Jump to content

மட்டக்களப்புச் சொல்லாட்சி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்புச் சொல்லாட்சி 

ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும். காட்டாக: `பரத்தை` என்ற சொல்லின் `விலைமகள்` என்ற பொருள் எல்லோரும் அறிந்தது; மட்டக்களப்பில் இச் சொல்லுக்கு வேறொரு பொருளுமுண்டு.  வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்ற வேலைகளினை உறவினர், அயலவர் எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். அதன் முடிவில்  வேலை செய்து தந்த உறவினருக்கு வழங்கப்படும் உணவும் `பரத்தை` எனப்படும். பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொருளில் `பரத்தை` என அழைக்கப்படுகின்றது. எனவே அங்கு `பரத்தைக்கு வாங்க` எனக் கேட்டால் தவறாகக் கருதக் கூடாது. பரந்தளவில் சமைக்கப்படும் `பரத்தை` போல, `மருங்கை`என்ற ஒன்றுமுண்டு. `மருங்கை’ என்ற பெயரில் உறவினர் மட்டும் கலக்கும் விருந்தும் ஒன்றுமுள்ளது. `கட்டாடி` என்றால் வண்ணான் என்ற பொருள் வேறிடங்களிலுண்டு, மட்டக்களப்பில் பூசாரியினையும் (குறிப்பாக  பெண் கடவுள்களுக்கான பூசாரி) கட்டாடி என்பார்கள். அவ்வாறான ஒரு சொற் பட்டியலினைக் கீழே பார்ப்போம்.  {இவை வேறு பகுதிகளிலும் பயன்பாட்டிலிருக்கலாம்}.

• புற்கை = பொங்கல் {`உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே ’ என்று பழஞ் செய்யுள் கூறும் புற்கை என்னும் சொல்லே இங்குப் புக்கை ஆயிற்று}
• கால்வாங்குதல் என்பது மகனைக் குறிக்கும்.
• போடியார் = நெற் செய்கைக்கு வேண்டிய முதலைப் போடுபவர்.
• குருவிக்காரன் = வயலிற் குருவிகளை ஓட்டிக் காத்தல் போன்ற குற்றேவல்களுக்காக நியமிக்கப்படும் சிறுவன்

• குருவிமூலை வரவை = குருவிக்காரனுக்கு வயலிலேயே தங்க வழங்கப்பட்ட சிறு குடில்/ இடம்.
• வட்டை வளைத்தல் = வயற் காவல் (வட்ட வடிவமாக வயலினைச் சுற்றி சுற்றிக் காவல் காத்தல்)
• அவுரி திரித்தல் = நெல் தூற்றுதல்
• `களவெட்டி` அல்லது `களவட்டி’= சூடு மிதிக்கும் களம்.
{ களவட்டி - வட்டமாக அமைந்த சூடுபோடும் நிலப் பரப்பு. (களம்+வட்டி. வட்டி = வட்டமானது)}

• ஆயம் = காணிக்குரிய குத்தகை
• அத்திமடக்கு = அரிக்கன்சட்டி (அரித்துக் கல்லே நீக்கும் வகையில் உள்வரிகளமைந்த சட்டி)
• அளைதல் - கைவிரலால் தொடுதல்
• ஆணம் = நீர்த்தன்மையான கறி      (சொதி போன்ற)
• ஆண்டார் = நிலா (இரவினை ஆளுபவர்)
• இட்டறுதி = (இட்ட+அறுதி) கடைசிக் காலம்
• எழுவான் = கிழக்கு  (எழுவான் கரை- படுவான் கரை ஊர்ப் பெயர்கள்).
• படுவான் = மேற்கு
• கட்டாடியார் = பூசாரி (குறிப்பாக பெண் தெய்வங்களுக்கான பூசாரிகள்)
• கட்டுச் சொல்லுதல் = தெய்வ வாக்குச் சொல்லுதல் (`கட்டுவிச்சி`பழந் தமிழ்ச்சொல்)
• உருவேறுதல்/ சன்னதம் கொள்ளுதல்= சாமி இறங்குதல் (`வெறியாடல்` பழந் தமிழ்ச்சொல்)
• கதியால் (கதி + கால்) = கூரிய அடியை உடையதாக வெட்டப்பட்ட (காட்டுக்)கம்பு.

