Jump to content

காணாமல்போன மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் பயணித்த மீனவரொவருவரை 16 நாட்களின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படையினர்  மீட்டுள்ளனர்.

5 மீனவர்களுடன் பயணித்த 'ஹிம்சரா' பல நாள் மீன்பிடி இழுவை படகு சீரற்ற காலநிலையை தொடர்ந்து சங்கமன் கந்த முனையிலிருந்து 46 கடல் மைல் தொலைவில் படகு கவிழ்ந்தது.

 

 

2.jpg

மேற்படி விடயத்தை   மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஊடாக தகவலை உறுதிப்படுத்திய பின்னர்  மீனவர்களை மீட்பதற்காக தென்கிழக்கு கடற்பரப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ் எல் என் எஸ் ரணரிசியை கடற்படையினர் அனுப்பியுள்ளனர்.

 

7.jpg

அனர்த்தம் பற்றிய தகவல் கிடைத்ததும்  கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரையின் பேரில் கடற்படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

9.jpg

அதன்படி கடற்படையினர் உள்ளூர் மீன்பிடி படகின் உதவியுடன் கவிழ்ந்த விசைப்படகில் இருந்து மூன்று மீனவர்களை மீட்டதுடன் அவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

காணாமல்போன இரண்டு மீனவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை மேற்கொண்டடிருந்தனர். அவர்களில் ஒருவர் இயந்திர அறையில் சிக்கி இருந்த நிலையில் பின்னர் மீட்கப்பட்டுள்ளார். மற்றைய மீனவரை தேடும் பணியினை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

காணாமல்போன மீனவர்கள் 16 நாட்களின் பின் மீட்பு | Virakesari.lk

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.