Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று (திங்கட்கிழமை) காலை 10.50 அளவில் சென்னையில் இருந்து புறப்படும் விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.

இதனையடுத்து மீண்டும் எலையன்ஸ் ஏர் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும்.

இதற்கமைய, சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இதேவேளை 2019 ஒக்டோபர் மாதம் பலாலி விமான நிலையம் நல்லாட்சி அரசாங்கத்தினால் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1315030

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

5 பயணிகளுடன் முதல் விமானம் வந்தது

விமான நிலையம், வசதிகள் பார்க்க ஓரளவு ஓக்கேயாகத்ததான் இருக்கு.

ஹரினுக்கு பக்கத்தில் நிற்பது சந்திரசிறி?

நேற்றுவரை அலையன்ஸ் ஏர் வெப்சைட்டில் புக்கிங் “சுத்தி கொண்டு”தான் நிண்டது.

இதை கொஞ்சம் ஆர்வமாக மார்கெட்டிங் செய்தால் நிச்சயம் போதிய சனம் போய் வரும் என நினைக்கிறேன்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று (திங்கட்கிழமை) காலை 10.50 அளவில் சென்னையில் இருந்து புறப்படும் விமானம் யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.

இதனையடுத்து மீண்டும் எலையன்ஸ் ஏர் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும்.

இதற்கமைய, சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இதேவேளை 2019 ஒக்டோபர் மாதம் பலாலி விமான நிலையம் நல்லாட்சி அரசாங்கத்தினால் மீள் அபிவிருத்தி செய்யப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1315030

என்னது யாழ் சர்வதேச விமானநிலையமா?.  ஜேர்மனியிலிருந்து பலாலியில். போய் இறங்க முடியுமா?.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

Air India plane!

ஓம். ஏர் இண்டியாவின் டாட்டா வாங்கிய ஒரு அங்கம்தான் அலையான்ஸ்.

1 minute ago, Kandiah57 said:

என்னது யாழ் சர்வதேச விமானநிலையமா?.  ஜேர்மனியிலிருந்து பலாலியில். போய் இறங்க முடியுமா?.   🤣

🤣 அப்படியே சர்வ என்ற பதத்தில் தொங்க கூடாது அண்ணை.

சரி பலாலி நாடுகளிடையான போக்குவரத்து விமானநிலையம் எண்டு சொல்லுவம் இனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

என்னது யாழ் சர்வதேச விமானநிலையமா?.  ஜேர்மனியிலிருந்து பலாலியில். போய் இறங்க முடியுமா?.   🤣

Lufthansa to Chennai

Chennai to Jaffna

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் நடக்கட்டும்.......!  👍

நன்றி நாதம்ஸ்......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kandiah57 said:

என்னது யாழ் சர்வதேச விமானநிலையமா?.  ஜேர்மனியிலிருந்து பலாலியில். போய் இறங்க முடியுமா?.   🤣

அங்கை உங்கடை வீட்டுக்கு பக்கத்திலை தரவை,வெட்ட வெளியள் இல்லையே?🤣
ஏனெண்டால்  வீட்டு வாசல்லையே இறக்கி விடுவியளோ எண்டு கேட்டுப்பாக்கலாம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

5 பயணிகளுடன் முதல் விமானம் வந்தது

முதலில் ஒரு குட்டி விமானத்தைப் பார்த்ததும் ஏமாற்றமாக இருந்தது, பிறகு தான் பெரிய விமானம் வந்தது. 50-60 நபர்கள் பயணிக்கலாம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

இதை கொஞ்சம் ஆர்வமாக மார்கெட்டிங் செய்தால் நிச்சயம் போதிய சனம் போய் வரும் என நினைக்கிறேன்

நல்லூர் முருகன், கதிர்காமக் கந்தன், ஜந்து சிவாலயம், அப்பியே சீதையின் அசோகவனம் என்று மார்கற்றிங் செய்தால், இந்தியர்களை இறக்கலாம்.

