Jump to content

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் போராளிகள், சட்டத்தரணி தவராசா மற்றும் சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டிந்தனர்.

https://athavannews.com/2022/1314985

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்று சிந்தனையோடு பயணிப்பவர்கள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்-மூத்த போராளி ஈஸ்வரன்

மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளி ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அங்கு தெரிவிக்கையில் ,எங்களைப் பொறுத்தவரை தேசம் சார்ந்து தேசியத்தோடு பயணித்த போராட்ட அமைப்புகளின் போராளிகள் அதாவது விடுதலைக்காக பிற்பட்ட காலங்களிலே சில போராட்ட அமைப்புக்கள் எமது போராட்ட அமைப்போடு ஒரே கொள்கையில் இணைந்து பயணித்தவர்கள் இதில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

ஆனால் மாற்று சிந்தனையோடு பயணித்தவர்கள் யாரும் இந்த எமது அமைப்பில் இணைத்து பயணிக்கப் போவதில்லை.

நாங்கள் சிந்தித்து செயல்படுகின்ற விடயங்களை தொடர்ந்து பயணிக்காமல் முடியாமல் போய்விடும் எனவே மாற்று சிந்தனையுடையவர்களை இதில் உள்ளடக்க முடியாது என்பது எமது நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1315010

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்”

👆எங்கள் எல்லோரையும் ஒன்றுசேரவிடால் பிரித்து வைத்திருப்பது இந்தச் 👆சிந்தனை முறைதான்.(இதன் அர்த்தம் மேலே பேட்டி கொடுத்தவரின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதல்ல)

எல்லோரையும் ஒன்றுசேர்ப்பதே இப்போது உள்ள பணிகளில் முதன்முறையானது. 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

“ மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்”

👆எங்கள் எல்லோரையும் ஒன்றுசேரவிடால் பிரித்து வைத்திருப்பது இந்தச் 👆சிந்தனை முறைதான்.(இதன் அர்த்தம் மேலே பேட்டி கொடுத்தவரின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதல்ல)

எல்லோரையும் ஒன்றுசேர்ப்பதே இப்போது உள்ள பணிகளில் முதன்முறையானது. 

அதேதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரையும் ஒன்றிணைக்கனும் என்று காத்திருந்தால் எந்த வேலைத்திட்டத்தையும் எக்காலத்திலும் கொண்டு செல்ல முடியாது.

ஒத்த சிந்தனையுள்ள அநேகரை ஒன்றிணைக்கலாம்.. எல்லாரையும் ஒன்றிணைக்க முடியாது. ஏனெனில் சிலர் மாற்றுச் சிந்தனை என்பதையே சொந்த சுயலாபத்திற்காக கையில் எடுத்திருப்பவர்கள். அவர்களை எந்த வழியில் முயன்றாலும் தேசியத்தின் பெயரால் தேசத்தின் பெயரால் ஒன்றிணைக்க முடியாது. இந்த யதார்த்தத்தில் இருந்து தான்.. அந்தப் புரிதலோடுதான்.. எந்தப் பயணமும் சாத்தியமாக்கப்படலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!

என்ன சிந்தனையுடனாவது பயணியுங்கள்.

ஆனால் இந்தியாவின் சிந்தனையுடன் மட்டும் பயணிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

“ மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்”

👆எங்கள் எல்லோரையும் ஒன்றுசேரவிடால் பிரித்து வைத்திருப்பது இந்தச் 👆சிந்தனை முறைதான்.(இதன் அர்த்தம் மேலே பேட்டி கொடுத்தவரின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதல்ல)

எல்லோரையும் ஒன்றுசேர்ப்பதே இப்போது உள்ள பணிகளில் முதன்முறையானது. 

அதற்கு முதலில் மாற்றுக்கருத்து என்பது என்ன என்று தெரியணும் இல்லையா?

டக்ளஸ் மாமா என்றால்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதற்கு முதலில் மாற்றுக்கருத்து என்பது என்ன என்று தெரியணும் இல்லையா?

டக்ளஸ் மாமா என்றால்??

விளங்கவில்லையா அண்ணை?

