Jump to content

1951 - கொழும்பில் நடந்த கொலை - பொன்னம்பலம் குலேந்திரன்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

முற்குறிப்பு

இது ஒரு கதை அல்ல. வரலாற்று சம்பவத்தின் மீட்டல். 

எழுதியவர் பொன் குலேந்திரன் (கனடா)

https://eluthu.com/kavithai/352788.html

1951 இல்  கொழும்பில் நடந்த கொலை

உயர் மட்டத்தில் ஒரு கொலை நடந்தால் அது மக்களினதும் ஊடகங்களினதும் கவனத்தை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை 1951 ஆம் ஆண்டு கொழும்பு 3, பம்பலபிட்டியாவில் நடந்த கொலை பிரபல கிரிகெட் விளையாட்டு வீரரின் மனைவியின் கொலை. இலங்கையிலும் பல கொமன்வேல்த் நாடுகளிலும் பெரியளவில் இந்த கொலை பேசப்பட்டதுக்கு முக்கிய கரணம், கொலை செய்த முதல் குற்றவாளி மாகாதேவன் சதாசிவம் என்ற பிரபல கிரிக்கெட் வீரர். கொமன்வேல்த் நாடுகளுக்கு கிரிக்கெட் விளயாட்டை அறிமுகப் படுத்தியவர்கள் பிரிட்டிஷ்காரர் ஒரு காலத்தில் இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் ஆகிய மூன்று தேசங்களின் கூட்டுlக் கிரிக்கெட் டீமுக்கு கேப்டனாக இருந்தவர் மகாதேவன் சதாசிவம் . டானல்ட் பிரட்மன் (Donald Bradman). சோபர்ஸ் (Sobers) பிரான்க் வோரெல் (Frank Worell) போன்ற அக்காலத்து பல பிரபல கிரிக்கெட் வீர்களின் பாராட்டைப் பெற்றவர். 
**** 
1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி செவ்வாய் கிழமை. இலங்கையின் தலைநகரமான கொழும்பு மாநகரசபை வட்டரம் 3 என்று அழைக்கப்படும் பம்பலப்பிட்டியாவில் உள்ள பிரதான காலி பெரும் பாதையில் இருந்து கடற்கரையை நோக்கிச் செல்லும் செயின்ட் அல்பன்ஸ் பிலேஸ் என்ற கிரவல் பாதையில் , 7 ஆம் இலக்கதில் (No 7 St Albans Place) ஜெயமங்களம் என்று வாசலில் பெயர் பதித்த வீட்டின் முன்னே, பகல் 3.15 மணியளவில் இரு சிறுமிகள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த காலத்தில் எல்லா வீடுகளிலும் டெலிபோன் வசதி இருந்ததில்லை. அதனால் வசதி உள்ள 7 ஆம் இலக்க வீட்டுக்கு டெலிபோன் கோல் எடுக்க. அந்த வீதியில் உள்ள 2 ஆம் இலக்க வீட்டில் வசிக்கும் வீட்டுக்காரி யோன் பொன்டர் (Yone Fonder) என்பவள் ஜெயமங்களதுக்கு வந்தாள். அங்கு முன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுமிகளில் ஒருத்தியிடம் 
” எங்கே உன் அம்மா மஞ்சுளா”? என்று கேட்டாள் யோன். 
அதற்கு அந்தச் சிறுமி : “அம்மாவுக்கு காய்ச்சல். கார் கராஜூக்குள் படுத்திருக்கிறா” என்றாள் மஞ்சுளா. 
அந்த சிறுமியின் பதில் யோனை சந்தேகிக்க வைத்தது உடனே கார் கராஜ் கதவைத் திறந்து உள்ளே போய் பார்த்தபோது அங்கு கண்ட காட்சி யோனை திகைக்க வைத்தது. கராஜ்ஜின் நிலத்தில் வீட்டுச் சொந்தக்காரி திருமதி ஆனந்தா சதாசிவத்தின் உடல் முச்சுப் பேச்சு இல்லாமல், கழுத்தில் ஒரு அம்மிக் குழவியோடு நிலத்தில் நீட்டி நிமிர்ந்து பிரேதமாக கிடந்தது . அருகில் யோன் போய் பார்த்தபோது திருமதி ஆனந்தா சதாசிவத்தின் கழுத்தில் காயமும், கசிந்த ரத்தமும் இருந்தது. மூச்சு இல்லாமல் பிரேதமாக திருமதி ஆனந்தா சதாசிவம் கிடந்தாள். சதாசிவத்தின் மற்ற இரு பிள்ளைகளையும் அந்த நேரம் வேலைக்காரி போடிகாமி ஸ்கூலால் கூட்டி வரவில்லை . பதட்டப் பட்டு, யோன் வீட்டு ஹாலுக்குள் இருந்த போனில் பொலீசுக்கு போன் செய்ய முயற்சித்த போது அந்தபோனில் பேச முடியாமல் சாவி போட்டிருந்தது. உடனே மேல் தட்டில் உள்ள படுக்கை அறைக்குள் சென்று அங்கிருந்த போனில் பம்பலபிட்டிய பொலீசுக்கு போன் செய்து முழு விபரமும் யோன் சொன்னாள். பொலீஸ் ஸ்டேஷன் அந்த வீட்டுக்கு அண்மையில் இருந்தபடியால் பத்து நிமிடங்களில் இன்ஸ்பெக்டர் தியடோமன் பொலீஸ்காரர்களோடு அந்த வீட்டுக்கு வந்தார். 
**** 
ஜெயமங்களத்தில் கிரிகெட் வீரர் மாஹதேவன் சதாசிவம். அவர மனைவி பரிபூரணம் ஆனந்தா, அவர்களின் நான்கு பெண் பிள்ளைகள், வீட்டு சமையல் வேலை செய்யும் மாத்தறையைச் சேர்ந்த 18 வயது வில்லியம என்ற வேலைக்காரனும் வசித்து வந்தனர். வில்லியம சதாசிவம் வீட்டில் வேலைக்குச் சேர்ந்து 11 நாட்களே ஆயிற்று அவனை அறிமுகப் படுத்தியவர் பத்மநாதன் என்ற ஆனந்தாவின் மைத்துனர் . உதவிக்கு பிள்ளகளை ஸ்கூலுக்கு கூட்டி சென்று வரவும் கடைகளுக்குப் போய் பொருட்கள் வாங்கி வரவும் வயது வந்த போடிகாமி என்ற சிங்களப் பெண் ஒருத்தியும் அந்த வீட்டுக்கு வந்து போவாள். 

1915 இல் பிறந்த மகாதேவன் சதாசிவம், கொழும்பு 7 யில் உள்ள ஹோர்டன் பிளாசில் வசிக்கும் ராஜேந்திரா தம்பதிகளின் கடைசி மகள் ஆனந்தாவை 1941 இல் 26 வயதில் திருமணம் செய்தார் . அப்போது சதாசிவத்துக்கு நிரந்தர உத்தியோகம் எதுவும் இல்லை. இராணுவத்தில் தற்காலிக வேலையில் இருந்தார். அவர ஒரு பிரபல கிரிகெட் வீரர் என்ற படியால் அவருக்கு உயர் வட்டத்தில் பல நண்பரகள் இருந்தனர். ஆனால் கிரிகெட்டால் அவருக்கு வருமானம் இல்லை .அவரின் மாமனார் ராஜேந்திரா ஒரு வசதி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் . கொழும்பில் இருந்து புத்தளத்துக்கு போகும் பாதையில் உள்ள லுனுவிலவில் தென்னம் தோட்டமும் கொழும்பில் சில வீடுகளும் உண்டு. அவர் காலம் சென்ற சேர் பொன்னம்பலம் இராமநாதனின் மகன் . 

சதாசிவத்துக்கு 1942 யில் மகள் பிறந்தாள். அதன பின் மூன்று பெண் பிள்ளைகள் பிறந்தார்கள். கொழும்பு 3 யில் உள்ள ஜெயமங்களம் வீட்டை தன் கடைசி மகள் அனந்தாவுக்கு சீதனமாக ராஜேந்திரா கொடுத்தார் . அவருக்கு கடைசி மகள் மீது தனிப் பாசம் . 

சதாசிவம் குடும்பப் பொறுப்பு இல்லாதவராய் .பண வசதி உள்ள மனைவியின் ஆதரவிலும் தாயின் அன்பிலும் வாழ்ந்தார் . குடியும். கிளப்பும் என்று, பணக்கார நண்பர்களோடும. கிரிக்கெட் விளையாடுவதிலும் நேரத்தை கழித்தார் . அவரின் பிரபலத்தை அறிந்த பல பெண்கள் சதாசிவத்தின் நட்பை நாடிப் போனார்கள். அவர்களில் சதாசிவத்தோடு அவருடன் நெருக்கமாக பழகியவள் இவோன் ஸ்டீபன்சன் ( Yvone Stephenson)என்ற கொழும்பில் வாழ்ந்த அழகிய ஆங்கில டச்சு இனப் பெண். அவளும் ஒரு கிரிக்கெட் ரசிகை . சதாசிவம் விளையாடும் எல்லா மட்சுகளையும் அவள் தவற விடமாட்டாள். அடிக்கடி சதாசிவமும் இவோனும் ஹோட்டல்களில் குடித்து ஒன்றாக ஆடி மகிழ்ந்தனர். 

