Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மறைமுகமான சமாதான துாதுவராக செயற்படுகின்றாரா சொல்ஹெய்ம்?-அகிலன்

December 28, 2022
 

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சுவாா்த்தைகளில் தாம் எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்று எரிக்சொல்ஹெய்ம் கூறியிருக்கின்றாா். 

கொழும்பில் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சொல்ஹெய்ம் அதிரடியாகப் பல அரசியல் தலைவா்களைச் சந்தித்துவருகின்றாா். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கின் காலநிலை ஆலோசகா் என்ற பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும்கூட, அதற்கு மேலாக சமாதானத் துாதுவராகவே அவா் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்திருப்பதற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன.

சொல்ஹெய்ம் கொழும்பில் இருக்கும் பின்னணியிலேயே அரசாங்கத்திற்கும் தமிழ் தலைமைக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இரண்டாம் கட்டத்திற்கு சென்றிருக்கின்றது. புதன்கிழமை இரவு இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது முக்கியமான சில விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த இணக்கப்பாடு எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை ஜனவரி மாதத்தில் தான் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

புதன்கிழமை இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது அரசு தரப்பினரும் தமிழரசு கட்சியினரும் மட்டுமே பங்கேற்றிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும், முன்னாள் வடமகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை. இதனால் தமிழர் தரப்பில் சம்பந்தனும் சுமந்திரனும் மட்டுமே பங்கேற்று இருந்தார்கள். இது உத்தியோகப்பற்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் ஒரு பேச்சுவாா்த்தை என்று ஜனாதிபதி தரப்பில் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த சந்திப்புக்கான அழைப்பு அனுப்பப்பட்ட முறை குறித்தும் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி செயலகத்திலிருந்து தமிழ் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு நேரடியாக அனுப்பப்படவில்லை. விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தாந்தன் ஆகியோருக்கு இந்தக் கூட்டம் தொடர்பாக சுமந்திரனே தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தாா். சுமந்திரன் மூலமாக இந்தக் கூட்டம் ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என இதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றார்.

இருந்த போதிலும் இந்தக் கூட்டத்தில் முக்கியமான சில விடயங்களில் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாக சுமந்திரன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றனர். நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தமிழ் தரப்பில் பிரதான கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கின்றது. இந்த விடயத்தில் ஐந்து கைதிகளை ஜனவரி முதல் வாரத்தில் விடுதலை செய்வதற்கு இணக்கம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. ஏனையவர்கள் தொடர்கள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் ஆராயப்பட்ட பின்னர் முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருக்கின்றது. சில காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாகவும் ஜனவரி மூன்றாம் தேதி நடைபெறும் தேசியப் பாதுகாப்பு சபையின் கூட்டத்தில் பின்னர் அது குறித்து இறுதி முடிவு கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் ஜனவரி 5ஆம் தேதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கும் இடையிலான மற்றும் சந்திப்பு இடம் பெறும்.

இவை தவிர அரசியல் தீர்வு முயற்சி தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கின்றது. அதாவது ஜனவரி 13ஆம் திகதியிலிருந்து நான்கு தினங்களுக்கு தொடா்ச்சியாக இது தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. அதாவது, பொங்கலுக்கு முன்னதாக முக்கியமான முன்னேற்றம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது எனக் காட்டிக்கொள்வதற்கு ரணில் விரும்புகின்றாா் என்பது தெரிகின்றது.

பெப்ரவரி நான்காம் திகதி இடம்பெறும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வந்து முக்கியமான சந்திப்புகளை அவசரமாக மேற்கொண்டு வருகின்றார்.

சமாதான தூதுவராக இலங்கைக்கு தான் வரவில்லை என அவர் தெரிவித்து இருக்கின்ற போதிலும் கூட பிரதான அரசியல் கட்சியுடன் பேச்சுக்களின் போது இன நெருக்கடிக்கான தீர்வு குறித்து அவர் முக்கிய கவனத்தை செலுத்தி இருந்தார். இது அவா் உத்தியோகப்பற்றற்ற முறையில் ஒரு அனுசரணையாளராகச் செயற்படுகின்றாா் என்ற கருத்தை உறுதிப்படுத்துவதாகத்தான் இருந்தது.  காலநிலை ஆலோசகா் சம்பந்தன், மனோ கணேசன் போன்றோருடன் பேச்சுக்களை நடத்தவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

பொருளாதார ரீதியாக இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு இன நெருக்கடிக்கான ஏதோ ஒரு தீர்வை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, சா்வதேச நாணய நிதியம், மற்றும் புலம்பெயா்ந்த அமைப்புக்கள் போன்றன இவ்விடயத்தில் அழுத்தம் கொடுக்கின்றன. நிதியை நாட்டுக்கு வரவளைப்பதற்கு ஏதோ ஒருவகையில் இனநெருக்கடி தீா்க்கப்பட்டு சுமூக நிலை உருவாகியிருப்பதாகக்காட்ட வேண்டிய நிா்ப்பந்தம் ரணிலுக்குள்ளது.

