Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகில் முதன்முறையாக குழந்தையின் இதய செயலிழப்புக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் முதன்முறையாக குழந்தையின் இதய செயலிழப்புக்கு ஸ்டெம் செல் மூலம் சிகிச்சை

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,மேத்யூ ஹில்
  • பதவி,சுகாதார செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் பேராசிரியர் மாசிமோ கபுடோ
 
படக்குறிப்பு,

பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் பேராசிரியர் மாசிமோ கபுடோ ஸ்டெம் செல் சிகிச்சை தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளார்

குழந்தை பிறக்கும்போது இருக்கும் தொப்புள் கொடியிலுள்ள ஸ்டெம் செல்களை பயன்படுத்தி “உலகிலேயே முதன்முறையாக” செய்துள்ள அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையின் “உயிரைக் காப்பாற்றியிருக்கும் வாய்ப்பு உள்ளதாக” இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

பிரிட்டனிலுள்ள பிரிஸ்டல் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த பேராசிரியர் மாசிமோ கபுடோ, குழந்தை ஃபின்லியின் இதயக் குறைபாட்டை சரிசெய்வதற்காக ஸ்டெம் செல் சிகிச்சையைப் பயன்படுத்தினார்.

பிறவி இதய நோயுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்புகிறார்.

இப்போது இரண்டு வயதாகும் ஃபின்லே, “இப்போது மகிழ்ச்சியோடு வளரும் ஒரு சிறுவனாக உள்ளார்.”

 

ஆனால், ஃபின்லி பிறந்தபோது இதயத்திலுள்ள தமனிகள் தவறான வகையில் அமைந்திருந்தன. இதனால் குழந்தை பிறந்த நான்கு நாட்களிலேயே குழந்தைகளுக்கான பிரிஸ்டல் ராயல் மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக அறுவை சிகிச்சை அந்தப் பிரச்னையைத் தீர்க்கவில்லை. குழந்தை ஃபின்லியின் இதய செயல்பாடு கணிசமாக மோசமும் அடைந்தது. ரத்தம் ஓட்டம் இல்லாமல் போனதால் இதயத்தின் இடது பக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வில்ட்ஷயரில் உள்ள கோர்ஷாமை சேர்ந்த அவரது தாயார் மெலிசா, “அவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே எங்களை திடப்படுத்திக் கொண்டோம்.

12 மணி நேரத்திற்குப் பிறகு, ஃபின்லி இறுதியாக அறுவை சிகிச்சை முடிந்து வெளியே கொண்டுவரப்பட்டான். ஆனால், அவனை உயிருடன் வைத்திருப்பதற்காக, இதயத்திற்கும் நுரையீரலுக்கும் பைபாஸ் இயந்திரம் தேவைப்பட்டது. மேலும், அவனுடைய இதயத்தின் செயல்பாடு மோசமடைந்தது,” என்கிறார்.

பல வாரங்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, ஃபின்லியின் இந்த நிலைமைக்கு சிகிச்சையளிப்பதற்கு வழக்கமான வழி எதுவுமில்லை எனத் தோன்றியது. அவர் தனது இதயம் செயல்படுவதற்கு மருந்துகளைச் சாந்திருந்தார்.

ஆனால், தொப்புள்கொடி வங்கியிலிருந்து ஸ்டெம் செல்களை உள்ளடக்கிய ஒரு புதிய செயல்முறை முயற்சி செய்யப்பட்டது.

பேராசிரியர் கபுடோ, சேதமடைந்த ரத்த நாளங்கள் வளர உதவும் என்ற நம்பிக்கையில் செல்களை நேரடியாக ஃபின்லியின் இதயத்தில் செலுத்தினார்.

“அலோஜெனிக்” செல்கள் என்று அழைக்கப்படுபவை லண்டனில் உள்ள ராயல் ஃப்ரீ மருத்துவமனையின் விஞ்ஞானிகளால் வளர்க்கப்பட்டன. அவற்றில் லட்சக்கணக்கானவை ஃபின்லியின் இதய தசையில் செலுத்தப்பட்டன.

அலோஜெனி செல்கள் நிராகரிக்கப்படாத திசுக்களாக வளரும் திறனைக் கொண்டுள்ளன. அதோடு, ஃபின்லியின் விஷயத்தில், சேதமடைந்த இதய தசைகளை மீண்டும் உருவாக்குகின்றன.