.**** 
1951ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ந் திகதியன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் மகாதேவா சதாசிவம் தமது மனைவியை பம்பலப்பிட்டி சென். அல்பன்ஸ் வீதியின் 7ம் இலக்க இல்லத்தில் வைத்து கொலை செய்தார் என்ற தகவல் பத்திரிகையின் மூலம் வெளிவந்தது. தமது மனைவி ஆனந்தா சதாசிவத்தை இவர் கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. 
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்தவர் சதாசிவம். இரண்டாவது குற்றவாளி வீட்டில் வேலைக்காரனாக இருந்த மாத்தறைப் பகுதில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஏவா மாரம்பகே வில்லியம் என்ற 18 வயது சிங்கள இளைஞன். இந்த இளைஞனின் சாட்சியத்தை நாட்டிலுள்ள தலைசிறந்த சட்டமேதைகளும், வைத்திய நிபுணர்களும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள். இந்த வழக்கு விசாரணை 57 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் தமது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து மகாதேவா சதாசிவம் நிரபராதி என்று கருதப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சதாசிவம் குடும்பத்துக்கு பணிபுரிந்த மாத்தறையை பிறப்பிடமாக கொண்ட ஏவா மாரம்பகே வில்லியத்தின் சாட்சியம் முக்கியத்துவம் பெற்றது. சதாசிவம் இல்லத்தில் அன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உண்மையான சாட்சியத்தை அளித்தமைக்காக நீதிமன்றம் இந்த இளைஞனுக்கு மன்னிப்பு அளிக்க இருந்தது. 
சதாசிவம், கொலைக் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த காரணத்தினால் இந்த இளைஞன் திருமதி சதாசிவத்தை கொலை செய்திருக்கலாம் என்ற ஊகம் வலுப்பெற்றது. அரச தரப்பில் சாட்சியம் அளித்த இந்த வேலைக்காரன் இளைஞனின் சாட்சியம் இந்த வழக்கு விசாரணையின் போது பொய்யான சாட்சியம் என்று நிரூபிக்கப்பட்டது. 
இந்த இளைஞனின் சாட்சியத்தை உண்மையான சாட்சியமா அல்லது கற்பனையில் உருவான சாட்சியமா என்று ஆராய்ந்த பல புத்திஜீவிகள் அவரது சாட்சியம் உண்மையாக இருந்திருக்கலாம் என்று தனிப்பட்ட முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 
கொலை நடந்த தினத்தன்று காலை 10.30 மணியளவில் வீட்டை விட்டு தான் வெளியேறிய போது தமது மனைவி வீட்டிலிருந்தார் என்று சதாசிவம் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். ஆனந்தா சதாசிவத்தின் சடலம் அவர்களின் வீட்டிலுள்ள கராஜின் நிலத்தில் கிடப்பதை பொலிஸார் கண்டறிந்தனர். 
அவரது உடலை பரிசோதித்த சட்ட வைத்திய நிபுணர் இந்தப் பெண் காலை 10.30 மணிக்கும் முற்பகல் 11.15ற்கும் இடையில் மரணித்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்தப் பெண்ணின் சடலம் சமயலறையிலிருந்து கார் கராஜ் வரை இழுத்துச் செல்லப்பட்டதற்கான அடையாளங்கள் அங்கு தென்பட்டன. திருமதி சதாசிவத்தை சமயலறையில் வைத்து கொலை செய்துவிட்டு அவ்வுடலை கார் கராஜ் வரை இழுத்துச் சென்றிருப்பதாக சதாசிவத்திற்காக ஆஜரான சட்டத்தரணி கொல்வின் அஆர் டி சில்வா வாதாடினார். இதன் மூலம் இந்த கொலையை வீட்டு வேலைக்காரனே செய்திருக்கிறான் என்று அவர் கருத்தை வெளியிட்டிருந்தார். 
இந்த வழக்கை விசாரணை செய்த நீதியரசர் நொயல் கிரேஷனுக்கு கூட கொலை எவ்விதம் நடந்தது என்பது பற்றி தீர்மானிப்பது பெரும் புதிராக இருந்தது. 
சதாசிவம் சார்பில் லங்கா சமசமாஜ கட்சியின் உபதலைவரும், தெஹிவளை, கல்கிசை பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். கொல்வின் ஆர்.டி.சில்வா ஆஜராகி சதாசிவம் நிரபராதி என்று நீதிமன்றத்தில் வாதாடி சதாசிவத்தை இந்த வழக்கிலிருந்து நிரபராதியாக விடுவிப்பதற்கு உதவி செய்தார். இந்த வழக்கு இலங்கையின் சட்டத்துறை வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று நாட்டில் இடம்பெறுவது போன்று அன்று கொலைகள் அடிக்கடி நடப்பதில்லை. ஒரு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று கொலைகளே இடம்பெற்றன. அதனால் அந்த கொலை வழக்குகள் மீது மக்கள் ஆர்வமாக தங்கள் கவனத்தைச் செலுத்தினார்கள். 
இலங்கையில் தேசிய பத்திரிகை அனைத்திலும் இந்த வழக்கு விசாரணை செய்திகள் நாளாந்தம் முன்பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் வந்தன. தெஹிவளை, கல்கிசை பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் திரு. சதாசிவத்தின் ஆடம்பர வாழ்க்கையைப் பார்த்து, இந்த மனிதரே தனது அப்பாவி மனைவியை கொலை செய்திருக்க வேண்டும் என்ற மனோநிலையில் இருந்தார்கள். 
குறிப்பாக, தெஹிவளை, கல்கிசைத் தொகுதியிலுள்ள பெரும்பாலான பெண்கள் தன் மனைவியைக் கொலை செய்த கொடியவன் சதாசிவத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற ஆத்திரமடைந்த நிலைப்பாட்டில் இருந்தார்கள். 
இவ்விதம் 57 நாட்களுக்கு நடைபெற்ற சதாசிவம் கொலை வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட போது, மக்கள் கொலை செய்திருப்பார் என்று சந்தேகித்த திரு. சதாசிவம் கொலை செய்யவில்லை என்று தீர்மானித்து விடுவிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த தெஹிவளை, கல்கிசைத் தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் 1956ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பல்லாண்டு காலம் அத்தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர். கொல்வின் ஆர்.டி.சில்வாவின் சட்ட வாதத்தினால் தான் கொலை குற்றவாளி சதாசிவம் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார் என்று ஆத்திரமடைந்தனர். 
இந்த நிலையை ஏற்படுத்தியமைக்காக டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா மீது வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் தெஹிவளை கல்கிசைத் தொகுதி மக்கள் 1956ஆம் ஆண்டு தேர்தலில் டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வாவை தோற்கடித்தார்கள். இதே போன்ற நிலை ருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலை வாழகில் ஆஜரான தமிழ் அரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமிர்தலிங்கக்துகும் ஏற்ப்ட்டது  
****** 
சதாசிவத்துக்கு ஆஜரான வழக்கறிஞர். கொலை செய்தது வேலைக்காரன் வில்லியம் என்ற வாதத்தை நிலை நிறுத்தினார். அவரின் விளக்கத்தின் படி .கணவன் சதாசிவம் வீட்டை விட்டு காலையில் சென்றபின் ஆனந்தா தன் படுக்கை அறையில் இருந்து சமையல் அறைக்கு சமையல் எப்படி நடக்ககிறது என்பதை அறிய இரவு அணிந்த உள்ளாடையோடும் அதன் மேல் சேலை ஒன்றை அணிந்தபடி சென்றாள். அங்கு வில்லியம் தேங்காய் துருவிக்கொண்டு இருந்ததை கண்டு அவனோடு பேசியபடி துருவிய தேங்காயை குனிந்து எடுத்து வாயில் போடும் போது வில்லியம் ஆனந்தாவில் உடலை பார்த்து பால் உணர்ச்சிக்கு உள்ளாகி அவலுடன் உடலுறவு கொள்ள முயற்சித்தபோது ஆனந்தா எதிர்த்ததால் அவளின் களுத்ததை திருகி கொலை செய்த்தான் என்றும். ஆனந்த எதிர்பினால் வில்லியத்தின் உடல் மேல் நகத்தின் கீறல் காயங்கள் ஏற்பட்டது என்று தன் பக்கத்துக்கு வாதத்தை சொன்னார் அதன் பின் வில்லியம் உடலை தூக்கிக்கொண்டு கராஜூக்கு தூக்கிச சென்று நிலத்தில் போட்டதாக சில்வா சொன்னார் வில்லியம சதாசிவம் வீட்டில் ஒருவரினதும் சிபார்சும் இன்றி வேலையில் சேர்ந்து 11 நாட்கள் மட்டுமே சென்றது . அவன் எப்படிப் பட்டவன் என்பது வீட்டுக்காரர்களுக்கு தெரியாது என்றும் கொல்வின் ஆர் டிசில்வா சொன்னார் இவ்வாறு நிறையுள்ள ஆனந்தத்தை தனியாக சுமந்து சென்று கராஜூக்குள் போட்டதுக்கு போதிய விளக்கம அளிக்கவில்லை 

கொலை நடந்த தினமே சதாசிவமும், சில நாட்களுக்குப் பிறகு வில்லியம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். 10 முதல் 12 நாட்களுக்கு பின்னர் கைது செய்த பொது வில்லியத்தின் கையில் மற்றும் முகத்தில் அவர்கள் 10 முதல் 12 நாட்களுக்கு பின்னர் கீறல் குறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. சதாசிவம் மீது இத்தகைய காயங்கள் ஏதும் இருக்கவில்லை. 

சில மாதங்களுக்கு முன்னர், சதாசிவம் இங்கிலாந்தில் விடுமுறைக்கு போய் வந்தபோது, அவருக்கு இரண்டு கடிதங்கள் ஆனந்தம் எழுதினார். அந்த கடிதங்கள் அவளின் துயரம் நிறைந்த குடுமப் வாழ்கையை வெளிப்படுத்தியது, என்று ஒரு சில வல்லுனர்கள் சொல்கிறார்கள். அந்தக் கடிதத்தில் அவள் எழுதிய சில்[ வார்த்தைகள் இவை. 

