Jump to content

கூட்டுப் பொறிமுறை ஊடாக இறால் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டுப் பொறிமுறை ஊடாக இறால் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

By T. SARANYA

24 NOV, 2022 | 04:19 PM
image

இறால் வளர்ப்பில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்வதுடன்,  ஏற்றுமதியையும்  அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.

இறால் பண்ணையாளர்கள் மற்றும் இறால் குஞ்சுகள் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும்  சவால்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (24)  நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

ஏற்றுமதியாளர்கள், கருத்தரிப்பு நிலைய உரிமையாளர்கள், இறால் வளர்ப்பு பண்ணையாளர்கள் ஆகிய முத்தரப்பும் ஒன்றிணைந்த கூட்டுப் பொறிமுறை ஊடாக இத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நிலைமையில் இறால் உற்பத்திச் செலவு அதிகரிப்பு,  நோய்த்தாக்கங்கள் போன்ற காரணங்களால் இறால் வளர்ப்பை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக இறால் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இறால் வளர்ப்பானது மிகவும் விரைவாக வளர்ந்து வரும், ஏற்றமதி நோக்கான கைத்தொழிலாகவும், இலங்கைக்கு கணிசமானளவு வெளிநாட்டுச் செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு கைத்தொழிலாகவும் வளர்ந்து வருகின்றது.

இந்நிலையில்,நோய்த்தாக்கம் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நக்டா அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள், நக்டா, நாரா உயரதிகாரிகள், இறால் பண்ணையாளர்கள் மற்றும் இறால் குஞ்சு உற்பத்தி மையத்தின் பிரதிநிதிகள், ஏற்றுமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், மற்றும் இறால் வளர்ப்பு சங்கப் பிரதிநிதிகள், கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/141134

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்படித்தான் அஸ்ரப் நல்லாக் காசடிச்சவர் புத்தளத்தில். இப்ப புத்தளம் உப்புக்காடாப் போச்சு. எனி இவரும் இன்னும் கொஞ்சத்தை சுருட்டிட்டு.. ஏலவே உப்புக்காடா இருக்கும் வடக்கை இன்னும் உப்புக்காடா மாற்றி விட்டு மண்ணுக்குள் போகச் சரி. 

3 Jayasinghe-Shrimp farming districts in Sri Lanka (Batticaloa and Puttalam)

இறால் வளப்பென்று அஷ்ரப் புத்தளத்தை நாசம் பண்ணிட்டார்.. மட்டக்களப்பை பிள்ளையான் கருணா கும்பல் நாசம் பண்ணுது.. எனி இவர் வடக்கை நாசம் பண்ணச் சரி.

என்ன.. மண்ணை மக்களை நாசம் பண்ணுறவனுக்கெல்லாம்.. ஆயுசு கூடுக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையாக இருக்குது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5. Conclusion  This study shows that Puttalam lagoon has experienced significant land use changes in the  past two decades. There are implications for a range of ecosystem services; here we document the effects on one, carbon sequestration, with a net loss of 191 584 tC in the 19 year period. It is obvious that the development of shrimp farming has had a negative impact Published in Ocean & Coastal Management on the coastal environment in Puttalam, and the loss of ecosystem services has not been balanced by permanent economic benefits since 90% of ponds are now abandoned. The results presented in this paper emphasise the requirement for integrated planning in the Puttalam area. Most of the aquaculture in the study area is currently unproductive, has lost natural ecosystem services such as carbon sequestration and has increased vulnerability to natural hazards and climate change. Therefore there is a pressing need for reconversion or rehabilitation of abandoned ponds in Puttalam lagoon. The findings of this study highlight the need for more control over pond site selection and shrimp farming licences. The economic  and ecological advantages in implementing sustainable aquaculture practices in Puttalam are  potentially considerable.

https://www.napier.ac.uk/~/media/worktribe/output-170758/the-impacts-of-shrimp-farming-on-land-use-and-carbon-storage-around-puttalam-lagoon-sri-1.pdf

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் சயிக்கிள் தாறம், சமுக்தி தாறம் எண்டு மக்களை ஏமாத்தி, வாகனங்களில் ஏத்தி, வெய்யிலிலும் வெட்ட வெளியிலும் காயவிட்டு, சுலோகம் கொடுத்து,  படம் பிடித்து விளம்பரம் தேடினவர். இப்போ கூட்டங்களை கூட்டி வேடிக்கை காட்டுறார். மக்கள் தனக்கு வாக்கு போடுவினம், தான்  ஒருக்கா தலைகால் தெரியாமல் ஆடலாம்,  சிங்களம் தன்னை தலையில் வைத்துகூத்தாடும் என்று கனவு .... எலும்பு பொறுக்கியை சிங்களம் எப்போதும் அதே இடத்தில்தான் வைக்கும். அதற்கு தெரியும் இது யார்? இதை எங்கே வைத்து வேலை வாங்கவேண்டுமென்று .....

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.