• கப்புகன் = மண்டூர் முதலிய குறிப்பிட்ட சில ஊர்க் கோவில்களிற் பூசை செய்யும் பார்ப்பனரல்லாத பூசாரி
{ தெய்வத்தினிடம் மக்கள் வேண்டிய தைப் பெறுதற்கு வழிசெய்து கொடுக்கும் `கற்பகதரு` போன்றவன்}

• கப்புகக்குடி = கப்புகன் தோன்றும் மரபு (சாதி அல்ல)
• கமம் = வேளாண்மைச் செய்கை , வயல்.
• கலத்தில் போடுதல் = மண மகனுக்கு மணமகள் முதல் முதல் சோறு உண்பித்தல்.
• கள்ளறை = வீட்டில் மறைவிடமாக உள்ள சிறிய அறை.
• கழிசறை = பலராலும் கழிக்கப்பட்ட நடத்தையுடையவன்.
• கறுவித்தல் = பழிவாங்கக் காத்திருத்தல். {“ கறுவு கொள் நெஞ்சமொடு’ என்னும் திருமுருகாற்றுப்படையிற் போல}

• குச்சிக்குடில் =சிறியவிடு.

• குஞ்சப்பு=சிறிய தந்தை.

• குஞ்சாத்தை =சிற்றன்னை.

• குடக்குழி = கிணற்றின் நடுவில் (நீர் குறைந்த காலத்து) குடம்/ வாளி.

• குமுதம் = பேரொலிசெய்து விளையாடுதல்
• குளையடித்தல் = ஒருவரது மனத்தை மாற்றுதல்.
• கெளித்தல் = கவிழ்த்து ஊற்றுதல் (கெளுத்தி – கெளிற்றுமீன்..)
• சூம்புதல் = மெலிதல்
• செக்கல் = மாலைநேரம்.
• செத்தை :- ஒலையாற் கட்டப்பட்ட வேலி / சுவர்.
• தப்பிலி = தப்புள்ளவன் { தப்பு+இலி}.
['மங்கலம்' எனப்படும் வழக்கு] 
• தயிலாப்பெட்டி = மரத்தாற் செய்யப்பட்டதும் கள்ள அறைகள் உள்ளதுமான சிறுபெட்டி

• தாயதி = வழிவழி வந்த பழஞ் சொத்து; (`தாயம்` என்பதிலிருந்து வந்த சொல்).
• தாயம் = நல்ல தருணம்
• துமித்தல் =  மழை தூறுதல்
• ஆண் மாரி / பெண்மாரி = பாலினம் மாறியோர் { மாறி என்பதன் திரிபு ஆக வழங்கும். பெண்ணுய்ப் பிறந்து, ஆண் தன்மையும், ஆணாய்ப் பிறந்து பெண் தன்மை யும் உடையோர்}
• முளிவிசளம் = வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது ஒருவர் முதலில் சந்திக்கும் நிமித்தம் (சகுனம்).

👉👉👇சில சொற்கள் திரிபடைந்த நிலையிலும் இன்று காணப்படுகின்றன. அவை வருமாறு.

** தலை வழித்தல் >> `மழித்தல்’ என்பதின் சிதைவு
`மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் ’

** சிரைத்தல்>> சிதைத்தல் என்பதின் சிதைவு

** வட்டை>> (வயற் பரப்பு முழுவதும்) வெட்டை  என்பதின் சிதைவு

** அத்தக்கூலி >> அற்றைக் கூலி என்பதன் திரிபு ((அன்று + ஐ+கூலி) = நாட்கூலி

**கம்மாலை >> கம்மசாலை என்பதன் திரிபு (பட்டறை)

** கலம்பக்கயிறு >> கதம்பைக்கயிறு என்பதன் திரிபு (தென்னம் தும்பினல் செய்த கயிறு)

**காத்தாடி >> காவுதடி ’ என்பதின் சிதைவு. (கா+தடி)
சுமையினைத் தோளில் வைத்துச் சுமக்க உத வும் கம்பு. இதுவே இன்றைய மதம் சார் `காவடி` ஆக்கப்பட்டுவிட்டது.
🙏🙏🙏

நன்றி - மட்டக்களப்புத் தமிழகம்

இலங்கநாதன் குகநாதன்

@suvy@குமாரசாமி@goshan_che

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும்.

