Jump to content

15 லட்சம் வெளிநாட்டினருக்கு குடியிருப்பு உரிமை வழங்க கனடா திட்டம்

ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

15 லட்சம் வெளிநாட்டினருக்கு குடியிருப்பு உரிமை வழங்க கனடா திட்டம்

கனடா குடியேற்ற திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 மணி நேரங்களுக்கு முன்னர்

கனடா 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடியேற்றங்களை அனுமதிப்பதாக இலக்கு நிர்ணயித்துள்ளது. வயது முதிர்ந்த பேபி பூமர் தலைமுறையால் (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறப்பு விகிதம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பிறந்த தலைமுறையினர்) அதன் பொருளாதாரத்தில் எஞ்சியிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கனடா குடியேற்றத்தை எதிர்பார்க்கிறது. ஆனால், இவ்வளவு வெளிநாட்டவர்களின் வருகையை அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொள்ளவில்லை.

நவம்பர் மாதத் தொடக்கத்தில், கூட்டாட்சி அரசு 2025ஆம் ஆண்டுக்குள், ஓராண்டுக்கு ஐந்து லட்சம் குடியேறுபவர்கள் என்ற கணக்கில் 15 லட்சம் குடியேற்றங்களை வரவேற்கும் ஒரு தீவிரமான திட்டத்தை அறிவித்தது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனில் குடியேறுகிறவர்கள் எண்ணிக்கையைவிட 8 மடங்கும், அமெரிக்காவில் குடியேறுவோர் போல 4 மடங்கும் கனடாவில் குடியேற்றம் நடக்கும்.

பல புதிய குடியேற்றங்களை வரவேற்பதில் கவலைக்குரிய விஷயங்களும் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பு காட்டுகிறது.

குறையும் பிறப்பு விகிதம்

பல ஆண்டுகளாக, மக்கள்தொகை மற்றும் பொருளாதாரத்தை வளர்த்துகொள்வதற்காக கனடா குடியுரிமை இல்லாமல் காலவரையறையின்றி நாட்டில் தங்குவதற்கு உரிமையுள்ள நிரந்தர குடியிருப்பாளர்களை ஈர்க்க முயன்று வருகிறது.

கடந்த ஆண்டு, அந்நாடு 405,000 நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்றது. இது அதன் வரலாற்றில் மிக அதிகமான எண்ணிக்கை.

பல மேற்கத்திய நாடுகளைப் போலவே, கனடாவிலும் வயதானோரின் மக்கள் தொகை மற்றும் குறைவான பிறப்பு விகிதம் உள்ளது. அதாவது நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டு வர வேண்டும்.

குடியேற்றம் செயலூக்கம் கொண்ட மக்கள்தொகையின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. அது 2032ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்புக்குப் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் தனித்துவமான பகுதி

இன்று, நான்கு கனடியர்களில் ஒருவர் புலம்பெயர்ந்தவராக நாட்டிற்கு வந்தவராக உள்ளார். இது ஜி7 நாடுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கை. “உலகின் உருகிக் கொண்டிருக்கும் பகுதி” என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் 14% மட்டுமே குடியேறியவர்கள்.

மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானியான ஜெஃப்ரி கேமரூன், கனடா போன்ற பல நாடுகள் குறைந்த பிறப்பு விகிதங்கள், வயதான மக்கள்தொகை போன்றவற்றை எதிர்கொண்டாலும், எந்தவொரு குடியேற்ற முறையின் வெற்றியும் மக்கள் ஆதரவைப் பொறுத்தே அமையும் என்று நம்புகிறார்.

“குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் காரணியாக பெரும்பாலான நாடுகளில் பொதுமக்களின் கருத்து இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

கனடா குடியேற்ற திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவில் தெற்கு எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இருக்கும் வேலைவாய்ப்புகளைவிட அதிகமான புலம்பெயர்ந்தோர் இருப்பது குறித்துப் பரவலான கவலை ஏற்பட்டுள்ளது.

மறுபுறம், கனடாவில் வரலாற்றுரீதியாக குடியேற்றத்திற்கு மிக அதிகமான ஆதரவு இருந்துள்ளது.