“அவர் உட்கொண்ட அனைத்து மருந்துகளையும் படிப்படியாக நிறுத்தினோம், செயற்கை சுவாசக் கருவி பொருத்துவதைப் படிப்படியாக குறைத்தோம்,” என்கிறார் பேராசிரியர் கபுடோ.

குழந்தை ஃபின்லி
 
படக்குறிப்பு,

மெலிசா தனது இரண்டு வயது குழந்தை ஃபின்லியுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுகிறார்

பயோ-பிரின்டரை பயன்படுத்தி, ரத்த நாளங்களில் உள்ள வால்வுகளில் ஏற்படும் அசாதாரணங்களைச் சரி செய்வதற்கும் இதயத்தின் இரண்டு முக்கிய காற்றை பம்ப் செய்யும் அறைகளுக்கு இடையேயுள்ள துளைகளைச் சரி செய்யவும் இந்த ஸ்டெம் செல் சிகிச்சை செய்யப்படுகிறது.

செயற்கை திசு பொதுவாக குழந்தைகளுக்கு இதயக் குறைபாடுகளைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அது தோல்வியடையும் என்பதோடு இதயத்தோடு சேர்ந்து வளராது. எனவே குழந்தைகள் வளரும்போது அவர்களுக்கு அதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படும்.

வெற்றிகரமான ஆய்வகப் பணிகளுக்குப் பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதுகுறித்த மருத்துவ பரிசோதனை நடக்குமென்று பேராசிரியர் கபுடோ நம்புகிறார்.

ஸ்டெம் செல் பிளாஸ்டர்களின் சோதனை, வேல்ஸை சேர்ந்த லூயி போன்ற பிறவி இதயக் குறைபாடுகளைக் கொண்ட பல நோயாளிகளுக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.

கார்டிஃப் நகரைச் சேர்ந்த இந்த 13 வயது சிறுவன் தனது முதல் இதய அறுவை சிகிச்சையை பேராசிரியர் கபுடோவிடம் இரண்டு வயதில் செய்துகொண்டார். அதற்குப் பிறகு மீண்டும் நான்கு வயதில் அவரது இதயத்தைச் சரி செய்யக்கூடிய பொருளை இதயத்திலிருந்து மாற்றினார்கள்.

ஸ்டெம் செல் தொகுப்பு எந்த வடிவத்திலும் பயோ-பிரின்ட் செய்யப்படலாம்
 
படக்குறிப்பு,

ஸ்டெம் செல் தொகுப்பு எந்த வடிவத்திலும் பயோ-பிரின்ட் செய்யப்படலாம்

ஆனால், அந்தப் பொருட்கள் முற்றிலும் உயிரியல் ரீதியாக இல்லாத காரணத்தால், அவற்றால் அவரோடு சேர்ந்து வளர்ச்சியடைய முடியாது. ஆகவே, அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.

லூயியை போலவே, பிரிட்டனில் ஒவ்வொரு நாளும், சுமார் 13 குழந்தைகளுக்குப் பிறவி இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்படுகிறது. இது குழந்தை பிறப்பதற்கு முன்பே உருவாகும் இதய பாதிப்பு என்று பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

இதயத்தைச் சரிசெய்யப் பயன்படுத்தப்படும் பொருட்கள் நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படலாம் என்பதால், அவை இதயத்தில் வடுவை ஏற்படுத்தி, மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். மேலும், அவை படிப்படியாக உடைந்து சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் தோல்வியடையும்.

எனவே, ஒரு குழந்தை தனது குழந்தைப் பருவம் முழுவதும் ஒரே இதய அறுவை சிகிச்சையைப் பல முறை செய்ய வேண்டியிருக்கும். பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் பிறவி இதயக் குறைபாடுகளுக்கான அறுவை சிகிச்சைகள் சுமார் 200 முறை மீண்டும் செய்யப்படுகின்றன.

ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மற்றும் அவருடைய உடலுடன் வளரக்கூடிய திசுக்கள் மூலம் அவர் எதிர்கொள்ளும் அறுவை சிகிச்சைகளின் அளவு கணிசமாகக் குறைக்கப்படும் என்று லூயி நம்புகிறார்.

