Jump to content

குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் : ஜப்பான் அரசு அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் : ஜப்பான் அரசு அறிவிப்பு!

By DIGITAL DESK 2

14 DEC, 2022 | 01:50 PM
image

ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் ரூபா (இலங்கை மதிப்பில் 2.6 லட்சம்)  வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஜப்பானில் அண்மைக்காலமாக மக்கள் தொகை குறைந்து வருவதுடன், பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. 

இந்நிலையில் ஜப்பானின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம், அறிவித்துள்ள சில சலுகைகள் மூலம் மக்கள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் என்று நம்புகிறது. 

ஜப்பான் டுடே வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, குழந்தை பிறக்கும் போது, பெற்றோருக்கு, 420,000 யென் (ரூ. 255,733) வழங்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையை 500,000 யென்களாக (ரூ. 304,444) அதிகரிக்க சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கட்சுனோபு கட்டோ விரும்புகிறார். அவர் கடந்த வாரம் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இந்தத் திட்டத்தைப் பற்றி விவாதித்தார். இது 2023 நிதியாண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என ஜப்பான் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அரசு, 'பிரசவம் மற்றும் குழந்தை பராமரிப்பு மொத்த தொகை மானியம்' என்று அளித்து வரும் போதிலும், ஜப்பானில் உள்ளவர்கள் குழந்தைகளைப் பெற விரும்பவில்லை. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று விலைவாசி உயர்வு. ஜப்பானில் பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும், குழந்தை பிறப்பின் போது ஆகும் செலவின் தேசிய சராசரி 473,000 யென்கள் ஆகும்.

குழந்தை பிறப்பின் போது ஏற்படும் செலவு தொகையை ஈடு கட்டும் வகையில் மானியத்தை அதிகப்படுத்தினாலும், குழந்தையை வளர்ப்பதற்கும் ஆகும் செலவும் மிகவும் அதிகமாக உள்ளது. ஜப்பான் அரசின் இந்த உதவித் தொகையினால், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் பெற்றோர்களுக்கு சராசரியாக 30,000 யென்கள் கையில் இருக்கும். ஒட்டுமொத்தமாக, புதிய பெற்றோர்கள் தங்கள் குடும்பம் வளரும்போது கொஞ்சம் கூடுதல் பணம் இருந்தால் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும், 80,000 யென் அதிகரிப்பு என்பது இதுவரை இல்லாத அதிகபட்ச மானியமாக இருக்கும்.

 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஜப்பானில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறந்துள்ளன. மக்கள் தொகை குறைவு எதிர்காலத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதால் இந்த எண்ணிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீண்ட காலமாக, இந்த விவகாரம் நாட்டின் கொள்கை மற்றும் அரசியல் கவலைக்குரிய விடயமாக உள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு 811,604 பிறப்புகள் மற்றும் 14,39,809 இறப்புகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 628,205 மக்கள் தொகை குறைந்துள்ளது. 

சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் GG பிரஸ்ஸிடம் கூறியதாவது, கடந்த ஆண்டு கருவுறுதல் விகிதம் குறைந்ததற்கு, குழந்தை பிறக்கும் வயதுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் 20 வயதுடைய பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது காரணம் என்றார்.

https://www.virakesari.lk/article/143063

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோமாலியருக்கு விசயம் தெரியுமே?

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூகேயில் ஒரு பிள்ளையை 18 வயது வரை வளர்க்க பெற்றார் £163,000 - 193,000 பவுண்ஸ் செலவழிக்கிறார்களாம் (பேசாமல் ரெண்டு லம்போகினி வாங்கி ஓடலாம் 🤣). 

ஜப்பான் யூகேயை விட விலைவாசி கூட, இந்த காசு யாரையும் ஊக்குவிக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

சோமாலியருக்கு விசயம் தெரியுமே?

அவங்கள் வெளிநாட்டினருக்கு அகதி அந்தஸ்து கொடுப்பது குறைவாம், அவங்களுக்கு தாய்நாட்டுப் பற்றும் அதிகமாம்.

ஜப்பானியர்களை சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

யூகேயில் ஒரு பிள்ளையை 18 வயது வரை வளர்க்க பெற்றார் £163,000 - 193,000 பவுண்ஸ் செலவழிக்கிறார்களாம் (பேசாமல் ரெண்டு லம்போகினி வாங்கி ஓடலாம் 🤣). 

ஜப்பான் யூகேயை விட விலைவாசி கூட, இந்த காசு யாரையும் ஊக்குவிக்குமா?

அது சரி யூ . கே வீசா ஏதும் கொடுக்கிறார்களா ஊர் பக்கம் ஓரே கதையா கிடக்கு

Work sponsored visa, student visa

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அது சரி யூ . கே வீசா ஏதும் கொடுக்கிறார்களா ஊர் பக்கம் ஓரே கதையா கிடக்கு

Work sponsored visa, student visa

இப்படி கதைகள் அப்பவே நிறைய வரும்.

