Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஈழத்து போராளிகளின் இன்றைய நிலை இதுதான் 😭 அழுகைவருது!


Recommended Posts

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள் சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் 22 ஜனவரி 2019 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK   படக்குறிப்பு, நிறைமதி (இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுறது.) சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின. இவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம் மட்டுமின்றி, அவர்களது பின்னணி குறித்த பல்வேறு கேள்விகளும் எழுகின்றன. எனவே, இந்த காணொளி/ புகைப்படங்களை வெளியிட்டு வரும் சீனாவின் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் துறையை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியது.   "சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது" சீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. யுன்னான் மின்சு பல்கலைக்கழக தமிழ் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதியிடம் (சீனப் பெயர் கிகி ஜாங்) கேட்டபோது, "நாங்கள் தமிழ் மொழியில் நான்காண்டுகள் இளங்கலை பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்" என்று கூறுகிறார். பட மூலாதாரம்,FACEBOOK   படக்குறிப்பு, பொங்கல் கொண்டாட்டத்தின்போது... இந்த படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதி என்ன? உதவித்தொகை ஏதாவது வழங்கப்படுகிறதா? என்று கேட்டபோது, "இந்த படிப்பிற்கு சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதற்கட்ட நுழைவுத் தேர்வுக்கு பிறகு தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களிடம் அதற்குரிய காரணங்களை கேட்டறிந்துவிட்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கிறோம். தமிழை படிக்கும் மாணவர்களையும், என் போன்ற ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் சீன அரசு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகைளையும் வழங்குகிறது" என்று நிறைமதி கூறுகிறார். ‘’ஓடும் வாழ்க்கை பிடித்திருக்கிறது’’ - சாதிக்க போராடும் வீராங்கனை நந்தினியின் கதை ‘காண்ட்ராக்டர்’ ஆறுமுகம் ‘டாடி’ ஆறுமுகம் ஆன கதை "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" சீனர்கள் தமிழ் படிப்பதற்கான காரணம் என்ன? இது சீன அரசாங்கத்தின் மறைமுக சதித்திட்டமா? தமிழை படித்துவிட்டு இவர்கள் என்ன செய்வார்கள்? உள்ளிட்ட சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் முன்வைக்கும் பல்வேறு கேள்விகளை நிறைமதியிடம் கேட்டதற்கு, "தமிழ் மொழிக்கும் சீனாவிற்கும் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுமட்டுமின்றி, அன்று தொட்டு இன்று வரை வர்த்தகத்தில் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகிறோம். இதை கலை, விளையாட்டு, கல்வி போன்றவற்றிற்கும் விரிவுபடுத்துவதற்கு சீனா விரும்புகிறது. பட மூலாதாரம்,FACEBOOK அதுமட்டுமின்றி, பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியாவை முழுவதுமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு தென்னிந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டை புரிந்துகொள்வது அவசியம் என்பதால் நாங்கள் தமிழ் மொழியையும், அதன் கலாசாரம், இலக்கியம், கலைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்வதற்கு முயற்சித்து வருவதன் ஒருபடியே இது. எனவே, எங்களது மாணவர்கள் தமிழ் மொழியை மட்டுமின்றி அதன் சிறப்பியல்புகள் குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளும் விதமாக அவர்களது மூன்றாமாண்டு படிப்பை முழுவதும் தமிழகத்தில் கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு விரைவில் தமிழ்நாட்டு பல்கலைக்கழங்களுடன் ஆசிரியர்-மாணவர் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளோம்" என்று விவரிக்கிறார். "247 எழுத்துகளை பார்த்து பயந்துவிட்டேன்" முற்றிலும் தமிழ் மொழியின் அறிமுகமே இல்லாத சீன மாணவர்கள் படிப்பை தொடங்கிய சில மாதங்களிலேயே மொழியை ஆர்வத்துடன் கற்று கொண்டதுடன், தங்களது எண்ணங்களை அழகான கையெழுத்தில் தமிழிலேயே எழுதுவதாக தெரிவித்து இந்த துறையின் சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டை பெறுவதை பார்க்க முடிகிறது. இதுகுறித்து, அங்கு பயிலும் மாணவர் மகிழனிடம் கேட்டபோது, "முதலில் தமிழை புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக தமிழ் மொழியில் 247 எழுத்துகள் உள்ளதை கண்டு மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், தமிழை தொடர்ந்து படித்து, படித்து அதனால் ஈர்க்கப்பட்டு விட்டேன். பொங்கல் விழா கொண்டாடுதல், தமிழ் உணவு சாப்பிடுதல், தமிழ் திரைப்படங்களை ரசித்தல் முதலியவற்றின் மூலம் தமிழர்களின் கலாசாரத்தை புரிந்துகொள்வதற்கும், தமிழ் மொழியை மேலும் ஆர்வமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது" என்று அவர் கூறுகிறார். "தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. தமிழ் மொழியை கற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், அதை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு, தமிழர்களுடன் செம்மையாக உரையாடல் நடத்த விரும்புகிறேன்" என்று