“கனடாவுக்கான குடியேற்றம் அரசாங்கத்தால் நன்கு நிர்வகிக்கப்படுகிறது, நாட்டின் நலன்களுக்கு அது பங்களிக்கும் வகையில் நிர்வகிக்கப்படுகிறது என்பதில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் அதற்கு ஒரு காரணமென்று நான் கருதுகிறேன்,” என்று கேமரூன் விளக்குகிறார்.

இருப்பினும், குடியேற்றத்தில் எந்தப் பிரச்னையும் இல்லையென்று இதற்குப் பொருளில்லை.

சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்க எல்லையில் குடியேற்றம் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் 2018இல் ஒரு புதிய வலதுசாரி கட்சி தோன்றியது. கனடாவின் மக்கள் கட்சி 2019ஆம் ஆண்டு கூட்டாட்சித் தேர்தலின்போது இதை தேசிய உரையாடலின் ஒரு பகுதியாக வைத்திருந்தது.

கனடா குடியேற்ற திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குடியேற்றம் குறித்து கனடாவின் சில பகுதிகளில் வேறுபட்ட கருத்துகளும் உள்ளன.

அரசாங்கம், ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேரை புதிதாகக் குடியேற்றும் (2021ஆம் ஆண்டை விட 25% அதிகம்) தனது தீவிர இலக்குகளை அறிவித்தபோது, தனது சொந்த குடியேற்ற வரம்புகளை நிர்ணயிக்கும் உரிமை பெற்ற கியூபெக் மாகாணம், ஆண்டுக்கு 50,000 பேருக்கு மேல் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெளிவுபடுத்தியது. நாட்டின் மக்கள்தொகையில் 23% பேர் வாழும் கியூபெக் மாகாணம், 10% வெளிநாட்டவரை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.

கியூபெக் பிரதமர் பிரான்சுவா லெகோல்ட், அதிகமான புலம்பெயர்ந்தோர் வருவது இந்த மாகாணத்தில் பிரெஞ்சு மொழியை பலவீனப்படுத்தும் என்று தான் கவலைப்படுவதாகக் கூறினார்.

“50,000 பேர் குடியேறும்போதே கூட பிரெஞ்சு மொழியின் வீழ்ச்சியைத் தடுப்பது கடினம்,” என்று அவர் கூறினார்.

கனடாவில் வளர்ச்சிக்கு அதிக இடம் இருக்கலாம் என்பது உண்மையாக இருந்தாலும், சில இடங்கள் அதிக அழுத்தத்தை உணர்கின்றன. நாட்டின் சுமார் 10 சதவீத மக்கள் வசிக்கும் டொரன்டோ, வான்கூவர் போன்ற பெரிய நகரங்கள், மலிவு விலையில் வீட்டுவசதியைப் பெறுவதில் நெருக்கடியைச் சந்திக்கின்றன.

கனடா குடியேற்ற திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

1,537 கனடியர்களிடையே லெகெர் மற்றும் கனடிய ஆய்வுகளுக்கான சங்கம் நடத்திய ஆய்வில், நான்கு பேரில் மூவர், குடியேற்றத்திற்கான புதிய திட்டம் வீட்டுவசதி மற்றும் சமூக சேவைகளில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைப் பற்றி ஓரளவுக்கு அல்லது மிகவும் கவலை கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர். ஏறக்குறைய பாதிப் பேர் (49%) இந்த இலக்குகள் மிக அதிகம் என்று வாதிட்டனர், 31% பேர் இது சரியான இலக்கு தான் என்று வாதிட்டனர்.

கனடிய அணுகுமுறை

பொருளாதார குடியேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது மேற்கத்திய உலகில் கனடா தனித்துவமாக இருப்பதற்கான மற்றொரு காரணம். நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களில் பாதிப் பேர் திறமையின் அடிப்படையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2025ஆம் ஆண்டுக்குள் இந்த அளவு 60 சதவீதத்தை எட்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

கனடாவில் கட்டமைப்பு எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பதும் இதற்கான காரணத்தில் ஒரு பகுதி என்று கேமரூன் விளக்குகிறார். கனடா, 1960களில் ஒதுக்கீட்டு முறையிலிருந்து புள்ளிகள் அடிப்படையிலான அமைப்புக்கு மாறியது. இந்த முறை கனடாவின் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கும் உயர்-திறன் வாய்ந்த புலம்பெயர்ந்தோருக்கு முன்னுரிமை அளித்தது.