ஸ்டுடன் விசா மகிழ்ச்சியுடன் தருவினம். தங்குமிடம், சாப்பாடு, படிப்பு செலவோட சமாளிக்க ஏலாது.

உங்க பிரான்சுக்கிலால, நாப்பதாயிரம் பேர் வந்திட்டாங்கள் எண்டு அனுப்ப அல்லோலகல்லோலம்.

வர இலகுவான, பாதுகாப்பான வழி,  ஜரிகாரர்களுக்கு கொடுக்கும் வேர்க் விசா. Work sponsored visa not needed, if you have skill! 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் : ஜப்பான் அரசு அறிவிப்பு!

என்னைப்போன்ற ஜாம்பவான்களுக்கு யப்பான்காரன் சவால் விட்டுப்பாக்கிறான்.:cool:
பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா 🕺🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

என்னைப்போன்ற ஜாம்பவான்களுக்கு யப்பான்காரன் சவால் விட்டுப்பாக்கிறான்.:cool:
பொறுத்தது போதும் பொங்கியெழு மனோகரா 🕺🏼

நான் களத்துக்கு வந்ததிலிருந்து பல தடவை நீங்கள் பொங்கும் வசனத்தையும், ‘இதோ வெளிக்கிட்டேன்’ என சொல்வதையும் பார்த்துவிட்டேன். ஆனால் கிளம்புற வழியைக் காணோம்! 🤔🤭🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் '--------- கிளம்புறேன்' என்கிறார்..மற்றொரு பக்கம், 'கர்ப்பமானதே தெரியாத பெண்' என்கிற செய்தியும் வருது..😲

இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு..? 😂

 

Fj_p8yPaYAEHBgk?format=jpg&name=small

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

நான் களத்துக்கு வந்ததிலிருந்து பல தடவை நீங்கள் பொங்கும் வசனத்தையும், ‘இதோ வெளிக்கிட்டேன்’ என சொல்வதையும் பார்த்துவிட்டேன். ஆனால் கிளம்புற வழியைக் காணோம்! 🤔🤭🤪

எல்லாவற்றையும் வெளியே சொல்லமுடியாது. யாழ்கள விதிகள் முட்டுக்கட்டை போடுகின்றது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

எல்லாவற்றையும் வெளியே சொல்லமுடியாது. யாழ்கள விதிகள் முட்டுக்கட்டை போடுகின்றது.:cool:

உங்களிடம் இப்படித்தான் 'சமாளிஃபிக்கேசன்' பதில் வருமென எதிர்பார்த்த ஒன்றுதான். வியப்பில்லை, கு.சா..! 🤭

நல்லவேளை, எப்பொழுதும் போடுவீங்களே.. வடிவேலு மீம்ஸ்..! அதுதான் இம்முறை மிஸ்ஸிங்..!! 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரையேன் உசுப்பேத்துறீங்க இந்த குளிருக்க மனுசன் படுற பாடு😛😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவரையேன் உசுப்பேத்துறீங்க இந்த குளிருக்க மனுசன் படுற பாடு😛😛

அப்போ கம்முன்னு இருக்கோணும், சவடால் விடக்கூடாதென மனிசரிடம் சொல்லி வையுங்கள், முனி. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நம்ம லெவல் வேற லெவல்.....சரி சரி ஒதுங்கி நில்லுங்க....

Hulk Hulk Out GIF - Hulk Hulk Out Hulka Mania GIFs

நெஞ்சை நிமிர்த்தி ஒரு பிரயோசனமும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

அப்போ கம்முன்னு இருக்கோணும், சவடால் விடக்கூடாதென மனிசரிடம் சொல்லி வையுங்கள், முனி. 🤣

வாயுமில்லை என்றால்

நாய் கொண்டு போயிடுமில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 06:21, தனிக்காட்டு ராஜா said:

அது சரி யூ . கே வீசா ஏதும் கொடுக்கிறார்களா ஊர் பக்கம் ஓரே கதையா கிடக்கு

Work sponsored visa, student visa

நானறிய இல்லை. தாதி, வயசாளிகள்ப-ராமரிப்பு, தொழிலாளர் அந்த துறை படிப்பு, அனுபவம், இங்கே தொழில் கொடுக்க ஒரு நிறுவனம் இருந்தால் வருகிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நந்தன் said:

நெஞ்சை நிமிர்த்தி ஒரு பிரயோசனமும் இல்லை

நான் என்ன செய்யட்டும்? என்ரை ராசி பலன் இப்பிடி சொல்லுதே? 😉

ஞாயிறு வரை உங்கள் செயல்கள் இழுபறியாகும்....அதன்பின் நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும்....ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்....😍

பண்ணியில் பண்ணிப்பாருமன் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4.2 லட்சம் ஜென் லாட்டரி வெட்ட நான் தயார்… 🙋‍♂️

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

4.2 லட்சம் ஜென் லாட்டரி வெட்ட நான் தயார்… 🙋‍♂️

11,29,800ரூபாவுக்கா?!🤭

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.