Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

விடுங்கோ சாமியார்! நாட்டை விட்டு ஓடும்போது ஒரு காரணம், மீண்டும் ஓய்வெடுக்க நாட்டுக்கு திரும்பும்போது வேறொரு காரணம். அதுக்குள்ள மற்றவர்களை வசதியாய் வம்புக்கு இழுத்து  தங்கள் காரணத்தை போத்து மூடுவது. இதென்ன புதுசா எங்களுக்கு?

சம்பிக்க ரணவக்க "தமிழரை புறந்தள்ளியமையால் படுகுழியில் நாடு வீழ்ந்துள்ளது." உதயன் கம்மன்பில "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950ல்இருந்து கடன் வாங்கியே வாழ்ந்தோம்." மைத்திரி "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." மஹிந்தா "நாட்டில் பிரச்சனையை தீர்க்க நான் தயாராகவே உள்ளேன் ஆனால் எனக்கு வாக்களித்த மக்கள் அதற்காக எனக்கு வாக்களிக்கவில்லை, நான் பிரச்சனையை தீர்க்க முயற்சித்தால்  நாட்டில் வன்முறை ஏற்பட்டு இனங்களுக்கிடையில் (இல்லாத) நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்." என்று பகிடி விடுகிறார்.   தன் பங்குக்கு நேற்று முழைச்ச நாமல் உதிர்த்தது "தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க ராஜபக்சக்கள் தயாராக இருந்தனர், கூட்டமைப்பினரே பின்னடித்தனர், சுயலாப அரசியலே அவர்களின் இலக்கு."  இவர்கள் யாரும் சாதாரண குடிமக்கள் கிடையாது, அரசியல் கதிரையில் இருந்து சுகம் அனுபவித்தவர்கள், நாடு அழிவதற்கு காரணம் தெரிந்தும் அழித்தவர்கள். இன்று இவர்கள் பேசும் வேதாந்தம் தீர்வு என்று வரும்போது எப்படி கையாள்வார்கள் என்று கடந்தது போக இன்னும் சிலநாளில் வெளிவரும். இதை துரும்புசீட்டாக வைத்தே அடுத்தமுறை தேர்தலில் பக்சக்கள் வெல்லலாம், தமிழரின் உரிமைகளை மறுப்பதற்காக ரணிலே அவர்களை ஊக்குவிக்கலாம். இழிச்ச வாயன் தமிழன், அவன்மேல் எல்லா பழியையும் போட்டு அமைதியாகி விடுவோம். கொழும்பில் இருந்து துரத்தியடித்தான், வந்து எம்பாட்டில் இருந்த எம்மை தேடி வந்து அழித்து விட்டு இப்போ நாட்டை கட்டியெழுப்ப அவன்தான் வரவேணும். அதற்காக அப்பப்போ ஏற்றும் நாடகம்! பேச்சுவார்த்தை, காலத்தை இழுத்தடித்து, உடன்படிக்கையை கிழித்தெறிந்து, அடித்துக்கலைப்பு அதற்கே வெளிநாட்டுதலையீடு வேண்டாமாம்!

உங்கள் ஆதங்கம் புரியும் அதேவேளை, இம்முறை தீர்வு, இலங்கை பொருளாதார நிலைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

இழுத்தால் கடன் இல்லை. இலங்கையும் இல்லை.

ஆகவே முக்கி, முனகி சிங்களம் ஒரு தீர்வுக்கு வரும். 

அதேவேளை, கக்கீம் போன்ற தலைகள், அமைதியாக இருக்க, ஆளும் கட்சி அமைச்சர் நசீரை, சிங்களம் எப்படி பேச வைத்திருந்தது என்றும் பார்த்தோம்.

அதை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டிய தமிழர் பொறுப்பு.

இல்லாவிடின், சுஜநிர்ணய தேர்தல் என்று நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • Replies 240
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

நன்றி நாதம்.