“அதே கொள்கை இன்றும் வழிநடத்துகிறது,” என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

கனடா குடியேற்ற திட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரிட்டனில், நிரந்தர குடியிருப்பாளர்களில் நான்கில் ஒருவருடைய காலவரையறையின்றித் தங்குவதற்கான உரிமை, சற்று அதிகமாகச் செய்யும் பொருளாதாரரீதியிலான பங்களிப்பால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அமெரிக்காவில், 20% கிரீன் கார்டுகள் மட்டுமே அந்தக் காரணத்திற்காக வழங்கப்படுகின்றன. இரண்டு நாடுகளும் பொருளாதாரரீதியிலான புலம்பெயர்ந்தோரின் விகிதத்தை அதிகரிக்க நினைப்பதாகக் குறிப்பிட்டுள்ளன. பெரும்பாலான பொருளாதார குடியேற்றங்களில் அவர்களுடைய முதலாளிகள் நிதியுதவி செய்ய வேண்டும்.

கனடாவில், வேலைவாய்ப்போடு வருவது உங்களுடைய மொத்த புள்ளிகளில் கணக்கில் எடுக்கப்படும். ஆனால் அது அவசியம் என்றில்லை.

கனடா தனது இலக்கினை அடைய முடியுமா?

கனடா மற்ற பெரிய நாடுகளைவிட திறமையான புலம்பெயர்ந்தோரை வரவேற்பதோடு மட்டுமின்றி, 2021இல் 20,428 அகதிகளை ஏற்றுக்கொண்டு, அகதிகள் குடியேற்றத்திற்கான சிறந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

அந்நாடு எதிர்காலத்திற்கான லட்சிய இலக்குகளை நிர்ணயித்திருந்தாலும், அது எப்போதும் தனது சொந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்பதை வரலாறு காட்டுகிறது. 2021ஆம் ஆண்டில், கனடா சுமார் 59,000 அகதிகளை குடியேற்றுவதை இலக்காகக் கொண்டிருந்தது. இது முன்னர் ஏற்றுக்கொண்ட அளவைவிட மூன்று மடங்கு அதிகம்.

கனடிய பொது ஒளிபரப்பு நிறுவனமான சிபிசிக்கு அளித்த பேட்டியில், குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள கோவிட் பேரிடர் தொடர்பான எல்லை மூடல் காரணமாகப் பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறினார்.

2023ஆம் ஆண்டளவில், 76,000 அகதிகளை குடியேற்ற கனடா இலக்கு வைத்துள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c72n54ggg29o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலே சண்முகம்… விட்றா 🛶வள்ளதை 🚤, கனடாவுக்கு. 🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனத்தொகையை கூப்பிட எண்டு கெஞ்சி கூப்பிட்டால் பாவம் எண்டு நான் வரத்தயார்.

Link to comment
Share on other sites

22 minutes ago, goshan_che said:

சனத்தொகையை கூப்பிட எண்டு கெஞ்சி கூப்பிட்டால் பாவம் எண்டு நான் வரத்தயார்.

அப்ப நாங்கள் எதுக்கு இருக்கிறம்? பொது சேவை வழங்க தயார்...ஆனால் சேவையின் விளைவை அரசு பொறுப்பேற்க வேண்டும்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

கெஞ்சி கூப்பிட்டால் பாவம் எண்டு நான்

கனடா ஒரு மேற்குலக நாடு என்றபடியால் இப்படி எல்லாம் சொல்கிறீர்கள். இதுவே ரஷ்யாவாக இருந்தால் விழுந்தடித்து கொண்டு அங்கே குடியேற முதல் ஆட்களாக விண்ணப்பம் அனுப்புவோம் எல்லோ. அது ஒரு பூலோக சொர்க்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் பெரும்பகுதி மனிதர்கள் வாழ முடியாத பகுதி. ரொரன்டோ கூட ஒரு ஊசியிலைக்காட்டுப் பகுதி. குடியேற்றக்காரர்கள் மூலமே இந்த நிலங்களை பொருண்மிய மீட்டும் நிலைக்கு மாற்ற முடியும் என்பதற்காக கூலிகளாக உள்வாங்கப்படுகிறார்கள்.. ஏழை நாட்டு மக்களும்.. அகதிகளும். இந்த கேவலமான நிலை ரஷ்சியாவுக்கு இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கனடா ஒரு மேற்குலக நாடு என்றபடியால் இப்படி எல்லாம் சொல்கிறீர்கள். இதுவே ரஷ்யாவாக இருந்தால் விழுந்தடித்து கொண்டு அங்கே குடியேற முதல் ஆட்களாக விண்ணப்பம் அனுப்புவோம் எல்லோ. அது ஒரு பூலோக சொர்க்கம்.

