Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடந்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!

கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!

கடத்தப்பட்டு தாக்கப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகரான தினேஷ் ஷாப்டர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொரளை பொது மயானத்தில் வாகனத்திற்குள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த வர்த்தகரை கடத்தி, பொரளை மயானத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்திருந்ததாக பொரளை பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

நபரொருவருக்கு பல கோடி ரூபா கடன் தொகையொன்றை வழங்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை சந்திப்பதற்காக, கறுவாத்தோட்டம்- ப்ளவர் வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து நேற்று பிற்பகல் மனைவியிடம் விடயம் தொடர்பில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சிறிது நேரத்தில் அவரது மனைவி அவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதாகவும், ஆனால் அவரது தொலைபேசி இயங்காமல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் பொரளை மயானத்தில் இருப்பது தொடர்பில் மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு GPS தொழில்நுட்ப சமிக்ஞைகள் இதன்போது கிடைத்துள்ளது.

இது தொடர்பில் விரைந்து செயற்பட்ட அவரது மனைவி, நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஒருவரிடம் கூறி பொரளை மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதன்போது குறித்த அதிகாரி அங்கு சென்று தேடிப்பார்த்தபோது தினேஷ் ஷாப்டர் பயணித்த காரின் சாரதியின் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் காருக்குள் இருந்துள்ளார்.

மேலும், தினேஷ் ஷாப்டரும் அங்கு கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளதாக குறித்த நிறைவேற்று அதிகாரி மனைவிக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், இருவரும் மீட்கப்பட்டுள்ள சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1315746

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் சாப்டரின் கொலை தொடர்பில் வெளியான மேலதிக தகவல்கள் : தேடப்படும் கிரிக்கெட் பிரபலம்!

16 DEC, 2022 | 10:39 AM
image

தினேஷ்  சாப்டரின்  கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளரான  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊடக முகாமையாளராக பணியாற்றிய ஒருவரைக் கண்டுபிடிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  

இந்த நபருக்கும் தினேஷ் சாப்டருக்கும் இடையில் 138 கோடி ரூபா  கொடுக்கல், வாங்கல் இடம்பெற்றுள்ளதாகவும்  இந்தக் கொலையின் முக்கிய சந்தேக நபராக பொலிஸாரால் தேடப்படும் நபர், அந்த தொகையை செலுத்தாத காரணத்தால் முன்னதாக கைது செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்த கொலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொரளை மயானத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்து.   

முதற்கட்ட விசாரணைகளின்போது சாப்டரின் கார்,  காசல் வைத்தியசாலை நோக்கி மயானத்துக்குள் செலுத்தப்பட்டது தெரிய வந்ததாக, பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/143255

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பு மயானத்தில் காருக்குள் சித்ரவதை; தொழிலதிபருக்கு நடந்தது என்ன?

கொழும்பு மயானத்தில் காருக்குள் துன்புறுத்தப்பட்;ட இலங்கையின் முன்னணி வர்த்தகர் உயிரிழப்பு

பட மூலாதாரம்,CIMA SRI LANKA FB PAGE

2 மணி நேரங்களுக்கு முன்னர்

கொழும்பு - பொரள்ளை மயானத்தில் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, கார் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், முன்னணி வர்த்தகருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

கொழும்பு - பிளவர் வீதியைச் சேர்ந்த 51 வயதான முன்னணி வர்த்தகரே தினேஷ் சாஃப்டர்.

உயிரிழந்த நபர், தனது காருக்குள் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

 

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொரள்ளை போலீஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

நடந்தது என்ன?

கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து தினேஷ் சாஃப்டர் நேற்று (15) மாலை புறப்பட்டு சென்றுள்ளார்.

பல கோடி ரூபா கடனை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், கடனை பெற்றுக்கொண்ட நபரை சந்திப்பதற்காக தான் செல்வதாக தனது மனைவியிடம் கூறி, தினேஷ் சாஃப்டர் புறப்பட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பின்னர், தினேஷ் சாஃப்டரின் மனைவி, தினேஷ் சாஃப்டருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

எனினும், தினேஷ் சாஃப்டரின் கையடக்கத் தொலைபேசி செயலிழந்திருந்ததாக போலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவரது மனைவி ஜி.பி.எஸ் அலைவரிசையின் ஊடாக, அவரது தொலைபேசி சமிக்ஞையை தேடியுள்ளார்.

இதன்போது, தினேஷ் சாஃப்டரின் கையடக்கத் தொலைபேசி, இறுதியாக கொழும்பு - பொரள்ளை மயான வளாகத்தை காண்பித்துள்ளது.

மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, கணவருடன் பணியாற்றும் மற்றுமொரு நிறைவேற்று பணிப்பாளர் ஒருவருக்கு இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த அதிகாரி, பொரள்ளை மயானத்தை நோக்கி சென்றுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

கொழும்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொரள்ளை மயானத்தில் தினேஷ் சாஃப்டரின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அதிகாரி காரை நோக்கி சென்று தேடியுள்ளார்.

தனது காரின் சாரதி ஆசனத்தில் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில், கழுத்து வையர் ஒன்றினால் நெரிக்கப்பட்டிருந்ததை, குறித்த அதிகாரி அவதானித்துள்ளார்.

இதையடுத்து, மயானத்தில் கடமையாற்றும் ஊழியர்களின் உதவியுடன், தினேஷ் சாஃப்டரை, கொழும்பு தேசிய மருத்துவமனையில் குறித்த அதிகாரி அனுமதித்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் சாஃப்டர், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தினேஷ் சாஃப்டரின் காருக்கு அருகிலிருந்து, சந்தேகத்திற்கிடமான மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளதை, மயானத்தில் கடமையாற்றும் பணியாளர் ஒருவர் அவதானித்துள்ளமை போலீஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தன்னிடமிருந்து பல கோடி ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தினேஷ் சாஃப்டர் பல முறைப்பாடுகளை செய்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

விசாரணையின் முன்னேற்றம்

இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை போலீஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர். 

https://www.bbc.com/tamil/articles/cp9kw9gxddmo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொல்லப்பட்ட வர்த்தகர் தினேஸ் சாப்டர் கிரிக்கெட் வர்ணைணயாளர் பிரையன் தோமசை சந்திக்க திட்டமிட்டிருந்தார் - விசாரணைகளில் தகவல்

By RAJEEBAN

16 DEC, 2022 | 03:37 PM
image

இலங்கையின் பிரபல வர்த்தகரின் கொலை தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் அவர் முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசை சந்திக்கதிட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

தினேஸ் சாப்டர் இதனை தனது செயலாளருக்கு தெரிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

scafter_car3.jpg

சாப்டருக்கும் பிரையன் தோமசிற்கும் இடையிலாக பணகொடுக்கல் வாங்களிற்கும் இந்த கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்டு கொலை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட குற்றச்செயல் இடம்பெற்ற  பகுதிக்கு இன்று காலை சிஐடியினர் சென்றுள்ளனர்.

schafter_car1.jpg

தடயங்கள் ஏதாவது கிடைக்கின்றதா என பார்ப்பதற்காக பொரளை பொது மயானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் சிசிடிவியை ஆராயும் நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் சாப்டரின் வாகனம் பார்ம்வீதி ஊடாக மயானத்திற்குள் நுழைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சாப்டரின் கார் விமானப்படையினரின் நினைவுத்தூபிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததை பொலிஸார் பார்த்துள்ளனர்.

