Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

1000066318.jpg

 

(ஊடகப்பிரிவு)
 
வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
 
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
 
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள்
கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினையாகிவிடக்கூடாது. வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி கோரும் தரப்புக்கள், இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கு வழங்கும் அதிகாரம் என்ன? இதுபற்றி அவர்கள் மனம் திறப்பது அவசியம். சூழ்நிலையைச் சமாளிக்கும் அறிக்கைகள் விடாமல், முஸ்லிம்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பேசுவதே சிறந்தது.
 
இதே நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உள்ளமை ஏற்புடையதல்ல. வடக்கு கிழக்கு இணைய வேண்டுமா? அல்லது வடக்கும் கிழக்கும் வெவ்வேறாக பிரிந்திருக்க வேண்டுமா? என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இணைய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஹக்கீம் இருப்பாரேயானால்,வடக்கு ,கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயங்கள்
தொடர்பில், ஹக்கீமுக்கும், சுமந்திரனுக்கும் இதுவரை காலமும் இரகசியமாக நடாத்தப்பட்ட பேச்சுக்கள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.இவ்விரு மாகாணங்களும் பிரிந்திருக்க வேண்டுமென ஹக்கீம் கூறினால்,அந்தந்த மாகாணங்களில் அபகரிக்கப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
சிறுபான்மைச் சமூகங்கள் என்ற பொது அடையாளத்துக்குள் முஸ்லிம்களையும் உள்ளீர்க்கவே முயற்சிக்கப்படுகிறது. இப்பொது அடையாளத்துக்குள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே ,13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுவது கள நிலவரங்களுக்குப் பொருந்தாது. இது,அவரது தனிப்பட்ட விருப்பமே தவிர,வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷை இல்லை. எனவே, தீர்வு தொடர்பில் எவரும், எழுமாந்தமாகப் பேசக்கூடாது.
 
வடக்கும், கிழக்கும் பிரிந்த மாகாணங்களாகவே இருப்பதானால், குறிப்பாக கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை, முஸ்லிம் பிரதேச செயலகங்களிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ ஒப்படைப்பது அவசியம். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன.அவற்றில் 04 முஸ்லிம் பிரதேச செயலங்களில் 27 வீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 1.3 வீதமான காணிகளே உள்ளன. அதிகாரக் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களாலே இவர்களின்
காணிகள் அபகரிக்கப்பட்டன, கபடத்தனமாக பறிக்கப்பட்டன. மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர், அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படுவது அவசியம். மட்டுமல்ல காணிகளின் எல்லைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
 
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே வட,கிழக்கில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர். கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டன.
மட்டக்களப்பில், முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டன. இதனால்தான்,13 ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இவ்விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனமும் கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதெல்லாம் உங்களிடம் இருந்து வரும்  எண்டு தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ, அதை சிங்களவரிடம் நேரடியாக கேளுங்கோ.

அது தானே முறையானது. அதை விடுத்து, பிச்சைக்கு நிக்கிற வேறு ஒரு கோஸ்டியிடம், நீ என்ன பிச்சை கேட்கிறாய், அதில என் பங்கென்ன என்பது நியாயமா படவில்லை.

  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, colomban said:
குறிப்பாக கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை, முஸ்லிம் பிரதேச செயலகங்களிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ ஒப்படைப்பது அவசியம். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன.அவற்றில் 04 முஸ்லிம் பிரதேச செயலங்களில் 27 வீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 1.3 வீதமான காணிகளே உள்ளன. அதிகாரக் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களாலே இவர்களின்
காணிகள் அபகரிக்கப்பட்டன,

அதென்ன கொசுறு.. ரவுண்டா மொத்தமாக கேட்கலாமல்லொ..😢

  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, Nathamuni said:

இதெல்லாம் உங்களிடம் இருந்து வரும்  எண்டு தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ, அதை சிங்களவரிடம் நேரடியாக கேளுங்கோ.

அது தானே முறையானது. அதை விடுத்து, பிச்சைக்கு நிக்கிற வேறு ஒரு கோஸ்டியிடம், நீ என்ன பிச்சை கேட்கிறாய், அதில என் பங்கென்ன என்பது நியாயமா படவில்லை.