முக்கியமாக நம்ம வன்னியர் வருவார்..... 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kandiah57 said:

என்னது யாழ் சர்வதேச விமானநிலையமா?.  ஜேர்மனியிலிருந்து பலாலியில். போய் இறங்க முடியுமா?.   🤣

முதலில் விமான நிலையத்தை லாபகரமானதாக நடத்த ஜெர்மனியிலிருந்து சென்னை மூலமாகவேனும் யாழ்ப்பாணம் வரப்பாருங்கள். எடுத்த எடுப்பிலேயே அத்தனை விமானங்களும் வந்திடுமா? புலத்திலிருக்கும் அத்தனை சனங்களும் உபயோகிக்க வெளிக்கிட்டால் யாழ் விமான நிலையம் சர்வதேசமாகாதா ஐயா?

மனமிருந்தால் மார்க்கபந்து ச்சீ.. மார்க்கமுண்டு, முன்னேற்றமும் உண்டுடூடூடூ…😎 

2 minutes ago, Nathamuni said:

நல்லூர் முருகன், கதிர்காமக் கந்தன், ஜந்து சிவாலயம், அப்பியே சீதையின் அசோகவனம் என்று மார்கற்றிங் செய்தால், இந்தியர்களை இறக்கலாம்.

முக்கியமாக நம்ம வன்னியர் வருவார்..... 😁

நான் நிச்சயம் வருவேன், ஆனால் அங்கே எனக்கு யாரையும் தெரியாதே? சுற்றுலா பயணமாக ஓரிரு நாள் தங்கி பார்க்கலாம்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

நல்லூர் முருகன், கதிர்காமக் கந்தன், ஜந்து சிவாலயம், அப்பியே சீதையின் அசோகவனம் என்று மார்கற்றிங் செய்தால், இந்தியர்களை இறக்கலாம்.

முக்கியமாக நம்ம வன்னியர் வருவார்..... 😁

சொலாமலே சீனர்கள் வருவார்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

அங்கை உங்கடை வீட்டுக்கு பக்கத்திலை தரவை,வெட்ட வெளியள் இல்லையே?🤣
ஏனெண்டால்  வீட்டு வாசல்லையே இறக்கி விடுவியளோ எண்டு கேட்டுப்பாக்கலாம் 😎

இருக்கிறது அண்ணை....என்னுடைய ஒன்றுவிட்ட அண்ணனை  1980ஆண்டளவில் யாழ்ப்பாணம் இராணுவ தளபதியாகவிருந்த.  கொத்தலவலையின். சகோதரியை...சிங்களபெட்டை திருமணம் செய்திருந்தவர்.    அடிக்கடி கோலில்  வந்து இறங்குவன்.      ...நான் கேட்டது சர்வதேச  ..சர்வதேச....சர்வதேச என்றபடியால்.   🤣😂. நான் 10 கிலோ புத்தகங்களை தோளில் சுமந்து கொண்டு 4 கிலோமீட்டர் நடத்து போய் படித்தவன்’    😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

நல்லூர் முருகன், கதிர்காமக் கந்தன், ஜந்து சிவாலயம், அப்பியே சீதையின் அசோகவனம் என்று மார்கற்றிங் செய்தால், இந்தியர்களை இறக்கலாம்.

முக்கியமாக நம்ம வன்னியர் வருவார்..... 😁

ஓம்..எப்படியும் இதில் trade deficit இந்தியா சாப்ர்வாகவே இருக்கும் என நினைக்கிறன். ஆனாலும் சனங்கள் வந்து போறதே ஒரு நல்ல விசயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

முதலில் ஒரு குட்டி விமானத்தைப் பார்த்ததும் ஏமாற்றமாக இருந்தது, பிறகு தான் பெரிய விமானம் வந்தது. 50-60 நபர்கள் பயணிக்கலாம் என நினைக்கிறேன்.

அது கொழும்பு போறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ராசவன்னியன் said:

முதலில் விமான நிலையத்தை லாபகரமானதாக நடத்த ஜெர்மனியிலிருந்து சென்னை மூலமாகவேனும் யாழ்ப்பாணம் வரப்பாருங்கள். எடுத்த எடுப்பிலேயே அத்தனை விமானங்களும் வந்திடுமா? புலத்திலிருக்கும் அத்தனை சனங்களும் உபயோகிக்க வெளிக்கிட்டால் யாழ் விமான நிலையம் சர்வதேசமாகாதா ஐயா?

