Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, Kapithan said:

இனிவரும் காலங்களில், வடக்கு கிழக்கிற்கு உதவ விரும்புவோர் சிங்கள அரசாங்க நிர்வாகிகள்+அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் உதவ முயன்றால், ராஜிற்குக் கிடைக்கும் அதே வரவேற்பு அவர்களுக்கும் கிடைக்குமா என்பதே எனது கேள்வி.

கப்பிதான் நாங்கள் வரவேற்றோ எதிர்த்தோ ஏதாவது நடக்க போகிறதா?

இல்லைத் தானே.

எமது எண்ணத்துக்கு எழுதுபவைகளை எல்லாம் கணக்கிலெடுக்காதீர்கள்.

கருத்துக்களம் ஒரு பொழுது போக்குக் களம்.

  • Like 1
  • Replies 136
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

ஓணாண்டியார், நீங்கள் நினைப்பது போல அல்ல இங்கே விடயம். insider dealing என்றால்..... நான் ஒரு கொம்பனி கணக்கர். கணக்கு தயாரிக்கும் எனக்கு தெரிகிறது, இந்த முறை கொழுத்த லாபம் அல்லது பெரு நஷ்டம் எ

தமிழ் சிறி

@Kapithan மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்…. பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது.  அத்

விசுகு

வணக்கம்  உறவுகளே இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன் தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர் எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார் பாசத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

பாதுகாப்பு முக்கியம் என்பதை ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருக்கிறேன. அதில் இரண்டாம் கேள்விக்கே இடமில்லை. ஆனால் அவர் அரச தரப்புடன் உரையாடுவது , அவர்களின் ஆதரவுடன் அல்லது சம்மதத்துடன் வேலைத்திட்டங்களைச் செய்வதுதான் சாத்தியமானதுங்கூட. 

ஆனால் எனது கேள்வி, அரச தரப்புடன் வேறு ஆட்கள் இதே நோக்கத்துடன் உரையாட முட்பட்டால் அதனைப் பகிரங்கமாக  ஏற்றுக்கொள்வீர்களா ? (உங்களை அல்ல, பொதுவாகக் கேட்கிறேன். ஏனென்றால் இங்கே பலரும் தங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துளனர. அதில் எனக்கு உடன்பாடே) 

ஏனென்றால், கடந்த காலங்களில் அரசுடன், அரச அதிகாரிகளுடன் பேசிய பலருக்கு துரோகி முத்திரை குத்தப்பட்டதுதான் வரலாறு. 

👆

செருப்படி கேள்வி.. 👏

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

சிறியர்,

1) ராஜ் தொடர்பாக  எனது கருத்தை மிகத் தெளிவாகவே (வரவேற்பதாக) கூறியுள்ளேன். எனவே  அவரைப்பற்றியது அல்ல  எனது கரிசனை. 

2) சிங்களத்துடன் ஆரம்பத்திலிருந்தே சேர்த்து இயங்குபவர்களைப் பற்றி எவருக்குமே கேள்வி எழப்போவதில்லை.

 இனிவரும் காலங்களில், வடக்கு கிழக்கிற்கு உதவ விரும்புவோர் சிங்கள அரசாங்க நிர்வாகிகள்+அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் உதவ முயன்றால், ராஜிற்குக் கிடைக்கும் அதே வரவேற்பு அவர்களுக்கும் கிடைக்குமா என்பதே எனது கேள்வி.  

[ஏனென்றால் சிங்களத்துடன் (நன்நோக்குடன்) தொடர்புகொள்ளும் எல்லோரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டதே வரலாறு. ]

சிங்கள அரச நிர்வாகம் + அரசியல் வாதிகளின் அனுசரணை இல்லாமல்….
வடக்கு, கிழக்கிற்கு உதவிய காரணத்தால் மட்டுமே பல தன்னார்வ அமைப்புகளை
சிங்கள அரசு தடை செய்து, பயங்கரவாத பட்டியலில் சேர்த்தது உங்களுக்கும் நினைவிருக்கும். 

இனி வரும் காலங்களில் அரச தொடர்புடன் மட்டுமே தாயகத்தில் எதனையும் முதலிட முடியும்.

மக்களால் தெரிவு செய்யப் பட்ட யாழ். மாநகர சபை கூட… யப்பான் உதவியாக கொடுத்த 
பணத்தில்… மக்களின் உயிர்காக்கும் கருவியான தீயணைப்பு வாகனத்தை கூட வாங்க 
 விடாமல் அலைக்கழித்து சதி செய்தது சிங்களம்.

 நீங்கள் குறிப்பிட்ட நன் நோக்கத்துடன் எமக்கு உதவி செய்ய வந்த பலருக்கு
துரோகி பட்டம்  யாரால், எங்கு கட்டப் பட்டது என்று யாழ்.களத்தில் பதிவுகள் இருந்தால் 
இணைத்து விடுங்கள். வாசித்து விட்டு கருத்தை சொல்கின்றேன்.

