Jump to content

'கடவுளுக்கு எதிரான குற்றம்' - இரானில் 23 வயது இளைஞருக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

'கடவுளுக்கு எதிரான குற்றம்' - இரானில் 23 வயது இளைஞருக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை

மாஜித்ரேசா ரஜ்னாவார்ட்

பட மூலாதாரம்,IHRIGHTS

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய இரண்டாவது மரண தண்டனையை நிறைவேற்றியதாகவும் அதில், 23 வயது இளைஞரை பொது வெளியில் பகிரங்கமாகத் தூக்கிலிட்டதாகவும் இரான் கூறுகிறது.

மாஜித்ரேசா ரஹ்னாவார்ட், 23 வயதான இளைஞர். அவர் மாஷாத் நகரில் திங்கள் கிழமையன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

துணை ராணுவப் படைகளில் ஒன்றான பாசிஜ் எதிர்ப்புப் படையை (Basij Resistance Force ) சேர்ந்த இருவரை குத்திக் கொன்றதைக் கண்டறிந்த நீதிமன்றம் “கடவுளுக்கு எதிரான குற்றம்” என்று அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தது.

கைது செய்யப்பட்ட 23 நாட்களுக்குப் பிறகு ரஹ்னாவார்ட் தூக்கிலிடப்பட்டார்.

 

எந்தவிதமான சட்ட நடைமுறைகளும் இல்லாமல் போலியான விசாரணைக்குப் பிறகு எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அவர் உயிரிழக்கும் வரை அவருடைய தாயிடம் மரண தண்டனை குறித்துக் கூறப்படவில்லை.

பின்னர் அவரது குடும்பத்திற்கு ஒரு கல்லறையின் பெயரும் ஒரு நிலத்தின் எண்ணும் வழங்கப்பட்டது. அவர்கள் அங்குச் சென்றபோது, பாதுகாவலர்கள் அவரது உடலை அடக்கம் செய்துகொண்டிருந்தனர்.

உள்ளூர் நேரப்படி, திங்கள் காலை 7 மணிக்கு ஓர் அதிகாரி ரஹ்னாவார்டின் குடும்பத்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நாங்கள் உங்கள் மகனைக் கொன்று, பெஹேஷ்-இ ரேசா கல்லறையில் புதைத்துள்ளோம்,” எனத் தெரிவித்ததாக அரசு எதிர்ப்பு ஆர்வலர்கள் குழுவான 1500தஸ்விர் ட்வீட் செய்தது.

நீதித்துறையின் மிசான் செய்தி முகமை, ரஹ்னாவார்ட் “மஷாதி குடிமக்கள் குழுவின் முன்னிலையில்” தூக்கிலிடப்பட்டதாகக் கூறியது. மேலும், மரண தண்டனையைக் காட்டுவதாகக் கூறப்படும் பல புகைப்படங்களையும் வெளியிட்டது.

அந்தப் படங்களில், பார்வையாளர்களுக்கு முன்பாக ஒரு மனிதர் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். எத்தனை இந்த மரண தண்டனை நிகழ்வில் பங்கேற்றனர், அவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ரஹ்னாவார்டுக்கு விசாரணையில் அவருக்கு விருப்பமான வழக்கறிஞரை தேர்வு செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட வழக்கறிஞர் சரியாக இவரது தரப்பை முன்வைத்து வாதாடவில்லை.

நவம்பர் 17ஆம் தேதியன்று மஷாத் தெருவில், பாசிஜின் இரண்டு உறுப்பினர்களைக் குத்திக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக மிசான் முன்பு தெரிவித்தது. ஒரு தன்னார்வ படையான பாசிஜ், பெரும்பாலும் இரானிய அதிகாரிகளால் எதிர்ப்பை அடக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

நார்வேவை தளமாகக் கொண்ட இரான் மனித உரிமைகள் இயக்குநரான மஹ்மூத் அமிரி-மொகத்தம் ட்விட்டைல், ரஹ்னாவார்டின் தண்டனை “மிகவும் நியாயமற்ற செயல்முறையையும் ஒரு நிகழ்ச்சியைப் போல் நடந்த விசாரணைக்குப் பிறகான கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டது” எனக் கூறினார்.