இதை நேரடியாக இவர்களிடம் சொல்ல தமிழ்த் தலைமைகளுக்கு திராணி/வக்கு இருக்கா?

இப்பவும் பிட்டும் தேங்காப்பூவும் என்று அலம்புவார்கள். கேட்க விசர்தான் வரும்.

தமிழராக தமிழர் தாயகத்துக்குள் சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எடுத்துக்காட்டாக சமஷ்டி என்று வந்தால் அந்த அலகின் தலைவராக அல்லது முதல்வராக வருவதற்கு வடக்கு கிழக்கில் வாழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஜன்நாயக வழியில் சகல உரிமையும் உண்டு.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
26 minutes ago, வாலி said:

இதை நேரடியாக இவர்களிடம் சொல்ல தமிழ்த் தலைமைகளுக்கு திராணி/வக்கு இருக்கா?

இப்பவும் பிட்டும் தேங்காப்பூவும் என்று அலம்புவார்கள். கேட்க விசர்தான் வரும்.

தமிழராக தமிழர் தாயகத்துக்குள் சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எடுத்துக்காட்டாக சமஷ்டி என்று வந்தால் அந்த அலகின் தலைவராக அல்லது முதல்வராக வருவதற்கு வடக்கு கிழக்கில் வாழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஜன்நாயக வழியில் சகல உரிமையும் உண்டு.

 

எல்லாம் சுயநலம் தான். கிழக்கு முதல்வராக இருந்து அனுபவித்தவர். ஒன்றாக இணைந்தால், அது கிடைக்காது.

தமிழ் பேசும் மக்களாக அரசியல் செய்து, வரலாம் என்ற நோக்கம் இல்லை.

மத ரீதியாக, சிந்தித்து, போகாத ஊருக்கு வழி கேட்க்கிறார். இன்றய உலக நியதியில், ஐஸ் குண்டும் இலங்கையில் வெடித்த பின்னர், இவர்களுக்கு தனி அலகு கிடைக்காது என்று தெரிந்து, தமிழர்களிடம், கதை விடுகிறார்.

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Nathamuni said:

இதெல்லாம் உங்களிடம் இருந்து வரும்  எண்டு தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ, அதை சிங்களவரிடம் நேரடியாக கேளுங்கோ.

அது தானே முறையானது. அதை விடுத்து, பிச்சைக்கு நிக்கிற வேறு ஒரு கோஸ்டியிடம், நீ என்ன பிச்சை கேட்கிறாய், அதில என் பங்கென்ன என்பது நியாயமா படவில்லை.

இது நிஞாயமான கேள்வி நாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, வாலி said:

இதை நேரடியாக இவர்களிடம் சொல்ல தமிழ்த் தலைமைகளுக்கு திராணி/வக்கு இருக்கா?

இப்பவும் பிட்டும் தேங்காப்பூவும் என்று அலம்புவார்கள். கேட்க விசர்தான் வரும்.

தமிழராக தமிழர் தாயகத்துக்குள் சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எடுத்துக்காட்டாக சமஷ்டி என்று வந்தால் அந்த அலகின் தலைவராக அல்லது முதல்வராக வருவதற்கு வடக்கு கிழக்கில் வாழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஜன்நாயக வழியில் சகல உரிமையும் உண்டு.

 

அய்யா ஒருக்கா விட்டுக்கொடுத்த காக்காதான் இப்ப இந்தக் கதை கதைக்குது..அதுவின் ஆட்சியில் பறிச்ச காணீ கோவில் காணாதாம்..அதுதான் மிச்சம் பிடிக்கிறதுக்கு இப்பவும் அய்யாவின் வண்டியில் கை வைத்தபடி இருக்கிறார்( யாழில் உள்ள படம் பார்க்கவும்) சவூதி எண்ணெய் அமைச்சர் என்ரை கிளஸ்மேட்தான்.. இந்த எண்ணெய் கொண்டுவாறன் என்று போனவர் ..இன்னும் எண்ணெயைக் காணவில்லை..இப்ப பார்த்தால் தமிழரோடை உரிமைக்கு சண்டை பிடிக்கிறார்..காக்காவுக்கு அடுத்த தேர்தலில் சீற் வேணுமில்லே...பழைய கலர் போட்டோ கொப்பியோடை திரிவார் இனி..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஒம்பத்தி தொண்ணூத்தி எட்டுக்கு ஒரே தொணதொணப்புத்தான். நொய் நொய் எண்டபடி.குள்ளநரியன் அள்ளிக் கொடுத்திருப்பான் கள்ளன் இவனுக்குப் பள்ளம் தோண்டச்சொல்லி.ஒருவன் இடையில் நுழைந்து பஞ்சாயத்தைக் குழப்பிவிட்டால் சரிதானே. அதுதான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முஸ்லீம் அரசியல்வாதிகளால் பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள், துரத்தியடிப்புகள் பற்றிய அவலங்களை  சற்று இப்போதைக்கு நிறுத்திவிட்டு (Park this issue temporarily for now)
உண்மையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள், அமைப்புகள், மக்களால் அங்கே வாழ்ந்த முஸ்லீம் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டுள்ளதா?

