Jump to content

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!

 

கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.


யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கடந்த 8ஆம் திகதி பிலிப்பைன்ஸ்க்கும் வியட்நாமிற்கும் இடையே உள்ள கடலில் கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது யப்பான் மற்றும் சிங்கப்பூர் கடற்படையினர் காப்பாற்றி வியட்நாம் கொண்டவரப்பட்டு அவர்கள் அங்கு தற்காலிக அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்த நிலையில் அவர்களை காப்பாற்றி அந்த நாட்டிலுள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளிக்ப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சடலம் தொடர்ந்தும் அந்த நாட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை மீள வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் பாரிய தொகையொன்றை கோரி வருவதாகவும் வியட்நாமிலுள்ள இலங்கை அகதியொருவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1312365

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இவ்வள‌வு தூரம் வியட்னாம் சென்று தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? இவரை நம்பியிருக்கும் குடும்பம் என்னாவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான தற்கொலை செய்திகளை கேட்கும்போது எனக்கு இரக்கம் வாறதுதுக்குப் பதிலா விசர்தான் வாறது. 

மனைவி மற்றும் 4 பிள்ளைகளை நினைத்துப் பார்க்கவில்லையே. வாழ்க்கை ஒரு போராட்டம் தான். அதில் வெற்றிகளைவிட அதிகம் தோல்விகள் தான் இருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் போராடி வெற்றிபெற்றுக் காட்டவேண்டும்.

பாவம் பிள்ளைகள்

  • Like 2
  • Sad 1
Link to comment
Share on other sites

பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து வள்ளத்தில் ஏறி இருந்தால் தற்கொலை செய்திருக்க மாட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் போனது மட்டுமல்லாது   மனைவி பிள்ளைகளுக்கு கடன் சுமையையும் தாங்கும் படி   விட்டு விட்டு போயிருக்கிறார். வட்டிக்கு வாங்கி அல்லது காணி நிலம் அடகு வைத்துத் தானே போயிருப்பார்.  பாவம் அந்த மனைவியும்   பிள்ளைகளும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

தான் போனது மட்டுமல்லாது   மனைவி பிள்ளைகளுக்கு கடன் சுமையையும் தாங்கும் படி   விட்டு விட்டு போயிருக்கிறார். வட்டிக்கு வாங்கி அல்லது காணி நிலம் அடகு வைத்துத் தானே போயிருப்பார்.  பாவம் அந்த மனைவியும்   பிள்ளைகளும்

அதுமட்டுமா.. எனி இவரின் உடலத்தை ஊருக்கு கொண்டு வரவும் அதுகள் கடன் வாங்கனும். கடன் மேல் கடன். இந்த நிலையில் இப்படி ஒரு பயணம் தேவையா...??! எல்லாம் வெளிநாடு வாழ் கஸ்டங்களை மறைத்து வெளிநாட்டு மோகத்தை தூண்டுபவர்களின் குற்றமே அன்றி வேறில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை!

சாவு. நல்லாய் சாவு. அதை ஊரிலையே செய்திருக்கலாமே 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

சாவு. நல்லாய் சாவு. அதை ஊரிலையே செய்திருக்கலாமே 😡

 

5 hours ago, நிலாமதி said:

தான் போனது மட்டுமல்லாது   மனைவி பிள்ளைகளுக்கு கடன் சுமையையும் தாங்கும் படி   விட்டு விட்டு போயிருக்கிறார். வட்டிக்கு வாங்கி அல்லது காணி நிலம் அடகு வைத்துத் தானே போயிருப்பார்.

கடனை எப்படி அடைப்பது? எப்படி வாழ்வை தொடர்வது எனும் ஏக்கம்! இவரின் இந்த முடிவு மற்றவர்களுக்கு ஒரு பாதையை திறக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

 

கடனை எப்படி அடைப்பது? எப்படி வாழ்வை தொடர்வது எனும் ஏக்கம்! இவரின் இந்த முடிவு மற்றவர்களுக்கு ஒரு பாதையை திறக்கலாம்.

கனடா இவர்களை பொறுப்பெடுக்கும் என்கிறீர்களா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

கனடா இவர்களை பொறுப்பெடுக்கும் என்கிறீர்களா?
 