சாப்டர் பிளவர்வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து இரண்டு அல்லது மூன்று மணியளவில் கூட்டமொன்றிற்காக சென்றுள்ளார்.

schafter_car.jpg

முன்னாள் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசை சந்திப்பதற்கு செல்வதாக அவர் தனது செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

பிரையன் தோமல் சாப்டரிடமிருந்து 1.4 பில்லியன் கடன்பெற்றுள்ளார்.

https://www.virakesari.lk/article/143298

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் சாஃப்டர் கொலை - கோடிக்கணக்கில் கடன் பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளருக்கு தடை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
தினேஷ் சாஃப்டர்

பட மூலாதாரம்,CIMA SRI LANKA FB PAGE

 
படக்குறிப்பு,

தினேஷ் சாஃப்டர்

கொழும்பு - பொரள்ளை மயானத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு பணிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான தினேஷ் சாஃப்டர் உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு இலக்கம் 02 நீதிமன்றத்தின் பதில் நீதவான் சம்பத் ஜயவர்தனவின் உத்தரவிற்கு அமைய, நேற்றைய தினம் தினேஷ் சாஃப்டரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்தன.

இதன்படி, கழுத்து நெரிக்கப்பட்டமையே, உயிரிழப்புக்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

போலீஸ் விசாரணை கோணங்கள்

இந்த சம்பவம் தொடர்பில் பல விசேட போலீஸ் குழுக்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் படுகொலை விசாரணை பிரிவு ஆகியவற்றின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

சிசிடிவி காணொளிகள் மற்றும் தொலைபேசி தரவுகளின் அடிப்படையிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொது மயானத்தின் ஊழியர்கள், தினேஷ் சாஃடரின் மனைவி உள்ளிட்ட சுமார் 15 பேரிடம் போலீஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

பொரள்ளை பொது மயானம்
 
படக்குறிப்பு,

பொரள்ளை பொது மயானம்

தினேஷ் சாஃப்டர், பொரள்ளை பொது மயானத்திற்கு தனியாகவே வருகைத் தந்திருக்கலாம் என ஊகிப்பதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினேஷ் சாஃப்டரின் கார், பொது மயானத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில், நேற்று முன்தினம் இறுதிக் கிரியை ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த இறுதிக் கிரியைகளில் பங்குப்பற்றும் வகையில் சந்தேகநபர் வருகைத் தந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

தாம் ஒரு கோணத்தில் மாத்திரம் விசாரணைகளை நடத்தாது, பல்வேறு கோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

பிரையின் தோமஸிடம் மாத்திரமன்றி, தமக்கு கிடைத்த அனைத்து சாட்சியங்களின் ஊடாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறுகின்றார்.

பிரையின் தோமஸிடம் விசாரணை

பிரபல சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளரும், ஊடகவியலாளருமான பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

உயிரிழந்த தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபா பணத்தை, பிரையின் தோமஸ் பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து, தினேஷ் சாஃப்டர் ஏற்கனவே போலீஸில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்.

தான் வழங்கிய பல கோடி ரூபாய் பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காக, தான் செல்வதாக மனைவியிடம் தெரிவித்தே, தினேஷ் சாஃப்டர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, தனது நிறுவனத்தின் கடமையாற்றும் பணிப்பாளர் ஒருவருக்கும் இந்த விடயத்தை தினேஷ் சாஃப்டர் தெரிவித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், தினேஷ் சாஃப்டரிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொரள்ளை போலீஸார், கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கொக்குணுவல முன்னிலையில் விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையின் தோமஸிற்கு, வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளார்.

பிரையின் தோமஸிடம் இரண்டு கடவூச்சீட்டுக்கள் உள்ளதாகவும் போலீஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, இரண்டு கடவூச்சீட்டுக்களின் ஊடாகவும் வெளிநாடு செல்ல குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தொலைபேசி தரவுகளின் ஊடாக விசாரணைகளை நடத்த போலீஸார் அனுமதி கோரிய நிலையில், தொலைபேசி தரவுகளை பெற்றுக்கொடுக்குமாறு உரிய தொலைபேசி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடந்தது என்ன?

இலங்கை

கொழும்பு - பொரள்ளை பொது மயானத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து, பிரபல தொழிலதிபர் தினேஷ் சாஃப்டர், கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட தினேஷ் சாஃப்டர், உடனடியாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தான் கடனை பெற்றுக்கொள்வதாக தெரிவித்து, நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில், தினேஷ் சாஃப்டர், கொழும்பு - பிளவர் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார்.

இவ்வாறு வெளியேறிய தினேஷ் சாஃப்டரின் தொலைபேசிக்கு, அவரது மனைவி பல தடவைகள் அழைப்புக்களை மேற்கொண்ட போதிலும், தொலைபேசி செயலிழந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஜி.பி.எஸ் ஊடாக தொலைபேசி அலைவரிசையை சோதனை செய்த நிலையில், அவரது தொலைபேசி பொரள்ளை மயானத்தை காண்பித்துள்ளதை அவரது மனைவி அவதானித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தினேஷ் சாஃப்டரின் நிறுவனத்தில் பணியாற்றும் மற்றுமொரு பணிப்பாளருக்கு அறிவித்த நிலையில், அவர் பொது மயானத்திற்கு சென்ற போதே, தினேஷ் சாப்டர், தனது காரிற்குள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்தே, மயான ஊழியர்களின் உதவியுடன், தினேஷ் சாஃப்டர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/cz58zk6yl3xo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாப்டரின் கொலையாளி பிரையன் தோமசிற்கு அனுப்பிய குறுஞ்செய்தி - வெளியானது அதிர்ச்சி தகவல்

By RAJEEBAN

19 DEC, 2022 | 11:22 AM
image

வர்த்தகர் தினேஸ் சாப்டரின் கொலையாளி என கருதப்படும் நபர் கிரிக்கெட் வர்ணணையாளர் பிரையன் தோமசிற்கு சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து பிரையன் தோமசின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி பொரளை கனத்த மயான பகுதியிலிருந்து சாப்டர் கொல்லப்பட்ட பின்னர் அனுப்பப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என சிஐடியினர் தெரிவித்துள்ளனர் என டெய்லி நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாப்டரை கொலை செய்தவர் இந்த குறுஞ்செய்தியை சாப்டரின் கையடக்க தொலைபேசியிலிருந்து பிரையன் தோமசிற்கு அனுப்பியுள்ளார் என கருதப்படுவதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

thumb_dinesh-schaffter-2.jpg

இதேவேளை விசாரணைகளின் போது சம்பவம் நடந்த அன்று சாப்டரின் கார் நேரடியாக அவரின் வீட்டிலிருந்து கனத்தமயானத்திற்கு வந்தமை தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பில் பல ஆச்சரியமளிக்கும் விடயங்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளை முன்னெடுத்துள்ளவர்கள் பல ஆச்சரியமளிக்கும் விடயங்களை வெளியிட்டுள்ளனர்.