“. . . . ஆனால் வெளிப்படையான நம்பிக்கையையும் கசப்புணர்வையும் நான் என் பேனாவில் மூலம் சொல்லுகிறேன் ... நீங்கள் என்னை 'கைப் பையாக' பாவிக்க மாட்டீர்கள் என நினைக்கிறன். ஏன் என்னை சித்திரவதை செய்கிறீர்கள்? . நான் உங்களை விவகரத்து மூலம் விடுவிப்பேன். . நீங்கள் என்னை விட்டு விலகி விடுங்கள் உங்கள் போக்கு என் போக்கில் இருந்து மாறானது. நான் அமைதியை நாடுபவள். நீங்களோ கிளப் வாழ்கையை விரும்புபவர் குடிப்பதும், நடனமாடுவதும் உங்களுக்கு விருப்பம் , குடும்பம் என்று ஓன்று இருப்பதைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை இவையெல்லாம் என்னால் தாங்க முடியாது....” 
**** 
சதாசிவம் தனது மனைவியை விவாகரத்து செய்யாமல் , தன்னைத் திருமணம் செய்ய அவரின் காதலி யுவோன் ஸ்டீவன்ஸன் சம்மதிப்பதாக இல்லை . இந்த விசித்திரமான விவகாரத்தில், அழகான யுவோன் ஸ்டீவன்ஸன் சதாசிவத்தின் மீது தொடர்ந்து ஒரு முடிவு எடுக்கும் படி அவருக்கு அழுத்தம் கொடுத்தபடியே இருந்தாள் . ஆனந்தத்தின் வழக்கறிஞர்கள் மாக் & மாக் விவாகரதுக்கு அக்டோபர் 8 ம் திகதி சம்மன்கள் சதாசிவத்துக்கு அனுப்பியபோது அவர் என்ன செய்வது என்று யோசித்தார். அன்றிரவு வெகு நேரம் தன் விவாகரத்து பற்றி நண்பர்களோடு பேசியபின் அக்டோபர் 8 ம் தேதி இரவே . சமரசம் பற்றிய இறுதி முயற்சியில், சதாசிவம் ஜெயமங்கலம் சென்று அங்கேயே தங்கினார். அவ்விரவு மனவியோடு அவர் உடலுறவு கொண்டதுக்கு ஆதாரம் இருந்தது.. அப்போதே அவர் ஒரு முடிவுக்கு வந்தார் . காலையில் இறுதி முயற்ச்சியாக மனவியோடு விவாகரத்தை வாபஸ் வாங்கும் படி கேட்டு வாதாடினார். அவள் விவாகரத்து செய்தால் , அவர் தன் மனைவியின் பங்கை இழப்பதைத் தவிர, குழந்தைகளுக்கு தனிமனித பராமரிப்பு மற்றும் ஆனந்தாவின் பராமரிப்பிற்காக கட்டாயப்படுத்தப்படுவார் என்பதை உணர்ந்தார் . அதோடு யுவோன் மீது இருந்த ஆசை வேறு அவரின் .மூளையை தீய வழியில் சிந்தித்து முடிவு எடுக்க வைத்தது மனைவியை தீர்த்துக் கட்டுவதை விட வேறு வழி இல்லை என தீர்மானித்தார் தன் மனைவியை விவாகரத்து நோட்டீசை வாபஸ் வாங்கும் படி அவர் எவ்வளவோ கேட்டும் ஆனந்தா சம்மதிக்கவில்லை. 
கோபம் அடைந்த சாதாசிவம் அவளை தீர்த்து கட்டுவதே சரி என்ற முடிவுக்கு வந்து வேலைக்காரன் வில்லியத்தின் உதவியை நாடினார். அவனோடு அவர் நேருகமாக் பழகியதில்லை . ஒரு சில நாட்கள் மட்டுமே அவானோடு எஜமான் என்ற முறையில் பேசி இருகிறார். , வில்லியதுக்கு தன் எஜமானுக்கும் எஜமாட்டிக்கும் இடையே அடிக்கடி விவாகரத்து வாக்குவாதம் நடந்து வருவது தெரிந்தது. 

மனைவியை சம்திக்க வைக்க முடியாமல் கோபத்தோடு படுக்கை அறையில் இருந்து சமையல் அறைக்கு வந்த சதாசிவம் வில்லியத்தின் அருகே சென்று அவனுக்கு தனது விவாகரத்து பற்றி எடுத்துச் சொல்லி. எஜமாட்டியை கொலை செய்ய தான் முடிவு கட்டியதாகவும் அதன் காரணத்தை அவனுக்கு சொல்லி விளக்கினார் அவனின் உதவியை நாடினார் வில்லியம் முதலில் அவர் சொன்னதைக் கேடு பயந்து. உதவ முடியாது என்று மறுத்து, தனக்கு தான் வேலை செய்த 11 நாட்களுக்கான சம்பளம் வேண்டாம் என்றும், தன்னை தன் வீட்டுக்குப் போக விட்டால் போதும் என்று சொன்னான் . அவர் வில்லியத்தை விடாது “உனக்கு காசும் நகையும் தருவேன். நீ கொலை செய்யத் தேவை இல்லை. எனக்கு உதவினால் பொதும் என்று ஒரு படியாக அவனை விருப்பமில்லாமல் சம்மதிக்க வைத்தார்.. இறுதியில் அவனோடு படுக்கை அறைக்குள் சென்று வில்லியத்தின் உதவியோடு மனைவியின் கழுத்தை நெரித்து சதாசிவம் கொலை செய்தார் . அதன் பின் வில்லியயம் உதவி செய்ய அவனின் உதவியோடு கீழே உள்ள கராஜூக்கு மனைவியின் உடலை தூக்கிசென்று நிலத்தில் போட்டார் . சமையல் அறையில் இருந்த குழவியை கீழே கொண்டு வந்து மனைவியின் கழுத்தில் வைத்திருக்கிறார். தன கையால் கொலை செய்த மனைவிக்கு மூச்சு இருகிறதா என்பதை மனைவியின் கை கண்ணாடியை படுக்கை அறையில் இருந்து கொண்டு வந்து மூக்கின் அருகே வைத்துப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார் . அதன் பின் வில்லியதை படுக்கை அறைக்கு கூட்டிப்போய் மனைவியின் தாலிக்கொடி, நகைகள் , கைப்பையில் இருந்து பணம் ஆகியவற்றை அவனுக்கு சதாசிவம் கொடுத்தார். வில்லியத்துக்கு சதாசிவத்தின் திட்டம் தெரியாமல் அவர் கொடுத்த பொருட்களையும் நகைகளையும் வாங்கிக் கொண்டு சுமார் காலை 9.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறான். அவன் போகும் பொது வெளியில் விளையாடிக் கொண்டிருந்த இரு பிள்ளைகளிடம் “ தான் போறன் இனி திரும்பி வரமாட்டேன் என்று சொல்லிப் போயிருக்கிறான். 

. 

வில்லியம் மாத்தறையில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஒரு குற்றவாளியின் பொறுப்பை ஏற்க ஒரு மூத்த அதிகாரி வில்லியம் மேல் நம்பிக்கை தெரிவித்தார். பொலிசாரின் முதல் அறிக்கையானது அந்த வழியில் இருந்தது. வில்லியம் ஒரு நிபந்தனை மன்னிப்புகளும் இன்றி ஒரு அரச சாட்சியாக ஆனான். அரசு சாட்சியாக மாறிய வில்லியம் பற்றி அட்டர்னி ஜெனரல் திணைக்களத்தில் சந்தேகம் ஏற்பட்டிருந்ததால், அவனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கப்பட்டது. அந்த மன்னிப்பு பலரை ஆச்சரியப்படவைத்தது , சதாசிவத்தின் வழக்கறிஞரான டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வாவினால் அட்டர்னி ஜெனரல் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

**** 

காலை10.30 மணியளவில் கொலை நடனத்து என்று நிரூபிக்க மருத்துவப் பரிசோதனை பயன்படுத்தப்பட்டது. அது முன்பு கொலை நடந்து இருந்திருந்தால், சதாசிவம் வீட்டில் இருக்கும் போது கொலை நடந்துள்ளது. அவர் இருந்திருக்காவிட்டால் வில்லியம் தான் அவளை கொன்றது. என்பது வாதம் கொலை நடந்த இடத்தை தீர்மானிப்பது அடுத்தது; படுக்கையறையிலா அல்லது சமையலறையிலா கொலை நடந்தது ? இறுதியாக, எப்படி காயங்கள் ஏற்பட்டன? இந்த சந்தேகம் வாதிக்கப் பட்டது. 
***** 

செப்டம்பர் 17 அன்று தன் குடும்ப பிரச்னையை விளக்கி , ஒரு ஆனந்தா சதாசிவம் பொலிஸ் இன்சஸ்பெக்டருக்கு தன கணவனால் தனக்கு ஆபத்து ஏற்றபடலம் என்றும் அதனால் தனக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை என்று கடிதம் எழுதினார். அக்கடிதம் ஜூரிகளின் பார்வைக்கு வைக்கப்படவில்லை. அது முக்கியமான சதாசிவத்துக்கு எதிரான் ஆதாரம் அவரை காப்பற்றவே பொலீஸ் அதை முடக்கி விட்டார்கள் 

கொலை நடந்த நேரம். இடம் என்பதில் சந்தேகத்தை உறுதியாக தீர்மானிக்க முடியாதால் தீர்ப்பினை ஜூரிகள் நிரபராதி என்று சதாசிவத்துகு சாதகமாக வழங்கியதால் அவர் விடுதலை செய்யப்பட்டார் மனைவியின் சொத்துக்களில் ஒரு பங்கிற்கு சதாசிவம் உரிமையானார் இலங்கையில் மக்களின் விமர்சனத்தில் தப்ப முடியாமல் லனடனுக்கு புலம் பெயர்ந்தார் அங்கு அவரின் நீண்டகால காதலியான யுவோனை மணந்து தனது கிரிக்கெட்டைத் தொடர்ந்தார். வருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். 

சதாசிவம் கதை முடிவைப் பற்றி தெரிந்து கொள்ள பலர் ஆவலாக இருப்பீர்கள் அது மகிழ்ச்சியான முடிவைக் கொண்டது என்பதுதான் தயைய் இழந்த 10 வயதிற்குட்பட்ட நான்கு பெண்கள், மற்றொரு நாட்டில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்கள்,. திரு. சதாசிவம் இரண்டாவது மனைவியாகிய ஆங்கிலேய பெண்மணியான யுவோன் ஸ்டீஃபன்ஸன் அவர்களுக்கு ஒரு சிறந்த சித்தியாக இருந்தாள். அவர்களோடு சேர்த்து யுவோன் - சதாசிவம் தம்பதிகளுக்கு ஒரு மகனும் இரு மகள்களுமாக இருந்தார்கள் . சதாசிவத்துக்கு இறக்க ஜூலை 1977 இல், 62 வயதில் இறக்க முன் அவருக்கு எழு பிள்ளைகள் . கிரிகேட்டில் சாதனை படைத்தவர். குடும்பத்தில் அதிக பிள்ளைகளுக்கு தந்தையாய் இருந்ததிலும் சாதனை படைத்தார்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோ இணைப்புக்கு 

சட்டம் ஒரு இருட்டறை தானே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

கோசான் இதே மாதிரி 70களில் பெரியதொரு கொலை நடந்தது.இடம் காலம் எதுவும் நினைவில் இல்லை.