கார்டிஃப் நகரைச் சேர்ந்த லூயிக்கு பல பிறவி இதயக் குறைபாடுகள் உள்ளன
 
படக்குறிப்பு,

கார்டிஃப் நகரைச் சேர்ந்த லூயிக்கு பல பிறவி இதயக் குறைபாடுகள் உள்ளன

“எனக்கு அடிக்கடி சிகிச்சைகளை எடுத்துக்கொள்வது பிடிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

“இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓர் அறுவை சிகிச்சை தேவை என்பது நீண்ட காலத்திற்கு நல்லதல்ல. ஆகவே இது எனக்கு நிம்மதியைக் கொடுக்கிறது,” என்கிறார் லூயி.

பேராசிரியர் கபுடோவும் அவரது குழுவினரும், ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலமாக, இனி தேவைப்படாத ஒவ்வோர் அறுவை சிகிச்சைக்குமான 30,000 யூரோ செலவை தேசிய சுகாதார சேவையால் சேமிக்க முடியும். ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பவுண்டுகள் சேமிக்கப்படும் என்கின்றனர்.

ஸ்டெம் செல் உயிரியலில் நிபுணரும் எஸ்.எல்.எம் ப்ளூ ஸ்கைஸ் இன்னோவேஷன்ஸ் லிமிடடின் இயக்குநருமான டாக்டர் மிங்கர், இந்த ஆராய்ச்சியைப் பாராட்டினார்.

அவர், “இதய செயலிழப்பு அல்லது சரியாகச் செயல்படாமை பாதிப்பு உள்ள பெரியவர்களில் நான் அறிந்த பெரும்பாலான ஆய்வுகள் ஸ்டெம் செல் உட்செலுத்துதல் மூலம் குறைந்தபட்ச சிகிச்சைப் பலன்களை மட்டுமே காட்டுகின்றன.

மருத்துவக் குழு ஒரு நிலையான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது நமக்கு வெற்றியையும் இந்தச் செயல்முறையின் பின்னணி குறித்த புரிதலையும் ஏற்படுத்தும்,” என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cjjqjvd65j5o