எங்களிற்கு கிடைத்துள்ள பல தகவல்களை ஆராய்ந்து   உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/143501

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் கொலையுடன் நெருக்கமான ஒருவருக்கு தொடர்பு ? -அதிகாரிகள் சந்தேகம் : விசாரணையில் புதிய திருப்பம்

20 DEC, 2022 | 07:01 PM
image

 

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலையுடன் அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் தொடர்புபட்டிருக்க வேண்டும் என  விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

 இதுஅவரை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்கு மூலங்கள்,  சி.சி.ரி.வி. உள்ளிட்ட அறிவியல் தடயங்களை வைத்து விசாரணையாளர்கள் இந்த சந்தேகத்தை  வெளிப்படுத்தும் நிலையில்,  குற்றவாளிகளைக் கைதுசெய்ய அறிவியல் தடயங்களை தொடர்ச்சியாக பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.

இந் நிலையில்,  வர்த்தகர் ஷாப்டரின்  பிளவர் வீதி வீட்டுக்கும் பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை பகுப்பாய்வு செய்யும் போது மற்றொரு முக்கிய விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

பிளவர் வீதியிலிருந்து காரை செலுத்தி வந்துள்ள தினேஷ் ஷாப்டர், இடையில் ஒரே ஒரு இடத்தில் காரிலிருந்து இறங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. 

பிரபல  உணவகம் ஒன்றில்  அவர் இவ்வாறு இறங்கியுள்ளமையும் அங்கிருந்து நேராக பொரளை மயானத்துக்கு சென்றுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 இந் நிலையில் அப்போது உணவகத்தில் எவரையேனும் சந்தித்தாரா அல்லது அங்கிருந்து அவருடன் எவரேனும் காரில் ஏறிச் சென்றனரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

 இதனைவிட,  பிளவர் வீதி முதல் பொரளை கனத்தை வரை  ஷாப்டரின் வாகனம் பயணித்த போது அவரது வாகனத்தை பின் தொடர்ந்து பயணித்த வாகனங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  டி.ஜி.எச்.  பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு மேலதிக நீதிவான்  ஹர்ஷன கெக்குனவல முன்னிலையில் பொரளை பொலிஸார் விடயங்களை முன் வைத்து 4 தொலைபேசி இலக்கங்கள் குறித்து  விரிவான தொலைபேசி விபரப் பட்டியலை  பெற்றுக்கொள்ள நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/143682

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னய்யா பில்லியனராய் வரவேண்டும் என்று அடுத்த தலைமுறை தவிக்கிது.  மில்லியனரை இப்படி படுகொலை செய்துள்ளார்கள் 😫

கிரிக்கெட் ஜெண்டில்மான் கேம் என்று சொல்வார்கள்.  இதில் கொலைகாரர் கூட்டமும் உள்ளதோ 😩

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!

தினேஷ் ஷாப்டர் அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம்?

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பொரளை பொலிஸார் நேற்று (செவ்வாய்கிழமை) விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொலைசெய்யப்பட்ட தினேஸ் ஷாப்டரின் மனைவி மற்றும் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை தெரிவிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

இதேவேளை, பிரபல வர்த்தகரான தினேஷ் ஷாப்டர், பொரளை மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்திற்கமைய கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1316460

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படியெனில் அவரது மனைவியும், மனைவியால் மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட (தகவல் தெரிவிக்கப்பட்ட) பணிப்பாளருமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, satan said:

அப்படியெனில் அவரது மனைவியும், மனைவியால் மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட (தகவல் தெரிவிக்கப்பட்ட) பணிப்பாளருமா?

கதை… அப்பிடித்தான் போகுது போலை இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

கதை… அப்பிடித்தான் போகுது போலை இருக்கு. 

எதுக்கும் விசாரணை முடிவு வருமட்டும் பொறுத்திருப்போம்.

உன்னிப்பாக கவனிப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!

தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் – 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் 50 இற்கும் மேற்பட்டவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகம் உள்ளவர்களிடம் இருந்து இரண்டாவது தடவையாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தினேஷ் ஷாஃப்டரை தனிமையில் சந்திக்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் தினேஷ் ஷாப்டர் பொதுவாக மெய்பாதுகாவலர்கள் இன்றி பயணிக்கும் இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட தினத்தன்று, தினேஷ் ஷாப்டர், பொரளை மயானத்திற்குச் சென்று கொண்டிருந்ததுடன், உணவகம் ஒன்றில் இரண்டு பேருக்கு பாரியளவு சிற்றுண்டிகளை எடுத்துச் சென்றமை தொடர்பிலும் விசாரணைக் குழுக்கள் கவனம் செலுத்தியுள்ளன.

மயானத்திற்குச் செல்வதற்கு முன் வேறு இடத்தில் தினேஷ் ஷாப்டர் தின்பண்டங்களை உண்டதற்கான ஆதாரம் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், தினேஷ் ஷாஃப்டரின் அனைத்து வணிக நடவடிக்கைகளும் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவருடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

தற்போதைய விசாரணைகளில், தினேஷ் ஷாப்டரின் வர்த்தக விவகாரங்களுக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்கியவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் நடத்தை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் மனைவி மற்றும் நான்கு பேரின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று உத்தரவிட்டுள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1316570

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழக்கை திசை திருப்புகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படுகொலைக்கு முன் தினேஷ் ஷாப்டர் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவுச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்

( எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டு இன்று (21) ஐந்து நாட்கள் பூர்த்தியடைந்தும், கொலையாளைகள் அல்லது சந்தேக நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

இந் நிலையில் குறித்த படுகொலை விவகார விசாரணைகள் தீர்க்கமான கட்டத்தில் இருப்பதாகவும் மிக விரைவில் சந்தேக நபர்களை அடையாளம் காண முடியும் எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரியிடம் நம்பிக்கை வெளியிட்டார்.