“இந்தக் குற்றத்திற்காக இஸ்லாமிய குடியரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்,” என்றவர், அரசை எதிர்ப்பவர்கள் கூட்டாக மரணதண்டனைக்கு உள்ளாகக்கூடிய அபாயம் உள்ளதாகவும் கூறினார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

22 வயது பெண் மாசா அமினி, செப்டம்பர் 13ஆம் தேதியன்று “முறையற்ற வகையில்” ஹிஜாப் அல்லது தலையில் முக்காடு அணிந்ததாகக் கூறி அறநெறி போலீசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் காவலில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, இரானின் மதகுரு ஸ்தாபனத்திற்கு எதிரான பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் தொடங்கின.

அந்தப் போராட்டங்கள், 31 மாகாணங்களிலும் உள்ள 161 நகரங்களில் பரவி, 1979 புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசின் மிகக் கடுமையான சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றன.

இரானின் தலைவர்கள் இந்தப் போராட்டங்களை வெளிநாட்டு எதிரிகளால் தூண்டிவிடப்பட்ட “கலவரங்கள்” என்று சித்தரித்துள்ளனர். இருப்பினும், எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானோர் நிராயுதபாணியாகவும் அமைதியான முறையிலும் இருந்தனர்.

நவம்பர் 19ஆம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஒரு காணொளி, ரஹ்னாவார்ட் கண்களை மூடிக்கொண்டு இடது கையை வார்ப்புக்குள் விடுவதைக் காட்டியது. அவர் பாசிஜ் உறுப்பினர்களைத் தாக்கியதை மறுக்கவில்லை. ஆனால், விவரங்கள் நினைவில் இல்லை, ஏனெனில் அவர் சரியான மனநிலையில் இல்லை எனக் கூறினார்.

'புரட்சிகர நீதிமன்றத்தில்' அவர் அளித்த “ஒப்புதல் வாக்குமூலம்” என்னவென்பதையும் திங்கட்கிழமையன்று அரசுத் தொலைக்காட்சி காட்டியது.

சித்ரவதை மற்றும் பிற மோசமான சிகிச்சைகள் மூலம் வற்புறுத்தப்பட்ட கைதிகளின் தவறான வாக்குமூலங்களை இரானிய அரசு ஊடகங்கள் வழக்கமாக ஒளிபரப்புவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திங்கட்கிழமையன்று, இரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதன் இயக்குநரை கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களை ஒளிபரப்பியதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது.

எதிர்ப்பாளர்களை அடக்கியதற்காக இரானிய ராணுவத் தலைவர் மற்றும் புரட்சிகர காவலர்களின் பிராந்திய தளபதிகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

போராட்டங்களைத் தொடர்ந்து இரான் நிறைவேற்றிய மற்றுமொரு மரண தண்டனை

டெஹ்ரானின் நடவடிக்கைகளைக் கண்டித்த பல ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷ் அரசியல் பிரமுகர்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாக இரான் கூறியுள்ளது.

கடந்த வியாழனன்று போராட்டக்காரர் ஒருவருக்கு முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது சர்வதேச கண்டனத்தைத் தூண்டியது. 23 வயதான மொஹ்சென் ஷெகாரி, டெஹ்ரானில் பாசிஜ் உறுப்பினரைக் கத்தியால் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், “கடவுளுக்கு எதிரான குற்றம்” எனக் குற்றம் சாட்டப்பட்டார்.