மனமிருந்தால் மார்க்கபந்து ச்சீ.. மார்க்கமுண்டு, முன்னேற்றமும் உண்டுடூடூடூ…😎 

நான் நிச்சயம் வருவேன், ஆனால் அங்கே எனக்கு யாரையும் தெரியாதே? சுற்றுலா பயணமாக ஓரிரு நாள் தங்கி பார்க்கலாம்.

பார்ப்போம்.....சென்னையில் தமிழ் கதைப்பார்கள்.     கொழும்பில் சிங்களம் ஒன்றும் புரியாது..  சென்னை.....பலாலி க்கு 30....40..கிலோகிராம் பெட்டிகள் உடன்....எங்களுடன்    எடுத்து செல்ல முடியாது   2...3...நாள்களின்  பின்பே  மீண்டும் பலாலியில். போய் எடுக்க வேண்டி வரும்    நேரடியாக எனில் இந்த பிரச்சனை இருக்காது   மேலும்    யாழ் கள உறுப்பினர்கள்   தனிக்காட்டு ராஜா. ஏராளன். ஜீவன் சிவா. சிவரதன். ....இப்படி உங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள்...அடுத்த வருடம் ரிக்கற். விலை கூடிவிடும்.  எனவே… விரைவில் போக முயற்க்கவும் 🤣😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

நான் நிச்சயம் வருவேன், ஆனால் அங்கே எனக்கு யாரையும் தெரியாதே? சுற்றுலா பயணமாக ஓரிரு நாள் தங்கி பார்க்கலாம்.

என்ன இப்படி சொல்லி போட்டியள். இவளவு பேர் இருகிறோமே - தகவல்களை துல்லியமாக தரலாம். 

சொல்லபோனால் எங்கள் ஊர் திருவிழாவில் கூட “நீங்கள் புதுசோ” எண்டு கேட்கும் நிலைதான் எமக்கும்🤣

போய் பாருங்கள் ஐயா - பார்க்க வேண்டிய இடங்கள் என லிஸ்ட் ஒண்டு யாழிலேயே தயாரிக்கலாம்.

50 minutes ago, குமாரசாமி said:

சொலாமலே சீனர்கள் வருவார்கள். 😁

இந்தியன் போட்ட ரன்வேயில் சீன விமானம் இறங்கினால் அதன் கற்புக்கு களங்கம்🤣.

ஆகவே சன்ஹாய் - சங்கானைய் தான் சரி வரும்🤣

23 minutes ago, Nathamuni said:

Shanghai to Jaffna by Chinese Airways ???🤑😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஓம்..எப்படியும் இதில் trade deficit இந்தியா சாப்ர்வாகவே இருக்கும் என நினைக்கிறன். ஆனாலும் சனங்கள் வந்து போறதே ஒரு நல்ல விசயம். 

Political Risk இருக்கும் வரை நீங்களோ, நானோ போய், முதலிடப்போவதில்லை.

முதலீடு செய்தாலும், வேலைக்கு ஆள் இல்லை. வெளிநாட்டு மோகத்தினை, வேண்டுமென்றே அரசு ஊக்கிவிக்கும் முகமாக மறைமுகமாக செயல் படுகிறது. 

ஆகவே இது, எதிரிக்கு சகுனப்பிழை என்றால் எனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை என்ற சிங்கள அரசு நிலைப்பாடு மாறும் வரை, நாட்டுக்கு மீட்சி இல்லை.

சஜித் நேற்று அலம்பியதை பார்த்தேன். அதேவேளை அனுரவும் ஒரு கருத்தினை சொல்லி உள்ளார்.

கடன் தந்தவர்களுக்கு, வட்டி கட்ட வழியில்லை என்று சொல்லி விட்டு, மிஞ்சுற காசில் எண்ணெய், மருந்து, உணவுப்பொருள் என்று ஓடுகிறது அரசும் நாடும். 

எதனை நாளுக்கு என்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

Political Risk இருக்கும் வரை நீங்களோ, நானோ போய், முதலிடப்போவதில்லை.

முதலீடு செய்தாலும், வேலைக்கு ஆள் இல்லை. வெளிநாட்டு மோகத்தினை, வேண்டுமென்றே அரசு ஊக்கிவிக்கும் முகமாக மறைமுகமாக செயல் படுகிறது. 

ஆகவே இது, எதிரிக்கு சகுனப்பிழை என்றால் எனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை என்ற சிங்கள அரசு நிலைப்பாடு மாறும் வரை, நாட்டுக்கு மீட்சி இல்லை.