இந் நிலையில்,  வர்த்தகர் ஷாப்டரின்  பிளவர் வீதி வீட்டுக்கும்  பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை பகுப்பாய்வு செய்யும் போது மற்றொரு முக்கிய விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிளவர் வீதியிலிருந்து காரை செலுத்தி வந்துள்ள தினேஷ் ஷாப்டர், மலலசேகர மாவத்தையில் உள்ள ரொட்ரிகோ லொஜன்சி பிளேவர் எனும் உணவகத்தில் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

 எனினும் கொள்வனவு செய்யப்பட்ட சிற்றூண்டிகள் போட்டுக் கொடுக்கப்பட்ட பை மட்டும் ஷாப்டரின்  காரிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. அதன்படி, சிற்றூண்டிகள் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர், இருவரால் உட்கொள்ளப்பட்டிருக்கின்றமை தொடர்பில் ஊகிக்க முடியுமான சான்றுகள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ளன.

இந் நிலையில் இதுவரையிலான விசாரணைகளில் 50 வாக்கு மூலங்களை  விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளனர். 

அதன்படி தற்போது ஷாப்டரின் வீடு மட்டும் அலுவலகத்தின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளிடம்  விசாரணையாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அவர்களை சந்தேக நபர்களாக கருதாமல், ஷாப்டர் நெருங்கிப் பழகியோர் தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்திக்கொள்ள இவ்வாறு அவர்களை விசாரணை செய்வதாக சி.ஐ.டி. அதிகாரிகள் கூறினர்.

ஷாப்டர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற போது, சாரதி எவரும் உடன் இருக்கவில்லை என்பதும், குறித்த பயணத்துக்காக ஷாப்டர் காரை அவரே செலுத்திச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில், மிக தனிப்பட்ட பயணமாக அவர் அப்பயணத்தை முன்னெடுத்திருப்பதும், அப்படி அவர்  இரகசியமாக சந்திக்க சென்ற நபர் அல்லது நபர்கள் யார் என்பது தொடர்பிலும் வெளிப்படுத்தவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

விசாரணையாளர்கள் பிரதானமாக நான்கு கோணங்களில் விசரிக்கும் நிலையில், இதுவரை ஷாப்டரின் கொலையுடன் தொடர்புபட்டதாக எவரையும் கைது செய்ய போதிய சான்றுகள் கிடைக்கவில்லை என  அறிய முடிகின்றது.

இந் நிலையில் சி.சி.ரி.வி. காணொளிகள், பொரளை மயான கோபுரத் தகவல்களை மிக ஆழமாக ஆராயும் சிறப்புக் குழு,  அதன் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய சிலரிடம் இரண்டாவது முறையாகவும் விசாரணை நடாத்தியுள்ளது.

அத்துடன்  ஷாப்டரின் கொலையின் பின்னர் அவருக்கு நெருக்கமான பலரின் செயற்பாடுகளை 24 மணி நேரமும் சி.ஐ.டி.யினர் கண்காணித்து வருவதாகவும் அறிய முடிகின்றது.

இந் நிலையில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  டி.ஜி.எச்.  பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ்  மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார்.  மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர்,  ஜனசக்தி காப்புறுதி  குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளிக்கு சொந்தக் காரர் ஆவார்.

பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில்  கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர்  பிற்பகல் 3.30 மணியளவில்  கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார்.

படுகொலைக்கு முன் தினேஷ் ஷாப்டர் இருவருக்கு தேவையான சிற்றூண்டிகள் கொள்வனவுச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டர்  படுகொலை விவகாரம் : சந்தேகத்துக்கிடமான ஒருவரை பின் தொடரும் சி.ஐ.டி.

23 DEC, 2022 | 05:17 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ள நபர் ஒருவரை சி.ஐ.டி. சிறப்புக் குழுவொன்று 24 மணி நேரம்  கண்காணித்து வருகிறது.

 குறித்த நபர் தொடர்பில் இதுவரையில் உறுதியான சாட்சியம் ஒன்று விசாரணையாளர்களுக்கு கிடைக்காத நிலையிலேயே,  அவரைக் கைதுசெய்யாது பல கோணங்களில் சிறப்பு விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  டி.ஜி.எச்.  பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று  வருகின்றன.

வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை செய்யப்பட முன்னர், கொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழுவொன்று பூரணமாக பரிசீலித்து வருவதாகவும் அவரது தொலைபேசி அழைப்புக்கள் உள்ளிட்டவற்றையும் அக்குழு ஆராய்ந்து வருவதாகவும் அறிய முடிகின்றது.

குறித்த நபரை இதுவரை விசாரணை செய்யாத விசாரணையாளர்கள், விசாரணைகளை தவறாக வழி நடாத்த குறித்த நபர் முயன்றுள்ளதாக குறிப்பிட்டனர். 

இந் நிலையில் உறுதியான சாட்சியத்தை வெளிப்படுத்த தொலைபேசி பகுப்பாய்வு நடவடிக்கைகளை மிக ஆழமாக முன்னெடுக்கும் சி.ஐ.டி. சிறப்புக் குழு, தொடர்ச்சியாக 24 மணி நேரமும் அந் நபரின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக  அறிய முடிகிறது.

அவ்வாறு உறுதியான தடயம் கிடைக்கும் பட்சத்தில் அந் நபரை கைதுசெய்ய தயங்கப் போவதில்லை எனக்கூறும் விசாரணையாளர்கள், சந்தேகத்துக்கு இடமான பல கோணங்களில் விசாரணை நடப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

 இதனிடையே, இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் இதுவரை 60 இற்கும் அதிகமான வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவவின்  தகவல்கள் படி,  தொலைபேசி   இலக்க பகுப்பாய்வுகள், சி.சி.ரி. பகுப்பாய்வுகள், வங்கிக் கணக்கு பரிசீலனைகள், ஆவண பகுப்பாய்வுகள் ஆகியவற்றுக்கு, பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் தனித்தனி குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு 24 மணி நேரமும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.

 ' இது மிக ஆழமான  விசாரணை. எமக்கு சிறிது கால அவகாசம் வேண்டும். நாம் மனிதப் படுகொலை தொடர்பில் குற்றம் சுமத்த முடியுமான வகையில் சாட்சிகளை வெளிப்படுத்திக்கொண்டே சந்தேக நபரைக் கைது செய்ய முடியும்.' என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ வீரகேசரியிடம் தெரிவித்தார்.

 

51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார்.  மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர்,  ஜனசக்தி காப்புறுதி  குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளுக்கு சொந்தக் காரர் ஆவார். பொரளை பொது மயான வளாகத்தில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில்  கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர்  பிற்பகல் 3.30 மணியளவில்  கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில்   அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/143969

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

உறுதியான தடயம் கிடைக்கும் பட்சத்தில் அந் நபரை கைதுசெய்ய தயங்கப் போவதில்லை எனக்கூறும் விசாரணையாளர்கள்,

போடுற பீடிகையை பாத்தா, பெரிய தலையாய் இருக்கும்போல! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டர் படுகொலை : தற்போது வரையான விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது என்ன ?

By VISHNU

24 DEC, 2022 | 07:50 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 77 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  இரு முக்கிய சான்றுகளை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக  அறிய முடிகின்றது.

சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்  மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்  ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று  வரும் நிலையில், வங்கிக் கணக்குகள் சில தொடர்பிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சி.சி.ரி.வி. காட்சிகள் சில தொடர்பிலும் விஷேட அவதானம் செலுத்தப்ப்ட்டுள்ளதாக  சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார்.  மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர்,  ஜனசக்தி காப்புறுதி  குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைகளுக்கு சொந்தக் காரர் ஆவார்.

பொரளை பொது மயான வளாகத்திற்குள் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில்  கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில்  கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில்  அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார்.

 இந் நிலையில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பொரலை பொலிசார் இந்த விவகாரத்தில் 17 வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதுடன் சி.ஐ.டி.யினர் 60 இற்கும் அதிகமான வாக்கு மூலங்களை பதிவுச் செய்துள்ளனர்.

 தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், கொலை நடந்த 15 ஆம் திகதி காலை முதல் திஷேஷ் ஷாப்டரின் நடவடிக்கையில் வித்தியாசம் இருந்ததாகவும், எனினும் அவர் அது குறித்த விடயங்களை தன்னுடன் பகிரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 இதுவரையிலான விசாரணையின் அடிப்படையில் ஷாப்டருக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள தரவுகளை பெற்றுக்கொள்ள சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு தொடர்ச்சியாக முயன்றுவரும் நிலையில், அத்தரவுகளுடன் ஏனைய 3 பேரின் கையடக்கத் தொலைபேசி தரவுகளை ஒப்பீடு செய்து  பகுப்பாய்வு செய்தால், மேலும் பல சான்றுகள் வெளிப்படும் என விசாரணையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதன் பிரகாரம் குற்றவாளியைக் கைதுசெய்வதற்கான பூரண விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

https://www.virakesari.lk/article/144044

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

பொரளை பொது மயான வளாகத்திற்குள் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில்  கடந்த 15 ஆம் திகதி தினேஷ் ஷாப்டர் பிற்பகல் 3.30 மணியளவில்  கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில்  அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார்.

இவ்வளவிற்கும்… தினேஷ் ஷாப்டரை பொரளை மயானத்தில் கண்டு பிடித்த போது
உயிருடன் இருந்திருக்கின்றார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்று…
எட்டு மணித்தியாலங்களின் பின் தான் இறந்திருக்கின்றார்.
சில நிமிடங்கள் முந்தி பொரளை மயானத்திற்கு சென்றிருந்தால் சிலவேளை அவர் காப்பாற்றப் பட்டிருப்பார் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கென்னவோ; இந்த கிரிக்கெட் வர்ணனையாளரை கொலையாளிகள் தமது கொலைக்கு சாதகமாய்  பயன்படுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இருவர் மட்டுமே அவர் கிரிக்கெட் வர்ணனையாளரை சந்திக்க சென்றது, தனது பணத்தை மீளப்பெறுவதற்காக எனத் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது எப்படி தனியாக சென்று பணம் பெற நினைத்திருப்பார்? போனவருக்கு அவரது மனைவி ஏன் அவர் வருவரை காத்திராமல், அல்லது கணவனிடமிருந்து அழைப்பு வராமல் அழைப்பெடுத்தார்?  இது அவரது சாதாரண வழமையான பழக்கமா? அதாவது கணவர் வெளியில் போனால் அழைப்பெடுப்பது. அல்லது கணவர் சொல்லிச்சென்றாரா என்னிடமிருந்து அழைப்பு வராவிடில் தேடுங்கள் என்று,     அப்படியென்றால் அவருக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் என மனைவி எண்ணினாரா?அப்படி ஒரு சந்தேகமிருந்திருந்தால் அவர் போகும்போதே ஏதாவது முன்னேற்பாடுகளை செய்திருக்கலாம் அல்லது கார் மயானத்திற்கு போவதை கண்டுபிடித்தவுடன் பொலிசாருக்கல்லவா அறிவித்திருக்க வேண்டும்? கொலைக்கு திட்டமிட்டவர் அவரை வேறொரு காரணத்தை சொல்லி மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம், வரவழைத்திருக்கலாம். தான் சந்திக்கப்போகும் நபருக்கு அந்த வேளையில் உணவு தேவையென கருதி தினேஷ் சிற்றுண்டிகளை வாங்கிச் சென்றிருக்கலாம். கொலையாளி (சம்பந்தப்பட்டவர்) சாவகாசமாய் பக்கத்து ஆசனத்திலிருந்தபடியே  இருந்து சாப்பிட்டுவிட்டு வயரை அவரது கழுத்தில் போட்டு இறுக்கியிருக்கலாம்,  மயானத்திற்கு அனுப்பிவைத்துவிட்டு அவர் அங்கு போய்ச்சேர்ந்ததை உறுதிசெய்தபின் கொலையை உறுதி செய்வதற்காக அல்லது கொலைசெய்வதற்காக ஆள் அனுப்பப்பட்டிருக்கலாம், அவரே கிறிக்கெற் வர்ணனையாளர்க்கு செய்தி அனுப்பியிருக்கலாம். ஆனால் வர்ணனையாளர் தான் சந்திக்கும் நோக்கமில்லை என  என பதில் அனுப்பியிருக்கிறார் என விசாரணை அறிவிக்கிறது. அப்போ அவரது மரணத்தை நடத்தியவர், உறுதி செய்தவரே அந்த செய்தியை அனுப்பியிருக்க வாய்ப்பிருக்கு. அவரது தொலைபேசி காணாமற் போகவில்லை தினேஷின் தொலைபேசியில் தான் கிறிக்கெற் வர்ணனையாளரை சந்திப்பதற்கான எந்தச்செய்தியுமில்லை. அப்படியிருக்க உனக்காக காத்திருக்கிறேன் என எப்படி இறந்தபின் செய்தி அனுப்ப முடிந்திருக்கும்? ஆகவே கொலைகாரன்  இறுதிவரை அவரோடே இருந்திருந்திருக்கிறார். அவர் யார்?                