17 hours ago, Kapithan said:

ஏனென்றால், எங்களுக்கு பணம் மட்டும்தான் கண்ணில் தென்படும். அது எப்படி வந்தது என்று தெரிந்தாலும் அது மட்டும் கண்களுக்குத் தெரியாது. 

கருவாடு வித்த காசு மணக்குமா என்ன? 

ஆரம்பத்தில்…  மேலுள்ள கருத்தை கேலியாக, எழுதியதும் நீங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Nathamuni said:

சிங்கப்பூரில், ஒரு ஐரோப்பிய வங்கியான பெயரிங் பேங்க்ல் வேலை பார்த்த ஒருவர் நிக் லீசன், இவர் தனது பெண் நண்பியுடன் அங்கே தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். திருமண வேலைகளும் நடந்து கொண்டிருந்தன.

அவர், பங்குசந்தையில், வங்கி அனுமத்திருந்த தொகையிலும் பார்க்க மிக அதிக தொகையை பங்கு சந்தையில் விட (சூதாட்டம் போலவே) அது இழப்பில் முடியப்போகிறது என்றவுடன், இரவோடிரவாக, கிடைத்த விமானத்தில், ஜெர்மனி வந்துவிட்டார். மறு நாள், லண்டன் கிளம்ப முனைந்த போது, சிங்கப்பூர் அரசின் கோரிக்கையில் கைதானார். 

லண்டன் திரும்பிய பெண் நண்பி, சில மாதங்களில் வேறு ஒரு பழைய நண்பரை பிடித்துக் கொண்டது வேறு கதை. இப்படி துரோகம் செய்யலாமா என்று மீடியா கேட்டபோது, அவர் நிக் சிறையில் இருந்து வர நீண்ட காலமாகலாம், அதுவரை காத்திருந்தால் வயதாகி விடும் என்று எடுத்தெறிந்து பேசி இருந்தார்.

அதேவேளை, நிக் ஐரோப்பாவில் இருந்த படியால், அவரை சிங்கப்பூருக்கு அனுப்புவது உடனடி சாத்தியம் இல்லாமல் போனது. சிங்கப்பூர் அரசு அவருடன், திரும்பி வந்து, விசாரணைக்கு உடன்படு. ஒரு வாரத்துக்கு மேல் சிறையில் வைத்திருக்க மாட்டோம். எங்கே தவறு என்று அறிந்து அதனை திருத்தவே முயல்கிறோம் என்று நேரடியாக உடன்பாடு செய்து கொண்டது.

அதன் பேரில் அவரும் சுஜமாக சிங்கப்பூர் சென்று விசாரணைக்கு ஒத்துழைத்து, (அவர் திருடவில்லை என்பது முக்கியமானது) வங்கியின் கட்டுப்பாட்டு முறைமையில் பலவீனம் என்று சிங்கப்பூர் அரசு கண்டறிந்து, அவரை இருவாரங்களில் அனுப்பி வைத்தது.

திரும்பி வந்த அவர், என்ன செய்யக்கூடாது என்பதில், இன்வெட்மென்ட் வங்கிகளுக்கு lecture கொடுத்து பெரும் பணம் சம்பாதித்து, இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது, பெண் நண்பி கவலைப்பட்டிருப்பார். இவரது துரோகம், சுஜநலம் குறித்து பல கட்டுரைகள் வந்தன.

சரி, இந்த செய்தியின் நோக்கம், ராஜ் ராஜரத்தினத்தின், பெரும் அனுபவத்தினை பெற வேண்டுமே அன்றி, அவர் சிறைக்கு போனார் என்பது குறித்து பேசுவது தேவையில்லாத வேலை. 

பங்கு வர்த்தகம் பகுதியில் இந்த திரைப்படம் ( நிக் லீசன் கதை) முன்பு இணைத்திருந்தேன், தற்போது அந்த காணொளி நீக்கப்பட்டுவிட்டது.

நிக் லீசன் 4 வருடம் சிறைதண்டனை சிங்கப்பூரில் அனுபவித்தார் என கருதுகிறேன், அந்த இடைப்பட்ட காலத்தில் புற்றுநோயிற்கும் ஆளாகியிருந்ததாக நினைவில் உள்ளது.

இவரது பிரதான வர்த்தகம் Arbitrage.

இவர் வர்த்தகம் செய்தது சிங்கப்பூரில் இருந்து ஜப்பானிய பங்கு சந்தை குறியீட்டை Nikkei 225 (Index) ,ஜப்பானிய பங்கு வர்த்தக சந்தைக்கும் சிங்கப்பூர் பங்கு வர்த்தக சந்தைக்கிடையேயான நிக்கி விலையில் உள்ள முரண்பாட்டினை வைத்து பண்மீட்டுதல் இதனை Arbitrage என அழைபார்கள், திரைப்படத்தில் பல இடங்களில் அதனை விளக்கியுள்ளார்கள்.

Arbitrage பாதுகாப்பான வியாபாரம், ஆனால் இவர் speculation ஈடுபட்டதாலேயே பெரிய இழப்பிற்கு ஆளானார். அத்துடன் stop loss என்பது இவர் வர்த்தகத்தில் இல்லை என்பது திரைப்படத்தினூடு காட்டப்பட்டுள்ளது.