ஒரு பணக்கார குடும்பத்தில் மனைவியை போதகர் அடைவதற்காக ஒரு டாக்ரரையும் செட் பண்ணி கணவனுக்கு சலரோகம் இருப்பதாக கூறி சிறிதுசிறிதாக அவரை கொன்றிருக்கிறார்கள்.

பின்னர் மனைவியும் போதகரும் இணைந்த போது தான் சந்தேகம் வந்து கிழறி பிடித்தார்கள்.

இதுவும் கோகிலாம்பாள் வழக்கு மாதிரி பிரபலமாக இருந்தது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படியா? தேடிப்பார்ப்போம்.

3 hours ago, விசுகு said:

நன்றி சகோ இணைப்புக்கு 

சட்டம் ஒரு இருட்டறை தானே?

ஓம்…அதில் வக்கீலின் வாதம் 12 பட்டரி டோர்ச்😃

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஒரு காலத்தில் இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் ஆகிய மூன்று தேசங்களின் கூட்டுlக் கிரிக்கெட் டீமுக்கு கேப்டனாக இருந்தவர் மகாதேவன் சதாசிவம் . 
**** 
இன்று நாட்டில் இடம்பெறுவது போன்று அன்று கொலைகள் அடிக்கடி நடப்பதில்லை. ஒரு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று கொலைகளே இடம்பெற்றன. அதனால் அந்த கொலை வழக்குகள் மீது மக்கள் ஆர்வமாக தங்கள் கவனத்தைச் செலுத்தினார்கள். 
1956ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பல்லாண்டு காலம் அத்தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர். கொல்வின் ஆர்.டி.சில்வாவின் சட்ட வாதத்தினால் தான் கொலை குற்றவாளி சதாசிவம் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார் என்று ஆத்திரமடைந்தனர். 
இந்த நிலையை ஏற்படுத்தியமைக்காக டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா மீது வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன் தெஹிவளை கல்கிசைத் தொகுதி மக்கள் 1956ஆம் ஆண்டு தேர்தலில் டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வாவை தோற்கடித்தார்கள். இதே போன்ற நிலை ருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலை வாழகில் ஆஜரான தமிழ் அரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமிர்தலிங்கக்துகும் ஏற்ப்ட்டது  
****** 
 வில்லியம சதாசிவம் வீட்டில் ஒருவரினதும் சிபார்சும் இன்றி வேலையில் சேர்ந்து 11 நாட்கள் மட்டுமே சென்றது . அவன் எப்படிப் பட்டவன் என்பது வீட்டுக்காரர்களுக்கு தெரியாது என்றும் கொல்வின் ஆர் டிசில்வா சொன்னார் இவ்வாறு நிறையுள்ள ஆனந்தத்தை தனியாக சுமந்து சென்று கராஜூக்குள் போட்டதுக்கு போதிய விளக்கம அளிக்கவில்லை 
****** 
கொலை நடந்த தினமே சதாசிவமும், சில நாட்களுக்குப் பிறகு வில்லியம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். 10 முதல் 12 நாட்களுக்கு பின்னர் கைது செய்த பொது வில்லியத்தின் கையில் மற்றும் முகத்தில் அவர்கள் 10 முதல் 12 நாட்களுக்கு பின்னர் கீறல் குறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. சதாசிவம் மீது இத்தகைய காயங்கள் ஏதும் இருக்கவில்லை. 

சில மாதங்களுக்கு முன்னர், சதாசிவம் இங்கிலாந்தில் விடுமுறைக்கு போய் வந்தபோது, அவருக்கு இரண்டு கடிதங்கள் ஆனந்தம் எழுதினார். அந்த கடிதங்கள் அவளின் துயரம் நிறைந்த குடுமப் வாழ்கையை வெளிப்படுத்தியது, என்று ஒரு சில வல்லுனர்கள் சொல்கிறார்கள். அந்தக் கடிதத்தில் அவள் எழுதிய சில்[ வார்த்தைகள் இவை. 

“. . . . ஆனால் வெளிப்படையான நம்பிக்கையையும் கசப்புணர்வையும் நான் என் பேனாவில் மூலம் சொல்லுகிறேன் ... நீங்கள் என்னை 'கைப் பையாக' பாவிக்க மாட்டீர்கள் என நினைக்கிறன். ஏன் என்னை சித்திரவதை செய்கிறீர்கள்? . நான் உங்களை விவகரத்து மூலம் விடுவிப்பேன். . நீங்கள் என்னை விட்டு விலகி விடுங்கள் உங்கள் போக்கு என் போக்கில் இருந்து மாறானது. நான் அமைதியை நாடுபவள். நீங்களோ கிளப் வாழ்கையை விரும்புபவர் குடிப்பதும், நடனமாடுவதும் உங்களுக்கு விருப்பம் , குடும்பம் என்று ஓன்று இருப்பதைப் பற்றி உங்களுக்கு கவலை இல்லை இவையெல்லாம் என்னால் தாங்க முடியாது....” 
**** 
வில்லியம் மாத்தறையில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, ஒரு குற்றவாளியின் பொறுப்பை ஏற்க ஒரு மூத்த அதிகாரி வில்லியம் மேல் நம்பிக்கை தெரிவித்தார். பொலிசாரின் முதல் அறிக்கையானது அந்த வழியில் இருந்தது. வில்லியம் ஒரு நிபந்தனை மன்னிப்புகளும் இன்றி ஒரு அரச சாட்சியாக ஆனான். அரசு சாட்சியாக மாறிய வில்லியம் பற்றி அட்டர்னி ஜெனரல் திணைக்களத்தில் சந்தேகம் ஏற்பட்டிருந்ததால், அவனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கப்பட்டது. அந்த மன்னிப்பு பலரை ஆச்சரியப்படவைத்தது , சதாசிவத்தின் வழக்கறிஞரான டாக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வாவினால் அட்டர்னி ஜெனரல் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 
***** 
செப்டம்பர் 17 அன்று தன் குடும்ப பிரச்னையை விளக்கி , ஒரு ஆனந்தா சதாசிவம் பொலிஸ் இன்சஸ்பெக்டருக்கு தன கணவனால் தனக்கு ஆபத்து ஏற்றபடலம் என்றும் அதனால் தனக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை என்று கடிதம் எழுதினார். அக்கடிதம் ஜூரிகளின் பார்வைக்கு வைக்கப்படவில்லை. அது முக்கியமான சதாசிவத்துக்கு எதிரான் ஆதாரம் அவரை காப்பற்றவே பொலீஸ் அதை முடக்கி விட்டார்கள் 

மேலே சிலவற்றை தனியே பிரித்தெடுத்து மேற்கோள் காட்டியதை வாசிக்கும் போது..
ஆனந்தா இந்தக் கயவனை விட்டு, சுமூகமாக பிரிய நினைத்த போதும்...
நாலு பிள்ளைகளின் தாய் என்றும் பார்க்காமல் கொலை செய்த சதாசிவம்
எந்தத் தண்டனையும் அனுபவிக்காமல் இங்கிலாந்து சென்று..
அங்கும் மூன்று பிள்ளை பெத்து அமைதியாக  இறந்ததை, தாங்க முடியவில்லை.

ஆனந்தா... தனக்கு கணவனால் ஆபத்து என்று தெரிந்து 
காவல்துறைக்கு அறிவித்தும், கண்டு கொள்ளாதது... எவ்வளவு அக்கிரமம்.
மக்களுக்கு உதவாதவர்கள்... எதற்கு சீருடையுடன் திரிகிறார்கள்?

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில்... வருடத்துக்கு இரண்டு, மூன்று கொலைகள்தான்  நடக்கும் என்று 
எழுதியிருந்ததை வாசித்த போது... எமது அப்பா, தாத்தா எல்லாரும் 
எவ்வளவு  இனிமையான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார்கள் 
என்று நினைக்க பெருமையாக இருந்தது. 
அந்த நாட்கள்... உலகில் இனி எங்கும் இல்லை என்றே நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

மேலே சிலவற்றை தனியே பிரித்தெடுத்து மேற்கோள் காட்டியதை வாசிக்கும் போது..
ஆனந்தா இந்தக் கயவனை விட்டு, சுமூகமாக பிரிய நினைத்த போதும்...
நாலு பிள்ளைகளின் தாய் என்றும் பார்க்காமல் கொலை செய்த சதாசிவம்
எந்தத் தண்டனையும் அனுபவிக்காமல் இங்கிலாந்து சென்று..
அங்கும் மூன்று பிள்ளை பெத்து அமைதியாக  இறந்ததை, தாங்க முடியவில்லை.

ஆனந்தா... தனக்கு கணவனால் ஆபத்து என்று தெரிந்து 
காவல்துறைக்கு அறிவித்தும், கண்டு கொள்ளாதது... எவ்வளவு அக்கிரமம்.
மக்களுக்கு உதவாதவர்கள்... எதற்கு சீருடையுடன் திரிகிறார்கள்?

இதில் இன்றுவரை யார் கொலையாளி என்பது எனக்கு மர்மம்தான்.

இந்த விடயத்தை பற்றி எனது அம்மாதான் எனக்கு முதலில் சொன்னவர்.

அவரின் கூற்றுப்படி, குறுக்கு விசாரணையின் போது, சாட்சி அளித்த வில்ல்லியம், “சதாசிவம் ஆனந்தாவின் கழுத்தை நெரித்த போது, ஆனந்தாவின் குரல்வளை முறியும் சத்தம் எனக்கு கேட்டது” என சொன்னாராம். 