கூறுகிறார் கயல்விழி என்னும் மாணவி. பட மூலாதாரம்,KAYALVIZHI   படக்குறிப்பு, கயல்விழி படித்த பிறகு என்ன செய்வார்கள்? தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், தமிழர்களின் வரலாறு, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை தெரிந்துகொள்வது மட்டுமின்றி, தமிழை படிப்பதால் சீனர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளதாக உறுதிபட கூறுகிறார் நிறைமதி. "எங்களிடம் நான்காண்டு பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, சென்னையில் பல்வேறு சீன நிறுவனங்களின் கிளைகளும், தொழிற்சாலைகளும், துணை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உயரதிகாரிகளாக உள்ள சீனர்களுக்கு மாண்டரின், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளே தெரிந்துள்ளதால் மற்ற பணியாளர்களுடன் இயல்பாக உரையாடுவது கடினமாக உள்ளது. பட மூலாதாரம்,FACEBOOK   படக்குறிப்பு, தமிழர்களின் பாரம்பரிய உடையில் ஆசிரியருடன் மாணவர்கள் இந்நிலையில், மாண்டரின், ஆங்கிலம் மட்டுமின்றி தமிழும் தெரிந்த சீனர் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது முயற்சி இருக்கும். அதுமட்டுமின்றி, பொதுவாகவே தமிழ் திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்க்கும் சீனர்களுக்கு பெருந்தடையாக இருந்துவரும் மொழிபெயர்ப்பை மேற்கொள்வதிலும் பணிவாய்ப்புகள் உள்ளன. தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து படித்து, அதில் ஆராய்ச்சி செய்வதற்கும், எதிர்கால சீனர்களுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லும் ஆசிரியராகவும் பணிபுரிவதற்கு வாய்ப்புள்ளது" என்று நிறைமதி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். "நான் பட்டம் பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு சென்று மேலதிக கற்றல்களையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, ஒரு தேர்ந்த தமிழ் ஆசிரியராக விரும்புகிறேன்" என்று கயல்விழி கூறுகிறார். மாணவர் மகிழன் பேசும்போது, "நான் தமிழ்நாட்டில் சில காலம் வாழ்ந்து அங்குள்ள கலாசாரத்தில் முழுமையாக மூழ்க விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் தமிழ் சார்ந்த பணிகளை மேற்கொள்வதுடன், சீன-இந்திய நட்புக்கு ஒரு பாலமாக மாற வேண்டுமென விரும்புகிறேன்" என்று தனது கனவை முழுவதும் தமிழிலேயே விவரிக்கிறார். "தாய்மொழி பாசம் அதிகம்" பட மூலாதாரம்,FACEBOOK சீனா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை கற்பதையும், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படுவதையும் பார்த்து தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. அதாவது, சமீபத்திய ஆண்டுகளாக பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழக படிப்புவரை ஆங்கில வழி கல்வியின் தாக்கமே தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து நிறைமதியிடம் கேட்டபோது, "தமிழர்கள் தங்களது தாய்மொழியின் மீது அதிக பாசம் கொண்டவர்கள் என்பதை நான் நன்கறிவேன். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆங்கில மொழி மீதான மோகத்துக்கு உலகமயமாக்கலே மிக முக்கிய காரணம். இதுபோன்ற தடைக்கற்களை சீன மொழியும் சந்தித்து மீண்டெழுந்து வருகிறது. இருந்தபோதிலும், உலகின் செம்மொழிகளில் முக்கிய மொழியான தமிழை தமிழர்கள் பேணிக்காக்க வேண்டும். தமிழின் அறிமுகமே இல்லாத சீனர்களே தமிழை கற்க முன்வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்ல வேண்டும்" என்று நிறைமதி நிறைவு செய்கிறார். (இந்தக் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.) https://www.bbc.com/tamil/global-46945186
  • வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு By NANTHINI 03 FEB, 2023 | 11:44 AM வவுனியா நகரில் நேற்று (2) காலை முதல் இன்று (3) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா நகரில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் பல தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் குளங்கள் நிரம்பி வழிகின்றன. வயல் நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அத்தோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று காலை 8.30 மணி தொடக்கம் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணிநேர காலப் பகுதியில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி வவுனியா நகரில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட தகவலில் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/147325