இவர் செய்த குற்றம் ஏமாற்றுவேலை, ஆனால் முடிந்தளவிற்கு இவர் பக்க சார்பாகவே கதையினை காட்ட முயன்றுள்ளார்கள் ஆனால் விடயம் புரிந்தவர்களுக்கு அப்படி தெரியாது என நினைக்கிறேன்.

முழுக்க முழுக்க இவரது தவறான நடவடிக்கையால் ஏற்பட்ட இழாப்புகளை சக ஊழியருக்காகவும் (60000 இழப்பினை 10 மில்லியன் இழப்புடன் தொடர்புபடுத்தி திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது), அனைத்து ஊழியர்களின் ஊதிய உயர்வுக்காகவும், தனது வாடிக்கையாளரினை இழக்கக்கூடாது என்பதற்காக ஏற்பட்ட இழப்பாக திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

அனைத்து மோசடியிலும் இறுதியாக பாதிக்கப்படும் உணவுச்சங்கிலியில் இறுதியில் இருக்கின்ற சாமானிய மக்களே! வீடு, சொத்து சிலர் தமது குடும்பங்களையும் இழக்கிறார்கள்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, தமிழ் சிறி said:

 

ஆரம்பத்தில்…  மேலுள்ள கருத்தை கேலியாக, எழுதியதும் நீங்கள் தான்.

Ran Rajaratnaத்தின் காசைப்பற்றி குறிப்பிடவில்லை. பொதுவாக எல்லா மட்டங்களிலும் உள்ள நடைமுறைக்களைத்தான் குறிப்பிட்டேன். ராஜ் தொடர்பாக எனது நிலைப்பாட்டை தெளிவாகவே கூறியுளேன். எனவே அவரை வைத்து கருத்தாடுதல் தேவையற்றது. 

இனிவரும் காலப்பகுதியில் ராஜைப் போன்று பலரும் முன்வரப்போகிறார்கள். அவர்களையும் வரவேற்பீர்களா என்பதுதான் எனது கேள்வி. 

3 hours ago, ஈழப்பிரியன் said:

கப்பிதான் நாங்கள் வரவேற்றோ எதிர்த்தோ ஏதாவது நடக்க போகிறதா?

இல்லைத் தானே.

எமது எண்ணத்துக்கு எழுதுபவைகளை எல்லாம் கணக்கிலெடுக்காதீர்கள்.

கருத்துக்களம் ஒரு பொழுது போக்குக் களம்.

எமக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறதல்லவா ? துரோகிப்பட்டத்தையும், தேச பக்தன் விருதையும் பொழுதுபோக்கிற்காகக் கொடுக்கமுடியாதுதானே 😉

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Kapithan said:

இனிவரும் காலப்பகுதியில் ராஜைப் போன்று பலரும் முன்வரப்போகிறார்கள். அவர்களையும் வரவேற்பீர்களா என்பதுதான் எனது கேள்வி. 

ஐயா! வடக்கு கிழக்கிற்கு உதவ நீங்கள் விரும்பினால் தாராளமாக செய்யலாம். யாரும் உங்களை தடுக்கப்போவதில்லை. துரோகி பட்டம் கொடுத்துவிடுவார்கள் என்று பயமிருந்தால் செய்யாதீர்கள், அப்போதும் யாருமுங்களை வற்புறுத்தப்போவதில்லை. நல்லது செய்ய நினைப்பவர் அவர் என்ன சொல்வார், இவர் என்ன சொல்வார்? என்று எதிர்பாத்து செய்வதில்லை. நீங்கள் முன்பு மற்றவர்களை முதலிட இங்கு கருத்தெழுதி வாக்குவாதம் செய்தீர்கள். சிங்களம் தடங்கல் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி. ஆனால் சிங்களம் தலையீட்டுடன் செய்வது நமது மக்களுக்கு நன்மை பயக்காது என்பதே பலரின் வாதமாகவும், அவர்கள் தேவையானபோது அழைப்பதும், தேவையற்றபோது தடைசெய்வதும், அலைக்கழிப்பதும் கட்டுப்பாடுகள் போடுவதுமே நமது விசனத்துக்கு காரணம். நல்லது  செய்ய நினைக்கும் நீங்கள் மற்றவரின் அபிப்பிராயத்துக்காக காத்திருக்கத் தேவையுமில்லை மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கத்தேவையுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஈழப்பிரியன் said:

கருத்துக்களம் ஒரு பொழுது போக்குக் களம்.

2004 இல் இணைந்தபோது இப்படித் தோன்றவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Kapithan said:

உண்மையான, நடைமுறைச் சாத்தியமான விடயம் இதுதான்.🖕

ஆனால், இந்த அணுகுமுறை இவருக்கு மட்டுமே பிரத்தியேகமானதா அல்லது புலம்பெயர்ந்த தமிழர் எல்லோருக்கும் பொதுவானதா ? 