எல்லாச்சொல்லும் தனித்துவமென்றல்ல.

இதில் உள்ள சில சொற்கள் வட தமிழீழத்திலும் பரவாலன பயன்பாட்டில் உள்ளது. அவையாவன, 

  1. • புற்கை = பொங்கல் {`உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே ’ என்று பழஞ் செய்யுள் கூறும் புற்கை என்னும் சொல்லே இங்குப் புக்கை ஆயிற்று} - புக்கை என்று வடக்கில் பயன்பாட்டிலுள்ளது.
  2. • உருவேறுதல்/ சன்னதம் கொள்ளுதல்= சாமி இறங்குதல் (`வெறியாடல்` பழந் தமிழ்ச்சொல்)
  3. • கதியால் (கதி + கால்) = கூரிய அடியை உடையதாக வெட்டப்பட்ட (காட்டுக்)கம்பு.

  4. • கமம் = வேளாண்மைச் செய்கை , வயல்.

  5. கழிசறை = பலராலும் கழிக்கப்பட்ட நடத்தையுடையவன். // பேச்சுவழக்கில் கழிசடை என்று வழங்கப்படுகிறது

  6. • கறுவித்தல் = பழிவாங்கக் காத்திருத்தல். {“ கறுவு கொள் நெஞ்சமொடு’ என்னும் திருமுருகாற்றுப்படையிற் போல}

  7. குஞ்சப்பு=சிறிய தந்தை.

  8. • குஞ்சாத்தை =சிற்றன்னை.

  9. • சூம்புதல் = மெலிதல்// வடக்கில், கால் ஒரு மாதிரி நோயால் மெலிந்து வளைந்து போயிருந்தால் இச்சொல்லால் குறிப்பிடுவோம்.

  10. • செத்தை :- ஒலையாற் கட்டப்பட்ட வேலி / சுவர்.

  11. • துமித்தல் =  மழை தூறுதல்

  12. • முளிவிசளம் = வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது ஒருவர் முதலில் சந்திக்கும் நிமித்தம் (சகுனம்). // முழுவியளம் என்று நாம் வழங்குகிறோம்

  13. ** சிரைத்தல்>> சிதைத்தல் என்பதின் சிதைவு

  • அளைதல் - கைவிரலால் தொடுதல்

இதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் அளைதல் என்பதன் பொருள் பிழையாக வழங்கப்பட்டுள்ளது: 
இதன் சரியான பொருள் யாதெனில் ஒன்றை கையால் தொட்டு அதன் எல்லாப் பகுதிகளிலும் தடவுதல் ஆகும். இன்னும் விதப்பாக விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமெனில் கையால் ஒருவரது உடம்பின் பல பகுதிகளைத் தொட்டுத் தொடர்ந்து இடைநிறுத்தாது தடவுதல்; சில வேளை காமத்தின் போது என்றும் கொள்ளலாம். இதுவே இதன் சரியான பொருள்; கைவிரலால் தொடுதல் என்பதல்ல. 

இச்சொல்லின் பொருளானது ம.த. புத்தகத்தில் இருப்பதற்கு மாறாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நன்னிச் சோழன் said:
  • அளைதல் - கைவிரலால் தொடுதல்

இதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் அளைதல் என்பதன் பொருள் பிழையாக வழங்கப்பட்டுள்ளது: 
இதன் சரியான பொருள் யாதெனில் ஒன்றை கையால் தொட்டு அதன் எல்லாப் பகுதிகளிலும் தடவுதல் ஆகும். இன்னும் விதப்பாக விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமெனில் கையால் ஒருவரது உடம்பின் பல பகுதிகளைத் தொட்டுத் தொடர்ந்து இடைநிறுத்தாது தடவுதல்; சில வேளை காமத்தின் போது என்றும் கொள்ளலாம். இதுவே இதன் சரியான பொருள்; கைவிரலால் தொடுதல் என்பதல்ல. 