இவ்விடத்தில் ரணில் விக்கிரமசிங்க இரண்டு விதமான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார். ஒன்று – சர்வதேச ரீதியாக எதிர்கொள்ளக்கூடிய அழுத்தங்களை எதிர்கொள்வது. இரண்டு – தமிழ் தரப்புகளை பேச்சு வார்த்தை மேசைக்கு கொண்டு வந்து அதனை முன்னெடுத்து செல்வது.  பொருளாதார நெருக்கடித் தீா்வுக்கு மட்டுமன்றி, ரணிலின் கனவாகவுள்ள அடுத்த ஜனாதிபதித் தோ்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறுவதற்கும் இந்த இரண்டும் அவருக்கு அவசியம்.

இந்த இரண்டையும் சமாளிப்பதற்கு தன்னால் முடியாது என்ற நிலைமையில்தான் சொல்ஹெய்மை அவா் களமிறக்கியுள்ளாா். உண்மையில் காலநிலை ஆலோசகர் என்ற பெயரில் இலங்கையில் அவர் மீண்டும் கால் வைத்திருந்தாலும் ரணில் விக்கிரமசிங்க எதிர்கொள்கின்ற இந்த நெருக்கடிகளுக்கு தீர்வுகளை முன் வைப்பது அல்லது அந்த தீர்வுக்காக உதவுவதுதான் அவரது நியமனத்தின் நோக்கம்.

மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் இல்லை என ரணில் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாாா். மூன்றாம் தரப்பு என்றால் சிங்களக் கடும் போக்காளா்கள் குழம்புவாா்கள் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், தமிழ்த் தரப்பையும், சா்வதேசத்தையும் ஒரேயடியாகக் கையாள்வதற்கு இவ்விடயத்தில் அனுபவம் வாய்ந்த ஒருவா் தேவை என்பது ரணிலுக்குத தெரிந்தே இருந்தது. அதுதான் சொல்ஹெய்மை காலநிலை ஆலோசகா் என்ற பெயரில் களமிறக்க காரணம்.

சொல்ஹெய்ம் இலங்கை வந்து முக்கியமான பேச்சுக்களை நடத்தியுள்ள பின்னணியில்தான் தமிழ் தரப்புடன் இரண்டாம் கட்ட பேச்சுக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க, அவசர அழைப்பை விடுத்திருந்தார். விரைந்து தீர்வொன்றை காண வேண்டும் என்பதிலும் அவர் அவசரம் காட்டுகிறார். சமாதான முயற்சிகள் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டும் நிலையில் அடுத்த நவம்பருக்கு பின்னா் திடீா் ஜனாதிபதித் தோ்தல் ஒன்றுக்குச் செல்வதற்கு ரணில் திட்டமிடலாம். இதன்மூலம் மக்கள் ஆணையுடன் அதிகாரத்துக்கு வந்து பிரச்சினையைத் தீா்த்துவைப்பதாக சொல்லி தமிழ் மக்களுடைய ஆதரவை அவா் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிடுகின்றாா்.

சர்வதேச நாணய நிதியம் உட்பட உலக அமைப்புகள் பலவும் இலங்கைக்கான நிதி உதவிய வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தி இருக்கும் பின்னணியில் இலங்கையில் ஒரு சமூகமான நிலைமை ஸ்திதமான அரசு இருக்கிறது என்பதை காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ரணில் விக்கிரமசிங்காவுக்கு இருக்கின்றது. அதற்கான ஆலோசகராக மட்டுமின்றி அனுசரணையாளராகவும் எரிக் சொல்ஹெய்ம் செயல்பட்டு வருகின்றார் என்பதை கடந்த சில தினங்களாக அரசியல் அரங்கில் இடம் பெறும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

விடுதலைப் புலிகளின் காலத்தில் சமாதான செயல்பாட்டாளராக பிரவேசித்த எரிக்சொல்ஹெய்ம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. சமாதான செயற்பாட்டாளர் என்ற முறையில் பிரதேசித்த சொல்ஹெய்ம் இறுதி போரின் போது இடம் பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூறவேண்எயவராகவும் இருக்கின்றாா்.

சொல்ஹெய்ம் இப்போது எவ்வாறான பாத்திரத்தை ஏற்று செயல்படுகின்றார் என்பது தெளிவாக தெரியாத போதிலும், தற்போது கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை தமிழ் தலைமைகள் மதிநுட்பமாகவும், சிறந்த இராஜதந்திரத்துடனும் கையாள்வதன் மூலமாக மட்டுமே தாம் சாா்ந்த மக்களுக்கு எதனையாவது பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
55 minutes ago, கிருபன் said:

சமாதான செயற்பாட்டாளர் என்ற முறையில் பிரதேசித்த சொல்ஹெய்ம் இறுதி போரின் போது இடம் பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பொறுப்புக்கூறவேண்எயவராகவும் இருக்கின்றாா்.

அவர் தமிழ் இனப்படுகொலை அல்லது தமிழின அழிப்புக் குறித்து எங்காவது ஒரு கவலையாவது தெரிவித்திருக்கிறாரா(?) இந்த நிலையில் இவரது சமாதான முயற்சியை நம்பமுடியுமா?