அட நீங்க வேற, பைப்பில நல்ல தண்ணி வராதா பிரச்சனை அங்க இன்னும் மோசம்🤣.

பத்து பிள்ளை பெத்தால் £13,500 🤑🤑🤑.

https://www.outlookindia.com/international/vladimir-putin-offers-money-to-women-to-have-10-kids-to-repopulate-russia-news-217204/amp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Canada is the second-biggest country on earth, yet over 80 per cent of its land is uninhabited, and most Canadians live clustered in a handful of large cities close to the U.S. border. This reality stems from Canada's unique geography, which is, all things considered, rather unfriendly to humans.

https://thecanadaguide.com/places/geography/#:~:text=Canada is the second-biggest,considered%2C rather unfriendly to humans.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 ...அங்க இன்னும் மோசம்🤣.

புரினுக்கு மண்சுமப்பவர்கள் எந்த நாடுகளில் ஒட்டி ஐக்கியமாகி வாழ்கிறார்கள் என்பதை பார்த்தாலே பூலோக சொர்க்கத்தின் உண்மைகள் எல்லாம் விளங்குகிறதே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அட நீங்க வேற, பைப்பில நல்ல தண்ணி வராதா பிரச்சனை அங்க இன்னும் மோசம்🤣.

பத்து பிள்ளை பெத்தால் £13,500 🤑🤑🤑.

https://www.outlookindia.com/international/vladimir-putin-offers-money-to-women-to-have-10-kids-to-repopulate-russia-news-217204/amp

இலங்கை ரூபாயைவிட Euro, dollar ன் பெறுமதி அதிகம். குறைந்த செலவில் DR. ஆக அங்க ஓடும் ஆட்கள், ரூபிளின் பெறுமதி அதிகரித்தால் அங்கேயும் ஓடுவினம். இது ஒன்றும் அதிசயம் இல்லையே. 

அங்கே போனால் westக்காக கதைக்கவா போகினம் இல்லையே. ரஸ்யாவுக்காகத்தானே கூவுVனம். அதிகாரத்துக்கும் பணத்திற்கும் நாங்கள் பம்முவோமில்..

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

யார் என்ன கூவினாலும்,

சுமன் + சாணக்ஸ் ஒட்டாவா பார்லிமெண்டுக்கு முன்னாலா நிண்டு எடுத்த டூரிஸ்ட் போட்டோவை வச்சி,

“எனக்கு கிடைத்த தகவல் படி”,

“விடயம் தெரிந்தவர்கள் சொல்வதன் படி”,

“மேற்கு ஒரு முடிவோடு இலங்கையில் இறங்கி விட்டது”,

“இப்போ அமெரிக்க படைகள் கொழும்பில் இறங்கி விட்டது” 

எண்டு நீங்கள் கூவிய கூவலுக்கு கிட்டயும் வராது கற்ப்ஸ்🤣.

நெடுக்ஸ், குசா & சிறி அண்ணாக்களின் மேற்கு மீதானா கோபம் போல இனம் சார்ந்ததல்ல உங்கள் கோபம்.

உங்களுக்கு சுமன் கனடா வந்த நேரம் - ஆரோ மேற்கின் முகவர் (சுமனாக கூட இருக்கலாம்) - மேற்கு அப்படி சொன்னது இப்படி சொன்னது எண்டு நல்லா தகடு வச்சிருக்கானுவோ.

அதை நம்பி நீங்களும் இஞ்ச வந்து அவிச்சு இறக்கி போட்டு - கடைசில பார்த்தா - பட்டை நாமம் போட்டிருக்கு நெத்தில🤣.

உண்மையை சொல்லுங்கோ கற்ப்ஸ் இதுதானே உங்கள் மேற்கின் மீதான திடீர் கோபத்தின் பின்ணனி?