இச்சொல்லின் பொருளானது ம.த. புத்தகத்தில் இருப்பதற்கு மாறாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

அளைதல் என சொல்வது ஒரு சாப்பாட்டு பண்டங்களை கொஞ்சமாக சாப்பிடுவது அல்லது சாப்பிட்டு இடைநடுவில் விடுவது அளைஞ்சு போட்டு விடுவது என்பார்கள்.

நீங்க சொன்ன காமத்தில் தொடுதல் என்பது மேய்தல்  (மேஞ்ச) தடவுதல்,திறாவுதல் எனவும் பேச்சு மொழியிலும் சொல்வார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அளைதல் என சொல்வது ஒரு சாப்பாட்டு பண்டங்களை கொஞ்சமாக சாப்பிடுவது அல்லது சாப்பிட்டு இடைநடுவில் விடுவது அளைஞ்சு போட்டு விடுவது என்பார்கள்.

நீங்க சொன்ன காமத்தில் தொடுதல் என்பது மேய்தல்  (மேஞ்ச) தடவுதல்,திறாவுதல் எனவும் பேச்சு மொழியிலும் சொல்வார்கள்.

தனி, அளைதல் என்பதை நீங்கள் சொல்லும் பொருளில் தான் வடபகுதியிலும் சொல்லுவினம்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அளைதல் என சொல்வது ஒரு சாப்பாட்டு பண்டங்களை கொஞ்சமாக சாப்பிடுவது அல்லது சாப்பிட்டு இடைநடுவில் விடுவது அளைஞ்சு போட்டு விடுவது என்பார்கள்.

நீங்க சொன்ன காமத்தில் தொடுதல் என்பது மேய்தல்  (மேஞ்ச) தடவுதல்,திறாவுதல் எனவும் பேச்சு மொழியிலும் சொல்வார்கள்.

நான் அந்தக் காமத்தை ஒரு விளக்கத்திற்காகத்தான் கொடுத்தேன். பொருளாக அன்று("விளங்கும்படியாக"). 

எங்கள் ஊரில் ஏதேனும் ஒரு பொருளை/பொருட்களை (உணவோ இல்லை வேறு ஏதாவதாகவோ) சும்மா கையால் எல்லாவிடங்களிலும் தொடுவதை, "அந்தப்பொடியன் அந்தச் சாமானுக்ளுக்கு மேலையெல்லாம் கைவைச்சு அளைஞ்சுகொண்டு திரியுது. எங்க வைச்ச கையளோ!" என்பர்.

இங்கே ஒருவர் ஒரு பொருளின்/பொருட்களின் மேல் குறித்த பொடியன் கைவைத்து அளைவதைக் குறிப்பிடுகிறார்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2022 at 17:11, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்புச் சொல்லாட்சி 

ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும். காட்டாக: `பரத்தை` என்ற சொல்லின் `விலைமகள்` என்ற பொருள் எல்லோரும் அறிந்தது; மட்டக்களப்பில் இச் சொல்லுக்கு வேறொரு பொருளுமுண்டு.  வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்ற வேலைகளினை உறவினர், அயலவர் எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். அதன் முடிவில்  வேலை செய்து தந்த உறவினருக்கு வழங்கப்படும் உணவும் `பரத்தை` எனப்படும். பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொருளில் `பரத்தை` என அழைக்கப்படுகின்றது. எனவே அங்கு `பரத்தைக்கு வாங்க` எனக் கேட்டால் தவறாகக் கருதக் கூடாது. பரந்தளவில் சமைக்கப்படும் `பரத்தை` போல, `மருங்கை`என்ற ஒன்றுமுண்டு. `மருங்கை’ என்ற பெயரில் உறவினர் மட்டும் கலக்கும் விருந்தும் ஒன்றுமுள்ளது. `கட்டாடி` என்றால் வண்ணான் என்ற பொருள் வேறிடங்களிலுண்டு, மட்டக்களப்பில் பூசாரியினையும் (குறிப்பாக  பெண் கடவுள்களுக்கான பூசாரி) கட்டாடி என்பார்கள். அவ்வாறான ஒரு சொற் பட்டியலினைக் கீழே பார்ப்போம்.  {இவை வேறு பகுதிகளிலும் பயன்பாட்டிலிருக்கலாம்}.