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, satan said:

எனக்கென்னவோ; இந்த கிரிக்கெட் வர்ணனையாளரை கொலையாளிகள் தமது கொலைக்கு சாதகமாய்  பயன்படுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இருவர் மட்டுமே அவர் கிரிக்கெட் வர்ணனையாளரை சந்திக்க சென்றது, தனது பணத்தை மீளப்பெறுவதற்காக எனத் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது எப்படி தனியாக சென்று பணம் பெற நினைத்திருப்பார்? போனவருக்கு அவரது மனைவி ஏன் அவர் வருவரை காத்திராமல், அல்லது கணவனிடமிருந்து அழைப்பு வராமல் அழைப்பெடுத்தார்?  இது அவரது சாதாரண வழமையான பழக்கமா? அதாவது கணவர் வெளியில் போனால் அழைப்பெடுப்பது. அல்லது கணவர் சொல்லிச்சென்றாரா என்னிடமிருந்து அழைப்பு வராவிடில் தேடுங்கள் என்று,     அப்படியென்றால் அவருக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் என மனைவி எண்ணினாரா?அப்படி ஒரு சந்தேகமிருந்திருந்தால் அவர் போகும்போதே ஏதாவது முன்னேற்பாடுகளை செய்திருக்கலாம் அல்லது கார் மயானத்திற்கு போவதை கண்டுபிடித்தவுடன் பொலிசாருக்கல்லவா அறிவித்திருக்க வேண்டும்? கொலைக்கு திட்டமிட்டவர் அவரை வேறொரு காரணத்தை சொல்லி மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம், வரவழைத்திருக்கலாம். தான் சந்திக்கப்போகும் நபருக்கு அந்த வேளையில் உணவு தேவையென கருதி தினேஷ் சிற்றுண்டிகளை வாங்கிச் சென்றிருக்கலாம். கொலையாளி (சம்பந்தப்பட்டவர்) சாவகாசமாய் பக்கத்து ஆசனத்திலிருந்தபடியே  இருந்து சாப்பிட்டுவிட்டு வயரை அவரது கழுத்தில் போட்டு இறுக்கியிருக்கலாம்,  மயானத்திற்கு அனுப்பிவைத்துவிட்டு அவர் அங்கு போய்ச்சேர்ந்ததை உறுதிசெய்தபின் கொலையை உறுதி செய்வதற்காக அல்லது கொலைசெய்வதற்காக ஆள் அனுப்பப்பட்டிருக்கலாம், அவரே கிறிக்கெற் வர்ணனையாளர்க்கு செய்தி அனுப்பியிருக்கலாம். ஆனால் வர்ணனையாளர் தான் சந்திக்கும் நோக்கமில்லை என  என பதில் அனுப்பியிருக்கிறார் என விசாரணை அறிவிக்கிறது. அப்போ அவரது மரணத்தை நடத்தியவர், உறுதி செய்தவரே அந்த செய்தியை அனுப்பியிருக்க வாய்ப்பிருக்கு. அவரது தொலைபேசி காணாமற் போகவில்லை தினேஷின் தொலைபேசியில் தான் கிறிக்கெற் வர்ணனையாளரை சந்திப்பதற்கான எந்தச்செய்தியுமில்லை. அப்படியிருக்க உனக்காக காத்திருக்கிறேன் என எப்படி இறந்தபின் செய்தி அனுப்ப முடிந்திருக்கும்? ஆகவே கொலைகாரன்  இறுதிவரை அவரோடே இருந்திருந்திருக்கிறார். அவர் யார்?                

தெய்வமே…நீங்க எங்கயே போய்டீங்க தெய்வமே..

உண்மையிலேயே மிக நுணுக்கமாக ஆராய்ந்துள்ளீர்கள் 👏🏾.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, satan said:

எனக்கென்னவோ; இந்த கிரிக்கெட் வர்ணனையாளரை கொலையாளிகள் தமது கொலைக்கு சாதகமாய்  பயன்படுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இருவர் மட்டுமே அவர் கிரிக்கெட் வர்ணனையாளரை சந்திக்க சென்றது, தனது பணத்தை மீளப்பெறுவதற்காக எனத் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது எப்படி தனியாக சென்று பணம் பெற நினைத்திருப்பார்? போனவருக்கு அவரது மனைவி ஏன் அவர் வருவரை காத்திராமல், அல்லது கணவனிடமிருந்து அழைப்பு வராமல் அழைப்பெடுத்தார்?  இது அவரது சாதாரண வழமையான பழக்கமா? அதாவது கணவர் வெளியில் போனால் அழைப்பெடுப்பது. அல்லது கணவர் சொல்லிச்சென்றாரா என்னிடமிருந்து அழைப்பு வராவிடில் தேடுங்கள் என்று,     அப்படியென்றால் அவருக்கு ஏதும் ஆபத்து ஏற்படும் என மனைவி எண்ணினாரா?அப்படி ஒரு சந்தேகமிருந்திருந்தால் அவர் போகும்போதே ஏதாவது முன்னேற்பாடுகளை செய்திருக்கலாம் அல்லது கார் மயானத்திற்கு போவதை கண்டுபிடித்தவுடன் பொலிசாருக்கல்லவா அறிவித்திருக்க வேண்டும்? கொலைக்கு திட்டமிட்டவர் அவரை வேறொரு காரணத்தை சொல்லி மயானத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கலாம், வரவழைத்திருக்கலாம். தான் சந்திக்கப்போகும் நபருக்கு அந்த வேளையில் உணவு தேவையென கருதி தினேஷ் சிற்றுண்டிகளை வாங்கிச் சென்றிருக்கலாம். கொலையாளி (சம்பந்தப்பட்டவர்) சாவகாசமாய் பக்கத்து ஆசனத்திலிருந்தபடியே  இருந்து சாப்பிட்டுவிட்டு வயரை அவரது கழுத்தில் போட்டு இறுக்கியிருக்கலாம்,  மயானத்திற்கு அனுப்பிவைத்துவிட்டு அவர் அங்கு போய்ச்சேர்ந்ததை உறுதிசெய்தபின் கொலையை உறுதி செய்வதற்காக அல்லது கொலைசெய்வதற்காக ஆள் அனுப்பப்பட்டிருக்கலாம், அவரே கிறிக்கெற் வர்ணனையாளர்க்கு செய்தி அனுப்பியிருக்கலாம். ஆனால் வர்ணனையாளர் தான் சந்திக்கும் நோக்கமில்லை என  என பதில் அனுப்பியிருக்கிறார் என விசாரணை அறிவிக்கிறது. அப்போ அவரது மரணத்தை நடத்தியவர், உறுதி செய்தவரே அந்த செய்தியை அனுப்பியிருக்க வாய்ப்பிருக்கு. அவரது தொலைபேசி காணாமற் போகவில்லை தினேஷின் தொலைபேசியில் தான் கிறிக்கெற் வர்ணனையாளரை சந்திப்பதற்கான எந்தச்செய்தியுமில்லை. அப்படியிருக்க உனக்காக காத்திருக்கிறேன் என எப்படி இறந்தபின் செய்தி அனுப்ப முடிந்திருக்கும்? ஆகவே கொலைகாரன்  இறுதிவரை அவரோடே இருந்திருந்திருக்கிறார். அவர் யார்?                

சாத்தான்…. நீங்கள் மிக நுணுக்கமாக, அக்கு வேறு ஆணி வேறாக….
இந்தக் கொலையை அலசி ஆராய்ந்துள்ளீர்கள். 👍🏽

கொலை செய்தவன், மிக சாதுரியமாக செயல் பட்டிருக்கின்றான்.
பொலிசார்… மயானத்துக்கு செல்லும் வரை, சில நிமிடங்கள் வரை அங்கேயே இருந்திருக்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் 3 ஆவது முறையாகவும் விசாரணை ! தற்போதைய நிலை என்ன ?

