியிருந்திருக்கலாம்  என்ன?  லேற்றா தான் எல்லாம் புரியுது. 😭

இனக்கலவரத்தின் போது உங்கள் சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டிருந்தால் நாவடக்கம் பற்றி பேசியிருக்க மாட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இனக்கலவரத்தின் போது உங்கள் சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டிருந்தால் நாவடக்கம் பற்றி பேசியிருக்க மாட்டீர்கள்.

உக்ரேனில் பிண கிடங்குகளில் நிர்வாணமாக பிணமாக வீசப்படும் காணொளிகளில் எவரினதும் சகோதர, சகோதரிகள் இருந்தால் அவர்களும் நாவடக்கம் பற்றி பேசியிருக்க மாட்டார்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

உக்ரேனில் பிண கிடங்குகளில் நிர்வாணமாக பிணமாக வீசப்படும் காணொளிகளில் எவரினதும் சகோதர, சகோதரிகள் இருந்தால் அவர்களும் நாவடக்கம் பற்றி பேசியிருக்க மாட்டார்கள்.

உலகில் எத்தனையோ அழிவுகள் அக்கிரமங்கள் நடந்துவிட்டது நடந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் உக்ரேனுக்காக  மட்டும் ஏன் ஸ்பெசலாக பதட்டப்படுகின்றீர்கள் என்று தான் கேட்கின்றோம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உலகில் எத்தனையோ அழிவுகள் அக்கிரமங்கள் நடந்துவிட்டது நடந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் உக்ரேனுக்காக  மட்டும் ஏன் ஸ்பெசலாக பதட்டப்படுகின்றீர்கள் என்று தான் கேட்கின்றோம்.
 

தனிப்பட்டு எனக்காக மட்டும்தான் நான் எழுத முடியும்.

எனக்கு அக்கிரம் என தெரிந்த சகலதுக்கும் பதட்ட படுவதே என் வழமை.

மீண்டும் சில நினைவூட்டல்கள்.

1. இலங்கையில் அவிசாவளையில் ஒரு முஸ்லீம் டீச்சர் பர்தா போடுவதை தடுத்தது தவறு என எழுதி, யாழ்களத்தில் எனது சேர்ட் கிழிக்கப்பட்டது

2. கஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, ஜனநாயக படுகொலை செய்து, அதை பிரித்து, ஒரு முன்னாள் இனத்தேசிய நாட்டை இந்தியா சூறை ஆடிய போது - அதை எதிர்த்து எழுதி - யாழில் “முஸ்லிம் நேசன்” பட்டத்தை பெற்று கொண்ட சிலரில் நானும் ஒருவன்.

3. திபெத்தியர் பெளத்தர் அழியட்டும் என்ற கருத்தியலை எதிர்த்து வாங்கி கட்டி கொண்டேன்

4. பயங்கரவாதிகளே ஆயினும் குவாந்தனமோவில் சட்டத்துக்கு அப்பால தடுத்து வைத்து பிழை என எழுதியுள்ளேன்.

5. டியாகோ கார்சியாவில் ஒரு இனத்தையே நாடற்றவர் ஆக்கிய பிரித்தானிய, அமெரிக்க வல்வளைப்பை பற்றி எழுதியுள்ளேன்

6. இரெண்டாம் ஈராக் யுத்தம் - ஒரு நியாயமற்ற யுத்தம் என எழுதி உள்ளேன்.

7. கடாபி எப்படி நம்பவைத்து அழிக்கப்பட்டார் என எழுதியுள்ளேன் 

இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

ஒன்றில் எனக்கு நான் பதறாததை பதறியதாக சொல்லும் கற்பனை-வியாதி அல்லது உங்களுக்கு செலக்டிவ் அம்னீசியா🤣.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடும் குளிர் முழுமையான மின்சார துண்டிப்பு ஆனால் போரிடுவோம் - உக்ரைனின் முதல் பெண்மணி

By RAJEEBAN

25 NOV, 2022 | 11:56 AM
image

கடும் குளிர், ரஸ்யாவின் தாக்குதல்களால் ஏற்பட்ட மின்துண்டிப்பு காரணமாக உருவாகியுள்ள இருள் போன்றவற்றையும் மீறி உக்ரைன் இந்த குளிர்காலத்தை தாக்குப்பிடிக்கும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் முதல்பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா உலகின் கருத்துக்களின் யுத்தத்தில் தொடர்ந்தும் தனது நாடு ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் வெற்றியின்றி சமாதானம் சாத்தியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

olenazelenska_getty.jpg

இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது

நாங்கள் மாடிகளை கொண்ட நகரத்தில் சந்தித்தோம் அங்கு குளிர்காலத்தின் குளிர் எங்களை தாக்கியது.

ரஸ்யா தொடர்ந்தும் உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்குவைப்பதால் மின்துண்டிப்பிற்கு மத்தியில் இந்த நகரத்தின் கட்டிடங்கள் இருண்டவையாக குளிர்மிகுந்தவையாக காணப்படுகின்றன.