58 minutes ago, கிருபன் said:

கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை தமிழ் தலைமைகள் மதிநுட்பமாகவும், சிறந்த இராஜதந்திரத்துடனும் கையாள்வதன் மூலமாக மட்டுமே தாம் சாா்ந்த மக்களுக்கு எதனையாவது பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

ரணிலையும் சிறிலங்காவையும் மீட்கும் வேலையில் அனுபவசாலிகளான சம் சும்முடனான தனியான பேச்சுத் தெளிவாக உணர்த்துவது மீண்டும் ஒருதடவை தமிழருக்கு ஆப்புத்தயார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nochchi said:

ரணிலையும் சிறிலங்காவையும் மீட்கும் வேலையில் அனுபவசாலிகளான சம் சும்முடனான தனியான பேச்சுத் தெளிவாக உணர்த்துவது மீண்டும் ஒருதடவை தமிழருக்கு ஆப்புத்தயார்.

சம்பந்தனும், சுமந்திரனும்... எந்த அரசியல் பொறுப்பும் அற்ற  இவரை சந்தித்ததன் மூலம்,
தமிழர்களுக்கு... மீண்டும் துரோகம் செய்கிறார்கள். 

  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப இது ஒரு சின்ன ஆரம்பம்...தொடர்ந்து பெரிய சாமானெல்லாம் முளைக்கும்
    • அப்ப அடுத்த ஆட்சியும் என் .பி.பி தான்...அழிக்க வென்றே ஈௐௐஊ௹ஊ ஸாணா
    • அர்ச்சனா உண்மையில் கோமாளியா அல்லது யாழ்பாண/புலன்பெயர் தலைமுறையின்  மனோநிலையை நன்கு Stady பண்ணிய மனோதத்துவவியலாளரா?   பிரச்சனைகளை  தீர்ப்பதை விட  பிரச்சனைக்கு காரணமானவராக தம்மால்  கற்பிதம் செய்தவர்களை நடுசந்தியில் நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டாலே  ஆர்கஸம் அடையும் மனோநிலை கொண்ட  ஒரு கூட்டத்தை திறமையாக புரிந்து கொண்டு செயற்படுகிறார்.   இவரது செயற்பாடுகள் வெறும் பேஸ்புக், யுருயூப் விசிலடிப்புகளுக்காக மட்டுமே. தொண்டர் உதவியாளர்கள் என்ற பிரச்சனை 2002 ம் ஆண்டில் இருந்து உள்ள பிரச்சனை.  அதை பற்றி அர்சனாவுக்கும் நீண்ட காலமாக தெரியும்.  இதனை  சுகாதார அமைச்சுன் கவனத்துக்கு வருவதற்கான போராட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று அந்த விடயம்  ஒரளவு அது முன்னேற்ற மான நிலையிலும் உள்ள நிலையில் அதனை மென்மேலும் வலுப்படுத்தக்கூட வகையில் சுகாதார அமைச்சுடன்  நேரடியாக பேசக்கூடிய  இயலுமை பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அர்ச்சனாவுக்கு உண்டு.  இருப்பினும் அதை விடுத்து சத்தியமூர்த்தி அவர்களின்  அலுவலக்கதுக்குள் அத்து மீறி  நுளைந்தது அவரோடு இவருக்கு இருக்கும்  தனிபட்ட ஈகோவுக்காகவும் இவரது சமூகவலைதள விசுலடிச்சான் குஞ்சுகளுக்காகவுமே.  மேலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடு  முழுவதும்  ஊழல் ஒழிப்பை முக்கிய பிரச்சனையாக கையிலெடுத்தி ருக்கக்கூடிய நிலையை புரிந்து கொண்டு   இவ்வாறு தடாலடியாக இவர் நடந்து கொள்வதும் ஒரு தந்திரம் தான். தானாக கனியும் கனிகளை தான் புகைபோட்டு தான் கனிந்தது என்ற பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதும் நோக்கம்.    ஏற்கனவே மருத்துவர்களைக்கெதிராக இவரது குற்றச்சாட்டுகள் இவரால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு மக்களுக்கு காட்டப்பட்டது. எதற்கும் இவரிடம் ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத,  அவதூறுகளை கண்ணை மூடிக் கொண்டு  நம்பும் ஒரு   மக்கட் கூட்டதை நன்கு புரிந்து செயற்படுகிறார்.  பொதுத் துறை ஊழலை ஒழிக்க உண்மையாக மனப்பூர்வமாக இவர் விரும்பினால் ஆதாரங்களை திரட்டி அதை  அரசிடம் கையளிக்கலாம். பாராளுமன்றத்தில் ஆதாரங்களை முறைப்படி வெளியிடலாம்.
    • உண்மைகளை மூடி மறைத்தால் அது  மேற்குலகுக்கு ஆதரவானது என்றும் உண்மைகளை சொன்னால் அது மேற்குலகுக்கு எதிரானது என்று ஒரு புதிய கொள்கை வகுக்கப்படுகிறது யாழ் களத்தில்.  உண்மையைச் சொல்வது ❤️ லைக் வேண்டுவதற்காக அல்ல. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.