சொல்லமுடியாது, பொறுப்பெடுத்தால் நல்லது, எத்தனையோ பேரின் முடிவுகள் மாறலாம். இன்னும் எத்தனையோ பேர் இவரின் முடிவையே எடுக்க காத்து நாட்களை கடத்தலாம்.  இவரின் இந்த முடிவு அதற்கானதாய் இராது, அப்படி நினைத்திருந்தால் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார். அவரின் இயலாமையே இந்த முடிவுக்கு காரணம். ஒருவனின் வாழ்வின்  முடிவிற்தான் இன்னொருவனின் வாழ்வு பிறக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

கனடா இவர்களை பொறுப்பெடுக்கும் என்கிறீர்களா?
 

அப்படி கனடா பொறுப்பெடுக்கும்போது அத தொடர்ந்து இன்னும் நம்நாட்டில் உள்ள பலபேர் தமது உயிரையும், உடமையையும் பணயமாக்கி இந்த முடிவை எடுத்து விடுவார்களோ என்கிற அச்சமும் இருக்கிறது சாமியார்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் தேவை!

வியட்நாமில் உயிரிழந்தவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு 30 இலட்சம் ரூபா வரையில் தேவை!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி கருத்து தெரிவிக்கும் போது, அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா வரையில் தேவைப்படும் என தெரிவித்து என்னிடம் கையொப்பம் கேட்டனர்.

அந்த 30 இலட்சம் இருக்குமாயின் நான் ஏன் என்னுடைய கணவரை கடல் கடந்து அனுப்ப வேண்டும். நான்கு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும், கடன் பிரச்சினைகளும் இருக்கின்றன அவற்றிலிருந்து மீள வேண்டும் என தெரிவித்தே கடல் கடந்து என்னுடைய கணவர் சென்றார். இப்படி நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.

கடைசியாக நான் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை, அப்பா இல்லை என்பதை எனது குழந்தைகளுக்கு காட்டுவதற்காக அவரது உடலை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என கதறியழுத வண்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் படகு பிடிப்பட்ட பின்னர் தான் அடுத்த நாள் தொலைபேசியில் அழைத்து கூறினார், எந்தவொரு பிரச்சினையும் இல்லை, யோசிக்க வேண்டாம், நான் அழைப்பினை ஏற்படுத்திய தொலைபேசி எண்ணுக்கு திருப்பி அழைக்க வேண்டாம் என்று.

இதை தான் கடைசியாக கூறினார். அதன் பின்னர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. கடைசியாக அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை தான் நான் அறிந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1312506

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏஜென்சிக்கு கொடுத்த காசில் ஒரு சின்ன கடையாவது போட்டு இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

அப்படி கனடா பொறுப்பெடுக்கும்போது அத தொடர்ந்து இன்னும் நம்நாட்டில் உள்ள பலபேர் தமது உயிரையும், உடமையையும் பணயமாக்கி இந்த முடிவை எடுத்து விடுவார்களோ என்கிற அச்சமும் இருக்கிறது சாமியார்!

இந்த நிலவரங்கள் தெரிந்துதானே இப்போதைக்கு ஊரிலேயே இருங்கள் என்று சொல்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கலாய்க்கும் மனது, யார் எது சொன்னாலும் கேட்காது, ஒருக்கா போய்த்தான் பார்த்து விடுவோமே என்றுதான்  துடிக்கும். முதல்ல பணத்துக்காக ஆசை காட்டி கடத்தும்  ஆட்கடத்தல்காரரை பிடித்து கொடுக்கும் தண்டனை இனிமேல் யாரையும் ஏமாற்றாத அளவுக்கு கடுமையானதாக இருக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

10 hours ago, satan said:

அப்படி கனடா பொறுப்பெடுக்கும்போது அத தொடர்ந்து இன்னும் நம்நாட்டில் உள்ள பலபேர் தமது உயிரையும், உடமையையும் பணயமாக்கி இந்த முடிவை எடுத்து விடுவார்களோ என்கிற அச்சமும் இருக்கிறது சாமியார்!

ஆம்.கனடாவுக்கு இவர்களை எடுப்பதில் பிரச்சனை இருக்காது. ஆனால் இந்தகையை  பயணங்களை கனடாவோ மேற்கு நாடுகளோ ஊக்குவிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள், கிறிகட்டுவானில் ஏறி நயினாதீவு இறங்கிற மாதிரி பயணம் என்று நிணைத்துள்ளார்கள் போல.

சிறிய அந்தக்கப்பல், பசுபிக் பெருங்கடல் தாண்ட சந்தர்ப்பம் இல்லை. திட்டம் போட்டு ஏமாத்தப்பட்டுள்ளனர்.

இந்த அவலம் ஒருபக்கம்.

