Jump to content

'கடவுளுக்கு எதிரான குற்றம்' - இரானில் 23 வயது இளைஞருக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'கடவுளுக்கு எதிரான குற்றம்' - இரானில் 23 வயது இளைஞருக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை

மாஜித்ரேசா ரஜ்னாவார்ட்

பட மூலாதாரம்,IHRIGHTS

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய இரண்டாவது மரண தண்டனையை நிறைவேற்றியதாகவும் அதில், 23 வயது இளைஞரை பொது வெளியில் பகிரங்கமாகத் தூக்கிலிட்டதாகவும் இரான் கூறுகிறது.

மாஜித்ரேசா ரஹ்னாவார்ட், 23 வயதான இளைஞர். அவர் மாஷாத் நகரில் திங்கள் கிழமையன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

துணை ராணுவப் படைகளில் ஒன்றான பாசிஜ் எதிர்ப்புப் படையை (Basij Resistance Force ) சேர்ந்த இருவரை குத்திக் கொன்றதைக் கண்டறிந்த நீதிமன்றம் “கடவுளுக்கு எதிரான குற்றம்” என்று அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தது.

கைது செய்யப்பட்ட 23 நாட்களுக்குப் பிறகு ரஹ்னாவார்ட் தூக்கிலிடப்பட்டார்.

 

எந்தவிதமான சட்ட நடைமுறைகளும் இல்லாமல் போலியான விசாரணைக்குப் பிறகு எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அவர் உயிரிழக்கும் வரை அவருடைய தாயிடம் மரண தண்டனை குறித்துக் கூறப்படவில்லை.

பின்னர் அவரது குடும்பத்திற்கு ஒரு கல்லறையின் பெயரும் ஒரு நிலத்தின் எண்ணும் வழங்கப்பட்டது. அவர்கள் அங்குச் சென்றபோது, பாதுகாவலர்கள் அவரது உடலை அடக்கம் செய்துகொண்டிருந்தனர்.

உள்ளூர் நேரப்படி, திங்கள் காலை 7 மணிக்கு ஓர் அதிகாரி ரஹ்னாவார்டின் குடும்பத்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நாங்கள் உங்கள் மகனைக் கொன்று, பெஹேஷ்-இ ரேசா கல்லறையில் புதைத்துள்ளோம்,” எனத் தெரிவித்ததாக அரசு எதிர்ப்பு ஆர்வலர்கள் குழுவான 1500தஸ்விர் ட்வீட் செய்தது.

நீதித்துறையின் மிசான் செய்தி முகமை, ரஹ்னாவார்ட் “மஷாதி குடிமக்கள் குழுவின் முன்னிலையில்” தூக்கிலிடப்பட்டதாகக் கூறியது. மேலும், மரண தண்டனையைக் காட்டுவதாகக் கூறப்படும் பல புகைப்படங்களையும் வெளியிட்டது.

அந்தப் படங்களில், பார்வையாளர்களுக்கு முன்பாக ஒரு மனிதர் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். எத்தனை இந்த மரண தண்டனை நிகழ்வில் பங்கேற்றனர், அவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ரஹ்னாவார்டுக்கு விசாரணையில் அவருக்கு விருப்பமான வழக்கறிஞரை தேர்வு செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட வழக்கறிஞர் சரியாக இவரது தரப்பை முன்வைத்து வாதாடவில்லை.

நவம்பர் 17ஆம் தேதியன்று மஷாத் தெருவில், பாசிஜின் இரண்டு உறுப்பினர்களைக் குத்திக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக மிசான் முன்பு தெரிவித்தது. ஒரு தன்னார்வ படையான பாசிஜ், பெரும்பாலும் இரானிய அதிகாரிகளால் எதிர்ப்பை அடக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

நார்வேவை தளமாகக் கொண்ட இரான் மனித உரிமைகள் இயக்குநரான மஹ்மூத் அமிரி-மொகத்தம் ட்விட்டைல், ரஹ்னாவார்டின் தண்டனை “மிகவும் நியாயமற்ற செயல்முறையையும் ஒரு நிகழ்ச்சியைப் போல் நடந்த விசாரணைக்குப் பிறகான கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டது” எனக் கூறினார்.