சஜித் நேற்று அலம்பியதை பார்த்தேன். அதேவேளை அனுரவும் ஒரு கருத்தினை சொல்லி உள்ளார்.

கடன் தந்தவர்களுக்கு, வட்டி கட்ட வழியில்லை என்று சொல்லி விட்டு, மிஞ்சுற காசில் எண்ணெய், மருந்து, உணவுப்பொருள் என்று ஓடுகிறது அரசும் நாடும். 

எதனை நாளுக்கு என்கிறார். 

இனி நாடு இப்படியே கடன் தவணை-கடன் தவணை ஓடும் படிதான் இருக்கும் என நினைகிறேன்.

அரசை பொறுத்தவரை மக்களை அடிமாட்டுக்கு வெளிநாடு அனுப்பினாலும் டொலர் வந்தால் காணும்.

நான் முன்பே கவனித்தது. இந்த ஆசிய உல்லாச பயணிகளால் பெருமளவில் பயன் வராது. வருவோர் அநேகர் கணக்கு பார்த்து செலவழிப்போரே.

அடிமட்ட உணவகங்கள், தங்குமிடங்கள் பயன் பெறும்.

வன்னியன்சார் சொல்வது போல, $€£ பார்டியள்தான் காசை கண்ணில் காட்டுவார்கள்.

நேற்று திண்ணையில் சசி பதிந்த CT யில் டேவிட் எழுதிய கட்டுரை வாசித்தீர்களா? மக்கள் ஜேபிவ்பிக்கு தயார் என எழுதுகிறார்.

அது இப்போ இருப்பதை விட மோசமாக இருக்க கூடும்.

15 minutes ago, Kandiah57 said:

பார்ப்போம்.....சென்னையில் தமிழ் கதைப்பார்கள்.     கொழும்பில் சிங்களம் ஒன்றும் புரியாது..  சென்னை.....பலாலி க்கு 30....40..கிலோகிராம் பெட்டிகள் உடன்....எங்களுடன்    எடுத்து செல்ல முடியாது   2...3...நாள்களின்  பின்பே  மீண்டும் பலாலியில். போய் எடுக்க வேண்டி வரும்    நேரடியாக எனில் இந்த பிரச்சனை இருக்காது   மேலும்    யாழ் கள உறுப்பினர்கள்   தனிக்காட்டு ராஜா. ஏராளன். ஜீவன் சிவா. சிவரதன். ....இப்படி உங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள்...அடுத்த வருடம் ரிக்கற். விலை கூடிவிடும்.  எனவே… விரைவில் போக முயற்க்கவும் 🤣😄

அண்ணை,

4 நாள் சென்னை, மிச்சம் 2/3 கிழமை யாழ்பாணம். சென்னையில் நல்ல சாப்பாடு, கோவில்கள், சொப்பிங் என செலவழிக்கலாம். 

போகும் போது நேரடியாக ஏர்போர்ர்டில் மாறி போய் வரும் போது சென்னையில் உள்ளே சுத்தி வரலாம்.

20 கிலோ க்கு மேலே யாழுக்கு கொண்டு போக தேவையானதை கூரியர் மூலம் போடலாம்.

இந்த பாதையை நாம் இலாபகரமாக மாற்றினால் மேலும் மேலும் connections தானாக உயரும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

கோடு போட்டுக்கொடுத்தால் அதையே ரோடாக மாற்ற முயற்சிக்கோணும். பலரும் சென்னை மூலமாக யாழ்ப்பாணம் வர ஆரம்பித்தால் தானாகவே பெரிய விமானங்கள் வந்து செல்ல அடிகோலும், அதற்கேற்ப பயணப் பொதிகளின் எடையையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனக்கு தெரிந்து மதுரை விமான நிலையத்துக்கு ஆவ்ரோ ரக விமானங்களே சில வருடங்கள் வரை வந்து சென்றன. இப்பொழுதுதான் ஏர்பஸ் A320 ரக பெரிய விமானங்கள் சர்வதேச அளவில் (துபாய், சிங்கப்பூர்) போன்ற நாடுகளுக்கு செல்கின்றன. ஆகவே புலம்பெயர்தவர்களில் வருகையை ஒட்டியே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மாற வாய்ப்புள்ளது, இல்லையேல் மத்தள விமான நிலையம் மாதிரி நெல் காயப்போட, வைக்கோல் பொதிகளை அடுக்க யாழ்ப்பாண விமான நிலையத்தை பயன்படுத்த நேரிடும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

👌 காத்திரமான கருத்துக்கள்.