RAW 87 இல் சொன்ன அதே விடயம்தான், தங்கள் அல்லகைகளையும் சேர்த்து கொள்ள வேண்டுமாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவர்களின் பின்புலம் பற்றித் தெரியாது. ஆனால் முன்னாள் போராளிகளின் நலன்களுக்காக அரசியல் இல்லாத நிறுவனமயப்பட்ட ஓர் அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பது எனது விருப்பம். அந்தவகையில் இது நல்லதொரு தொடக்கம் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

“ மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்”

👆எங்கள் எல்லோரையும் ஒன்றுசேரவிடால் பிரித்து வைத்திருப்பது இந்தச் 👆சிந்தனை முறைதான்.

பாகுபாடின்றி  அணைத்துபோக அவர்கள் ஆரம்பிக்கபோவது அரசியல் கட்சியோ அல்லது மிக பெரும் பொருளாதார நிறுவனமோ அல்ல,  மாறாக நலிந்துபோன முன்னாள் போராளிகளின் நலன்களை கவனிக்கும் ஒரு அமைப்பாகவே நினைக்கின்றேன்.

இறுதி யுத்தம்வரை இந்த போராளிகளையும் அவர்கள் சார்ந்த அமைப்பையும் தலைமையையும் அழிப்பதையே முழுமூச்சாக கொண்ட அரச இயந்திரங்களுடன் சேர்ந்து இயங்கியவர்கள், இன்று அதே போராளிகளின் நலன் சார்ந்த கட்டமைப்புக்குள் உள் வாங்கபட வேண்டும் எனும் கருத்தில் என்ன வலுவான நியாயம் இருக்கிறது?

ஒருவேளை மாற்று கொள்கைகளில் இயங்கியவர்கள் இன்று நலிந்து போயிருந்தால் அவர்கள்  அன்று பின்னால் நின்ற அரசும் அரசியலும் நன்றிக்கடனுக்காக இன்று இவர்களை அணைத்து போகவேண்டியது அவர்களின் தார்ப்பரிய கடமை. அது  போராளிகளின் நலன் சார்ந்த அமைப்புக்களின் கடமைகளில் ஒன்றல்ல,

அனைவரையும் அணைத்துபோவது காலத்தின் கடமையென்றால், அன்று மாற்று கொள்கைகளுடன் இயங்கி அரச சுகபோகமும் அமைச்சர் பதவியும் பெற்று இன்றும் இயங்கும் பணபலம் அரசியல் பலம் கொண்ட மாற்று அரசியல் தலைவர்கள், போராளிகள் நலன்களை கவனித்து அவர்களை அணைத்து போயிருக்கலாமே?

ஒன்று சேரும் கொள்கை என்பது ஒருபக்கத்திலிருந்து மட்டுமா சிந்திக்கபடவேண்டும்?

இது இஸ்லாமியர்கள் காலம் முழுவதும் அரசுடன் சேர்ந்து இயங்குவதும், தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு பேச்சுக்கள் ஆரம்பித்தால் அதற்குள் தம்மையும் சேர்க்கவேண்டும் என்று திடீர் குரல் எழுப்பும் சபை குழப்பு  கோட்பாடு.

அதிலிருந்து நிறைய வேறுபாடு ஏதுமில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

இந்த்ச் சிந்தனை முறை இவர்களுக்கும் மட்டுமே உரித்தானது அல்ல. 

"இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள்”

என்பதன் ஊடாக நாங்களாகவே எமக்கு முன்னால் ஒரு தடையைப் போட்டுவிடுகிறோம். இது எப்போதும் எங்களைப் பிரித்து வைத்திருக்கும் என்பதை தாங்கள் உணரவில்லையா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

விளங்கவில்லையா அண்ணை?

RAW 87 இல் சொன்ன அதே விடயம்தான், தங்கள் அல்லகைகளையும் சேர்த்து கொள்ள வேண்டுமாம்🤣

இதுகள் எப்பவுமே அழிவையும் பலத்தை சிதைப்பதையும் சுயநலங்களை மட்டும் முன்னிறுத்துபவர்களாகவும் மட்டுமே உள்ளனர்

போராளிகளுக்கு ஒரே நாளில் அஞ்சலிக்கலாம் என்றபடி மாவீரர் நாளை மாற்றணும் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருப்பவர்களும் இவர்களே. கொஞ்சம் பழகியதால் களை எடுத்தலை அனுபவம் ஊடாக உணர்ந்ததுண்டு.😭

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.