• புற்கை = பொங்கல் {`உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே ’ என்று பழஞ் செய்யுள் கூறும் புற்கை என்னும் சொல்லே இங்குப் புக்கை ஆயிற்று}
• கால்வாங்குதல் என்பது மகனைக் குறிக்கும்.
• போடியார் = நெற் செய்கைக்கு வேண்டிய முதலைப் போடுபவர்.
• குருவிக்காரன் = வயலிற் குருவிகளை ஓட்டிக் காத்தல் போன்ற குற்றேவல்களுக்காக நியமிக்கப்படும் சிறுவன்

• குருவிமூலை வரவை = குருவிக்காரனுக்கு வயலிலேயே தங்க வழங்கப்பட்ட சிறு குடில்/ இடம்.
• வட்டை வளைத்தல் = வயற் காவல் (வட்ட வடிவமாக வயலினைச் சுற்றி சுற்றிக் காவல் காத்தல்)
• அவுரி திரித்தல் = நெல் தூற்றுதல்
• `களவெட்டி` அல்லது `களவட்டி’= சூடு மிதிக்கும் களம்.
{ களவட்டி - வட்டமாக அமைந்த சூடுபோடும் நிலப் பரப்பு. (களம்+வட்டி. வட்டி = வட்டமானது)}

• ஆயம் = காணிக்குரிய குத்தகை
• அத்திமடக்கு = அரிக்கன்சட்டி (அரித்துக் கல்லே நீக்கும் வகையில் உள்வரிகளமைந்த சட்டி)
• அளைதல் - கைவிரலால் தொடுதல்
• ஆணம் = நீர்த்தன்மையான கறி      (சொதி போன்ற)
• ஆண்டார் = நிலா (இரவினை ஆளுபவர்)
• இட்டறுதி = (இட்ட+அறுதி) கடைசிக் காலம்
• எழுவான் = கிழக்கு  (எழுவான் கரை- படுவான் கரை ஊர்ப் பெயர்கள்).
• படுவான் = மேற்கு
• கட்டாடியார் = பூசாரி (குறிப்பாக பெண் தெய்வங்களுக்கான பூசாரிகள்)
• கட்டுச் சொல்லுதல் = தெய்வ வாக்குச் சொல்லுதல் (`கட்டுவிச்சி`பழந் தமிழ்ச்சொல்)
• உருவேறுதல்/ சன்னதம் கொள்ளுதல்= சாமி இறங்குதல் (`வெறியாடல்` பழந் தமிழ்ச்சொல்)
• கதியால் (கதி + கால்) = கூரிய அடியை உடையதாக வெட்டப்பட்ட (காட்டுக்)கம்பு.

• கப்புகன் = மண்டூர் முதலிய குறிப்பிட்ட சில ஊர்க் கோவில்களிற் பூசை செய்யும் பார்ப்பனரல்லாத பூசாரி
{ தெய்வத்தினிடம் மக்கள் வேண்டிய தைப் பெறுதற்கு வழிசெய்து கொடுக்கும் `கற்பகதரு` போன்றவன்}

• கப்புகக்குடி = கப்புகன் தோன்றும் மரபு (சாதி அல்ல)
• கமம் = வேளாண்மைச் செய்கை , வயல்.
• கலத்தில் போடுதல் = மண மகனுக்கு மணமகள் முதல் முதல் சோறு உண்பித்தல்.
• கள்ளறை = வீட்டில் மறைவிடமாக உள்ள சிறிய அறை.
• கழிசறை = பலராலும் கழிக்கப்பட்ட நடத்தையுடையவன்.
• கறுவித்தல் = பழிவாங்கக் காத்திருத்தல். {“ கறுவு கொள் நெஞ்சமொடு’ என்னும் திருமுருகாற்றுப்படையிற் போல}

• குச்சிக்குடில் =சிறியவிடு.

• குஞ்சப்பு=சிறிய தந்தை.