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IND Vs AUS: சென்னை ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றியைப் பறித்த 'அந்த ஒரு ஓவர்' பட மூலாதாரம்,TWITTER/ICC 22 மார்ச் 2023 சூர்யகுமாரின் டக் அவுட், விராட் கோலி செய்த ஒரு தவறு, அக்சர் படேலின் ரன் அவுட் இவை அனைத்தையும் தாண்டி ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு ஓவர் இந்திய அணியின் வெற்றியை முற்றிலுமாக பறித்திருக்கிறது. முக்கியமான தருணங்களில் இந்தியா செய்த சில தவறுகளால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு கை நழுவிப் போயிருக்கிறது. சென்னை மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றுள்ளது. தொடர்ந்து 4 முறை சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வந்த இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது ஆஸ்திரேலியா.   டெஸ்ட் போட்டிகளைப் போல மாறுமா ஒருநாள் ஆட்டம்? சுவாரஸ்யம் கூட்ட சச்சின் புதுமையான யோசனை18 மார்ச் 2023 கோலி, ரோகித்தை விட அதிக ரன் சராசரி: அக்ஷர் படேல் அடுத்த கபில் தேவ் ஆவாரா?14 மார்ச் 2023 இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது பிரச்னையா? - இந்திய அணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்12 ஜனவரி 2023 ஆஸ்திரேலியாவை அச்சுறுத்திய ஹர்திக் பாண்டியா 2019-க்குப் பிறகு முதல்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதுவும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கு முக்கியமான ஆட்டம். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்டீவ் ஸ்மித்தை தவிர்த்து, ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவருமே இரட்டை இலக்க ரன்களை சேர்த்தனார். டாப் 7 வீரர்கள் அனைவருமே 23 முதல் 47 ரன்கள் வரை விளாசி விடைபெற்றனர். ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை தடுத்து நிறுத்தியதில் ஹர்திக்கின் பந்துவீச்சுக்கு பெரும்பங்கு உண்டு. ஹர்திக் வீசிய அவரது முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், அடுத்த ஓவரில், ஸ்டீவ் ஸ்மித், 3வது ஓவரில் மிட்செல் மார்ஷ் என அச்சுறுத்த காத்திருந்த அனைத்து பேட்டர்களையும் வழியனுப்பி வைத்தார் ஹர்திக் பாண்டியா. 2017க்குப் பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டியில் டக் அவுட்டாவது இதுவே முதல்முறை. 49 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 269 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக், குல்தீப் இருவரும் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறிய அந்த ஒரு ஓவர் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, வெறும் 248 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ரோஹித் 30, கில் 37, ராகுல் 32 ரன்கள் எடுத்து விடைபெற்றார். களத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை நடந்தது. ஆஷ்டன் அகர் தனது கடைசி ஓவரை வீச வந்தார். அது ஆட்டத்தின் 36வது ஓவர். முதல் பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். அந்த ஷாட் அவ்வளவு நேர்த்தியாக அமையவில்லை. அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி, வார்னரிடம் அகப்பட்டார். 72 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து விடைபெற்றார். விராட் கோலிக்கும் சென்னைக்கும் ஒரு சுவாரஸ்யமான தொடர்பு உண்டு. சென்னை மண்ணில், விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் ஒன்று சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றுவார். இல்லை எனில், அரைசதத்தையும் கடந்து எதிரணியை திணறடிப்பார். இன்று நடந்தது 2வது பாணி. ஆனாலும் கோலியின் ஆட்டம் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு சூர்யகுமார் முதல் பந்திலேயே க்ளீன் போல்ட் முக்கியமான தருணத்தில் இறங்குவதற்காக 5வது இடத்தில் களமிறங்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ், கோலியின் விக்கெட்டை தொடர்ந்து களமிறங்கினார். முதல் பந்திலேயே சூர்யகுமார் க்ளீன் போல்ட். அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்கள் சரிந்தது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை அளித்தது. தொடர்ந்து 3வது முறையாக சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டப்லியூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்த சூர்யா, இந்த முறை அகரிடம் க்ளீன் போல்டானார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸி. வெற்றி - ஐசிசி தர வரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம் 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் - ஜடேஜா ஜோடி, வெற்றிக்கான கடைசி நம்பிக்கையாக திகழ்ந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு அவ்வளவு சுலபமாக அவர்கள் இருவரையும் களத்தில் இருக்கச் செய்யவில்லை. ஹர்திக் 40, ஜடேஜா 18 ரன்களில் விடைபெற்றார். கடைசி வரை போராடிய டெயில் எண்டர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாமல் போனது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது ஆஸ்திரேலியா. https://www.bbc.com/tamil/articles/cpvq1yl5e0vo
    • 20டாலர் கட்டி அதே உங்கள் கேள்வி விடையை கூகிள் மொழி பெயர்ப்பு உதவியுடன் . ஹாய் செல்லம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றிச் சொல்ல முடியுமா? நீங்கள் அதை இரண்டு பத்திகளில் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக ஆண்டு மற்றும் இரண்டாவது விவரங்கள் கொடுக்க.     நிச்சயமாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கோரியபடி இரண்டு நெடுவரிசைகளில் உள்ள தகவல் இங்கே: ஆண்டு விவரங்கள் 1983 இலங்கை இராணுவத்தின் மீது தமிழ் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான இனப் பதற்றம் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்வு பரவலான தமிழர் விரோதக் கலவரங்களுக்கு வழிவகுத்தது, இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1987-1989 இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் மோதலுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தமிழ் போராளி குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், IPKF சில தமிழ் குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது, IPKF மற்றும் போராளிகளுக்கு இடையே கடுமையான சண்டைக்கு வழிவகுத்தது. 1990 விடுதலைப் புலிகள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1991-1995 இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தது, இரு தரப்பினரும் கொடூரமான தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளனர். 2002 இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஓரளவு அமைதியான காலகட்டத்திற்கு வழிவகுத்தது. 2006 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு பெரும் தாக்குதலை நடத்தியதால் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் சண்டை தொடங்கியது. 2009 இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த மோதலில் 70,000 முதல் 80,000 பேர் வரை உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328345
    • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.