இதில் போவதாயின் வெளிநாடு-சென்னை, சென்னை-யாழ் டிக்கெட்டுகள் கொனெக்க்சன் சரியா புக் பண்ண வேண்டும் அல்லது பிளைட் மிஸ் ஆனால் ஏர்போர்ட்டில் ரெண்டுநாள் நிக்க வேண்டி வரும்🤣. அடுத்த யாழ் பிளைட் வரைக்கும்🤣

லண்டன் -சென்னை கூட அதிக விமான பறப்புகள் இல்லை. கனக்க நியூடெல்லி தொட்டுத்தான் போகுது.

ஆகவே 2 டிரான்சிட், 20 மணி பயணம். உடம்பு தாங்குமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் புலம்பெயர் தமிழர் இப்படி சென்னை ஊடாக செல்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு.

1. சென்னைக்கான நேரடி டிக்கெட் அல்லது மத்திய கிழக்கு டிரான்சிட் டிக்கெட் கொழும்புக்காக டிக்கெட்டின் விலையயை விட கொஞ்சம்தான் குறைவு. இதில் மேலதிகமாக சென்னை- யாழ் செலவு வேற உண்டு.

2. இதுவரைக்கும் ஒரே புக்கிங் ஆக லண்டன்-சென்னை-யாழ் புக் பண்ண முடியவில்லை. நாம் தனி தனியே புக் பண்ணி கொனெக்டிங் பிளைட் தவறினால் - மற்ற பிளைட்காரன் புது டிக்கெட் வாங்கு என்பான்.

3. சென்னையில் தங்கி செல்லலாம். ஆனால் போகும் போதும், வரும் போதும் தங்கி செல்ல வேண்டும். 

4. சென்னையில் தேவையில்லாமல் தங்குவதால் வரும் செலவு. 

5. சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் “சிறிலிங்கனா - புடுங்குடா பணத்தை” என காத்திருப்பார்கள். இந்த இம்சை கொழும்பில் ஒப்பீட்டளவில் குறைவு.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

நன்றி நாதம்.

இதில் போவதாயின் வெளிநாடு-சென்னை, சென்னை-யாழ் டிக்கெட்டுகள் கொனெக்க்சன் சரியா புக் பண்ண வேண்டும் அல்லது பிளைட் மிஸ் ஆனால் ஏர்போர்ட்டில் ரெண்டுநாள் நிக்க வேண்டி வரும்🤣. அடுத்த யாழ் பிளைட் வரைக்கும்🤣

லண்டன் -சென்னை கூட அதிக விமான பறப்புகள் இல்லை. கனக்க நியூடெல்லி தொட்டுத்தான் போகுது.

ஆகவே 2 டிரான்சிட், 20 மணி பயணம். உடம்பு தாங்குமா?காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

British Airways - Direct Flights to Chennai.

காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சரி, சரி குடும்பத்தோட தாயகத்துக்கு மீள வரும்போது வசதிதான் முக்கியம். இல்லையெனில்  மனுசியிடமும், பிள்ளைகளிடமும் யார் வாங்கிக் கட்டுவது?

கொழும்பு போய் யாழ்ப்பாணமே போங்கள். 👍

ஏதாவது போத்தீஸ், மருத்துவ வசதிக்கு மட்டும்  யாழ் விமான நிலையத்தை ( அதுவரை பொது பாவனைக்கு இருந்தால்)பயன்படுத்தலாம்!

ஓக்கே? 🥱

2 minutes ago, Nathamuni said:

British Airways - Direct Flights to Chennai.

காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

பிராங்போர்ட் - சென்னை நேரடி விமான சேவையும் உண்டென நினைக்கிறேன். சென்னை விமான நிலையத்தில் பார்த்த ஞாபகம் உள்ளது. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

British Airways - Direct Flights to Chennai.

காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

1. சென்னை ஏர்போர்ட்ட்டில் 6 மணி நேரம் டிரான்சிட்? (கட்டார், டுபாய், குவைத் - 45 நிமிசம்-2 மணி)

2. போட்டுப்பார்த்தான் லண்டன்-சென்னை டிரைக்ட் 965£. (ஓவ் சீசன்). அதே நாளில் லண்டன்-கொழும்பு டைரக்ட் 750 அளவில்தான் போகுது. அம்மா+அப்பா+2 பிள்ளையள் - பெரிய வித்தியாசம் காட்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் “சிறிலிங்கனா - புடுங்குடா பணத்தை” என காத்திருப்பார்கள். இந்த இம்சை கொழும்பில் ஒப்பீட்டளவில் குறைவு.

நான் ஒருமுறை சென்னை ஊடாக வந்த போது, தமிழக பாதுகாப்பு அதிகாரி, 'டாக் ஓட்டல, பைசா கொடு' என்றார். கைப்பையில் டாக் போடாதது airline பிரச்சனை. இவர்கள் எல்லை மீறி போகின்றனர் என்று விகடனில் கட்டுரையே வந்தது. பணம் புடுங்குபவர்கள், துப்பாக்கி, குண்டுகளையே விடுவார்களே என்று எழுதினார்கள். அடுத்த முறையில் இருந்து, மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் பணம் கேட்பதில்லை. சில அதிகாரிகளை பொறி வைத்து பிடித்ததால், இப்போது, பணம் பறிப்பதாக தெரியவில்லை. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

சரி, சரி குடும்பத்தோட தாயகத்துக்கு மீள வரும்போது வசதிதான் முக்கியம். இல்லையெனில்  மனுசியிடமும், பிள்ளைகளிடமும் யார் வாங்கிக் கட்டுவது?

கொழும்பு போய் யாழ்ப்பாணமே போங்கள். 👍

ஏதாவது போத்தீஸ், மருத்துவ வசதிக்கு மட்டும்  யாழ் விமான நிலையத்தை ( அதுவரை பொது பாவனைக்கு இருந்தால்)பயன்படுத்தலாம்!

ஓக்கே? 🥱

🤣 உண்மைதான் ஒரு முறை காசு மிச்சம் என குவைத் ஏர்வேசில் டிக்கெட் போட்டு - அந்த கொலிடே முடிந்து 10 வருடமாக போகுது, இன்னும் கதை கேட்கிறேன்🤣.

தனியாக வரும் போது நிச்சயம் இந்த வழியைத்தான் பாவிப்பேன். 

குடும்பத்தோட என்றால் - தமிழ்நாடு + இலங்க இரெண்டு இடத்திலும் நிண்டு வாறதாக பிளான் பண்ணி புக் பண்ணினால் ஓகே.

இந்த ரூட் ஓட வேண்டும் என ஆசை இருந்தாலும், மொத்த பிரயாண செலவு இருமடங்கு ஆகும் என்றால் இந்த பாதையால் வந்து போக முடியாது.

I am just being honest.

1 minute ago, Nathamuni said:

நான் ஒருமுறை சென்னை ஊடாக வந்த போது, தமிழக பாதுகாப்பு அதிகாரி, 'டாக் ஓட்டல, பைசா கொடு' என்றார். கைப்பையில் டாக் போடாதது airline பிரச்சனை. இவர்கள் எல்லை மீறி போகின்றனர் என்று விகடனில் கட்டுரையே வந்தது. பணம் புடுங்குபவர்கள், துப்பாக்கி, குண்டுகளையே விடுவார்களே என்று எழுதினார்கள். அடுத்த முறையில் இருந்து, மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் பணம் கேட்பதில்லை. சில அதிகாரிகளை பொறி வைத்து பிடித்ததால், இப்போது, பணம் பறிப்பதாக தெரியவில்லை. 

ஏர்போர்ட்களில் எப்போதும் சென்ரல் ரிசேர்வ் படையும், அதிகாரிகளும்தான்.

ஆள், போகும் இடம் onward destination பார்த்துத்தான் வேலையை காட்டுவார்கள்.

பல ஆங்கிலம் அதிகம் தெரியாத, இந்தியாவும் பழக்கம் இல்லாத, ஐரோப்பா வாழ் தமிழ் குடும்பங்களை சிப்பிலியாட்டுவதை கண்டுள்ளேன். ஓரிரு சமயம் தலையிட்டதும் உண்டு (2019 கடைசி). 