***

Edited by நியானி
நீக்கப்பட்ட மேற்கோளுக்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

1) யார் என்ன கூவினாலும்,

சுமன் + சாணக்ஸ் ஒட்டாவா பார்லிமெண்டுக்கு முன்னாலா நிண்டு எடுத்த டூரிஸ்ட் போட்டோவை வச்சி,

“எனக்கு கிடைத்த தகவல் படி”,

“விடயம் தெரிந்தவர்கள் சொல்வதன் படி”,

“மேற்கு ஒரு முடிவோடு இலங்கையில் இறங்கி விட்டது”,

“இப்போ அமெரிக்க படைகள் கொழும்பில் இறங்கி விட்டது” 

எண்டு நீங்கள் கூவிய கூவலுக்கு கிட்டயும் வராது கற்ப்ஸ்🤣.

நெடுக்ஸ், குசா & சிறி அண்ணாக்களின் மேற்கு மீதானா கோபம் போல இனம் சார்ந்ததல்ல உங்கள் கோபம்.

உங்களுக்கு சுமன் கனடா வந்த நேரம் - ஆரோ மேற்கின் முகவர் (சுமனாக கூட இருக்கலாம்) - மேற்கு அப்படி சொன்னது இப்படி சொன்னது எண்டு நல்லா தகடு வச்சிருக்கானுவோ.

அதை நம்பி நீங்களும் இஞ்ச வந்து அவிச்சு இறக்கி போட்டு - கடைசில பார்த்தா - பட்டை நாமம் போட்டிருக்கு நெத்தில🤣.

உண்மையை சொல்லுங்கோ கற்ப்ஸ் இதுதானே உங்கள் மேற்கின் மீதான திடீர் கோபத்தின் பின்ணனி?

****

1) தாங்கள் சம்சும, சாணக்கியன் கொஸ்ரியை தலையில் வைத்துக் கொண்டாடியதை மறந்துபோனோம் என நினைக்கிறீர்களோ. 

எனக்கு நம்பிக்கையாகக் கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன். என்னால் பகிர்ந்துகொள்ளப்பட்டவைகளை உங்களால் மறுக்க முடியுமா? காலம் சென்றாலும் வேலை நடைபெறுகிறதல்லவா ? 

நான் எதை எழுதினாலும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்களைப்போன்று கொள்கையை மாற்றுவதில்லை. கோச்சான்.  வேண்டுமானால் சீனியரான உங்களை மேவுதல் ஆகாது என்பதற்காக எனது நிலைப்பாட்டை வருடத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொள்கிறேன். அப வட்டா 👍

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

1. அப்ப நான் சொன்னது ரைட்டு…ஆரோ மேற்கின் முகவர் ஸ்டிக்கர் ஒட்டித்தான் இருக்கான்🤣

***

7 hours ago, Kapithan said:

என்னால் பகிர்ந்துகொள்ளப்பட்டவைகளை உங்களால் மறுக்க முடியுமா?

இல்லை ஆனால் அவை உங்களுக்கு யாரோ போட்ட நாமம் என்பதை சொல்ல முடியும்🤣

7 hours ago, Kapithan said:

காலம் சென்றாலும் வேலை நடைபெறுகிறதல்லவா ? 

ஈஸ் ஈட்?

என்ன வேலை?

யார் செய்கிறார்கள்?

பிகு

நீங்கள் போடும் அன்னதானத்தில் முதல் ஆளாக காத்திருக்கிறேன்.

@பெருமாள்@MEERAவும் அவியல் என்றால் ஓடி வருவார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

சனத்தொகையை கூப்பிட எண்டு கெஞ்சி கூப்பிட்டால் பாவம் எண்டு நான் வரத்தயார்.

அங்கை போனால் பக்கத்து வீடு,அயல் அட்டைகள் துலைஞ்சான்..... 🤣

யாழ்கள அனுபவத்தை வைச்சு சொல்லுறன்....😂

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

1. அப்ப நான் சொன்னது ரைட்டு…ஆரோ மேற்கின் முகவர் ஸ்டிக்கர் ஒட்டித்தான் இருக்கான்🤣

***

இல்லை ஆனால் அவை உங்களுக்கு யாரோ போட்ட நாமம் என்பதை சொல்ல முடியும்🤣

ஈஸ் ஈட்?