உங்கள் கேள்வி உள் நோக்கம் கொண்டது அதனால் பதில் எழுதுவதை தவிர்த்தேன்

இந்த திரி பொறுப்புடன் பயணிக்கணும் என்று முதலிலேயே எழுதிவிட்டேன்

இவரது வரவை ஆதரிப்பதற்கும்

சிலரது வரவை இங்கே நானே எதிர்த்ததற்கும் காரணம் நான் படித்த பட்ட பாடங்கள் தான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, satan said:

ஐயா! வடக்கு கிழக்கிற்கு உதவ நீங்கள் விரும்பினால் தாராளமாக செய்யலாம். யாரும் உங்களை தடுக்கப்போவதில்லை. துரோகி பட்டம் கொடுத்துவிடுவார்கள் என்று பயமிருந்தால் செய்யாதீர்கள், அப்போதும் யாருமுங்களை வற்புறுத்தப்போவதில்லை. நல்லது செய்ய நினைப்பவர் அவர் என்ன சொல்வார், இவர் என்ன சொல்வார்? என்று எதிர்பாத்து செய்வதில்லை. நீங்கள் முன்பு மற்றவர்களை முதலிட இங்கு கருத்தெழுதி வாக்குவாதம் செய்தீர்கள். சிங்களம் தடங்கல் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி. ஆனால் சிங்களம் தலையீட்டுடன் செய்வது நமது மக்களுக்கு நன்மை பயக்காது என்பதே பலரின் வாதமாகவும், அவர்கள் தேவையானபோது அழைப்பதும், தேவையற்றபோது தடைசெய்வதும், அலைக்கழிப்பதும் கட்டுப்பாடுகள் போடுவதுமே நமது விசனத்துக்கு காரணம். நல்லது  செய்ய நினைக்கும் நீங்கள் மற்றவரின் அபிப்பிராயத்துக்காக காத்திருக்கத் தேவையுமில்லை மற்றவர்களுக்கு சொல்லிக்கொண்டு இருக்கத்தேவையுமில்லை.

எனது கேள்வி இலங்கை அரசாங்கம் தொடர்பானது இல்லையே ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 hours ago, விசுகு said:

1) உங்கள் கேள்வி உள் நோக்கம் கொண்டது அதனால் பதில் எழுதுவதை தவிர்த்தேன்

2) இந்த திரி பொறுப்புடன் பயணிக்கணும் என்று முதலிலேயே எழுதிவிட்டேன்

3) இவரது வரவை ஆதரிப்பதற்கும்

4) சிலரது வரவை இங்கே நானே எதிர்த்ததற்கும் காரணம் நான் படித்த பட்ட பாடங்கள் தான். 

1) ஒரு கேள்வி கேட்பது பதிலை எதிர்பார்த்துத்தான். இதில் உள்நோக்கம் , வெளிநோக்கம் என்பதெல்லாம் கிடையாது.

2) அப்படி இதுவரை பயணிப்பதாக எண்ணவில்லையா?

3) + 4) ஒருவரது வரவை வரவேற்பதும் எதிர்ப்பதும் அவரவர் உரிமை. உங்கள் உரிமையில் தலையிட ஒருவருக்கும் உரிமையில்லை. 

ஆனால், 

எனது கேள்வி வெரி சிம்பிள். அதற்குரிய பதிலை ஒரு சில சொற்களிலேயே கொடுக்க முடியும்.

மனமுண்டானால் மார்க்கமுண்டு. 

😉

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kapithan said:

எனது கேள்வி இலங்கை அரசாங்கம் தொடர்பானது இல்லையே ? 

அப்புறம் எதற்கு இங்கே மினக்கெடுகிறீர்கள்?

மற்றவர்களின் அபிப்பிராயம் கேட்டுத்தான் நல்லது செய்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால்; உங்கள் வாழ்நாளில் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு முடிவெடுத்தால் அதை யாருக்காகவும் காத்திராதீர்கள், பிற்போடாதீர்கள், மாற்றாதீர்கள். சட்டுப்புட்டென்று காரியத்தை முடித்து விடுங்கள், அதை யாராலும் தடுக்க முடியாது.  ஆறப்போட்டீர்களென்றால் உங்கள் மனமே மாற இடமுண்டு.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, satan said:

அப்புறம் எதற்கு இங்கே மினக்கெடுகிறீர்கள்?

மற்றவர்களின் அபிப்பிராயம் கேட்டுத்தான் நல்லது செய்வேன் என்று நீங்கள் அடம்பிடித்தால்; உங்கள் வாழ்நாளில் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு முடிவெடுத்தால் அதை யாருக்காகவும் காத்திராதீர்கள், பிற்போடாதீர்கள், மாற்றாதீர்கள். சட்டுப்புட்டென்று காரியத்தை முடித்து விடுங்கள், அதை யாராலும் தடுக்க முடியாது.  ஆறப்போட்டீர்களென்றால் உங்கள் மனமே மாற இடமுண்டு.   

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்பதாகப் பதில் இருக்கிறது. 

எல்லோரும், பதிலளித்தால் பிடிபட்டுவிடுவோம் எனப் பயப்படுகிறார்கள் போலத் தெரிகிறது. 