ஆனால் மருத்துவ நிபுணரின் கருத்துப்படி குரல்வளை உடைவதை நெரிப்பவர் மட்டுமே உணர முடியும், அருகில் நிற்பவர் கேட்க முடியாது என கோர்ட்டில் சொல்லபட்டதாம்.

ஆகவே வில்லியம் இதை கேட்டிருக்க முடியாது, அப்படி சொன்ன அவரின் சாட்சியம் நம்பகதகாதது என கொல்வின் ஆர் டி சில்வா வாதாடி வென்றார் என்றார்.

சதாசிவம் கழுத்தை நெரிக்கும் போது இந்த சத்தத்தை கேட்டதாக வில்லியம் கற்பனை செய்தாரா?

அல்லது வில்லியம்தான் கழுத்தை நெரிக்கும் போது அதை உணர்ந்தாரா?

ஆனந்தா வந்து சொன்னால்தான் உண்டு.

ஆனால் குற்றம் சந்தேகத்துக்கு அப்பால் நிறுவ படாமையால் - சதாசிவம் விடுதலையானார்.

Just now, தமிழ் சிறி said:

இலங்கையில்... வருடத்துக்கு இரண்டு, மூன்று கொலைகள்தான்  நடக்கும் என்று 
எழுதியிருந்ததை வாசித்த போது... எமது அப்பா, தாத்தா எல்லாரும் 
எவ்வளவு  இனிமையான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார்கள் 
என்று நினைக்க பெருமையாக இருந்தது. 
அந்த நாட்கள்... உலகில் இனி எங்கும் இல்லை என்றே நினைக்கின்றேன்.

நானும் அதைதான் நினைத்தேன். ஒரு மாவட்டத்தில் ஒரு கொலை விழுந்தால் வருடம் முழுக்க பேசப்படுமாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையில்... வருடத்துக்கு இரண்டு, மூன்று கொலைகள்தான்  நடக்கும் என்று 
எழுதியிருந்ததை வாசித்த போது... எமது அப்பா, தாத்தா எல்லாரும் 
எவ்வளவு  இனிமையான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார்கள் 
என்று நினைக்க பெருமையாக இருந்தது. 
அந்த நாட்கள்... உலகில் இனி எங்கும் இல்லை என்றே நினைக்கின்றேன்.

இப்போ மணிக்கு மூன்று.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஒரு மாவட்டத்தில் ஒரு கொலை விழுந்தால் வருடம் முழுக்க பேசப்படுமாம்.

இந்தக்  கொலைக்கு வாதாடிய....கொல்வின் ஆர்.டி.சில்வா,  
கோகிலாம்பாள் கொலை வழக்கில் வாதாடிய  அமிர்தலிங்கத்தையும் 
அப்போதைய மக்கள், தமது வாக்குக் சீட்டால் 
தோல்வியுற செய்து பழிவாங்கியதை கவனித்தீர்களா.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கொலை வழக்குக்கு அப்பால். சதாசிவம் கிரிகெட் வரலாற்றிலேயே வந்த அசகாய விளையாட்டுகாரரில் ஒருவர்.

ஒரு முறை குருநாகலையில் இந்திய அணி, இலங்கை ஏ அணிக்கு இடையில் ஆயத்த போட்டி நடந்தது - அதன் ரேடியோ வர்ணனை சுனில் கவாஸ்கார் செய்தார்.

தான் அவதானித்த அற்புதமான மட்டைகாரர் என்றும், தனது குறை ஒன்றை திருத்தினார் என்றும், சோபர்ஸ், பிரெட்மனுக்கு நிகரான வீரர் எண்டும் புகழ்ந்தார் கவாஸ்கர்.

3 minutes ago, தமிழ் சிறி said:

இந்தக்  கொலைக்கு வாதாடிய....கொல்வின் ஆர்.டி.சில்வா,  
கோகிலாம்பாள் கொலை வழக்கில் வாதாடிய  அமிர்தலிங்கத்தையும் 
அப்போதைய மக்கள், தமது வாக்குக் சீட்டால் 
தோல்வியுற செய்து பழிவாங்கியதை கவனித்தீர்களா.

ஓம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ மணிக்கு மூன்று.

ஸ்ரீலங்காவில்  துப்பாக்கி சூடு, வாள் வெட்டு, விபத்து என்று....
ஒரு நாளைக்கு 20 பேர் இருப்பதாக அண்மையில் ஒரு செய்தியில் வாசித்தேன்.
சின்னஞ் சிறு நாட்டில் இது மிகவும் அதிகம்.

அன்ரன் பாலசிங்கம் ஒரு முறை ஊரில் இரண்டு சைக்கிள் அடிபட்டு விபத்து ஏற்பட்டாலே
பலர் கூடி நின்று பார்ப்பார்கள்.   இப்போ... விமானம் குண்டு போட்டு விட்டு போக 
உடல் சிதறி கிடந்தாலும் ஒருவரும் கவனிப்பதில்லை அந்தளவுக்கு,
மக்களுக்கு கொலைகளை பார்த்து, வெறுத்து விட்டது என்று கூறியிருந்தாக ஒரு நினைவு.
தவறென்றால் மன்னிக்கவும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சதாசிவம்... இலங்கையின் முதல் தமிழ் கேப்டன்... கிரிக்கெட் மாவீரனின்கரியரையே முடித்துவைத்த கொலைப்பழி!

வே. கோபி மாவடிராஜா

அவரது பேட்டிங்கை நேரில் பார்த்த பலர் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. ஆனால், உயிரோடுஇருக்கும் சிலரும் தங்கள் வாழ்க்கையில் அப்படியொரு பேட்டிங்கை மீண்டும் கண்டதேயில்லை. மிட் ஆனிலும், கவர்ஸிலும், லெக் சைடிலும் பந்தை அவர் தூக்கி அடிப்பதை பற்றி இன்றும் கண்கள் பிரகாசிக்க கதைசொல்பவர்கள் உண்டு!

சுழற்பந்து வீச்சில் கீப்பரின் கைகளுக்கு அருகே சென்று இவர் ஆடும் கட் ஷாட்டைப் பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருக்குமாம். இவர் விளையாட வந்தாலே மைதானத்தில் பெண்கள் கூட்டம் குவியுமாம்.

அவர்தான் இலங்கை தமிழரான ‘சதா’ என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மகாதேவன் சதாசிவம். 1915-ம் ஆண்டு கொழும்புவில் பிறந்த சதாசிவம், தனது 15 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். கல்லூரிகள் மற்றும் உள்ளூரில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது திறமையை தொடர்ந்துசீராக வெளிப்படுத்தி வந்தவருக்கு ஆரம்பத்தில் ஏனோ இலங்கை அணியில் இடம் கிடைக்கவில்லை.

குறிப்பாக, 1940/41-களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த இலங்கை கிரிக்கெட் அணியில் சதாசிவம்இடம்பெறாதது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. அவரின் நிராகரிப்புக்குப் பின்னால் வேறுகாரணங்கள் இருக்கிறது என்கிற பேச்சு இலங்கை முழுவதும் பரவியது. ஆனால், இதைப் பற்றியெல்லாம்பெரிதாக கவலை கொள்ளவில்லை சதா.

1944/45 ஆண்டுவாக்கில் நடைபெற்ற பாம்பே பெண்டாங்குலர் தொடரின் அரையிறுதிப் போட்டியில்இஸ்லாமியர்கள் அணியும், ரெஸ்ட் அணியும் மோதிக் கொண்டன. இதில் ரெஸ்ட் அணிக்காக களம் கண்டசதாசிவத்திற்கு அதுதான் அறிமுகப் போட்டி.

‘முதல் போட்டியாச்சே…. அதுவும் இந்தியால வந்து விளையாடுறோமே’ என எந்த பயமும் சதாவிடம் இல்லை. எதிரணியில் ஒன்பது வீரர்கள் பந்து வீசியும் அவரை ஆட்டமிழக்க வைக்க முடியவில்லை. முடிவில் 169 நிமிடங்கள் களத்தில் நின்று 101 ரன்கள் அடித்தார் சதா. இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானமுதல் போட்டியிலேயே சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பொதுவாக ‘ரெஸ்ட்’ அணியில் கிறிஸ்தவர்களும் ஆங்கிலோ இந்தியர்களுமே இடம் பெற்றிருப்பார்கள். கொழும்புவைச் சேர்ந்த சதாசிவமும் கிறிஸ்தவர் என்று நம்பி அணியில் சேர்த்துக் கொண்டனர். ஆனால், அவர்கிறிஸ்தவர் இல்லை என்பது மிகவும் தாமதமாகவே தெரிந்திருக்கிறது.

சதாசிவத்தின் கேரியரில் மூன்று போட்டிகள் முக்கியமானது. காலத்தை வென்ற பேட்ஸ்மேன் என்ற பெயரைஇந்த போட்டிகளே அவருக்கு பெற்றுக் கொடுத்தது. 1944/45-ல் சிலோன் அணியோடு விளையாடுவதற்குகொழும்பு வந்தது இந்திய அணி.

முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் அவுட்டாகினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பெளலர்களைஓட ஓட விரட்டினார் சதாசிவம். அந்த சமயத்தில் இந்திய அணியில் லாலா அமர்நாத், பானர்ஜி, மங்கட், சிஎஸ்நாயுடு போன்ற பலமான பந்துவீச்சாளர்கள் இருந்தனர். சிலோன் அணி அடித்த 225 ரன்னில் சதாசிவம் மட்டும்111 ரன்கள் அடித்தார்.

அவரது பேட்டிங்கை ரசித்த இந்திய அணியின் கேப்டன் விஜய் மெர்சன்ட், சிலோன் அணியின் டிரெஸ்ஸிங்அறைக்கே சென்று, சதாசிவத்திற்கு ஸ்டம்ப்பை பரிசாகக் கொடுத்தார்.