 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

எனது ஆரூடம் @நுணாவிலன். (கள பொறுப்பாளர் முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?)😎

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

சரி, சரி குடும்பத்தோட தாயகத்துக்கு மீள வரும்போது வசதிதான் முக்கியம். இல்லையெனில்  மனுசியிடமும், பிள்ளைகளிடமும் யார் வாங்கிக் கட்டுவது?

கொழும்பு போய் யாழ்ப்பாணமே போங்கள். 👍

ஏதாவது போத்தீஸ், மருத்துவ வசதிக்கு மட்டும்  யாழ் விமான நிலையத்தை ( அதுவரை பொது பாவனைக்கு இருந்தால்)பயன்படுத்தலாம்!

ஓக்கே? 🥱

முழுமையாக விளங்கி கொண்டு சரியாகச் சொன்னீர்கள்.

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

எனது ஆரூடம் @நுணாவிலன். (கள பொறுப்பாளர் முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?)😎

👍🏿. இப்ப ஊரில் இன்னும் இரு யாழ் உறவுகள் நிக்கிறார்கள். ஒரு எட்டு போய் பார்ப்போம் என நினைக்க கூடும். 

Edited by goshan_che
உறவுகளின் பெயர் நீக்கம் - ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைதான்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

👍🏿. இப்ப ஊரில் இன்னும் இரு யாழ் உறவுகள் நிக்கிறார்கள். ஒரு எட்டு போய் பார்ப்போம் என நினைக்க கூடும். 

நீங்க சொன்ன அண்ணை பயணம் போயிற்றார்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

குண்டு பயபுள்ள.. கோத்து உடுது பாரு.. வெசம்.. வெசம்..😂

spacer.png

Edited by பாலபத்ர ஓணாண்டி
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

எனது ஆரூடம்.  வாத்தியார்.....அவர் தை மாதம் ஊர்.  போவதாகவும்.  ....ஏராளனை சந்திப்பதகாவும்.    எங்கே வாசித்த ஞாபகம் உண்டு   

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

ஏற்க்கனவே நம்ம விவசாயி விக் கொரனாவுக்கு முன் பயனித்தவர்.தனது அனுபவத்தை பகிர முன் கோவித்துக் கொண்டு போட்டார்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏற்க்கனவே நம்ம விவசாயி விக் கொரனாவுக்கு முன் பயனித்தவர்.தனது அனுபவத்தை பகிர முன் கோவித்துக் கொண்டு போட்டார்.

ஒ…சா…

நல்ல சீவன் வி.வி.

நானும் அவரும் கட்டி உருண்டு பின் ஆளை ஆள் - “நீங்கள் அப்ப சொன்னதிலும் நியாயம் இருக்கு” என்று ஏற்றுகொள்ளும் நிலைக்கு வந்திருந்தோம்.

கொஞ்சநாள் யாழுக்கு வரேல்ல. திரும்பி வந்து அவர் திரியில், அவர் கேட்ட ஒரு விசயம் சம்பந்தமா எழுதினே. பெருமாள் தான் வந்து இனி அவர் வரார் எண்டு விபரம் சொன்னார்.

எங்கிருந்தால் நல்லது செய்து, நலமாய் இருக்கட்டும்.

பிகு

யாழுக்கு சண்டை பிடிச்சொண்டு போய், வெக்கம் இல்லாமல் திரும்பி, திரும்பி வாறது நான் மட்டும்தான் போல🤣

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

குண்டு பயபுள்ள.. கோத்து உடுது பாரு.. வெசம்.. வெசம்..😂

spacer.png

தம்பி அந்த யாழ்-சென்னை பயணகட்டுரை இன்னும் வரல்ல🤣

2 hours ago, Kandiah57 said:

எனது ஆரூடம்.  வாத்தியார்.....அவர் தை மாதம் ஊர்.  போவதாகவும்.  ....ஏராளனை சந்திப்பதகாவும்.    எங்கே வாசித்த ஞாபகம் உண்டு   

எங்கோ எண்டால்? இதை என்ன வீரகேசரி, உதயன்லயா எழுதுவாங்க அண்ணை🤣. திண்ணையில்தான் பேசிக்கொண்டார்கள்.