தென்னாப்ரிக்கா, பிரேசில், அமெரிக்காரூட்டில கனடாவுக்கு எண்டு இன்னுமோர் கோஸ்டி திரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இறந்த கணவரின் உடலை என் குழந்தைகளுக்கு காட்டுங்கள்" - வியட்நாமில் இறந்த இலங்கை தமிழரின் மனைவி உருக்கம்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சுந்தரலிங்கம் கிரிதரனின் குடும்பம்

 

படக்குறிப்பு,

சுந்தரலிங்கம் கிரிதரனின் குடும்பம்

வியட்நாம் முகாமில் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு பிறகு மருத்துவமனையில் இறந்த இலங்கை தமிழரின் சடலத்தை தாயகத்தில் கொண்டு வந்து அவருடைய குழந்தைகளுக்கு காட்ட உதவுகள் என்று இலங்கையில் வாழும் அவரது மனைவி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சொந்த மண்ணான இலங்கைக்குத் திரும்ப முடியாது எனக் கூறி வியட்நாம் முகாமில் தற்கொலைக்கு முயன்றவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், யாழ்ப்பாணத்தில் சாவகசேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் என்பது தெரிய வந்துள்ளது.

அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு 13 வயதாகிறது. கடைசி குழந்தையின் வயது நான்கு மாதங்கள் என்று அவரது உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

 

இலங்கையில் நான்கு பிள்ளைகளை வளர்க்க முடியாத சூழலால்தான் தனது கணவர் கனடாவுக்கு செல்ல முடிவெடுத்தார் என்கிறார் அவரது மனைவி.

“பொருளாதார சூழ்நிலை காரணமாக, நான்கு பிள்ளைகளை வளர்க்க முடியாத நிலை இருக்கு. அதனால் குறைந்த செலவில் கனடா செல்ல இருந்தார். அவர் வியட்நாமுல இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்துள்ளது.

அவருடைய உடல் கிடைக்க எப்படியாவது வழி செய்ய வேண்டும். அப்போது தான் தந்தை இறந்துவிட்டார் என்று என் குழந்தைகளுக்கு உறுதிப்படுத்த முடியும்,” என்று துக்கம் தாளாமல் அழுதபடியே பேசினார் கிரிதரனின் மனைவி.

மேலும், “புலம்பெயர்ந்த மக்களும் எனக்கு ஆதரவு வழங்க வேண்டும். நானும் என் குழந்தைகளும் கண்ணால் பார்ப்பதற்கு என் கணவர் உடலைத் திரும்பக் கொண்டு வர 30 லட்சம் தர வேண்டும் என்கிறார்கள்.

உடலைத் திரும்பக் கொண்டு வந்து, அவர் தான் என் கணவர் என்று ஆதாரத்துடன் காட்டுவதற்கு மக்களும் அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்கி உதவ வேண்டும்,” என்று கிரிதரனின் மனைவி கேட்டுக் கொண்டார்.

குழந்தைகள், “எங்கள் அப்பாவைக் கொண்டு வந்து காட்டுங்கள்,” என்று கேட்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது?

 

இலங்கை அகதிகள்

 

படக்குறிப்பு,

சுந்தரலிங்கம் கிரிதரன்

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் வாழ முடியாத சூழல் நிலவுவதாகக் கூறி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல தமிழர்கள் மியான்மர் வழியாக கனடா நோக்கிச் செல்ல முயன்றுள்ளனர்.

இலங்கையிலிருந்து விமானத்தின் மூலம் சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் மியான்மர் நோக்கிச் சென்றனர். அங்கிருந்து கப்பல் மூலம் கனடா நோக்கிச் செல்ல முற்பட்டனர்.

இருப்பினும் அந்தக் கப்பல், சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை அண்மித்த கடல் பரப்பில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியதாக, கடந்த 6ஆம் தேதி இலங்கை கடற்படை மீட்பு மையத்திற்குத் தகவலொன்று கிடைத்தது.

இந்தத் தகவல் சிங்கப்பூர் கடற்படைக்குக் கிடைக்கவே, அங்கு அருகில் பயணித்த ஜப்பான் சரக்குக் கப்பலின் உதவியோடு அவர்கள் மீட்கப்பட்டு வியட்நாமிடம் ஒப்படைக்கப்பட்டனர். வியட்நாமிலுள்ள மூன்று முகாமிகளில் 303 இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கை அகதிகள்

அகதிகளில் பலர் தாங்கள் மீண்டும் தாய்நாட்டிற்குத் திரும்ப விரும்பவில்லை என்றும் அதற்கு முயன்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் வியட்நாமிய அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

இருப்பினும் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வந்த நிலையில், இரண்டு அகதிகள் கடந்த 18ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

அந்த இருவரும் வியட்நாமிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். அதில் கிரிதரனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார்.

