Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

By VISHNU

image

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக 15 ஆம் திகதி வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார்.

வவுனியா கல்மடு பூம்புகாரை சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) 15 ஆம் திகதி வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார். 

இவரது மகன் இராமச்சந்திரன் செந்தூரன் (பிறப்பு: 1991.02.02) என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்கு (தினக்கூலி வேலைக்கு) சென்ற வேளை 2007.05.17 அன்று (கடத்தப்படும் போது வயது 16) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் 

மகனைத்தேடி வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தின் உறுப்பினராக தீவிர பங்களிப்பு வழங்கி வந்த நிலையில் மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். 

இலங்கை அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயார் ஒருவர் நோய் காரணமாக  மகனை காணாமலேயே அவர் நேற்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய மற்றுமொரு தாய் மரணம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, பிழம்பு said:

புத்திர சோகத்துடன் இறந்த அம்மாவுக்கு,  ஆழ்ந்த இரங்கல்கள் தாயே…
எமது அரசியல்வாதிகள் புத்தி கூர்மையுடன் செயல் பட்டு,
இந்த அம்மா போன்ற பலருக்கு நியாயம் பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.
ஆனால் அவர்களுக்கு இவற்றை கவனிக்க மனமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகனைத் தேடி மரணமான அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

1 hour ago, தமிழ் சிறி said:

புத்திர சோகத்துடன் இறந்த அம்மாவுக்கு,  ஆழ்ந்த இரங்கல்கள் தாயே…
எமது அரசியல்வாதிகள் புத்தி கூர்மையுடன் செயல் பட்டு,
இந்த அம்மா போன்ற பலருக்கு நியாயம் பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.
ஆனால் அவர்களுக்கு இவற்றை கவனிக்க மனமில்லை. 

சிறி நடந்து முடிந்த சர்வகட்சி மாநாட்டில் எல்லோரையும் கொன்றுவிட்டீர்கள் என்று ஐயா சம்பந்தன் சொல்லியுள்ளார்.

இதற்கு பின்னால் பல காட்சிகள் நிறைவேற போவதாக சொல்கிறார்கள்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்து அப்படியே முடக்கிவிடப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, ஈழப்பிரியன் said:

மகனைத் தேடி மரணமான அம்மாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

சிறி நடந்து முடிந்த சர்வகட்சி மாநாட்டில் எல்லோரையும் கொன்றுவிட்டீர்கள் என்று ஐயா சம்பந்தன் சொல்லியுள்ளார்.

இதற்கு பின்னால் பல காட்சிகள் நிறைவேற போவதாக சொல்கிறார்கள்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்து அப்படியே முடக்கிவிடப் போகிறார்கள்.

சம்பந்தனுக்கு ஏன்… தேவையில்லாத வேலை.
சிங்களவனுக்கு… கொள்ளிக் கட்டை எடுத்துக் கொடுப்பதே இவர்கள் வேலையாகி போய் விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கல்கள் தாயே......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த இரங்கள்கள் அம்மையே விடைகாணா கேள்வியுடனே கன அம்மைகள் இன்னும் விழுந்து அழுத வண்ணமே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆழ்ந்த இரங்கள்கள் அம்மையே விடைகாணா கேள்வியுடனே கன அம்மைகள் இன்னும் விழுந்து அழுத வண்ணமே

13 வருடங்கள் கொழும்பில் இருந்து கோழியும் புரியாணியும் சாப்பிட்டுவிட்டு....2200நாள் தொடர் போராட்டம் புரியும் உறவுகளின் வலியை உணராமல் ...அரசின் தேவைக்கும்...தனது தனிப்பட்ட வருமானத்திற்குமாக ..கொன்றுவிட்டீர்கள் என்று தெரியும் என்று நாக்கூசாமல் சொல்லும் நயவஞ்சகக் கூட்டத்தினரை இந்த பாவங்கள் சும்மாவிடாது...அம்மா அழ்ழ்ந்த அஞ்சலிகள்

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களை போன்ற பல தாய்மாரின் கண்ணீருக்கு விடை காணாமல் ; உங்கள் வாழ்வுக்கு விடை கொடுத்த இந்த இயற்கை பிரபஞ்சத்தை சபிக்கிறேன். அஞ்சலிகள் அம்மா!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் அம்மா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆழ்ந்த அஞ்சலிகள்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராணுவம் கைது செய்த மகனைத் தேடி போராடிய தாய் உயிரிழப்பு!

1996ஆம் ஆண்டு புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மகனைத்தேடி போராட்டம் செய்த தாயார் ஒருவர் நேற்று முன்தினம் (17) உயிரிழந்துள்ளார்.

புத்தூர் கிழக்கு, ஊரணி பகுதியைச் சேர்ந்த செல்வன் சோதி என்ற தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அன்னார் தனது மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர், தனது மகனை மீண்டும் தன்னிடம் மீட்டுத் தருமாறு கோரி பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

https://athavannews.com/2022/1316050

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.