அல்லது அவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஞாயமான சரியான காணி பங்கீடுகள் நடந்தேறாமல் இருக்கிறதா?
இது பற்றி விபரங்கள் தெரிந்தவர்கள் யாரும் இங்கே பகிருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, colomban said:

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே வட,கிழக்கில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர்.

இது எப்போ நடந்தது?

11 hours ago, colomban said:

இதனால்தான்,13 ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.

இனிமேற்தானா? இவர் எடுத்து விடுறதெல்லாம் மற்றவர்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறாரா?

11 hours ago, colomban said:

சிறுபான்மைச் சமூகங்கள் என்ற பொது அடையாளத்துக்குள் முஸ்லிம்களையும் உள்ளீர்க்கவே முயற்சிக்கப்படுகிறது.

அப்போ...... பெரும்பான்மையோடு இணையிறது, யார் இவர்களை இழுத்து பிடிச்சது? பொறுங்கோ! பொறுத்த நேரம் கக்கீம் இழுப்பார் கயிறு, அப்போ தலைகீழாய் வீழ்வது சம்பந்தரும், சுமந்திரனும், சாணக்கியனும் விழுகிற அதிர்வில இருந்து சம்பந்தர் மீண்டும் எழுந்திருக்கப்போவதில்லை.   



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றக் கோரி தொடரும் போராட்டம் 14 DEC, 2024 | 11:29 AM யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி நேற்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் முதல் இன்று சனிக்கிழமை (14) மாலை வரை போராட்டம் இடம்பெற்று வருகிறது.   தையிட்டியில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 18 மாத காலமாக தொடர்ந்த இப்போராட்டம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201241
    • விநாயகர் ஜோதிட நிலையம் nsdetSporo 133 fi9479df38uabml,021c4e162a0:f9r07l9mée2cu7h3i  ·  சாப்பிட்ட தட்டை கழுவுங்கள் (நீங்கள்) சாப்பிட்ட தட்டை கழுவ கற்றுக் கொடுங்கள்.... (உங்கள் உங்கள் பிள்ளைக்கு) இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார். "அப்பா இருக்கட்டும் நானே கழுவுறேன்" என்று சொல்லியும் கேட்பதில்லை. "ஏன் அப்பா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா " என்று கேட்டேன். "இல்ல... இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது". மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்காக எங்க அம்மா கழுவ வேண்டிருக்கு. நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 குழந்தை அப்போ எங்க அம்மா எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 4 * 90 = 360 தட்டு கழுவனும். நம்ம சாப்பிட தட்ட நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை அம்மாவுக்கு குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்ட நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்... சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்.... மனைவிதான் கழுவி வைப்பாள். அதில ஒரு பெருமை. இதுல என்ன இருக்கோ தெரியாது... முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள். நேரம் கிடைக்கையில் உதவி செய்யுங்கள். பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்,... (வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் முடித்து பார்) என்பது ஒரு பழமொழி.. . இந்த பழமொழியோட உன் வீட்டில் பாத்திரத்தை கழுவிப் பார். என்றும் சேர்த்து கொள்ளலாம். சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் அது ஒரு பெரிய சுமை.. ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்.... பெண்களின் நிலை உங்களுக்கு நன்றாகவே புரியும்... படித்த பதிவு சற்று எனது கருத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளேன். ..ஆம் !மனிதநேயம் மற்றும் சமத்துவம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது........!  👍   கந்த கணேசதாஸக் குருக்கள்
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.