பிபிசி பெர்ஷிய செய்தியாளரான கஸ்ரா நஜி, இந்த மரண தண்டனைகள் நாட்டில் நிலவி வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருமா அல்லது நெருப்பில் எண்ணெயை ஊற்றுமா எனத் தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, மஷாத் முழுவதும் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாக இருந்தன. திங்கட்கிழமையன்று ரஹ்னாவார்டின் கல்லறையில் படமாக்கப்பட்ட காணொளியில், “நாட்டின் தியாகி மாஜித்ரேசா ரஜ்னாவார்ட்” என்று மக்கள் கோஷமிடுவதை கேட்க முடிந்தது.

இதுவரை, குறைந்தபட்சம் 488 எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர், 18,259 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. மேலும், 62 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரான் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/c1w6yzl02y2o

Link to comment
Share on other sites

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இருக்கலாம் அக்னி. தகவலுக்கு நன்றி. இது லிங்கு எப்படி @goshan_che கண்ணில் அகப்படவில்லை?
  • மோதி, மோதி Vs அதானி, அதானி முழக்கம் - சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர், மீண்டும் விமர்சித்த ராகுல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NARENDRA MODI YOUTUBE PAGE SCREENGRAB   படக்குறிப்பு, நரேந்திர மோதி மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது ஊழல், நெருக்கடியை மட்டுமே இந்தியா கண்டதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்டினார். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை கூட்டுக்கூட்டத்தில் சமீபத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் நரேந்திர மோதி புதன்கிழமை பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சனம் செய்தார். என்ன நடந்தது மக்களவையில்?   "மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஒருவரின் உரைக்குப் பிறகு அவரது கட்சியினர் உற்சாகமடைந்திருந்ததை நான் நேற்று பார்த்துக் கொண்டிருந்தேன், அவரது உரைக்கு பிறகு, ஒட்டுமொத்த 'எகோ சிஸ்டமும்' (காங்கிரஸ் எம்பிக்களை நையாண்டி செய்யும் வகையில் இவ்வாறு மோதி குறிப்பிட்டார்) உற்சாகத்துடன் துள்ளியபடி, "யே ஹுய் நா பாத்" (இது தானே பேச்சு) என்று மகிழ்ச்சியுடன் கூறினர். அந்த குஷியில் தூங்கியவர்கள் இன்னும் எழுந்திருக்கவில்லை போலிருக்கிறது," என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார். மோதியின் இந்த பதிலுரைக்கு ஒரு நாள் முன்புதான் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசினார். அப்போது அதானி குழுமத்துக்கும் நரேந்திர மோதி அரசுக்கும் இடையிலான உறவு தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.   மோதி எப்போதெல்லாம் வெளிநாடு செல்கிறாரோ அந்த நாடுகளுடன் எல்லாம் அதானி ஒப்பந்தம் செய்கிறார் என்று ராகுல் குற்றம்சாட்டினார். அவரது உரைக்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தியின் உரைக்கு பதில் தரும் வகையில், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த 10 வருடங்களை விமர்சித்து மோதி பேசினார். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையே எனது கேடயம். எதிர்ப்பாளர்களின் துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுகளால் அதை உடைக்க முடியாது என்று கூறிய மோதி, "செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் அல்லது தொலைக்காட்சி செய்திகளை வைத்து மக்கள் இந்த நரேந்திர மோதி மீது நம்பிக்கை வைக்கவில்லை, மக்கள் சேவையில் நான் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் இருப்பதால்தான் என் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்," என்று தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சி மீது விமர்சனம் "10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நாட்டின் ரத்தத்தை உறிஞ்சி விட்டது. 