Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை: கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் கூட்டம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை: கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் கூட்டம் !

மீண்டும் காணி சுவீகரிப்பு நடவடிக்கை: கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் கூட்டம் !

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து ஒரு அணி, நில அளவை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் அறிந்ததையடுத்து, அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் திரண்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பகுதியில் சுமார் பத்திற்கும் மேற்ப்பட்ட புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை கடற்படையினர் அமைத்துள்ளனர்.

அந்த காணிகளை கடந்த சில வருடங்களாக படை முகாமின் தேவைக்காக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பல தடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடுசெய்ய எடுத்த முயற்சிகள் மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

அத்துடன் காணி எடுத்தற் சட்டம் 05 ஆம் பிரிவின் (1) ஆம் சரத்திற்கு அமைய காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்தது.

அதனையடுத்து, காணி உரிமையாளர்களான தமிழ் மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தன.

எனினும் மக்கள் அதற்கு இடமளிக்காததன் காரணமாக நில அளவை செயற்பாடு பல காலமாக இழுபறி நிலையிலேயே இருந்துகொண்டிருக்கின்ற நிலையில் இன்றைய தினம் மீண்டும் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் இடம்பெறவிருப்பதாக தகவல் அறிந்ததையடுத்து, மக்கள் கூடியுள்ளனர்.

இதன் போது, நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ள வருபவர்களை முகாமுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் வந்தால் திருப்பி அனுப்புவோம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1315307

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு வட்டுவாகல் கடற்படைத் தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!

By VISHNU

13 DEC, 2022 | 02:47 PM
image

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள 'கோத்தபாய கடற்படை கப்பல் ' கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு  நடவடிக்கை  இன்று(13) முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

IMG_4217.jpg

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பலதடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

IMG_4215.jpg

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும்  முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்ததோடு  காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை  அடையாளம்  காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது.

 

IMG_4209.jpg

 

IMG_4213.jpg

காணி சுவீகரிப்பு தொடர்ச்சியான மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை.

IMG_4207.jpg

இந்த நிலையில் இன்று (13)அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு காணியினை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவித்துள்ளார்கள்.

IMG_4200.jpg

தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் தங்களுக்க வழங்கவேண்டும் என்றும் தமது சொந்த நிலத்தில் வாழவே விரும்புவதாகவும் இழப்பீடோ அல்லது மாற்றுக்காணிகளையோ தாம் கோரவில்லை எனவும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

IMG_4199.jpg

மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் காணி அளவீட்டு நடவடிக்கைக்காக முல்லைத்தீவு மாவட்ட செயலக காணிப்பகுதியினர் மற்றும் பொலிஸார் குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த போதிலும் நில அளவையாளர்கள் எவரும் பிரசன்னமாகியிருக்கவில்லை  அளவீடு இடம்பெறும் என அறிவித்தில் விடுத்து விட்டு நில அளவையாளர்கள் வருகை தராதது  இன்று(13) இரகசியமான முறையில் அளவீடுகள் எவையும் இடம்பெறுகின்றதோ என தாம் சந்தேகிப்பதாகவும்  காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

IMG_4183.jpg

இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ,சிவநேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் காணி உரிமையாளர்களோடு இணைந்து இந்த எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

IMG_4198.jpg

கலகம் அடக்கும் பொலிஸார் கண்ணீர் புகை குண்டு வீச தயாராக நிறுத்தப்பட்டிருந்ததோடு பெருமளவான புலனாய்வாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

https://www.virakesari.lk/article/142998

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.