By DIGITAL DESK 2

25 DEC, 2022 | 06:12 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 77 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  இரு முக்கிய  சான்றுகளை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக  அறிய முடிகின்றது.

இந் நிலையில் தினேஷ் ஷாப்டரின் மனைவி டானி ஷனின் ஷாப்டரிடம்  விசாரணையாளர்கள் 3ஆவது தடவையாகவும் அவரது வீட்டில் வைத்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.   

அத்துடன் சனிக்கிழமை (டிச. 24) ஆரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று,  இலக்கம் 39 , பிளவர் வீதி கொழும்பு - 7 எனும் முகவரியில் அமைந்துள்ள தினேஷ் ஷாப்டரின் வீட்டுக்கு சென்று ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்   ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சிறப்பு விசாரணைகள் இடம்பெற்று வரும்நிலையில், 16 வங்கிக் கணக்குகள் தொடர்பிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சி.சி.ரி.வி. காட்சிகள் சில தொடர்பிலும் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக  சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

இந்த 16 வங்கிக் கணக்குகள் இருவருக்கு சொந்தமானவை எனக் கூறும் விசாரணையாளர்கள், கொடுக்கல் வாங்கல், வர்த்தக நடவடிக்கைகளின்  பிரச்சினைகள், கொலைக்கு காரணமாக இருப்பின் அது குறித்த தடயங்கள் கிடைக்கலாம் என்ற ரீதியில் இந்த வழங்கிக் கணக்குகளை பரிசீலனை செய்து வருகின்றனர்.

51 வயதான தினேஷ் ஷாப்டர் கொழும்பு -07 பிளவர் வீதி பகுதியை சேர்ந்தவராவார்.  மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர்,  ஜனசக்தி காப்புறுதி  குழுமம் உள்ளிட்ட பல வர்த்தக நடவடிக்கைளுக்கு சொந்தக் காரராவார்.

பொரளை பொதுமயான வளாகத்தினில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, வயரினால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில்  கடந்த 15ஆம் திகதி தினேஷ் ஷாப்டர்  பிற்பகல் 3.30 மணியளவில்  கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதே தினம் இரவு 11.25 மணியளவில் உயிரிழந்தார்.

இந் நிலையில், ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பொரளை பொலிஸார் இந்த விவகாரத்தில் 17 வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதுடன், சி.ஐ.டி.யினர் 60 இற்கும் அதிகமான வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இதனைவிட தினேஷ் ஷாப்டரின் சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோரின் வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினேஷ் ஷாப்டரின் மனைவியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில், கொலை நடந்த 15ஆம் திகதி காலை முதல் திஷேஷ் ஷாப்டரின் நடவடிக்கையில் வித்தியாசம் இருந்ததாகவும், எனினும் அவர் அது குறித்த விடயங்களை தன்னுடன் பகிரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையிலான விசாரணையின் அடிப்படையில் ஷாப்டருக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இக்கொலையுடன் மிக நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, ஷாப்டரின் கொலையை, பிரபல கிரிக்கட் வர்ணனையாளர் பிரயன் தோமஸ் மீது சுமத்த  கடும் பிரயத்தனம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் சி.ஐ.டி. அதிகாரிகள் அவதானித்துள்ள நிலையில்,  சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய உறுதியான சான்றுகளை வெளிப்படுத்திக்கொள்ள விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொலை நடந்த தினம், ஷாப்டர் இருக்கும் இடத்தை, தொலைபேசியின் சிறப்பு செயலி ஊடாக அறிந்ததாக மனைவி குறிப்பிட்டுள்ள நிலையில், அடிக்கடி அவ்வாறு குறித்த செயலியை பயன்படுத்தி  இருக்குமிடம் அடையாளம் காணப்பட்டதாக மேலோட்டமாக தெரியவில்லை என பொலிஸார் கூறுகின்றனர். 

இந்நிலையில்,  அவ்வாறு இதற்கு முன்னரும் நிழ்ந்துள்ளதா என்பதை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளவும்  ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள தரவுகளை பெற்றுக்கொள்ளவும்  சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு தொடர்ச்சியாக முயன்றுவரும் நிலையில், அத்தரவுகளுடன்  ஏற்கனவே கையேற்கப்பட்டுள்ள  3 பேரின் கையடக்கத் தொலைபேசி தரவுகளை ஒப்பிடு செய்து  பகுப்பாய்வு  செய்யப்பட்டு வருகின்றது.

 அதன் பிரகாரம் குற்றவாளியைக் கைது செய்வதற்கான பூரண விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

https://www.virakesari.lk/article/144093

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, தமிழ் சிறி said:

கொலை செய்தவன், மிக சாதுரியமாக செயல் பட்டிருக்கின்றான்.
பொலிசார்… மயானத்துக்கு செல்லும் வரை, சில நிமிடங்கள் வரை அங்கேயே இருந்திருக்கின்றான்.