இதில் ஒரே கடுப்பு இந்தியன் வீசா £100 தெண்டமாக பானிபூரி வாயனுகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் வரவிருக்கும் பொது நன்மையோடு ஒப்பிட்டால் அதுவும் ஓகேதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

👌 காத்திரமான கருத்துக்கள்.

இதில் ஒரே கடுப்பு இந்தியன் வீசா £100 தெண்டமாக பானிபூரி வாயனுகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் வரவிருக்கும் பொது நன்மையோடு ஒப்பிட்டால் அதுவும் ஓகேதான்.

£153

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

பார்ப்போம்.....சென்னையில் தமிழ் கதைப்பார்கள்.     கொழும்பில் சிங்களம் ஒன்றும் புரியாது..  சென்னை.....பலாலி க்கு 30....40..கிலோகிராம் பெட்டிகள் உடன்....எங்களுடன்    எடுத்து செல்ல முடியாது   2...3...நாள்களின்  பின்பே  மீண்டும் பலாலியில். போய் எடுக்க வேண்டி வரும்    நேரடியாக எனில் இந்த பிரச்சனை இருக்காது   மேலும்    யாழ் கள உறுப்பினர்கள்   தனிக்காட்டு ராஜா. ஏராளன். ஜீவன் சிவா. சிவரதன். ....இப்படி உங்கள் நண்பர்கள் இருக்கிறார்கள்...அடுத்த வருடம் ரிக்கற். விலை கூடிவிடும்.  எனவே… விரைவில் போக முயற்க்கவும் 🤣😄

இங்கிருந்து இலங்கை போகும்போது 

23கிலோ இரண்டு பொதி

8 கிலோ அடக்கமான பெட்டி

கணனி கொண்டு போக என்று புத்தகப் பை (இதற்குள் கணனியைத் தவிர மிகுதியெல்லாம் இருக்கும்)

இத்தனையும் கொண்டு போவதானால் இந்தியா போய் போக முடியுமா?

2 hours ago, goshan_che said:

20 கிலோ க்கு மேலே யாழுக்கு கொண்டு போக தேவையானதை கூரியர் மூலம் போடலாம்.

கூரியர் மூலம் அனுப்பும் பொருட்கள் கொழும்புக்கு போய் சுங்க இலாகா வரிகள்கட்டி எடுக்கணுமா?

இல்லை யாழில் வீடு வந்து சேருமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையிலிருந்து வந்த முதலாவது விமானம் பலாலியில் தரையிறங்கியது ; கேக் வெட்டி கொண்டாட்டம்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைகள் திங்கட்கிழமை (12) முதல் ஆரம்பமாகியது.

இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து பலாலிக்கு விமான சேவையை ஆரம்பித்தது.

வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு தினங்களுக்கு சேவைகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்ல முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

01__6_.jpg

கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பலாலி விமான நிலையப் பணிகள் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் மீண்டும் விமான சேவை ஆரம்பமாகியது.

இந்தியாவின் அலையன்ஸ் எயார்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் திங்கட்கிழமை (12) முற்பகல் 11.30 மணிக்கு தரையிறங்கியது.

இந்த விமானத்தில் இன்றைய ஆரம்ப நிகழ்வுக்கான இந்திய பயணிகள் 28 பேர் வருகை தந்தனர்.

இந்தியா பிரதிநிதிகளை இலங்கை அமைச்சர் மற்றும் இலங்கை அதிகாரிகள் வரவேற்றனர்.

317505116_1187575561849431_5384661370197

இதையடுத்து  யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் அலையன்ஸ் எயார்லைன்ஸ் (Alliance Air) விமானிகளால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

78.jpg

இந்நிகழ்வில் இலங்கை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன் சுற்றுலா துறை பிரதிநிதிகள், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சென்னையிலிருந்து வந்த முதலாவது விமானம் பலாலியில் தரையிறங்கியது ; கேக் வெட்டி கொண்டாட்டம்! | Virakesari.lk

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.