இலங்கைக்கு மீண்டும் தஞ்சம் அடைந்தவர்களை திருப்பி அனுப்ப வியட்நாமிய அதிகாரிகள் முயன்று வந்த நிலையில், தன்னால் மீண்டும் தாயகம் திரும்ப முடியாது எனக் கூறி தற்கொலைக்கு அவர் முயன்றதாக முகாமிலுள்ள மற்றொரு அகதி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cw5v74lgx52o

Link to comment
Share on other sites

வியட்நாம் முகாமில் தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை 4 பிள்ளைகளுக்கும் காட்ட உதவுமாறு தாயார் உருக்கம் 

By T. SARANYA

image

வியட்நாமில் இறந்த எனது கணவரின் உடலையாவது அனுப்பிவையுங்கள். நான் எனது பிள்ளைகளுக்கு அப்பா இறந்து விட்டார் எனக்   காட்டவேண்டும் என வியட்நாம் முகாமில் தற்கொலை செய்து கொண்ட யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின மனைவி வேணுகா உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தமது கணவர் வியட்நாம் அகதி முகாமில் வைத்து தற்கொலை செய்துகொண்டதாக வியாழனன்று காலை தூதரகத்திலிருந்து தமக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், தமது பிள்ளைகள் இறுதியாக தந்தையின் உடலைப் பார்க்கும் வகையில் இலங்கைக்கு அனுப்பிவைக்க சகலரும் உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறுகையில், 'எனது கணவர் கனடா செல்லவேண்டும் என்று மிகவும் ஆவலோடு இருந்தார். அதற்காக 18 இலட்சம் ரூபாவரை செலவாகும் என அவர் கூறினார். அவர் எவ்வளவு பணம் செலுத்தினார் என்பது எனக்குத் தெரியாது. அவர் எங்களிடம் இருந்த அனைத்து பொருட்களையும் விற்றுவிட்டார். அத்துடன் தான் கனடா சென்றதும் அனைத்துக் கடன்களையும் கட்டிவிடுவதாகக் கூறினார்.

'எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளார்கள். இவர்களை எப்படி வளர்த்து ஆளாக்குவேன் என்று எனக்கு தெரியாது. இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என நான் ஒருபோதும் எண்ணவில்லை. அப்படி என்றால் நான் எனது கணவரை அனுப்பியிருக்க மாட்டேன்.

'நான்கு தினங்களுக்கு முன்னர் தூதரகத்திலிருந்து கதைப்பதாகக் கூறி, அவர் தொடர்பான விபரங்களையும் ஆவணங்களையும் கேட்டனர். நான் எதற்கு கேட்கிறீர்கள் என கேட்டபோது, அவர் ஏதோ உட்கொண்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் இலங்கையர் தானா என்பதை உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். அதனால், அவர் தொடர்பான விபரங்களைக் கொடுத்தேன்.

'அதைத் தொடர்ந்து,  அவர் இறந்துவிட்டார் என்பது தெரியுமா என  வியாழக்கிழமை காலை தூதரகத்தில் இருந்து  கேட்டார்கள். நான் தெரியாது என்று கூறினேன். நான் அனைவரிடமும் மன்றாட்டமாக கேட்டுக்கொள்வது என்னவென்றால் இறந்த எனது கணவரின் உடலை அனுப்பிவையுங்கள் என்பதாகும். எனது பச்சிளம் குழந்தைகளுக்கு இறந்த அவரது உடலைக் காட்டவேண்டியது அவசியம்' என கண்ணீர்மல்க கூறினார்.

இதேவேளை, தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படும் 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் ஆபத்தான நிலையில் வியட்நாம் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் இறுதியில் சிகிச்சை பலனின்றி மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி கனடா செல்லும் நோக்கில் தென் சீன கடலில் படகில் தத்தளித்துக்கொண்டிருந்தபோது மீட்கப்பட்ட அகதிகள் வியட்நாம் அகதி முகாம் ஒன்றில் தங்கவைகப்பட்டுள்ளனர். அவர்களில் 303 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையிலேயே சுந்தரலிங்கம் கிரிதரன் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வியட்நாம் முகாமில் தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை 4 பிள்ளைகளுக்கும் காட்ட உதவுமாறு தாயார் உருக்கம்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுபூர்வமான வேண்டுதலானாலும், யாதார்தபூர்வமானது, அந்த முப்பது இலட்சத்தை பிள்ளைகள் வாழ்க்கைக்கு கொடுப்பதே. 🙏

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.