2004 முதல் 2014 ஆண்டு வரை மோசடிகள் மற்றும் வன்முறைகளின் தசாப்தம் ஆக இருந்தது. கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றிக் கொண்டதுதான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முத்திரை," என்று மோதி கூறினார். நாடு அடைந்து வரும் முன்னேற்றத்தை பார்க்க முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் "விரக்தியில் மூழ்கியிருப்பதாக" பிரதமர் மோதி குற்றம்சாட்டினார். இந்திய வெளியுறவு கொள்கை அதானி வணிகத்தை மேம்படுத்தும் கொள்கை: நாடாளுமன்றத்தில் ராகுல் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள்: ரிசர்வ் வங்கி, செபி என்ன செய்ய முடியும்? "2004-14க்கு இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் என்று உறுதியளித்தனர். ஆனால் அந்த பத்தாண்டுகள் சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் ஊழல் நிறைந்ததாக இருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த பத்து வருடங்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி என நாடு முழுவதும் தீவிரவாதத்தின் பிடியில் சிக்கியது. அந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு வரை, ஒட்டுமொத்த பிராந்தியமும் வன்முறையைத் தவிர வேறு எதையும் காணவில்லை. அந்த 10 ஆண்டுகளில், உலக அரங்கில் இந்தியா மிகவும் பலவீனமாக இருந்தது.," என்று மோதி குறிப்பிட்டார். மேலும், 2004-14 க்கு இடையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றியது" என்று மோதி கூறினார். அவர் இவ்வாறு கூறியபோது, ஆளும் கட்சி தரப்பில் இருந்தவர்கள் மேஜையை தட்டி ஆமோதித்தனர். YouTube பதிவை கடந்து செல்ல, 1 Google YouTube பதிவை அனுமதிக்கலாமா? இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும். ஏற்பு மற்றும் தொடரவும் காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 பெருமிதம் தெரிவிக்கும் மோதி "கடந்த ஒன்பது ஆண்டுகளில் 90,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. இப்போது, ஸ்டார்ட்அப் உலகில் நமது நாடு உலகளவில் மூன்றாவது இடத்தை எட்டியுள்ளது" என்று பிரதமர் மோதி கூறினார். மிகவும் வளமான மற்றும் பெரிய ஸ்டார்ட்அப் சூழ்நிலை நாட்டின் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களை அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டில் 100க்கும் அதிகமான யூனிகார்ன்கள் (ரூ. 100 கோடி இலக்கை எட்டிய தனியார் ஸ்டார்ட்அப்புகள்) உருவானதாக பிரதமர் மோதி தெரிவித்தார். செல்பேசி உற்பத்தியில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது என்றும் பிரதமர் மோதி கூறினார். இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி தொடர்பான தகவல்களை பட்டியலிட்ட மோதி, உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகரித்ததன் அடிப்படையில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று பெருமிதப்பட்டார். நாடு முழுவதும் அதிகரித்து வரும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு இணையாக, இந்தியாவின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவை, உலகின் மூன்றாவது பெரிய எரிசக்தி நுகர்வோர் ஆக விளங்குவதாகவும் பிரதமர் மோதி கூறினார். மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திறனில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வித்துறையில் முன்னேற்றம் கல்வித்துறையிலும் இந்தியா முன்னேறி வருகிறது என்று கூறிய மோதி, உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 4 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவித்தார். பொறியியல், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளும் நாட்டில் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். விளையாட்டுத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தாத காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோதி, தற்போது உலக அளவில் அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் இந்திய