ரஸ்யாவின் மிகதீவிரமான கடுமையான தாக்குதல்களை எதிர்த்து தொடர்ந்தும் களத்தில் நிற்பதற்காக உக்ரைன் மக்கள் உலகின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.

olena_zelenska2.jpg

ஆனால் இது துணிச்சலிற்கான வலிமிகுந்த மற்றுமொரு சோதனை.

ஆனால் நாங்கள் இதனை எதிர்கொள்வதற்கு அனுபவிப்பதற்கு தயார் என்கின்றார் ஒலேனா ஜெலென்ஸ்கா. 

உக்ரைன் தலைநகரில் கடும் பாதுகாப்புகளுடன் மண்மூட்டைகள் அடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் உரையாடுவதற்காக நாங்கள் அமர்ந்தவேளை அவர் இதனை தெரிவித்தார்.

நாங்கள் மிக மோசமான பல சவால்களை சந்தித்துள்ளோம்,பலர் கொல்லப்பட்டதை பார்த்திருக்கின்றோம்,பெருமளவு அழிவுகளை சந்தித்துள்ளோம்,நாங்கள் சந்தித்த விடயங்களில் மின்துண்டிப்பு என்பதே மிக மோசமான விடயமில்லை  என அவர் தெரிவித்தார்.

ukraine_black_out.jpg

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதென்றால் அடுத்த இரண்டு மூன்று வருடங்களிற்கு தாங்கள் இருளில் வாழ்வதற்கு தயார் என 90 வீதமான உக்ரைன் மக்கள் கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால் அது மிக நீண்ட குளிர்மிகுந்த பாதை என்பது அவருக்கு தெரியும்.

ஆனால் நீங்கள் எத்தனை கிலோமீற்றர் ஒடவேண்டும் என்பது தெரிந்தால் உங்களிற்கு மரத்தன் ஓடுவது சுலபம் என தெரிவிக்கும் உக்ரைனின் முதல் பெண்மணி ஆனால் உக்ரைனை பொறுத்தவரை எத்தனை கிலோமீற்றர் ஒடவேண்டும் என்பது அதற்கும் அதன் மக்களிற்கும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில நேரங்களில் இது மிகவும் கடினமானது ஆனால் சில உணர்ச்சிகள் எங்களை உறுதியாக பிடித்து வைத்திருக்க உதவுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தம் காரணமாக உக்ரைனின் அனைத்து மக்களும் வலுவானவர்களாக மாறுவார்கள்  என முதல் பெண்மணி தெரிவிக்கின்றார்.

பிபிசியின் வருடாந்த 100 பெண்கள் நிகழ்விற்காக பதிவு செய்யப்பட்ட ஒரு மணிநேரத்திற்கு மேல் நீடித்த பரந்துபட்ட பேட்டியிலேயே  உக்ரைனின் முதல் பெண்மணி இதனை தெரிவித்தார்.

பெப்ரவரி மாதம் ரஸ்யாவின் தாக்குதல் ஆரம்பித்த பின்னர் தனது மக்களை அணிதிரட்டுவதற்காக உக்ரைன் ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை இந்த கட்டிடத்திலேயே நிகழ்த்தியிருந்தார்( பெப்ரவரி26)

கையடக்க தொலைபேசியில் இந்த உரை பதிவாகியிருந்தது, நான் இங்கிருக்கின்றேன் நாங்கள் ஆயுதங்களை கைவிடமாட்டோம் என அவர் இந்த உரையில் தெரிவித்திருந்தார்.

அதற்கு முந்தைய நாள் இரவு ஆற்றிய உரையில் - இன்னொரு செல்பி உரையில் ஜெலென்ஸ்கி ரஸ்யா தன்னை முதலாவது எதிரியாகவும் தனது குடும்பத்தை இரண்டாவது எதிரியாகவும் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆகவே முதல் நாளில் இருந்து  இது தொடர்கின்றது ஒலேனா தெரிவிக்கின்றார்.அவரது வார்த்தைகளால் அவரது குடும்பத்தின் மீதான அழுத்தங்களை  முழுமையாக மறைக்க முடியவில்லை.

உக்ரைனின் அனைத்து குடும்பங்களும் தற்போது எதிர்கொள்ளும் வலிகளை முதல் பெண்மணியின் குடும்பமும் எதிர்கொள்கின்றது.

OLENA-ZELENSKA-001.jpg

தனது குழந்தைகளுடன் தான் எப்போது இறுதியாக இரவுநேரம் உணவருந்தினார் என்பது குறித்து சரியாக தெரிவிக்க முடியாத நிலையில் முதல் பெண்மணி காணப்படுகின்றார்.

அது தற்போது மிகவும் அபூர்வமான விடயமாக மாறிவிட்டது என முதல்பெண்மணி குறிப்பிட்டார்.