  • ரூ.8 லட்சம் கோடி சரிவை கண்ட அதானியின் ராஜ்ஜியம் - மீண்டு வருவது சாத்தியமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானி, தனது ஃஎப்.பி.ஓ(FPO) பங்கு விற்பனையை நிறுத்தியதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க முயன்றார்.   இந்த விற்பனை மூலம் திரட்டப்பட்ட 2,000 கோடி ரூபாயை(2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தருவதாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிவித்தது. இந்த முடிவு "தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை" பாதிக்காது என்று அதானி தெரிவித்திருந்தார். தொடர் சரிவில் அதானி குழுமம் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க பங்குச் சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டை அதானி மறுத்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 8.8 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதானி அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 3.9 லட்சம் கோடி) இழந்து, இப்போது ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் 22வது இடத்தில் உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பட்டியலில் 3வது இடத்திலும் நேற்று 16வது இடத்திலும் கௌதம் அதானி இருந்தார். அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?30 ஜனவரி 2023 அதானி குழுமத்தில் செய்த முதலீட்டின் பலன் என்ன? எல்.ஐ.சி. விளக்கம்30 ஜனவரி 2023 ஹிண்டன்பர்க் விளைவு: அதானி எஃப்.பி.ஓ. பங்கு விற்பனை வாபஸ் - சொன்ன காரணம் என்ன?2 பிப்ரவரி 2023 என்ன நடந்தது? பட மூலாதாரம்,REUTERS அதானி குழுமம் பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும் கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியிட்டது. இதற்குப் பதிலளித்த அதானி குழுமம், “தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது, ஒன்றைவிட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டது,” என்று கூறியிருந்தது. நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதானி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. அதானி குழுமத்தின் கீழ் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் ஏழு வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகி்ன்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் பதிவு செய்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்துள்ளன. அதானி குழுமத்தில் பல இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. சில வங்கிகள் பல லட்சம் கோடி ரூபாயை கடனாக அதானி குழும நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை அறிக்கையாக சமர்பிக்குமாறு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்தின் பங்குகளின் வீழ்ச்சி தொடர்பாக இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) விசாரணை நடத்தி வருவதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. சரிவில் இருந்து எப்போது மீளும்? பட மூலாதாரம்,REUTERS தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் அதானி நிறுவனத்தின் போக்கு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகரான சதீஷ், அதானி நிறுவனத்தின் பங்குகளில் 20% வரை பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன. பங்குச் சந்தையின் வீழ்ச்சி காரணமாகவும், வெளியில் இருந்து எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாகவும் தங்கள் பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டிய நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டன. இதன் காரணமாகவும், அதானி நிறுவனம் தனது ஃஎப்.பி.ஓ-வை திரும்பப் பெற்றதன் காரணமாகவும் அதானி எண்டர்பிரைஸ் நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே வருகின்றன. இதன் தாக்கம் சில்லறை முதலீட்டாளர்களிடம் தொடர்கிறது. அதானி குழுமத்தில் முதலீடு செய்த பணத்தைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது சிக்கலானது என்று கூறினார். இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் நம்பிக்கை மிகுந்தவையாகவும், ஒட்டுமொத்த பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்தது. ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட விளைவைத் தடுக்கும் வகையில் சந்தையில் இழந்த நம்பிக்கையைப் பெறும் விதமாக அதானி தனது நிறுவனத்தின் ஃஎப்.பி.ஓ-வை திரும்பப் பெற்றாலும், சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், அந்த நிறுவனம் பெற்றுள்ள கடன்கள் தான். மொத்த கடனில், 25% பொதுத்துறை வங்கிகளிடம் இருந்தும், 37% பொதுத்துறை காப்பீடு நிறுவனம், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் பத்திரங்களாக உள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையில் அதானி குழுமத்திற்கு இருக்கும் அதிக கடன்களைச் சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், சந்தையில் அந்த நிறுவனத்தின் மீது எதிர்மறை தாக்கம் ஏற்படும்போது பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தது. அதே போலத்தான் இப்போது நடந்து வருகிறது," என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cy6j048pe16o
  • ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் மீண்டும் ஆஷு மாரசிங்க By DIGITAL DESK 5 03 FEB, 2023 | 12:16 PM நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரந்தனாவின் வளர்ப்பு நாயை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக  குற்றம் சாட்டி சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஆதர்ஷா கரந்தனா நடத்தி குறித்த மிருக துஷ்பிரயோகம் தொடர்பில் ஆஷு மாரசிங்க மீது குற்றம் சுமத்தியிருந்தார். இதனையடுத்து  ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷ கரந்தனவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் கோரி   ஆஷு மாரசிங்க வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/147335
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.