• குஞ்சாத்தை =சிற்றன்னை.

• குடக்குழி = கிணற்றின் நடுவில் (நீர் குறைந்த காலத்து) குடம்/ வாளி.

• குமுதம் = பேரொலிசெய்து விளையாடுதல்
• குளையடித்தல் = ஒருவரது மனத்தை மாற்றுதல்.
• கெளித்தல் = கவிழ்த்து ஊற்றுதல் (கெளுத்தி – கெளிற்றுமீன்..)
• சூம்புதல் = மெலிதல்
• செக்கல் = மாலைநேரம்.
• செத்தை :- ஒலையாற் கட்டப்பட்ட வேலி / சுவர்.
• தப்பிலி = தப்புள்ளவன் { தப்பு+இலி}.
['மங்கலம்' எனப்படும் வழக்கு] 
• தயிலாப்பெட்டி = மரத்தாற் செய்யப்பட்டதும் கள்ள அறைகள் உள்ளதுமான சிறுபெட்டி

• தாயதி = வழிவழி வந்த பழஞ் சொத்து; (`தாயம்` என்பதிலிருந்து வந்த சொல்).
• தாயம் = நல்ல தருணம்
• துமித்தல் =  மழை தூறுதல்
• ஆண் மாரி / பெண்மாரி = பாலினம் மாறியோர் { மாறி என்பதன் திரிபு ஆக வழங்கும். பெண்ணுய்ப் பிறந்து, ஆண் தன்மையும், ஆணாய்ப் பிறந்து பெண் தன்மை யும் உடையோர்}
• முளிவிசளம் = வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது ஒருவர் முதலில் சந்திக்கும் நிமித்தம் (சகுனம்).

👉👉👇சில சொற்கள் திரிபடைந்த நிலையிலும் இன்று காணப்படுகின்றன. அவை வருமாறு.

** தலை வழித்தல் >> `மழித்தல்’ என்பதின் சிதைவு
`மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் ’

** சிரைத்தல்>> சிதைத்தல் என்பதின் சிதைவு

** வட்டை>> (வயற் பரப்பு முழுவதும்) வெட்டை  என்பதின் சிதைவு

** அத்தக்கூலி >> அற்றைக் கூலி என்பதன் திரிபு ((அன்று + ஐ+கூலி) = நாட்கூலி

**கம்மாலை >> கம்மசாலை என்பதன் திரிபு (பட்டறை)

** கலம்பக்கயிறு >> கதம்பைக்கயிறு என்பதன் திரிபு (தென்னம் தும்பினல் செய்த கயிறு)

**காத்தாடி >> காவுதடி ’ என்பதின் சிதைவு. (கா+தடி)
சுமையினைத் தோளில் வைத்துச் சுமக்க உத வும் கம்பு. இதுவே இன்றைய மதம் சார் `காவடி` ஆக்கப்பட்டுவிட்டது.
🙏🙏🙏

நன்றி - மட்டக்களப்புத் தமிழகம்

இலங்கநாதன் குகநாதன்

@suvy@குமாரசாமி@goshan_che

நன்றி தனி. 

இந்த புத்தகம் சில வருடங்களுக்கு முன் ஒருவர் இந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்.

On 14/12/2022 at 17:11, தனிக்காட்டு ராஜா said:

ஆண் மாரி / பெண்மாரி = பாலினம் மாறியோர் { மாறி என்பதன் திரிபு ஆக வழங்கும். பெண்ணுய்ப் பிறந்து, ஆண் தன்மையும், ஆணாய்ப் பிறந்து பெண் தன்மை யும் உடையோர்}

இது பாலினம் மாறியோர் என்பதை விட - எதிர்பால் குணங்களை வெளிப்படுத்துவோர் என்பதே சரி?

அடக்க ஒடுக்கமாக இல்லாமல் dominant ஆக இருக்கும் பெண் - ஆண்மாரி.

இதுவும் வடக்கிலும் பாவனையில் உள்ள சொல்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இட்டறுதி - தனியே அந்திம காலம் மட்டும் இல்லை? 

எகா: இட்டறுதியா சொல்லுறன் இந்த சைக்கிளுக்கு 10000 ரூபாதான் விலை.