என்ன வேலை?

யார் செய்கிறார்கள்?

பிகு

நீங்கள் போடும் அன்னதானத்தில் முதல் ஆளாக காத்திருக்கிறேன்.

@பெருமாள்@MEERAவும் அவியல் என்றால் ஓடி வருவார்கள்.

""உலக தரப்படுத்தல் வரிசையிலேயே வராத பல்கலைகழகத்தில், அதுவும் இளமானி படிப்பை முடித்து விட்டு, சர்வதேச கீர்த்தி பெற்ற பல்கலைகளில் முதுமாணி, முனைவர், மற்றும் ஒரு சில பேராசிரியர்கள் கூட உலாவரும் யாழ் களத்தில""

ஐயா பெரியவா 👆 தாங்கள் எழுதியது. இதில் சாதியும் சமயமும் மட்டும்தான் மிஸ்சிங். அதயிம் குறிப்பிட்டால் உங்களின் கோவணமும் பறிபோய்விடும் என்பதால் எழுதாமல் விட்டீர்கல். இந்த லட்சணத்தில் தரத்தைப்பற்றி நீங்கள் வகுப்பெடுக்கலாமா? 🤣

விலாவாரியாக விபரித்து எழுதும் நாட்கள் போய், கேலியை மட்டுமே முழுநேரத் தொழிலாகச்  செய்யும் நிலைக்கு இறங்கி வந்துவிட்டீர்கள். 

எதைக் கற்றாலும் மனிதனின் உண்மையான முகம்/தரம் என்று ஒன்று இருக்கிறதல்லவா அது வெளித் தெரிந்துதானே ஆகவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

விலாவாரியாக விபரித்து எழுதும் நாட்கள் போய், கேலியை மட்டுமே முழுநேரத் தொழிலாகச்  செய்யும் நிலைக்கு இறங்கி வந்துவிட்டீர்கள். 

எதைக் கற்றாலும் மனிதனின் உண்மையான முகம்/தரம் என்று ஒன்று இருக்கிறதல்லவா அது வெளித் தெரிந்துதானே ஆகவேண்டும். 

இல்லையே கற்ப்ஸ் - நேற்றிரவு கூட உக்ரேன் திரியில் கு. சா அண்ணைக்கு 3 காரணிகளை 2 புல்ஸ்கேப் ஷீட் எழுதி உள்ளேனே🤣.

தவிரவும் நக்கல் நையாண்டி எப்பவும் செய்வதுதான்.

குறிப்பாக தம்மை இட்டு பெரிதாக கற்பிதம் செய்துகொள்வோர் மீது.

ஆனால் “வேலை நடப்பதாக” நீங்கள் சொன்னதை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவ வேண்டாம் கற்ப்ஸ்.

1 hour ago, Kapithan said:

எனக்கு நம்பிக்கையாகக் கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டேன். என்னால் பகிர்ந்துகொள்ளப்பட்டவைகளை உங்களால் மறுக்க முடியுமா? காலம் சென்றாலும் வேலை நடைபெறுகிறதல்லவா ? 

👆🏼👇

1 hour ago, goshan_che said:

ஈஸ் ஈட்?

என்ன வேலை?

யார் செய்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

1. அப்ப நான் சொன்னது ரைட்டு…ஆரோ மேற்கின் முகவர் ஸ்டிக்கர் ஒட்டித்தான் இருக்கான்🤣

***

இல்லை ஆனால் அவை உங்களுக்கு யாரோ போட்ட நாமம் என்பதை சொல்ல முடியும்🤣

ஈஸ் ஈட்?

என்ன வேலை?

யார் செய்கிறார்கள்?

பிகு

நீங்கள் போடும் அன்னதானத்தில் முதல் ஆளாக காத்திருக்கிறேன்.

@பெருமாள்@MEERAவும் அவியல் என்றால் ஓடி வருவார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை வேறு…..