(கால மாற்றத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதனால் வரும் மனமாற்றமும் நன்மையே)

13 hours ago, விசுகு said:

 

இவரது வரவை ஆதரிப்பதற்கும்

சிலரது வரவை இங்கே நானே எதிர்த்ததற்கும் காரணம் நான் படித்த பட்ட பாடங்கள் தான். 

யாருடைய வரவை வரவேற்கிறீர்கள், யாருடைய வரவை எதிர்க்கிறீர்கள் ? 

வெளிப்படையாகக் கூறலாமே ? 

😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களுக்கு வேறு ஏதோ பிரச்சனைப்போலுள்ளது, அதற்கு தகுந்த ஆளைத் தேடுங்கள். நன்றி வணக்கம்!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, vasee said:

பங்கு வர்த்தகம் பகுதியில் இந்த திரைப்படம் ( நிக் லீசன் கதை) முன்பு இணைத்திருந்தேன், தற்போது அந்த காணொளி நீக்கப்பட்டுவிட்டது.

நிக் லீசன் 4 வருடம் சிறைதண்டனை சிங்கப்பூரில் அனுபவித்தார் என கருதுகிறேன், அந்த இடைப்பட்ட காலத்தில் புற்றுநோயிற்கும் ஆளாகியிருந்ததாக நினைவில் உள்ளது.

இவரது பிரதான வர்த்தகம் Arbitrage.

இவர் வர்த்தகம் செய்தது சிங்கப்பூரில் இருந்து ஜப்பானிய பங்கு சந்தை குறியீட்டை Nikkei 225 (Index) ,ஜப்பானிய பங்கு வர்த்தக சந்தைக்கும் சிங்கப்பூர் பங்கு வர்த்தக சந்தைக்கிடையேயான நிக்கி விலையில் உள்ள முரண்பாட்டினை வைத்து பண்மீட்டுதல் இதனை Arbitrage என அழைபார்கள், திரைப்படத்தில் பல இடங்களில் அதனை விளக்கியுள்ளார்கள்.

Arbitrage பாதுகாப்பான வியாபாரம், ஆனால் இவர் speculation ஈடுபட்டதாலேயே பெரிய இழப்பிற்கு ஆளானார். அத்துடன் stop loss என்பது இவர் வர்த்தகத்தில் இல்லை என்பது திரைப்படத்தினூடு காட்டப்பட்டுள்ளது.

இவர் செய்த குற்றம் ஏமாற்றுவேலை, ஆனால் முடிந்தளவிற்கு இவர் பக்க சார்பாகவே கதையினை காட்ட முயன்றுள்ளார்கள் ஆனால் விடயம் புரிந்தவர்களுக்கு அப்படி தெரியாது என நினைக்கிறேன்.

முழுக்க முழுக்க இவரது தவறான நடவடிக்கையால் ஏற்பட்ட இழாப்புகளை சக ஊழியருக்காகவும் (60000 இழப்பினை 10 மில்லியன் இழப்புடன் தொடர்புபடுத்தி திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது), அனைத்து ஊழியர்களின் ஊதிய உயர்வுக்காகவும், தனது வாடிக்கையாளரினை இழக்கக்கூடாது என்பதற்காக ஏற்பட்ட இழப்பாக திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

அனைத்து மோசடியிலும் இறுதியாக பாதிக்கப்படும் உணவுச்சங்கிலியில் இறுதியில் இருக்கின்ற சாமானிய மக்களே! வீடு, சொத்து சிலர் தமது குடும்பங்களையும் இழக்கிறார்கள்.

தகவல்களுக்கு நன்றி. ராஜ் ராஜரட்ணம் தன் குற்றத்திற்குத் தண்டனை அனுபவித்து விட்டார், எனவே அவரைப் பற்றி மேலும் பேச எதுவுமில்லை. ஆனால், செய்த குற்றம், தண்டனை என்பவை பற்றி சில வெள்ளையடிப்பு முயற்சிகளும், தவறான தகவல்களும் மேலே சிலரால் பரப்பப் படுகின்றன. உண்மையான , பொது வெளியில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில்:

1. ராஜ் ராஜரட்ணம் அரசுடன் plea deal எதுவும் செய்யாமல் தண்டனையை ஏற்றுக் கொண்டார். அவர் தெரிவு அது. ஆனால், கூடப் பிடிபட்ட ஒரு இந்திய அமெரிக்கர் கையும் மெய்யுமாக ராஜரட்ணம் பிடிபட wire அணிந்து உதவினார். Plea deal- இது அமெரிக்க நீதித் துறையினால் மக்களின் வரிப்பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி விசாரணையை விரைவாக்கும் ஒரு முறையேயொழிய, அடிமைகளின் எசமான்களால் எழுதப் பட்ட அமெரிக்க சட்டத்தின் விளைவல்ல😅. இந்த முறை பற்றித் தான் ராஜரட்ணம் தன் நூலில் குறைப்படுகிறார். ஆனால், plea deals இல்லா விட்டால் ராஜரட்ணம் மட்டுமல்ல, எந்தப் பெரிய சுறாவையும் சின்ன மீன் போட்டுப் பிடிக்க இயலாமல் போகும், குற்றமே வியாபாரமாக மாறும்.