வீரர்கள் பிரகாசித்து வருவதாக தெரிவித்தார். குடியரசு தலைவருக்கு புகழாரம் முன்னதாக, தமது உரையை தொடங்கும் போது, குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு புகழாரம் சூட்டும் வகையில் நரேந்திர மோதி பேசினார். "குடியரசு தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த முறை, நன்றியுடன், நானும் அவரை வாழ்த்த விரும்புகிறேன். குடியரசு தலைவர் தமது தொலைநோக்கு உரை மூலம் எங்களுக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் வழிகாட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் வரலாற்று சிறப்புமிக்கவர், நாட்டின் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஊக்கமளிப்பவர்" என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார். மேலும், "குடியரசுத் தலைவர் பழங்குடி சமூகத்தின் பெருமையை உயர்த்தியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பழங்குடியின சமூகத்தில் பெருமையும், தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்காக இந்த தேசம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது," என்று மோதி கூறினார். பிரதமர் மோதி தனது அரசின் மக்கள் நல திட்டங்களைப் பட்டியலிட்டபோது பாஜக உறுப்பினர்கள் 'மோதி, மோதி' என்று குரல் எழுப்பினர். இதேவேளை, ஆளும் கட்சியினரின் முழக்கத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 'அதானி, அதானி' என எதிர்க் குரல் எழுப்பினர். ராகுல் காந்தி எதிர்வினை Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவை அனுமதிக்கலாமா? இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும். ஏற்பு மற்றும் தொடரவும் Twitter பதிவின் முடிவு, 1 இந்த நிலையில், மோதியின் உரை நேரலையில் ஒளிபரப்பான சில நிமிடங்களில் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளி இணைப்பை வெளியிட்டிருந்தார். அதானியுடனான மோதியின் உறவை கேள்வி எழுப்பும் அந்த காணொளியுடன் பகிர்ந்த இடுகையில், "ஜனநாயகத்தின் குரலை உங்களால் அழிக்க முடியாது. இந்திய மக்கள் உங்களிடம் நேரடியாகவே கேட்கிறார்கள். எனக்கு பதில் சொல்லுங்கள்" என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/india-64568735
  • இதற்கான காரணத்தை தம்பி ஏராளன் விளக்கி இருக்கிறார் உங்களுக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன். சாதியை சான்றிதழில் அழிப்பதால் மட்டும் சாதி அழிந்துவிடாது. நடைமுறையில், மனங்களில் சாதி(தீ)ய எண்ணம் இருக்கும் வரை சாதி இருக்கும். சாதி இருக்கும் வரை - அதனால் பாதிக்கப்பட்டவனை சமநிலை படுத்தி தூக்கி விட, சமூக நீதி செய்ய சாதி சான்றிதழில் இருக்க வேண்டும். இதைத்தான் வெற்றிமாறனும் சொல்கிறார். ஒரு உயர்ந்த நிலைக்கு வந்து விட்ட தனக்கு, சுயவிருப்பில் சாதி இல்லை என்று சான்றிதழ் வழங்க வேண்டும், ஆனால் சாதியால் ஒதுக்கப்பட்ட, சமூக நீதி இட ஒதுக்கீடு தேவையுள்ள ஒருவருக்கு அது வழங்கபடவேண்டும்.   👆🏼👇 வெற்றிமாறன் சொல்வதில் தப்பில்லை ஆனால் இப்படி சாதியற்றோர் சான்றிதழ் பெறுபவர்களும் அவர்கள் சந்ததியும் சமூக நீதி இட ஒதுக்கீட்டில் பின்னர் இடம் கோர கூடாது. இல்லாவிடில் உயர்த்தபட்ட சாதியை சேர்ந்தோர் இதை ஒரு தந்திரமாக பாவித்து - இட ஒதுக்கீட்டை பெறுவர். அதே போல் வெற்றிமாறன் என்ற தனி மனிதன் முடிவை, அவர் சந்ததி, பிள்ளைகள் மீது திணிக்க முடியுமா? நாளைக்கு 18 வயதான பின், அவரின் பிள்ளை எனக்கு என் சாதி அடிப்படையில் சமூக நீதி இட ஒதுக்கீட்டில் இடம் வேண்டும் என கேட்கலாம் அல்லவா? ஆகவே இதை கண்மூடித்தனமா எடுத்தாளமுடியாது.   இங்கே ஏராளன் நிவாரணம் என சொன்னது - வரலாற்று அடக்கு முறைக்கு எதிரான - மறுவினையாக வழங்கப்படும் - இட ஒதுக்கீட்டை. அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் quota/ reservation system.  இந்தியாவிலும் இயற்கை பேரிடரின் போது நிவாரணம் சாதி பார்க்காமல்தான் கொடுப்பார்கள். 👆🏼இதை நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.