நான் எனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்கின்றேன் கணவர் ( ஜனாதிபதி) அவரது பணியிடத்தில் வாழ்கின்றார் என தெரிவித்த அவர் நாங்கள் சின்ன சின்ன  விடயங்களை கூடதவறவிடுகின்றோம்,என அவர் தெரிவிக்கின்றார்

உக்;ரைனின் அனைத்து மக்களினதும் வாழ்க்கை யுத்தம் காரணமாக தலைகீழாக மாறிவிட்டது, பொறியியலாளர்கள் முதல் நடன கலைஞர்கள் முதல் தற்போது போர் முன்னரங்குகளில் காணப்படுகின்றனர்,அனேகமாக பெண்களும் குழந்தைகளும் மாத்திரம் எல்லையை தாண்டி தப்பிச்செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியின் வாழ்க்கை நீண்டகாலமாக பின்னிப்பிணைந்த ஒன்று.

உயர்நிலை பள்ளி நண்பர்களான அவர்கள் நகைச்சுவை குழு மற்றும்  தொலைக்காட்சி ஸ்டுடியோவில் ஒன்றாக பணிபுரிந்தனர்.

ஜனாதிபதி ஒரு நடிகர் அவருக்கு கதை எழுதுபவர் முதல்பெண்மணி.

மூன்று வருடங்களிற்கு முன்னர் அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டவேளை தான் விரும்பிய வாழ்க்கை இதுவல்ல என ஒலெனா தெரிவித்தார்.

பெப்ரவரி 24 ம் திகதி ரஸ்யாவின் ஏவுகணைகள் தலைநகரிற்கு மேலாக செல்ல ஆரம்பித்ததை தொடர்ந்து ஒலெனா 8 மாதங்களாக தனது பிள்ளைகளுடன் பல்வேறு பகுதிகளில் மறைந்து வாழ்ந்தார்.

https://www.virakesari.lk/article/141197

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, island said:

நீங்க சொன்ன மாதிரி நாவட்டத்துடன் இருந்திருந்தால் சிங்களவனிட்ட சணல் அடி வாங்காமல் தப்பியிருந்திருக்கலாம்  என்ன?  லேற்றா தான் எல்லாம் புரியுது.

ஒருவகையில் நீங்கள் சொன்னதும் சரிதான் 
நாவடக்கத்துடன் இருந்திருந்தால் சிங்களவனிடம் மட்டுமல்ல ரஷ்ய விமானத்தை ஒட்டிய  உக்ரேன்காரனிடமும் சணல் வெடி வாங்கியிருக்க மாட்டோம். என்ன செய்வது எல்லாம் லேற்றாதான் எங்களுக்கு புரியுது.
அதேவேளை நமக்கு  உக்ரேன்காரனிடம் இருக்கும் பாசத்தை பார்த்து புல்லும் அரிக்குது 

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஒருவகையில் நீங்கள் சொன்னதும் சரிதான் 
நாவடக்கத்துடன் இருந்திருந்தால் சிங்களவனிடம் மட்டுமல்ல ரஷ்ய விமானத்தை ஒட்டிய  உக்ரேன்காரனிடமும் சணல் வெடி வாங்கியிருக்க மாட்டோம். என்ன செய்வது எல்லாம் லேற்றாதான் எங்களுக்கு புரியுது.
அதேவேளை நமக்கு  உக்ரேன்காரனிடம் இருக்கும் பாசத்தை பார்த்து புல்லும் அரிக்குது 

ரஸ்ய விமானம்.

உக்ரேன் விமானி.

ஆனால் அப்போ இருந்த ரஸ்ய சார்பு அரசு இப்போ உக்ரேனில் இல்லை.

ஆனால் ரஸ்யாவில் அப்போதும் இப்போதும் புட்டிந்தான்.

உங்களுக்கு உக்ரேனின் மீதான பாசம் கண்டு புல்லரிப்பதை போலவே “மாண்புமிகு” என யாழில் புகழ்ந்தேத்தப்படும் புட்டின்-வணக்கத்தை பார்த்தும் புல்லரிக்கும் என எதிர்பார்கிறேன்?

அல்லது selective grass-cutting ஓ (அதான் புல் அரித்தல்🤣). 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஒன்றில் எனக்கு நான் பதறாததை பதறியதாக சொல்லும் கற்பனை-வியாதி அல்லது உங்களுக்கு செலக்டிவ் அம்னீசியா🤣.

யாழ்களத்தில்  நானும் நான் சார்ந்தோரும்  கள விதிகளுக்கமைய கருத்தாடுகின்றோம் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.😉
சக கருத்தாளகளை அற்ப மண்டைகள்,சொற்ப மண்டைகள், வியாதிகள் என சாடுவதில்லை.
ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் கருத்தெழுதி மற்றவர்களுக்கு நன்னடத்தை பாடம் எடுப்பதுமில்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

யாழ்களத்தில்  நானும் நான் சார்ந்தோரும்  கள விதிகளுக்கமைய கருத்தாடுகின்றோம் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.😉
சக கருத்தாளகளை அற்ப மண்டைகள்,சொற்ப மண்டைகள், வியாதிகள் என சாடுவதில்லை.
ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் கருத்தெழுதி மற்றவர்களுக்கு நன்னடத்தை பாடம் எடுப்பதுமில்லை.🤣

🤣இஞ்ச…அது பகிடி சரியே….🙏🏾

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

🤣இஞ்ச…அது பகிடி சரியே….🙏🏾

 

அது உங்களுக்கு மட்டுமான கருத்தல்ல...😁

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.