Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்துக்கொள்ள தென் கொரிய இடர் உதவிகள் நிதியத்தின் தலைவர் நேற்று சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு சென்றுள்ளார்.

ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் 30 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பமாகியுள்ளது. இதன் காரணமாக தென் கொரிய இடர் உதவி நிதியத்தின் தலைவர் சூ சோ லீ, ராஜாங்க அமைச்சர் உட்பட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

தாமதம் என்பது வெட்பட வேண்டிய விடயம்

இலங்கையில் பொய் கூறுவது சாதாரண விடயமாகி விட்டது-கடுப்பான தென் கொரிய அதிகாரி | Lying Has Become Normal In Sri Lanka

இந்த கூட்டம் 30 நிமிடங்கள் தாமதமானமை குறித்து வெட்கப்பட வேண்டும் எனவும் அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் இதனை விட மிக பொறுப்புடன் வேலை செய்ய வேண்டும் எனவும் சூ சோ லீ தெரிவித்துள்ளார். சூ சோ லீ கொரிய மொழியில் உரையாற்றியதுடன் அது சிங்களத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில், தென் கொரியாவில் இப்படியான தாமதம் நடந்திருக்குமாயின், அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.

எமது நாட்டில் கூட்டம் ஒன்று நிமிடம் தாமதமானால் பிரச்சினையாகி விடுமம். அது வெட்கப்பட வேண்டிய விடயம். இலங்கையில் இது சர்வ சாதாரணமாக மாறியுள்ளது.பொய் சொல்வது பொய், வாக்குறுதிகளை வழங்குவது சாதாரண விடயமாக மாறியுள்ளது.

வெளிநாட்டவர் ஒருவர் வந்து இலங்கை பற்றி கூறுவதையிட்டு நீங்கள் வெட்கப்பட வேண்டும். இந்த நிலைமை உங்களது கலாசாரமாக மாறியுள்ளது.இதனை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், வர்த்தகம் முடிவுக்கு வந்து விடும். வெளிநாட்டு தொடர்புகள் முடிவுக்கு வந்து விடும்.

இந்த நிலைமை மாற வேண்டும். நாம் மிகவும் நேர்மையாகவும் நியாயமாக வேலை செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது.நாம் உண்மையாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டால், அதனை நூற்றுக்கு நூறு வீதம் நேர்மையாகவும் சரியாகவும் செய்ய வேண்டும்.

எம்மிடம் ஒரு வேலையை ஒப்படைத்தால், அதற்கு நாம் பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்புகளை நாம் ஏற்பதில்லை. பொறுப்புக்கூற நேரும் போது காரணங்களை கூறி நியாயப்படுத்துவது சாதாரணமாக மாறியுள்ளது.

கொரியாவில் வேலை செய்யும் இலங்கை இளைஞர்களும் இப்படியே செய்கின்றனர்

இலங்கையில் பொய் கூறுவது சாதாரண விடயமாகி விட்டது-கடுப்பான தென் கொரிய அதிகாரி | Lying Has Become Normal In Sri Lanka

 

எமக்கு ஒரு பொறுப்பை வழங்கினால், அர்ப்பணிப்புடன் அதனை செய்ய வேண்டும். இலங்கையில் இருந்து கொரியாவுக்கு சென்றுள்ள இளைஞர்கள் இப்படிதான் வேலை செய்கின்றனர்.

அவர்கள் வேலை செய்யும் இடத்தில் பிரதானி இருக்கும் மேலும் கீழுமாக வேலை செய்வார்கள். பிரதானி அங்கிருந்து சென்றதும் சும்மா இருப்பார்கள். அப்படியானவர்களை நாங்கள் வேலையில் இருந்து நிறுத்தி விடுவோம்.

இலங்கை அரச அதிகாரிகள் மன்னர்களை போல் இருக்கின்றனர். இந்த நாட்டின் மனோபாவம் மாற வேண்டும்.இதற்காக நாட்டில் கல்வி முறை முற்றாக மாற்றப்பட வேண்டும். இலங்கையின் கல்வி முறை மற்றும் மக்களின் எண்ணங்கள் மாற்றமடைய வேண்டும் எனவும் சூ சோ லீ மேலும் தெரிவித்துள்ளார்.  

https://tamilwin.com/article/lying-has-become-normal-in-sri-lanka-1671708491?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் தேசிய அரசியலில் கொள்கை!ஒரு பகிரங்க சவால்

வடகிழக்கு பக்கம் வந்து பாருங்கள் கடந்த 12 வருடமாக தன்கடை வெடிபொய்க்களால் ஒரு இனத்தையே அடிமைப்படுத்தி  ஆண்டுகொண்டு இருக்கிற கூட்டம் இன்னும் எந்த குற்ற உணர்வும் இன்றி வேட்டி  சட்டையுடன் திரிகினம் .

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப வரப்போகுது நியூஸ்...புலம் பெயர் தமிழ்ஸ்தான் இந்த அதிகாரியை அனுப்பினதென்று..🙃

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, alvayan said:

இப்ப வரப்போகுது நியூஸ்...புலம் பெயர் தமிழ்ஸ்தான் இந்த அதிகாரியை அனுப்பினதென்று..🙃

முதலில் என்ன சொன்னாலும் அவர்களின் முக்கிய கம்பெனி  சாம்சுங்  அந்த நிறுவனத்துக்கு என்றே தனி ராணுவ படை உண்டு ஆப்பிள் போன் கூட சாம்சுங்  உதிரி  பொருள்களில் முக்கியமாய் சிப் களில்  தங்கியுள்ளார்கள்  இனி வரும் உலகம் சிப் தயாரிப்பவர்களின் கால்களில் என்று உணர்ந்து கொண்டு அதற்கான நடவடிக்கை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்கொரிய அதிகாரி இலங்கையில் அரசியல், அரசியல்வாதிகளின் மனோபாவம் பற்றி கூறியது முற்றிலும் உண்மை, அதைஅவர்கள் ஏற்று  விளங்கிக்கொள்ளும் மனநிலையைவிட சொன்னவரில் குறை காண்பதிலும், கடன் பெறுவதிலுமே குறியாய் இருப்பார்கள், அது நிற்க; முன்னாள் ஐ. நாடுகள் சபை தலைவர் என்கிற பெரும் பதவியில் இருந்தவர், அவருக்கு பெரும் மனிதாபிமான பெரும் பொறுப்பு இருந்ததே,  அவரும் உங்கள் நாட்டைச் சேர்ந்தவர், அதை அவர் நீதியாகவும் நேர்மையாகவும் செய்தாரா? அவர் அதை செய்திருந்தால் இன்று நீங்கள் உபதேசிக்க நேர்ந்திராது இந்த மரமண்டைகளுக்கு. போதனையை விட சாதனையே சிறந்தது!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.