கொலைகாரன் தினேஷ் வைத்தியசாலையில் இறக்கும்வரை கூடவே இருந்து தினேஷின் அலைபேசியை கையாளுமளவுக்கு நம்பிக்கைக்கு உரியவனாக இருந்திருக்கிறான். மரணத்தை நிறைவேற்றும் அவசரம், பதட்டம் காரணமாக கிறிக்கெற் பிரபலத்துக்கு செய்தி அனுப்பி அவரை சிக்க வைத்து தான்  தப்பிக்கொள்ளும் உத்தியை மறந்திருக்கலாம், அவர் இறந்தபின் நான் உனக்காக காத்திருக்கிறேன் என்கிற செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. தினேஷின் மனைவி  அவரது இருக்குமிடத்தை இணையவழி தேடி அவரது வாகனம் மயானத்துக்கு போகிறது எனக்கண்டறிந்து ஆளை அனுப்பியதன் காரணம் என்ன?  அப்படியென்றால் தினேஷ் தனது மனைவியிடம் தான் சந்திக்க போகும் நபரை சந்திக்கும் இடம், நேரத்தை அறிவித்து விட்டு சென்றிருக்கவேண்டும். அப்படியானால் அது எந்த இடம் என்ன நேரம்? அத அவர் ஏன் போலீசாரிடம் குறிப்பிடவில்லை? கார் பாதை மாறிப்போகிறது, கணவன் ஆபத்தில் இருக்கிறார், அவருக்கு உதவி தேவையென ஆள் அனுப்பியவர், போலீசாரை அணுகாமல் சம்பந்தப்பட்டவரை தனியாக அனுப்பியதன் நோக்கமென்ன? சும்மா நான் பணத்தை மீளப்பெறப்போகிறேன் என்று சொல்லி, அதுவும் பணிப்பாளருக்கும் அறிவித்து விபரம் தெரிவிக்காமல் செல்வது, மனைவி விபரம் அறியாமல் அனுப்பிவிட்டு அவர் போகும் இடத்தை தேடுவது நம்புவதுபோல் தெரியவில்லை. பெறப்போகும் தொகை சாதாரணமானதல்ல தனிய போய் கையில வாங்கிக்கொண்டு வருவதற்க்கு. அதற்கென்று நடைமுறைகள் உண்டு. அதுவும் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்போது, தன்னிச்சையாக செயற்பட முடியாது. அவரது மனைவி ஒன்றும் நாட்டுக்கட்டையோ, வெகுளியோ கிடையாது இதை புரிந்து கொள்ளாமலிருப்பதற்கு. சாரதி இல்லாமல் அவசர காரணமாக மயானத்திலிருந்த ஒருவரை அழைத்து வர அனுப்பப்படிருக்கலாம். அப்பாவி மனிதன் துரோகத்தால் மாண்டிருக்கிறார். பக்கத்திலிருந்து அவர் எதிர்பாரா விதமாக கழுத்தை நெரித்திருக்கிறான். அவர் தன் கைக்கு எட்டிய வரையில் அவனது தலைமயிரை இழுத்திருக்கிறார். தினேஷ் தான் கிறிக்கெற் பிரபலத்தை சந்திக்க இருந்திருந்தால் தனியாக சந்திக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவரை சந்திப்பதற்காக சம்பந்தப்படவருடன் நடத்திய உரையாடலோ, செய்திப்பரிமாற்றமோ அலைபேசியில் கண்டறிந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே இது கொலைகாரர் கூறும் காரணமாக இருக்கலாம். தினேஷின் அலைபேசியில் பல சந்தேகங்களுக்கு விடை உண்டு. தினேஷின் மனைவி தினேஷுக்கு உண்மையில் அழைப்பெடுத்தாரா? எப்போ அழைப்பெடுத்தார்? இருப்பிடத்தை கண்டறிந்த பின்னா, முன்னா? இவர் இப்படி கணவர் வெளியில் போன பின் அழைப்பெடுத்து கண்டறியும் பழக்க முன்பு இருந்ததா? பொலிஸாருக்கு இது தெரியாமலில்லை, ஏதோ தடுக்கிறது. இது பணப்பரிமாற்றம் அல்லது கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட கொலையென  என விசாரணையை திசைதிருப்பவும் இடமுண்டு. இங்கு பணம் பாதாளம் மட்டும் பாய்ந்து கொலைகாரரும், காரணங்களும் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்புமுண்டு.       




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
    • யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில்... பெண் அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂
    • சபாநாயகர் திரு அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில்  அவர் பதவி விலகியுள்ளார்.  அதே போன்று மேலும் பல  சிரேஷ்ட ஜேவிபி    உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் தவறானதாக  இருக்கின்றது.  அமைச்சர் திரு பிமல் ரத்நாயக்க அவர்களின் கல்வி தகைமையாக BSc. Engineering Undergraduate என பாராளமன்றத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.   51 வயதான திரு பிமல் ரத்நாயக்க பல்கலை கழக கல்வியிலிருந்து சித்தி பெறாமல் இடை விலகிய நிலையில் (Dropout) தற்போதும் Undergraduate என மிக மிக தவறாக அடையாளம் செய்து இருக்கின்றார்கள்.  BSc. Engineering Undergraduate என்பது ஒரு கல்வி தகைமையாக இருக்க முடியாது.  அமைச்சர் திரு அனுர கருணாதிலக அவர்களை பல்வேறு ஜேவிபியின் தளங்களில் கலாநிதி அனுர கருணாதிலக என்றும் பேராசிரியர் (Professor) என்றும் வெவ்வேறாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.   ஆனால் திரு அனுர கருணாதிலக கலாநிதி (PhD) பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மிக சாதாரண விரிவுரையாளர் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்.  அமைச்சர் திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்களை ஒரு பொறியிலாளர் என ஜேவிபி அறிமுகப்படுத்துகின்ற போதும் அவர் பொறியியல் கற்கை நெறியை கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை என சொல்லப்படுகின்றது.  அதே போல திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி  அவர்கள் Institution of Engineers, Sri Lanka நிறுவனத்தில் உறுப்பினராக  இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  According to the Engineering Council Act, anyone working as an engineering professional in Sri Lanka, from technicians to chartered engineers, must be registered with the Engineering Council. அமைச்சர் திரு ஹர்ஷண நாணயக்கார அவர்களை  கலாநிதி என சில இடங்களில் அடையாளப் படுத்தியிருந்த நிலையில் அதுவும் தவறான தகவல் என தெரியவந்து இருக்கின்றது.      பிரதி சபாநாயகர் வைத்தியர் திரு ரிஸ்வி சாலிஹ் அவர்களை ஜேவிபி விசேட வைத்திய நிபுணர் (Specialist Doctor)என குறிப்பிடுகின்ற போதும் அவர் மிக சாதாரண வைத்தியர் என அம்பலமாகி இருக்கின்றது.  Rizvie Salih is neither a consultant nor a specialist practitioner officially recognized by the Sri Lanka Medical Council (SLMC). கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளின் கல்வி தகைமைகள் குறித்து மிக விரிவாக பேசிய ஜேவிபி தன் உறுப்பினர்களின் மோசடிகளை மிக அமைதியாக கடந்து போக முடியாது. யாழ்ப்பாணம்.com
    • "சிறீலங்கன் ஆமி நல்லம்" என்று சிங்களவர்கள் சொல்வதுபோல இருக்கிறது  மேற்படி கூற்று,.🤣 ஜிஹாதிக்கள் நல்லவர்கள் என்று சிரிய குர்திஸ் இன மக்களும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பாகப் பெண்களும் சொல்ல வேண்டும். குறிப்பு:  ஒவ்வொருவருடைய உண்மையான நிறங்கள் வெளிச்சத்திற்கு வருவது நன்மையானதே. 😁
    • நடிகர் அல்லு அர்ஜுன் கைது! புஷ்பா 2: தி ரூல் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுன் தற்சமயம், சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 5 அன்று புஷ்பா 2 திரையிடலுக்கு அல்லு அர்ஜுன் வரவிருந்தது குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது முன்னதாகவே தெரிந்திருந்தால் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார். டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் நடிகரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியபோது இந்தச் சம்பவம் நடந்தது. நெரிசலில் சிக்கய 39 வயதான ரேவதி என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார், அதே நேரத்தில் அவரது எட்டு வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பொலிஸார் டிசம்பர் 5 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனர். இதேவ‍ேளை, தனது புஷ்பா 2: தி ரூல் இன் ஹைதராபாத் திரையரங்களின் முதல் காட்சியின் போது ஒரு பெண் இறந்தது தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி, டிசம்பர் 12 அன்று அல்லு அர்ஜுன் தெலுங்கானா மேல் நீதிமன்றத்தை அணுகியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412153
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.