இன்னொன்று, 1947-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தென் இந்திய அணிக்கு எதிரான போட்டி. சேப்பாக்கம் மைதானத்தில் பல வீரர்கள் பல சிறப்பான இன்னிங்ஸை விளையாடியுள்ளனர். ஆனால், சதாசிவம்விளையாடியது போன்று வேறு எந்த பேட்ஸ்மேனும் விளையாடியதில்லை என இந்தப் போட்டியை நேரில்பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

சாய்வான தொப்பியை அணிந்து கொண்டு, கழுத்தில் ஒரு துணியை கட்டிக் கொண்டு மிகவும் கேஷுவலாககளம் இறங்கிய சதாசிவம், மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் பந்தை விரட்டி அடித்திருக்கிறார். சென்னைரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த சதாசிவம் அன்று மொத்தமாக அடித்த ரன்கள் 215. சென்னையில்ஒரு டபுள் சென்சுரி.

மற்றொரு முக்கியமான போட்டி 1950-ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் XI அணியுடனானபோட்டி. இந்த அணியில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த அப்போதைய பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். சிலோன் அணி 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆனால், அதில் சதாசிவம் அடித்த ரன்கள்மட்டும் 96. அவர் அவுட்டாகி வெளியேறிய போது அனைத்து வீரர்களும் இரு பக்கமும் நின்று கை தட்டி பாராட்டிவழியனுப்பினர். “சிறந்த உலக அணியை தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் முதல் ஆளாக சதாசிவத்தை தான்தேர்ந்தெடுப்பேன்” என்றார் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஃப்ராங்க் வோரல்.

சதாசிவத்தின் பேட்டிங் எந்தளவிற்கு சிறப்பாக இருந்ததோ, அதை விட அவரைப் பற்றி பல சர்ச்சைகள் வலம்வந்தன. ஒழுக்க குற்றச்சாட்டுகள் அவர் மீது அடுக்கப்பட்டன. 90-களில் ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங்வைத்திருந்தார் என்பதுபோல, 50-களில் சதாசிவம் பேட்டிங் ஆடும்போது கூல்டிரிங்ஸில் மது நிரப்பிக்கொடுக்கிறார்கள் என்கிற வதந்தியும் உலா வந்தது.

1948-ம் ஆண்டு டான் பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இலங்கை வந்திருந்த போது, இலங்கை அணிக்கு கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சதாசிவம். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்தசிலோன் அணியின் கேப்டனாக சதாசிவம் எனும் தமிழர் பொறுப்பேற்று விளையாடியது மிகப்பெரியசாதனையாகக் கொண்டாடப்பட்டது.

சிறப்பாக சென்று கொண்டிருந்த சதாசிவத்தின் கிரிக்கெட் கேரியரில் பேரிடி ஒன்று தாக்கியது. தனது அழகானபேட்டிங்கால் பல பெண்களின் மனதைக் கவர்ந்த சதாசிவத்தின் மீது, அவரது மனைவியை கொலை செய்ததாககுற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் காலத்தில் இந்த கொலை வழக்கு மிக பிரசித்தம். பத்திரிகைகளிலும், வானொலியிலும் இக்கொலையே பேசுபொருளாக இருந்தது. கொலைப் பழி காரணமாக சிறை தண்டனைஅனுபவித்த சதா, விசாரணையின் முடிவில் நிரபராதி என விடுவிக்கபட்டார்.

விடுதலைக்குப் பிறகு இலங்கையை விட்டு வெளியேறி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வசித்த சதாசிவம், இருநாட்டு அணிகளுக்கும் கேப்டனாக இருந்தார். இன்றுவரை மூன்று நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்குகேப்டனாக இருந்தவர் என்கிற சாதனை சதாசிவத்திடம்தான் இருக்கிறது.

மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்கவே திணறும் பிட்ச்சில் சர்வ சாதரணமாக சதம் அடிக்கும் திறமை ஒருசிலருக்கு மட்டுமே இருக்கும். அது சதாசிவத்திடம் இருந்தது. இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்து பெறுவதற்குமுன்பே இவர் விளையாடியதால் பலருக்கு இவரைப் பற்றி தெரியாமல் போனது. மொத்தம் 11 முதல் தரபோட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சதாசிவம், மூன்று சதம் மற்றும் மூன்று அரைசதம் என 753 ரன்கள்அடித்துள்ளார்.

நவீன கால கிரிக்கெட் நிபுணர்கள் இவரை ஒரு பேட்ஸ்மேனாக கூட கருதாதது தான் மிகப்பெரிய சோகம். இன்று ஒரு டி20 போட்டியில் 50 ரன் அடித்தாலே பெரிய பேட்ஸ்மேன் என்று கொண்டாடுகிறோம். ஆனால், அன்று அவர் சென்னையில் அடித்த இரட்டை சதம் பல நூறுகளுக்குச் சமம். திறமை இருந்தால் எங்கும் வெற்றிபெறலாம் என்பார்கள். ஆனால், திறமையிருந்தாலும் நீங்கள் சரியான இடத்தில் இருந்தால் மட்டுமே உங்கள்திறமை அங்கீகரிக்கப்படும்.

சதாசிவம், ஆஸ்திரேலியாவிலோ அல்லது இங்கிலாந்திலோ பிறந்திருந்தால் கிரிக்கெட்டின் பிதாமகன் எனகொண்டாடப்பட்டிருப்பார் என்பதே உண்மை!

நன்றி

விகடன்

https://sports.vikatan.com/amp/story/cricket/highlights-of-sri-lankas-first-tamil-cricket-captain-mahadevan-sathasivam-career

Edited by goshan_che
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

சதாசிவம்... இலங்கையின் முதல் தமிழ் கேப்டன்... கிரிக்கெட் மாவீரனின்கரியரையே முடித்துவைத்த கொலைப்பழி!

வே. கோபி மாவடிராஜா

சதாசிவம் - கேரி சோபர்ஸ்

Satha_with_Sobers_e1621973560388.jpeg.avif

அவரது பேட்டிங்கை நேரில் பார்த்த பலர் இப்போது உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. ஆனால், உயிரோடுஇருக்கும் சிலரும் தங்கள் வாழ்க்கையில் அப்படியொரு பேட்டிங்கை மீண்டும் கண்டதேயில்லை. மிட் ஆனிலும், கவர்ஸிலும், லெக் சைடிலும் பந்தை அவர் தூக்கி அடிப்பதை பற்றி இன்றும் கண்கள் பிரகாசிக்க கதைசொல்பவர்கள் உண்டு!

சுழற்பந்து வீச்சில் கீப்பரின் கைகளுக்கு அருகே சென்று இவர் ஆடும் கட் ஷாட்டைப் பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருக்குமாம். இவர் விளையாட வந்தாலே மைதானத்தில் பெண்கள் கூட்டம் குவியுமாம்.

அவர்தான் இலங்கை தமிழரான ‘சதா’ என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மகாதேவன் சதாசிவம். 1915-ம் ஆண்டு கொழும்புவில் பிறந்த சதாசிவம், தனது 15 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். கல்லூரிகள் மற்றும் உள்ளூரில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது திறமையை தொடர்ந்துசீராக வெளிப்படுத்தி வந்தவருக்கு ஆரம்பத்தில் ஏனோ இலங்கை அணியில் இடம் கிடைக்கவில்லை.

மகாதேவன் சதாசிவம்

satha_new_clips.jpeg.webp

குறிப்பாக, 1940/41-களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த இலங்கை கிரிக்கெட் அணியில் சதாசிவம்இடம்பெறாதது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. அவரின் நிராகரிப்புக்குப் பின்னால் வேறுகாரணங்கள் இருக்கிறது என்கிற பேச்சு இலங்கை முழுவதும் பரவியது. ஆனால், இதைப் பற்றியெல்லாம்பெரிதாக கவலை கொள்ளவில்லை சதா.

1944/45 ஆண்டுவாக்கில் நடைபெற்ற பாம்பே பெண்டாங்குலர் தொடரின் அரையிறுதிப் போட்டியில்இஸ்லாமியர்கள் அணியும், ரெஸ்ட் அணியும் மோதிக் கொண்டன. இதில் ரெஸ்ட் அணிக்காக களம் கண்டசதாசிவத்திற்கு அதுதான் அறிமுகப் போட்டி.

‘முதல் போட்டியாச்சே…. அதுவும் இந்தியால வந்து விளையாடுறோமே’ என எந்த பயமும் சதாவிடம் இல்லை. எதிரணியில் ஒன்பது வீரர்கள் பந்து வீசியும் அவரை ஆட்டமிழக்க வைக்க முடியவில்லை. முடிவில் 169 நிமிடங்கள் களத்தில் நின்று 101 ரன்கள் அடித்தார் சதா. இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானமுதல் போட்டியிலேயே சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பொதுவாக ‘ரெஸ்ட்’ அணியில் கிறிஸ்தவர்களும் ஆங்கிலோ இந்தியர்களுமே இடம் பெற்றிருப்பார்கள். கொழும்புவைச் சேர்ந்த சதாசிவமும் கிறிஸ்தவர் என்று நம்பி அணியில் சேர்த்துக் கொண்டனர். ஆனால், அவர்கிறிஸ்தவர் இல்லை என்பது மிகவும் தாமதமாகவே தெரிந்திருக்கிறது.

சதாசிவத்தின் கேரியரில் மூன்று போட்டிகள் முக்கியமானது. காலத்தை வென்ற பேட்ஸ்மேன் என்ற பெயரைஇந்த போட்டிகளே அவருக்கு பெற்றுக் கொடுத்தது. 1944/45-ல் சிலோன் அணியோடு விளையாடுவதற்குகொழும்பு வந்தது இந்திய அணி.

சதாசிவம்

download.jpeg.webp

முதல் இன்னிங்ஸில் சொற்ப ரன்களில் அவுட்டாகினாலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பெளலர்களைஓட ஓட விரட்டினார் சதாசிவம். அந்த சமயத்தில் இந்திய அணியில் லாலா அமர்நாத், பானர்ஜி, மங்கட், சிஎஸ்நாயுடு போன்ற பலமான பந்துவீச்சாளர்கள் இருந்தனர். சிலோன் அணி அடித்த 225 ரன்னில் சதாசிவம் மட்டும்111 ரன்கள் அடித்தார்.

