Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை பணியில் இருந்து நீக்கும் இலங்கை அரசாங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம்  தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார்.

16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

 

16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை பணியில் இருந்து நீக்கும் இலங்கை அரசாங்கம் | Government To Reduce 16 000 Soldiers

அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சரியான அறிவிப்பை வழங்காத வெளிநாட்டில் இருப்பவர்களும் தத்தமது சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தானாக முன்வந்து சேவையை விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் அனுமதித்தமைக்கு இணங்க தற்போது இராணுவப் பேச்சாளர்  உட்பட இதுவரை 16,141 பேர் அதற்காக விண்ணப்பித்துள்ளனர்.  

https://tamilwin.com/article/government-to-reduce-16-000-soldiers-1671360958

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16,141 பேர்…. இரணுவத்திலிருந்து விலக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
15,000 பேரை அரசாங்கம் நீக்கப் போகின்றதாம்.
மொத்தம்… 31,141 பேர் குறையப் போகின்றார்களா?
அப்ப…. நாட்டை, யார் காப்பாற்றுவது. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

16,141 பேர்…. இரணுவத்திலிருந்து விலக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
15,000 பேரை அரசாங்கம் நீக்கப் போகின்றதாம்.
மொத்தம்… 31,141 பேர் குறையப் போகின்றார்களா?
அப்ப…. நாட்டை, யார் காப்பாற்றுவது. 😂

அரசே அனுப்ப முன்னம்,அவர்களே கழன்று கொண்டால், காசு கிடைக்கலாம் எனடெல்லே கதையை கட்டி விட்டார்கள். 😁
 

தல்லாம், தல்லாம்....... முதல்ல, கிளம்புங்கோ... மோடிஜி பதினைந்து இலட்சம் கதை தான்.... 🤗

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ முன்னாள் இராணுவ வீரர்கள் முலம் நாட்டில் ஏற்கனவே உள்ள குற்றச்செயல்கள் அதிகரிக்காவிட்டால் சரி. 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

16,141 பேர்…. இரணுவத்திலிருந்து விலக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
15,000 பேரை அரசாங்கம் நீக்கப் போகின்றதாம்.
மொத்தம்… 31,141 பேர் குறையப் போகின்றார்களா?
அப்ப…. நாட்டை, யார் காப்பாற்றுவது. 😂

கருணாவும் பிள்ளையானும்  பாஸ் . மேலதிகமாக கேபியும் .

50 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

என்னவோ முன்னாள் இராணுவ வீரர்கள் முலம் நாட்டில் ஏற்கனவே உள்ள குற்றச்செயல்கள் அதிகரிக்காவிட்டால் சரி. 

உலக வங்கியின் முக்கிய நிபந்தனையே படை குறைப்பு இவ்வளவு ராணுவமும் தமிழர் பகுதிகளில் இருந்து நல்லது நடந்ததா ?இனி அவர்களின் ஊர்களில் வீரத்தை கண்பிக்கட்டும். 

Edited by பெருமாள்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

கருணாவும் பிள்ளையானும்  பாஸ் . மேலதிகமாக கேபியும் .

கே.பி. இப்ப எங்கே. வருடக் கணக்காக ஒரு செய்தியும் வரவில்லை.
தாய்லாந்து பெண்ணை திருமணம் செய்திருந்ததாக முன்பு செய்தி வந்திருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கே.பி. இப்ப எங்கே. வருடக் கணக்காக ஒரு செய்தியும் வரவில்லை.
தாய்லாந்து பெண்ணை திருமணம் செய்திருந்ததாக முன்பு செய்தி வந்திருந்தது.

கிளிநொச்சியில் ஓர் அனாதை இல்லம் நடாத்துவதாக கேள்வி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேற்தான் இராணுவத்தினரின் வீர தீர செயல்களை தெற்கு கண்டுணரும். அரசாங்கத்திற்கு பெரிய தலையிடி அது. இனி அரசாங்க காணிகள், விவசாயம் என்று சொல்லி வடக்கில் கட்டி வைத்திருக்கவே விரும்பும். இதுகளுக்கு கற்றுக்கொடுத்ததே அரசாங்கத்தான், கட்டுப்படுத்துவது இனி கஷ்ரந்தான்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.