2. ராஜரட்ணம் சிறை மட்டும் செல்லவில்லை 93 மில்லியன் டொலர்கள் தண்டமும் கட்டினார். எனவே, குற்ற வழியில் கிடைத்த (illegal proceeds) பணத்தின் ஒரு பகுதியை இழந்திருக்கிறார்.

3. ராஜரட்ணம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் நீதி மறு சீரமைப்புப் (judicial reform) பற்றிப் பேசுகிறார். அவர் பேசும் இந்த நீதி மறு சீரமைப்பு, கிம் கர்டாஷியன் பேசும் மறு சீரமைப்பை விட வித்தியாசமானது. Wall Street நிதி நிறுவனங்களை, கடும் சட்டங்கள் மூலம் அரசு கட்டுப் படுத்தக் கூடாது என்று வாதிடும் deregulation ஆதரவாளர்களும் ராஜரட்ணம் பேசும் நீதி மறு சீரமைப்பையே ஆதரிக்கின்றனர். இதற்கும், உண்மையில் சாதாரண அமெரிக்க மக்களுக்கு அவசியமான நீதி மறு சீரமைப்பிற்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை!.  

4. ராஜரட்ணம் அவர்களின் தண்டனை ஒரு இந்திய, யூத "ஷதி" என்று வாதிடும் சிலரும் இருக்கிறார்கள் (யாழில் அல்ல!). ராஜரட்ணத்தைக்  கையும் களவுமாகப் பிடித்த இந்திய அமெரிக்கரான பிரீத் பராரா, பிரபலமான, மிகவும் நேர்மையான ஒரு US attorney. SDNY இல் இவர் இருந்த போது, பல பணமுதலைகளைச் சிக்க வைத்து ஏராளமான தண்டப் பணம் கட்ட வைத்த கெட்டிக் காரர். எனவே, சதி என்பதை விட, ஒரு நீதியான விசாரணையில் ராஜரட்ணம் தண்டனை பெற்றார் என்பதே உண்மை.  

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Kapithan said:

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்பதாகப் பதில் இருக்கிறது. 

எல்லோரும், பதிலளித்தால் பிடிபட்டுவிடுவோம் எனப் பயப்படுகிறார்கள் போலத் தெரிகிறது. 

(கால மாற்றத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதனால் வரும் மனமாற்றமும் நன்மையே)

யாருடைய வரவை வரவேற்கிறீர்கள், யாருடைய வரவை எதிர்க்கிறீர்கள் ? 

வெளிப்படையாகக் கூறலாமே ? 

😀

மன்னிக்கவும்

ஏற்கனவே வாழைப்பழத்தை உரித்து வாயிலும் வைத்தாகிவிட்டது.

இனி சுத்தியலால் தான் அடித்து தள்ளவேண்டும் என்றால் உங்கள் பல் மீது எனக்கு மிகுந்த அக்கறை உண்டு ராசா 😂

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, விசுகு said:

மன்னிக்கவும்

ஏற்கனவே வாழைப்பழத்தை உரித்து வாயிலும் வைத்தாகிவிட்டது.

இனி சுத்தியலால் தான் அடித்து தள்ளவேண்டும் என்றால் உங்கள் பல் மீது எனக்கு மிகுந்த அக்கறை உண்டு ராசா 😂

எனக்கு உங்கள் வயதின் மீது மிகுந்த மரியாதை  இருக்கிறது பெரியவரே. 🤣(வெளிப்படையாகக் கூறுவதற்கு நெஞ்சுரம் வேண்டுமல்லவா 😀)

காசிருப்பவர்களுக்கு , எங்கள்(போலித் தமிழ்த்) தேசியவாதிகள் பாய்ந்தடித்தோடிக்கொண்டு தேசப்பற்றாளர் விருது கொடுப்பார்கள் என இங்கே பலரின் கருத்துக்களைப் பார்த்ததில் புரிகிறது. 

 

 

15 hours ago, Justin said:

. எனவே, சதி என்பதை விட, ஒரு நீதியான விசாரணையில் ராஜரட்ணம் தண்டனை பெற்றார் என்பதே உண்மை.  

உண்மை என்பதற்குப் பதிலாக, பொருத்தம் என வந்திருந்தால் சிறப்பு. 

 

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் எழுதிய நூலை படித்தேன். அமெரிக்காவோ மேற்குலகோ ஒரு வேற்று நாட்டவர் உயர்ந்த இடத்துக்கு வருவதற்கு எத்தனை சவால்களை சந்திக்கனுன்னு தெளிவாக எழுதி வைச்சிருக்கிறார். இன்றைய கிரிப்டே கரன்சியின் முன்னோடி இவர் என்றால் தவறில்லை. 

இவரை உளவு பார்க்க.. எவ் பி ஐ ஏஜென்டே.. வேலைக்கு போயிருக்கிறார். அவர் தமிழரல்ல. வெள்ளை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Kapithan said:

 

காசிருந்தால் போதும்  அவர்களுக்கு , எங்கள்(போலித் தமிழ்த்) தேசியவாதிகள் பாய்ந்தடித்தோடிக்கொண்டு தேசப்பற்றாளர் விருது கொடுப்பார்கள் என இங்கே பலரின் கருத்துக்களைப் பார்த்ததில் புரிகிறது. 