“இந்தக் குற்றத்திற்காக இஸ்லாமிய குடியரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்,” என்றவர், அரசை எதிர்ப்பவர்கள் கூட்டாக மரணதண்டனைக்கு உள்ளாகக்கூடிய அபாயம் உள்ளதாகவும் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

22 வயது பெண் மாசா அமினி, செப்டம்பர் 13ஆம் தேதியன்று “முறையற்ற வகையில்” ஹிஜாப் அல்லது தலையில் முக்காடு அணிந்ததாகக் கூறி அறநெறி போலீசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் காவலில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, இரானின் மதகுரு ஸ்தாபனத்திற்கு எதிரான பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் தொடங்கின.

அந்தப் போராட்டங்கள், 31 மாகாணங்களிலும் உள்ள 161 நகரங்களில் பரவி, 1979 புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசின் மிகக் கடுமையான சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றன.

இரானின் தலைவர்கள் இந்தப் போராட்டங்களை வெளிநாட்டு எதிரிகளால் தூண்டிவிடப்பட்ட “கலவரங்கள்” என்று சித்தரித்துள்ளனர். இருப்பினும், எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானோர் நிராயுதபாணியாகவும் அமைதியான முறையிலும் இருந்தனர்.

நவம்பர் 19ஆம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஒரு காணொளி, ரஹ்னாவார்ட் கண்களை மூடிக்கொண்டு இடது கையை வார்ப்புக்குள் விடுவதைக் காட்டியது. அவர் பாசிஜ் உறுப்பினர்களைத் தாக்கியதை மறுக்கவில்லை. ஆனால், விவரங்கள் நினைவில் இல்லை, ஏனெனில் அவர் சரியான மனநிலையில் இல்லை எனக் கூறினார்.

'புரட்சிகர நீதிமன்றத்தில்' அவர் அளித்த “ஒப்புதல் வாக்குமூலம்” என்னவென்பதையும் திங்கட்கிழமையன்று அரசுத் தொலைக்காட்சி காட்டியது.

சித்ரவதை மற்றும் பிற மோசமான சிகிச்சைகள் மூலம் வற்புறுத்தப்பட்ட கைதிகளின் தவறான வாக்குமூலங்களை இரானிய அரசு ஊடகங்கள் வழக்கமாக ஒளிபரப்புவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திங்கட்கிழமையன்று, இரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதன் இயக்குநரை கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களை ஒளிபரப்பியதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது.

எதிர்ப்பாளர்களை அடக்கியதற்காக இரானிய ராணுவத் தலைவர் மற்றும் புரட்சிகர காவலர்களின் பிராந்திய தளபதிகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

போராட்டங்களைத் தொடர்ந்து இரான் நிறைவேற்றிய மற்றுமொரு மரண தண்டனை

டெஹ்ரானின் நடவடிக்கைகளைக் கண்டித்த பல ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷ் அரசியல் பிரமுகர்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாக இரான் கூறியுள்ளது.

கடந்த வியாழனன்று போராட்டக்காரர் ஒருவருக்கு முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது சர்வதேச கண்டனத்தைத் தூண்டியது. 23 வயதான மொஹ்சென் ஷெகாரி, டெஹ்ரானில் பாசிஜ் உறுப்பினரைக் கத்தியால் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், “கடவுளுக்கு எதிரான குற்றம்” எனக் குற்றம் சாட்டப்பட்டார்.

பிபிசி பெர்ஷிய செய்தியாளரான கஸ்ரா நஜி, இந்த மரண தண்டனைகள் நாட்டில் நிலவி வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருமா அல்லது நெருப்பில் எண்ணெயை ஊற்றுமா எனத் தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, மஷாத் முழுவதும் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாக இருந்தன. திங்கட்கிழமையன்று ரஹ்னாவார்டின் கல்லறையில் படமாக்கப்பட்ட காணொளியில், “நாட்டின் தியாகி மாஜித்ரேசா ரஜ்னாவார்ட்” என்று மக்கள் கோஷமிடுவதை கேட்க முடிந்தது.

இதுவரை, குறைந்தபட்சம் 488 எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர், 18,259 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. மேலும், 62 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரான் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c1w6yzl02y2o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.