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பகிடிக்காக  இங்கே  எழுதிக்கொண்டிருந்தாலும்

அந்தப்பூமி கூட்டி  வந்தால் வருவதற்கு  தயாராக பலகோடி  மக்கள்  உலகம்  எங்கும்  என்பதை  மறத்தலாகாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நாம் பகிடிக்காக  இங்கே  எழுதிக்கொண்டிருந்தாலும்

அந்தப்பூமி கூட்டி  வந்தால் வருவதற்கு  தயாராக பலகோடி  மக்கள்  உலகம்  எங்கும்  என்பதை  மறத்தலாகாது

நீங்க வேற, இந்த குடியேறிகளை கனடா நாடும் செய்தியை சர்வ தேச ஊடகங்கள் வெளியிட முன்னரே ஊரில் இருப்போர் எப்படியோ அறிந்து விட்டார்கள் (கனடாவில் வசிக்கும் உறவுகள் செய்திகளைப் பகிர்ந்திருப்பார்கள் போல). சில முகவர்கள் ஏற்கனவே விளம்பரம் , சுத்து மாத்து என்று ஆரம்பித்து விட்டார்கள். உயர்தரம் படிக்கும் ஒரு உறவு பரீட்சையை விட இதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது தொலைபேசி உரையாடலில் விளங்கியது.

இப்படித் தான் ஆர்வமாக சட்ட ரீதியிலும், சட்டத்திற்கு புறம்பாகவும் வந்து இறங்குவார்கள். ஒரு பத்து வருடம் கழித்து கனடா கல்வியும், வேலையும், சுதந்திரமும் கொடுத்து நிமிர்த்தி விட்ட பிறகு, மேற்கின் ஜனநாயக சமுதாயத்தின் குறைபாடுகளைக் குறிப்பிட்டு சர்வாதிகாரிகளை தலையில் தூக்கி வைத்துக் காவடி எடுப்பர்!😂

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

நீங்க வேற...

உங்களுக்காவது  படிக்கும்  உறவு

எனக்கு  வைத்தியர் இஞ்சினியர்மார்....

படித்து  பட்டம்  எடுத்து விட்டு கனடா  பறக்க மட்டுமே தயாராக...

அப்படியொருவருக்கு எனது  கனடா  உறவு பொன்சரில் விசா  ஏற்பாடு  செய்து

வந்து  கொஞ்ச  காலம் வேற வேலை  ஏதாவது (உணவகம்  அல்லது  Barல் ) செய்த தான்  பின்னர் உங்களது  படிப்பு  சம்பந்தமான  வேலைக்கு  போகலாம் என்று சொல்ல அப்படி  ஏலாது வந்தவுடன் படிப்பு  சம்பந்தமான  வேலை  என்றால் மட்டும் விசா  செய்யுங்கோ  இல்லாட்டி அந்த விசா  தேவைஇல்லை  என்று  சொல்லிவிட்டார்கள்😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

படித்து  பட்டம்  எடுத்து விட்டு கனடா  பறக்க மட்டுமே தயாராக...

# தேஜாவூ 🤣

3 hours ago, Justin said:

இப்படித் தான் ஆர்வமாக சட்ட ரீதியிலும், சட்டத்திற்கு புறம்பாகவும் வந்து இறங்குவார்கள். ஒரு பத்து வருடம் கழித்து கனடா கல்வியும், வேலையும், சுதந்திரமும் கொடுத்து நிமிர்த்தி விட்ட பிறகு, மேற்கின் ஜனநாயக சமுதாயத்தின் குறைபாடுகளைக் குறிப்பிட்டு சர்வாதிகாரிகளை தலையில் தூக்கி வைத்துக் காவடி எடுப்பர்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அங்கை போனால் பக்கத்து வீடு,அயல் அட்டைகள் துலைஞ்சான்..... 🤣

யாழ்கள அனுபவத்தை வைச்சு சொல்லுறன்....😂

😃 அட நம்ம ஆள்....

10 hours ago, MEERA said:

இன்று வெள்ளிக்கிழமை வேறு…..

வெள்ளிகிழமை விரதம் தானே ?????????????????

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

😃 அட நம்ம ஆள்....

வெள்ளிகிழமை விரதம் தானே ?????????????????

இல்லை ஸ்பெசல் அவியல். இன்னும் காணேல்ல. 

3 கேள்விய கேட்டுட்டு ஐ ஆம் வெயிட்டிங் யா…

சம்+சும்+சாணாக்ஸ்+அமெரிக்கா எல்லாம் சேர்ந்து இலங்கையில ஏதோ “வேலை நடக்குதாம்” 👀.

Link to comment
Share on other sites

  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.