அவரது பேட்டிங்கை ரசித்த இந்திய அணியின் கேப்டன் விஜய் மெர்சன்ட், சிலோன் அணியின் டிரெஸ்ஸிங்அறைக்கே சென்று, சதாசிவத்திற்கு ஸ்டம்ப்பை பரிசாகக் கொடுத்தார்.

இன்னொன்று, 1947-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தென் இந்திய அணிக்கு எதிரான போட்டி. சேப்பாக்கம் மைதானத்தில் பல வீரர்கள் பல சிறப்பான இன்னிங்ஸை விளையாடியுள்ளனர். ஆனால், சதாசிவம்விளையாடியது போன்று வேறு எந்த பேட்ஸ்மேனும் விளையாடியதில்லை என இந்தப் போட்டியை நேரில்பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

சதாசிவம்

01_satha_not_guilty.jpeg.webp

சாய்வான தொப்பியை அணிந்து கொண்டு, கழுத்தில் ஒரு துணியை கட்டிக் கொண்டு மிகவும் கேஷுவலாககளம் இறங்கிய சதாசிவம், மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் பந்தை விரட்டி அடித்திருக்கிறார். சென்னைரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த சதாசிவம் அன்று மொத்தமாக அடித்த ரன்கள் 215. சென்னையில்ஒரு டபுள் சென்சுரி.

மற்றொரு முக்கியமான போட்டி 1950-ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற காமன்வெல்த் XI அணியுடனானபோட்டி. இந்த அணியில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த அப்போதைய பல முன்னணி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். சிலோன் அணி 153 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆனால், அதில் சதாசிவம் அடித்த ரன்கள்மட்டும் 96. அவர் அவுட்டாகி வெளியேறிய போது அனைத்து வீரர்களும் இரு பக்கமும் நின்று கை தட்டி பாராட்டிவழியனுப்பினர். “சிறந்த உலக அணியை தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் முதல் ஆளாக சதாசிவத்தை தான்தேர்ந்தெடுப்பேன்” என்றார் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஃப்ராங்க் வோரல்.

சதாசிவத்தின் பேட்டிங் எந்தளவிற்கு சிறப்பாக இருந்ததோ, அதை விட அவரைப் பற்றி பல சர்ச்சைகள் வலம்வந்தன. ஒழுக்க குற்றச்சாட்டுகள் அவர் மீது அடுக்கப்பட்டன. 90-களில் ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங்வைத்திருந்தார் என்பதுபோல, 50-களில் சதாசிவம் பேட்டிங் ஆடும்போது கூல்டிரிங்ஸில் மது நிரப்பிக்கொடுக்கிறார்கள் என்கிற வதந்தியும் உலா வந்தது.

1948-ம் ஆண்டு டான் பிராட்மேன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இலங்கை வந்திருந்த போது, இலங்கை அணிக்கு கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் சதாசிவம். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்தசிலோன் அணியின் கேப்டனாக சதாசிவம் எனும் தமிழர் பொறுப்பேற்று விளையாடியது மிகப்பெரியசாதனையாகக் கொண்டாடப்பட்டது.

சிறப்பாக சென்று கொண்டிருந்த சதாசிவத்தின் கிரிக்கெட் கேரியரில் பேரிடி ஒன்று தாக்கியது. தனது அழகானபேட்டிங்கால் பல பெண்களின் மனதைக் கவர்ந்த சதாசிவத்தின் மீது, அவரது மனைவியை கொலை செய்ததாககுற்றம் சுமத்தப்பட்டது. அந்தக் காலத்தில் இந்த கொலை வழக்கு மிக பிரசித்தம். பத்திரிகைகளிலும், வானொலியிலும் இக்கொலையே பேசுபொருளாக இருந்தது. கொலைப் பழி காரணமாக சிறை தண்டனைஅனுபவித்த சதா, விசாரணையின் முடிவில் நிரபராதி என விடுவிக்கபட்டார்.

சதாசிவம் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி

287938.jpeg.webp

விடுதலைக்குப் பிறகு இலங்கையை விட்டு வெளியேறி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வசித்த சதாசிவம், இருநாட்டு அணிகளுக்கும் கேப்டனாக இருந்தார். இன்றுவரை மூன்று நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்குகேப்டனாக இருந்தவர் என்கிற சாதனை சதாசிவத்திடம்தான் இருக்கிறது.

மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்கவே திணறும் பிட்ச்சில் சர்வ சாதரணமாக சதம் அடிக்கும் திறமை ஒருசிலருக்கு மட்டுமே இருக்கும். அது சதாசிவத்திடம் இருந்தது. இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்து பெறுவதற்குமுன்பே இவர் விளையாடியதால் பலருக்கு இவரைப் பற்றி தெரியாமல் போனது. மொத்தம் 11 முதல் தரபோட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சதாசிவம், மூன்று சதம் மற்றும் மூன்று அரைசதம் என 753 ரன்கள்அடித்துள்ளார்.

நவீன கால கிரிக்கெட் நிபுணர்கள் இவரை ஒரு பேட்ஸ்மேனாக கூட கருதாதது தான் மிகப்பெரிய சோகம். இன்று ஒரு டி20 போட்டியில் 50 ரன் அடித்தாலே பெரிய பேட்ஸ்மேன் என்று கொண்டாடுகிறோம். ஆனால், அன்று அவர் சென்னையில் அடித்த இரட்டை சதம் பல நூறுகளுக்குச் சமம். திறமை இருந்தால் எங்கும் வெற்றிபெறலாம் என்பார்கள். ஆனால், திறமையிருந்தாலும் நீங்கள் சரியான இடத்தில் இருந்தால் மட்டுமே உங்கள்திறமை அங்கீகரிக்கப்படும்.

சதாசிவம், ஆஸ்திரேலியாவிலோ அல்லது இங்கிலாந்திலோ பிறந்திருந்தால் கிரிக்கெட்டின் பிதாமகன் எனகொண்டாடப்பட்டிருப்பார் என்பதே உண்மை!

அதுகும்....  இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் என்று, மூன்று நாடுகளின்  கூட்டு
கிரிக்கெட் ரீமுக்கு,  கேப்டனாக இருந்திருக்கிறார் ஒரு தமிழன் சதாசிவம்.
இப்படியான பெருமையை... உலகில்  எவரும் வகித்திருக்க மாடடார்கள் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

அதுகும்....  இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் என்று, மூன்று நாடுகளின்  கூட்டு
கிரிக்கெட் ரீமுக்கு,  கேப்டனாக இருந்திருக்கிறார் ஒரு தமிழன் சதாசிவம்.
இப்படியான பெருமையை... உலகில்  எவரும் வகித்திருக்க மாடடார்கள் என நினைக்கின்றேன்.

ஓம். 

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 26/12/2022 at 01:10, goshan_che said:

இதே போன்ற நிலை ருத்திரபுரம் கோகிலாம்பாள் கொலை வாழகில் ஆஜரான தமிழ் அரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமிர்தலிங்கக்துகும் ஏற்ப்ட்டது 

கோகிலாம்பாள் கொலைவழக்கு என்று ஊடகங்களிலும் மக்கள் வாயிலும் இந்த விடயம் பிரஸ்தபிக்கப்பட்டாலும் இதில் கொலை செய்யப்பட்டது கோகிலாம்பாளின் 20 வயதுக்கு மூத்த அவளின் கணவன்தான் (இவர் பெயர் காசிலிங்கம்). கோகிலாம்பாள் (இவர் பிறப்பால் ஒரு இந்தியர்) தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து மாட்டுச் சாணக்குவியலுக்குள் புதைத்த விடயம் தற்செயலாக வெளியே தெரியவர இந்த கொலைக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு கோகிலாம்பாளுக்கு சிறைத்தண்டனையும் அவளின் காதலனுக்கு மரணதண்டனயும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Edited by vanangaamudi
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vanangaamudi said:

கோகிலாம்பாள் கொலைவழக்கு என்று ஊடகங்களிலும் மக்கள் வாயிலும் இந்த விடயம் பிரஸ்தபிக்கப்பட்டாலும் இதில் கொலை செய்யப்பட்டது கோகிலாம்பாளின் 20 வயதுக்கு மூத்த அவளின் கணவன்தான். கோகிலாம்பாள் (இவர் பிறப்பால் ஒரு இந்தியர்) தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து மாட்டுச் சாணக்குவியலுக்குள் புதைத்த விடயம் தற்செயலாக வெளியே தெரியவர இந்த கொலைக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு கோகிலாம்பாளுக்கு சிறைத்தண்டனையும் அவளின் காதலனுக்கு மரணதண்டனயும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஓம்…

கீழே பிறிதொரு திரியில் யாழ்கள உறவுகள் கோகிலாம்பாள் கணவர் கொலை வழக்கை அலசி ஆராய்ந்துள்ளனர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்னு தான் இந்த கதையை கேள்விப் படுகிறேன் ...இணைப்பிற்கு நன்றி கோசான் முதல் இரண்டு பிள்ளைகளுக்கு நினைவு தெரிஞ்ச வயசு இருக்கும் ...எப்படி தகப்பனோடு போய் சந்தோசமாய் வாழ்ந்தார்கள்🤯 ..இந்த காலத்தில் பாசமாவது ,பந்தமாவது நாங்கள் சந்தோசமாய்  வாழ்ந்தால் போதும்  🙂 