 

மிகவும் மட்டமான

பொறுப்பற்ற கருத்து😡

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kapithan said:

 

 

உண்மை என்பதற்குப் பதிலாக, பொருத்தம் என வந்திருந்தால் சிறப்பு. 

 

கப்ரன், கிடைக்கிற சந்தர்ப்பங்களிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எதையோ விதைக்கிறீர்கள் போல இருக்கே? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, Justin said:

கப்ரன், கிடைக்கிற சந்தர்ப்பங்களிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எதையோ விதைக்கிறீர்கள் போல இருக்கே? 🤣

நிச்சயமாக  விசத்தையும், பிரிவினையையும் விதைக்கவில்லை. அதை தாங்கள் உறுதியாக  நம்பலாம். 😀

1 hour ago, விசுகு said:

 

மிகவும் மட்டமான

பொறுப்பற்ற கருத்து😡

எது மட்டமான கருத்து? 

போலித் தமிழ்த் தேசியவாதிகள் என்பதா ? 

Edited by Kapithan
  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Kapithan said:

நிச்சயமாக  விசத்தையும், பிரிவினையையும் விதைக்கவில்லை. அதை தாங்கள் உறுதியாக  நம்பலாம். 😀

உயிர் சுவட்டு எரிபொருள் விற்கும் கம்பனிகள் நேரடியாக "பசுமைத் தொழில் நுட்பம் உங்களுக்குக் கேடு"  என்று கூவி விற்பதில்லை. "விஞ்ஞானம் சொல்வது முற்றிலும் உண்மையில்லை" என்று emphatic ஆகச் சொல்லி, ஒரு சந்தேகத்தை விதைப்பார்கள்! இப்படி விதைத்த சந்தேகத்தை நேரம் வரும் போது தங்களுக்குச் சார்பாக அறுவடை செய்வார்கள்!

இதைத் தான் சிறுகச் சிறுக விதைத்தல் என்பது! இப்படி உண்மை எது, பொய் எது, என்கிற குழப்பத்தை உருவாக்கி ஒரு சிறு குழுவை பின்னே வர வைத்து விட்டால், அறுவடை நாள் விதைத்தவரின் தரப்பிற்கு மிகச் செல்வம் தரும் நாளாக இருக்கும்! உங்களுக்குப் பின்னால் ஏற்கனவே எடுபட்டு வரும் ஒரு குழு இருக்கிறது, எனவே நீங்கள் விதைப்பதும் தொடரும்!

இதைத் தவிர உங்களுக்கு நான் சொல்ல வேறெதுவும் இல்லை! 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

நிச்சயமாக  விசத்தையும், பிரிவினையையும் விதைக்கவில்லை. அதை தாங்கள் உறுதியாக  நம்பலாம். 😀

எது மட்டமான கருத்து? 

போலித் தமிழ்த் தேசியவாதிகள் என்பதா ? 

நாங்கள் எழுதும் கருத்துக்களை வாசிக்காமல் அல்லது கிரகிக்காமல் கேள்விமேல் கேள்விகளை மட்டுமே போட்டுத்தாக்குவதையே குறிக்கோளாக கொண்டிருப்பதும் ஒருவிதமான பொறுப்பற்றதனமே. எமது நேரத்தையும் கணக்கில் எடுப்பவர்களே நேரத்தின் அருமை தெரிந்த நண்பர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காசு எப்படி வந்திருந்தாலும் சரி, எப்படி ஏமாத்து வேலை செய்து இருந்தாலும் சரி புலி ,தேசியம் என்று சொன்னால் தப்பிக்கலாம் என்று இங்கே பல பேரது  எழுத்தை வாசிக்கும் போது தெரியுது 
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ரதி said:

காசு எப்படி வந்திருந்தாலும் சரி, எப்படி ஏமாத்து வேலை செய்து இருந்தாலும் சரி புலி ,தேசியம் என்று சொன்னால் தப்பிக்கலாம் என்று இங்கே பல பேரது  எழுத்தை வாசிக்கும் போது தெரியுது 
 

மிகத் தவறான கருத்து

உங்களுக்கு அவரின் பங்களிப்பு மற்றும் தேச நேசிப்பு பற்றி எதுவும் தெரியாது. இவ்வாறு எல்லோரையும் ஒரே சாக்கில் போடும் உங்கள் போன்றோர் தேசத்தை நேசித்திருக்க வாய்ப்பில்லை. 