கம்மாலை - இதுவும் கூட வடக்கிலும் புழக்கத்தில் உள்ளது.

ஆனால் மட்டகளப்பில் இதை ஒரு ஆச்சரிய குறியீடாக பயன்படுத்துவார்.

இது “அம்மாளே” அல்லது இதை ஒத்த ஒரு தூசண வார்த்தையிம் திரிபாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தனி.......மேலும் தொடர்ந்து இணைக்கலாமே........!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 07:07, தனிக்காட்டு ராஜா said:

அளைதல் என சொல்வது ஒரு சாப்பாட்டு பண்டங்களை கொஞ்சமாக சாப்பிடுவது அல்லது சாப்பிட்டு இடைநடுவில் விடுவது அளைஞ்சு போட்டு விடுவது என்பார்கள்.

சும்மா கண்டபடி அளையாதை எண்டு நான் கனதரம் பேச்சு வாங்கியிருக்கிறன்.😎

On 14/12/2022 at 18:11, தனிக்காட்டு ராஜா said:

கட்டாடியார் = பூசாரி (குறிப்பாக பெண் தெய்வங்களுக்கான பூசாரிகள்)

நம்ம ஊர்ப்பக்கம் கட்டாடியார் எண்டால் துணி வெளுக்கிறவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சும்மா கண்டபடி அளையாதை எண்டு நான் கனதரம் பேச்சு வாங்கியிருக்கிறன்.😎

நம்ம ஊர்ப்பக்கம் கட்டாடியார் எண்டால் துணி வெளுக்கிறவர்.

"கண்டால் கட்டாடி காணாட்டில் ------ " என்றொரு சொலவடையும் சாதாரணமாக பேச்சு வழக்கில் உண்டு......!  😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2023 at 03:49, குமாரசாமி said:

சும்மா கண்டபடி அளையாதை எண்டு நான் கனதரம் பேச்சு வாங்கியிருக்கிறன்.😎

நம்ம ஊர்ப்பக்கம் கட்டாடியார் எண்டால் துணி வெளுக்கிறவர்.

ஓ நன்றி தகவலுக்கு இஞ்ச வேற பெயர் அதை ஏன் பேசுவான் இங்கு👋👋

On 7/1/2023 at 23:00, goshan_che said:

இது “அம்மாளே” அல்லது இதை ஒத்த ஒரு தூசண வார்த்தையிம் திரிபாக இருக்குமோ?

வாய்ப்பில்ல 😋😋

  • Haha 3
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா ஒரு  வருசத்துக்கு பிறகு லைக்க தட்டீருக்கு 

அதுசரி இஞ்ச பழைய பதிவுக்ளை கிளற முடியாமல் இருக்கே என்ன  காரணம் 
 
பதில் எழுத முடியல 2006,2007,2008,2009,2010  உள்ள பதிவுகளுக்கு என்ன காரணம்?? 

Edited by தனிக்காட்டு ராஜா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

யாரப்பா ஒரு  வருசத்துக்கு பிறகு லைக்க தட்டீருக்கு 

அதுசரி இஞ்ச பழைய பதிவுக்ளை கிளற முடியாமல் இருக்கே என்ன  காரணம் 
 
பதில் எழுத முடியல 2006,2007,2008,2009,2010  உள்ள பதிவுகளுக்கு என்ன காரணம்?? 

பதில் எழுதப்படாத/பின்னூட்டம் போடாத திரிகள் 2 ஆண்டுகளில் தானாக கருத்தெழுத முடியாதவாறு மூடப்படும் என நினைக்கிறேன்.

தற்போது சில திரிகளை மோகண்ணா கருத்தெழுத திறந்துவிடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பதில் எழுதப்படாத/பின்னூட்டம் போடாத திரிகள் 2 ஆண்டுகளில் தானாக கருத்தெழுத முடியாதவாறு மூடப்படும் என நினைக்கிறேன்.

தற்போது சில திரிகளை மோகண்ணா கருத்தெழுத திறந்துவிடுகிறார்.

ஓ அப்படியா நன்றி ஏராளன் 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.