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஜெனீவா உடன்படிக்கை ஜெனீவா உடன்படிக்கை' என அழைக்கப்படுவது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் 1864- 1949 வரையான காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு உடன்படிக்கையின் தொகுப்பேயாகும். இரண்டாம் உலக போருக்கு (1939-45) பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் அதன் முந்தய மூன்று ஒப்பந்தங்களையும் இணைத்தும் சில கொள்கைகளையும் சேர்த்து 1949 ஆண்டு ஒப்பந்தமாக இறுதி செய்யப்பட்டது.ஒரு போர் மண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் கைதிகளின் அடிப்படை மற்றும் போர்க்கால உரிமைகளை வரையறுக்கின்றது.இந்த ஒப்பந்தங்களை 195 நாடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளன.மேலும் இது பொதுமக்களின் பாதுகாப்புகளையும் வரையறுக்கிறது மற்றும் உயிர் இரசாயன ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் ஹேக் உடன்படிக்கை(1899 ஆண்டு முதல் ஹேக் மாநாடு, 1907 ஆம் ஆண்டு இரண்டாம் ஹேக் மாநாடு) படி நுண்ணுயிரிகள்,நச்சு வாயுக்களை பயன்படுத்தி போர் செய்வதை தடை செய்கிறதது. வரலாறு.தொகு இதன் வரலாறு செஞ்சிலுவை சங்கத்தின (Red Cross); வரலாற்றுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றது. செஞ்சிலுவை சங்கத்தின் தந்தையான கென்றி டுனான்ற்(Jean Henri Dunant) 1864 ல் யுத்தத்தில் காயமடையும் போர் வீரர்கள்பற்றிப்பேச ஒர் சர்வதேச பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்திருந்தார். இந்த முதலாவது உடன்படிக்கையை பிரதான ஐரேப்பிய வல்லரசுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன. 1906 ல் இரண்டாவது உடன்படிக்கையில் முக்கிய அம்சங்கள் விரிவாக்கப் பட்டதுடன் கடலில் ஏற்படும் போர்களுக்கும் இவை பொருந்தும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1929 ல் மூன்றாவது உடன்படிக்கையின்போது யுத்தக் கைதிகளைக் கையாழும் முறை பற்றிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் பல நாடுகள் இவ்வுடன்படிக்கையை மீறி நடந்ததால் இவ்வுடன்படிக்கை 1948 ஆகஸ்டு 23 – 30 வரையான காலப்பகுதியில்; சுவீடன் நாட்டில் ஸ்டொக் ஹொம் என்ற நகரில் இடம்பெற்ற செஞ்சிலுவை சங்க மாநாட்டில் மேலும் 4 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டன. இந்த உடன்படிக்கைகள் 1949 ஆகஸ்ட் 12 ல் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே நான்காவது ஜெனீவா உடன்படிக்கை எனப்படுகின்றது. இவ்வுடன்படிக்கையின்படி போரிடும் தரப்பொன்றின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் உரிமைகள் காக்கப்பட்டுள்ளன. அதாவது எந்தவெரு நோக்கத்திற்காகவும் தனிநபர்களையோ குழுக்களையோ நாடு கடத்தல், ஆட்களை பணையக்கைதிகளாக வைத்திருத்தல், ஆட்களை பாலியல் தாக்குதல்களுக்குஉள்ளாக்குதல், உடல் உள ரீதியில் வதைப்படுத்தல், விசாரணை இன்றி கூட்டுத்தண்டணை வழங்குதல், பழி வாங்குதல், நியாயமின்றி சொத்துக்களை அழித்தல், இன மத தேசிய அல்லது அரசியல் ரீதியில் பாரபட்சமாக நடத்துதல் என்பன முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் பின்பு வந்த குடியேற்றவாதம், உள்நாட்டு கிளர்ச்சிகள், விடுதலைப்போராட்டங்கள் காரணமாக மீண்டும் இவ் உடன்படிக்கைகள் மதிக்கப்படாமல் போகும் நிலமை ஏற்பட்டது. இதன் விளைவாக 1977 ஜூன் 8 ல் 1949உடன்படிக்கைகளுடன் மேலும் 2 உடன்படிக்கைகள் சேர்க்கப்பட்டது. ஆயினும் அமேரிக்கா, பிருத்தானியாபோன்ற நாடுகள் 1977 உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுத்து விட்டன. அங்கீகரிக்கப்பட்ட பிரேரணைகள்தொகு 1864 ல் முதலாவது உடன்படிக்கைதொகு 1. காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட போர் வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நிறுவனங்கள் கைப்பற்றப்படவோ அழிக்கப்படவோ கூடாது. 2. எல்லாத்தரப்பைச் சேர்ந்த வீரர்களும் பக்கச்சார்பற்ற முறையில் பராமரிப்பும் சிகிச்சையும் வழங்கப்பட வேண்டும். 3. காயப்பட்ட வீரர்களுக்கு உதவும் குடிமக்களும் காக்கப்பட வேண்டும். 4. இந்த உடன் படிக்கையின் கீழ் பணிபுரியும் ஆட்களையும் உபகரணங்களையும் இனம்காண செஞ்சிலுவைச்சின்னம் அங்கீகரிக்கப்பட வேண்டும். 1929 ல் மூன்றாவது உடன்படிக்கைதொகு 1. யுத்த கைதிகளை மனிதாபிமானத்தோடு நடத்தவும். 2. யுத்த கைதிகளைப்பற்றிய தகவல்களை வழங்கவும். 3. கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச்சென்று பார்வையிட நடுநிலை நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்குவது. 1949 ல் நான்காவது உடன்படிக்கைதொகு 1. யுத்த களத்தில் காயமடைந்த அல்லது நோயுற்ற இராணுவத்தினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பானது. 2. கடலில் வைத்து காயமடைந்த அல்லது நோயுற்ற அல்லது கப்பலுடைந்த படையினருக்கு நிவாரணம் வழங்குவது 3. யுத்த கைதிகளை நடத்தும் விதம் பற்றியது 4. யுத்த காலத்தில் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப்பாதுகாப்பது. 1977 உடன்படிக்கையின் சாரம்தொகு சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் கரந்தடிப் போராளிகள் (கொரில்லா போராளிகள்) மற்றும் கணிசமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது. நடைமுறை படுத்தல்தொகு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அமலாக்க அதிகாரம்தொகு ஜெனீவா உடன்படிக்கை மற்றும் பிற ஒப்பந்தங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளை விசாரிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு வழங்கப்பட்டது.ஐ.நா. அரிதாகவே ஜெனீவா உடன்படிக்கை தொடர்பான தனது அதிகாரத்தை செயல்படுத்துகிறது அதனால் பெரும்பாலான பிரச்சினைகள் பிராந்திய ஒப்பந்தங்கள் மூலம் அல்லது அந்தந்த நாடுகளின் சட்டங்கள் மூலம் தீர்க்கப்படும். அதிகாரங்களை பாதுகாத்தல்தொகு இந்த நடவடிக்கையினை பாதுகாத்தல் ஆயுத மோதலில் பகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது.போரின் போது அந்நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இரு கட்சிகளுக்கிடையே நடுநிலையான பேச்சுவார்த்தையை நடத்துகிறது. போர் குற்றங்கள்தொகு உடன்படிக்கையின் அனைத்து மீறல்களும் சமமாக கருதப்படுவதில்லை எனினும் மிக மோசமான குற்றங்களை எதிர்த்து ஒரு சட்ட வரையறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இது கல்லறை மீறப்படுதல்(Grave breaches) என்று குறிப்பிடப்படுகிறது. மூன்றாம் மற்றும் நான்காம் ஜெனீவா உடன்படிக்கை மாநாட்டின் மூலம் போர் குற்றங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பின்வரும் நடவடிக்கைகள் பூற்குர்ரங்கள் என வரையறுக்கப்படுகின்றன,அவை வேண்டுமென்றே கொலை,சித்திரவதை அல்லது உயிரியல் சோதனைகள் செய்தல் வேண்டுமென்றே உடல் அல்லது சுகாதார கேடுகளை விளைவித்தல் எதிரி படைகளுக்காக வேலை செய்ய நிர்பந்திதல் வேண்டுமென்றே ஒரு நியாயமான போர் குற்றம் விசாரணைக்கு மறுத்தல் நான்காம் ஜெனிவா உடன்படிக்கை பின்வருபவற்றயும் போர் குற்றமாக கருதுகிறது அவை  பிணைய கைதிகளாக பிடித்தல் தேவையில்லாத இராணுவ நடவடிக்கைகளுக்காக வேண்டுமென்றே ஒருவரின் உடமைகளுக்கு சேதம் விளைவித்தல் சட்டவிரோத நாடுகடத்தல் மற்றும் இடப்பெயர்த்தல் இதன் மீதான விசாரணைகளை ஐ.நா. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழியாக நடத்தப்படும்.     மேற்கோள்கள்     https://ta.m.wikipedia.org/wiki/ஜெனீவா_உடன்படிக்கை
  • ஜெனீவா உடன்படிக்கையை புரிந்துகொள்வதற்கு அரசியல் அறிவு தேவையில்லை  கந்தையா அண்ணர், எழுத வாசிக்கத் தெரிந்தாலே போதும். 
  • இஸ்ரேல் பல பாலஸ்தீனர்களை வீடற்றவர்களாக ஆக்குகிறது, யாரும் கண்டிக்கத் துணியவில்லை…    
  • இது ஒரு மிக சிறந்த சிந்தனை   🤪 உங்கள் காலத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சனை முடித்து வைக்கப்படும் 🤣.  எப்படியென்றால்   நீங்கள் விரும்பும்படி வடக்கு கிழக்குலிருந்து தமிழர்கள் வெளியேற்றி    😂 அந்த பேச்சுவார்த்தை குழுவுக்கு நீங்கள் தான் தலைவர்     .......உங்களது இந்த இரண்டாவது இலக்க கருத்துகள் போர் குற்றம் நடந்தது என்பதை ஐயம்திரிபுற சந்தேகம் இல்லாமல் உறுதிப்படுத்தியுள்ளது  நன்றிகள் பல கோடி  கபிதன்..தயவுசெய்து யார் போர் குற்றவாளிகள் என்பதையும் சொல்லிவிடுங்கள். ...போறவழிக்கு புண்ணியங்கள் கிடைக்கும்   தமிழர்கள் தங்கள் சொந்த பூமியான வடக்கு கிழக்கு. இல் இருப்பதும் வந்தேறி ரஷ்யான் உக்ரேனில். இருப்பதும் உங்களுக்கு ஒன்றாக....அதாவது ஒத்த நிகழ்வாக தெரியுமானால்  உங்கள் அரசியல் அறிவு பூச்சியமாகும்.....
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.