Jump to content

எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகள் நடாத்தப்படாது என தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைப்பு

எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகள் நடாத்தப்படாது என தகவல்!

ஆரம்ப பிரிவு வகுப்புக்களுக்கு, எதிர்வரும் ஆண்டு முதல் தவணை பரீட்சைகளை நடத்தாது, பாடத்திற்கு பாடம் புள்ளிகளை வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இடம்பெற்ற நத்தார் தின நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வியடத்தினைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வழங்கப்படுகின்ற புள்ளிகளை, வருட இறுதியில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெற்றுக்கொள்ளும் புள்ளிகளுடன் இணைத்து, அதனை இரண்டாக பிரித்து, மாணவர்களுக்கு இறுதி மதிப்பீட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு பாடசாலையினை மிகவும் விருப்பமான இடமாக மாற்றும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும், சகல பாடத்திட்டங்களையும் முழுமைப்படுத்தி, கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

https://athavannews.com/2022/1316663

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை என்ற மன அழுத்தச் செயற்பாட்டைக் குறைத்து திறனாய்வை வளர்த்துக் கொள்வதும் பெறப்படும் கல்வியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் கல்விச் செயற்பாடுகளை சமூகச் செயற்பாடுகளை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதும் காட்டிக்கொடுப்பதும் எதிர்கால சமூகத்திற்கு ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்க வழிவகுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தில் மூன்று தவணை பரீட்சைகள் வைக்காமல் இரண்டு வைத்தால் நல்லதுதான். பிள்ளைகள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடவும் வாய்ப்பு கிடைக்கும். மனித வலு, வளங்களும் விரயமாவது தவிர்க்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

காட்டிக்கொடுப்பதும் எதிர்கால சமூகத்திற்கு ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்க வழிவகுக்கும்.

அவசரமாக வாசித்து ஒரு வினாடி பயத்தில உறைஞ்சு போனேன், ஒருவாறு தேற்றிக்கொண்டு ஆறுதலாக வாசித்ததில் கருத்து புரிஞ்சுது.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.