 • Haha 1
Link to comment
Share on other sites

13 minutes ago, goshan_che said:

ஒ…சா…

நல்ல சீவன் வி.வி.

நானும் அவரும் கட்டி உருண்டு பின் ஆளை ஆள் - “நீங்கள் அப்ப சொன்னதிலும் நியாயம் இருக்கு” என்று ஏற்றுகொள்ளும் நிலைக்கு வந்திருந்தோம்.

கொஞ்சநாள் யாழுக்கு வரேல்ல. திரும்பி வந்து அவர் திரியில், அவர் கேட்ட ஒரு விசயம் சம்பந்தமா எழுதினே. பெருமாள் தான் வந்து இனி அவர் வரார் எண்டு விபரம் சொன்னார்.

கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு சார்பாக யாழ் இணையத்தில் எழுதுகின்றனர்/ யாழ் இயங்குகின்றது என்று கூறி, தான் எழுதிய அனைத்து கருத்துகளையும் மறைத்து விடும்படி கோரியிருந்தார். நாம் அவற்றை மறைத்து விட்டோம். அதன் பின்னர் அவர் எழுதுவதற்கும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தோம். 

என்னுடைய Career இனை நாசமாக்குவேன் என்று சூளுத்துரைத்தும் இருந்தார். இன்னும் கொஞ்சம் எழுதலாம், ஆனால் இப்போதைக்கு வேண்டாம்.

எங்கிருந்தாலும் அவர் வாழ்க.

Edited by நிழலி
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு சார்பாக யாழ் இணையத்தில் எழுதுகின்றனர்/ யாழ் இயங்குகின்றது என்று கூறி, தான் எழுதிய அனைத்து கருத்துகளையும் மறைத்து விடும்படி கோரியிருந்தார். நாம் அவற்றை மறைத்து விட்டோம். அதன் பின்னர் அவர் எழுதுவதற்கும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தோம். 

இன்னும் கொஞ்சம் எழுதலாம், ஆனால் இப்போதைக்கு வேண்டாம்.

எங்கிருந்தாலும் அவர் வாழ்க.

😳 வி.வி, இப்படி ஒரு நிலை எடுத்தாரா த.வி.பு பற்றி? வாவ்.

ஏதோ பிசகு எண்டு மட்டும் புரிகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

😳 வி.வி, இப்படி ஒரு நிலை எடுத்தாரா த.வி.பு பற்றி? வாவ்.

ஏதோ பிசகு எண்டு மட்டும் புரிகிறது.

சமூக நலனில் அதிக அக்கறை கொண்டவர்.
ஒரு சில விடயங்களில் ஆள் ஓட்டைவாய்  😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சமூக நலனில் அதிக அக்கறை கொண்டவர்.
ஒரு சில விடயங்களில் ஆள் ஓட்டைவாய்  😁

ம்…ம்..

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ம்…ம்..

இதை யாராவது மொழிபெயர்க்க முடியுமா? கூகிளிலும் முடியவில்லை 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இதை யாராவது மொழிபெயர்க்க முடியுமா? கூகிளிலும் முடியவில்லை 😎

ஒரு நபர் தான் அறிந்த அதிர்ச்சியான தகவல்களை உள்வாங்கி, ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறார் என்பதை இப்படி குறிக்கலாம் 🤣.

- உடான்ஸ் சாமி அருளிய, உரைத்தமிழ் அகராதி -

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இதை யாராவது மொழிபெயர்க்க முடியுமா? கூகிளிலும் முடியவில்லை 😎

'சில்க்' சுமிதா தான் இதற்கு வரவேணும். 😉

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

'சில்க்' சுமிதா தான் இதற்கு வரவேணும். 😉

அவதான் @Kandiah57 அண்ணைக்கு முதலே டிக்கெட் எடுத்துட்டாவே 🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.