 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மற்றைய உறுப்பினர்களை புலிகள் தேடி தேடி வேட்டையாடியது உண்மைதான், ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு.  ஏனென்றால் ஏனைய இயக்கங்களை புலிகள் தடை செய்தபோது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் பூரண புலிகள் கட்டுப்பாட்டு பகுதியிலேயே இருந்தன, அப்படியிருக்க புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த குடும்பங்களை  எதுக்கு கைது செய்துகொண்டுபோய் விசாரிக்கணூம் எனும் சந்தேகம்தான். புலிகள் ஏனைய இயக்க உறுப்பினர்களை அழித்த விதம் ஏற்றுக்கொள்ள முடியாததுதான்,  அதுவும் கிட்டர் ரெலோ இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியதும் கொத்து கொத்தாக போட்டு தள்ளியதும் கொடூரத்தின் உச்சம் அதை மறுப்பதற்கில்லை. அது தவறு என்று இயக்கமே உணர்ந்தது, அதனால்தான் ஈபி ஆர் எல் எவ்வை தடை செய்தபோது அதே வேகத்திலான அழித்தொழிப்பு நடக்கவில்லையென்பதே வரலாற்று பதிவு. பின்னாட்களில் கொடூரமாக அழிக்கப்பட்ட ரெலோவைவிட, ஈபி இந்தியாவுடன் சேர்ந்து சொந்த மக்கள் போராளிகளை எப்படியெல்லாம் நரபலி எடுத்தது என்பது எவருக்கும் தெரியாத ஒன்றல்ல, அத்தோடு இவர்கள் அன்றே முற்றாக அழிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள் என்று இன்றுவரை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டே வருகிறது.,அதற்கு கண்முன்னால் உள்ள உதாரணம் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்தியா இலங்கையென்று மாறி மாறி ஒட்டி பிழைத்து பின்னாளில் புலிகளுடன் நல்லுறவாக முயற்சித்து கூட்டமைப்பில் இணைந்து பன் முகங்கள் காட்டினாலும், அந்நாளைய மண்டையன் குழு தலைவர் இவர் என்பதை எந்த மக்களும் மறப்பதற்கு தயாரில்லை. அதனால்தான் இவர்கள் அழிவுகளை அவர்கள் இயக்கத்தை சேர்ந்த ஆதரவாளர்களை  தவிர எந்த பொதுமக்களாலும் நினைவுகூரபடுவதில்லை.  புலிகள் சக இயக்கங்களை அழித்தது தமது தலைமையை பாதுகாக்கவல்ல, அவர்கள் களத்திலிருந்து அவர்களை முற்றாக அப்புறபடுத்தியதற்கு காரணம், போராடட்ம் என்பதை முற்றுமுழுதாக புலிகளுடன் சொறிவதையும், வெறும் மது சிகரெட் வாகனங்கள் என்று விலாசம் காட்டுவதையும், அனைத்துக்கும் மேலாக வெறும் பேச்சுக்கு தனியரசு என்று அமைக்க புறப்பட்டு முற்றுமுழுதாக இந்தியாவின் வருகைக்கும் அவர்கள் கையில் எம் போராட்ட சக்திகளை சரணாகதி அடைய வைக்கவும் காத்திருந்த ஒரு காரணமே. அது உண்மையென்பதை நிரூபிக்க அவர்களே பின்னாளில் இலங்கை வந்த இந்திய படைகளுடன் தேனிலவு கொண்டாடி மகிழ்ந்தார்களென்பது காலத்தின் பதிவு. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தில் எதற்கு என்னையும் ரஞ்சித்தையும் மென்ஷன் பண்ணினீர்கள் கோசான்? நாங்கள் இருவர் மட்டுமே புலிகள் பக்க நியாயத்தை பேசுகிறவர்களா? அலல்து புலிகள் அமைப்பும் அதன் கொள்கை விசுவாசம் போராட்ட உறுதி, தன்மானம் எல்லாம் ஓரிருவர்களுக்குரியதா? சரி , இந்த விஷயத்தில் கடஞ்சாபோல தனது கருத்தை சொல்லலாம்,  அல்லது நீங்கள் கேட்டதற்காக எனது பக்க கருத்தை நான் சொல்லலாம், ஆனால் இடையில் நின்று மறுத்துரைக்க யாருமில்லையா என்று குரலெழுப்பும் நீங்கள் எந்த பக்கத்திலிருந்து  என்று அறிய மிகுந்த ஆவல். பொதுமக்களில் ஒருவரென்று சொல்லி தப்பிவிடாதீர்கள், புலிகள் போராடியதே பொதுமக்களுக்காகதான், புலிகளுக்கெதிரான இயக்க ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று புலிகள் எதிர்ப்பு  பொதுமக்களும் இருந்தார்கள் , இந்த இருபக்கத்தில் கோஷான் எந்த பக்கமிருந்து ஆரவாரிக்கிறீர்கள்?
    • பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
    • பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
    • அவசரமாக வாசிக்காமல் ஆறுதலாக கிரகித்து வாசிக்கவேண்டும் @Kapithan. நான் அசாத்தை விரட்டிய இஸ்லாமியத் தீவிரவாதிகளை நல்லவர்கள் என்று சொல்லவில்லை! அவர்கள் கொடுங்கோலன் அசாத்தைவிட பரவாயில்லை. அதனால்தான் சிரிய மக்கள் அசாத்தின் வீழ்ச்சியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றார்கள். இஸ்லாமியத் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாறவும், தலிபான் போன்று ஷரியாச் சட்டங்களை  நடைமுறைப்படுத்தவும் முயலலாம். எப்படி என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.