Jump to content

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

கறுப்பின மக்களை விகிதாசாரத்தில் குறிவைத்த "போதைக்கு எதிரான போர்" முதல், பெரும்பான்மையான கறுப்பினப் பகுதிகளில் வெகுஜன சிறைவாசம் மற்றும் அதிக-காவல்துறை வரை - அமெரிக்க குற்றவியல் நீதி அமைப்பின் வன்முறை மற்றும் கறுப்பின அமெரிக்கர்களுக்கு எதிரான சமத்துவமின்மை ஆகியவை இனவெறியின் நீண்ட வரலாற்றால் தூண்டப்படுகின்றன.

இது, எனதல்ல, கூகிள் மொழிபெயர்ப்பு.

இதில் எங்கே ஏழை கறுப்பினத்தவர்கள் என்று சொல்ல பட்டிருக்கிறது?

விதண்டாவாதம் செய்ய வேறு யாரையும் பாருங்கள். இதுக்கும் மேலே, நான் முன்னர் செய்த முடிவு சரியானது என்றே கருதுகிறேன், மேலும் கருத்தாடல் இப்படியானவர்களுடன் இல்லை.

அப்படியா?😂 அமெரிக்காவில் "பெரும்பான்மையான கறுப்பினப் பகுதிகள் (black majority neighborhoods/ black neighborhoods) என்றால் என்ன Upper Manhattan அல்லது அட்லான்ரா என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? Inner cities என்று அழைக்கப் படும் பிலாடெல்பியா, ஓக்லாண்ட், தென் சிக்காகோ இவை தான் இவர்கள் குறிப்பிடும் கறுப்பினப் பெரும்பான்மை பகுதிகள்.

இதைத் தான் சொன்னேன்:  கறுப்பினப் பெரும்பான்மைப் பகுதிகளில் மத்திய வகுப்பிலும் கீழ் நிலை மக்கள் வாழ்கிறார்கள் என்ற புரிதலை யூரியூப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாது. Read, Write, and Read more!

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

ஓணாண்டியார், நீங்கள் நினைப்பது போல அல்ல இங்கே விடயம். insider dealing என்றால்..... நான் ஒரு கொம்பனி கணக்கர். கணக்கு தயாரிக்கும் எனக்கு தெரிகிறது, இந்த முறை கொழுத்த லாபம் அல்லது பெரு நஷ்டம் எ

தமிழ் சிறி

@Kapithan மேலே மேற்கோள் காட்டியவர்களின் கருத்துக்களை வாசித்துப் பார்த்தீர்களானால்…. பலர் அவரை நேரடியாக சந்தித்தும், நீண்ட காலமாக தாயக தொடர்பிலும் இருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது.  அத்

விசுகு

வணக்கம்  உறவுகளே இவரது  தந்தையை  நான்  சந்தித்திருக்கின்றேன் தாயகத்தின்  மிகப்பெரும்  பற்றாளர்  மற்றும்  கொடையாளர் எதைச்செய்தாலும்  அம்மாவிடம் கேட்டுவிட்டு தருகின்றேன் என்பார் பாசத

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

குறைந்தபட்சம் வெள்ளைகள் பின்புறம் கழுவும் அடிமைப்புத்தியை விடுத்து, ஒரே தோல் நிறம் கொண்ட சக தமிழருக்கு, முன் ஒருபோதுமே சான்றாக எடுத்துக்கொள்ளாத ஒட்டுகேட்டலை சான்றாக எடுத்து நீதிபதி அநீதி இழைத்துள்ளார் என்ற நிதர்சனத்தை ஏற்று, தேவையில்லாத அலம்பறைகளை விடுத்து நகர்வோம்.

அவரது புத்தகத்தில், race card பாவிக்கவில்லை, பாவிக்க முடியாது. ஆனால் வாசிப்பவர்கள், வசனங்களுக்கு இடையே உள்ள விடயங்களை புரியும் அறிவு இருக்க வேண்டும். (read between the lines)

இந்த முதிர்வு இல்லாத கோதாரி (கிம் காடசியன்) அலம்பறை காரணமாகவே, கருத்தாடலை தவிர்த்தாலும், என்னையும் கவனி என்று வந்து முதுகு சொறியாமல், விசயம் இருந்தால் மட்டும் பதில் தரலாம், இல்லாவிட்டால் தேவையில்லை.

நீங்கள் முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் 
கிளிண்டனுக்கு பங்கம் விளைவித்தது மொனிக்காவுடனான தொடர்பு இல்லை 
கோர்டில் பொய் சொன்னதுதான் பெரும் சிக்கலனானது 

ராஜரட்னம் ஒன்றும் ஹ் ராஜா இல்லை கோடடாவது மயிராவது என்று புத்தகம் எழுத 
அமெரிக்க நீதித்துறை அரசு மேன்மையினை கண்ணின் மணிபோல மதிப்பேன் என்று சத்தியம் செய்தபின்புதான் அமேரிக்க பிரஜாவுரிமை கிடைக்கிறது இதில் மில்லிமீட்டர் சறுக்கினாலும் பிரஜாவுரிமை பறிமுதல் செய்ய தக்க வழியுண்டு 

ஆகவே ராஜரட்ணம் அவர்களே இனி உண்மை பேசமுடியாது என்ன வழக்கு நடந்ததோ என்ன தண்டனை கிடைத்தததோ அதை கோர்ட்டின் தவறு என்று ராஜரட்ணம் எங்கும் கூறியதில்லை ... கூற போவதுமில்லை அவர் அந்த அளவுக்கு முடடாள் இல்லை. அவர் எங்கும் தனக்கு நீதி வேண்டும் என்றும் கூறவில்லை மோனேற்றி வர்த்தகத்தில் மாறுதல்வேண்டும் அது பக்க சார்பாக இருக்கிறது என்றுதான் கூறுகிறார். உண்மையில் அது அப்படிதான் இருக்கிறது. அது அவ்வாறு இல்லை என்றால் 2009இல்  பலர் உள்ளே சென்றிருக்க வேண்டும் யாரும் செல்லவில்லை என்பதுதான் நிஜம்.

யாழ் களத்தை பொறுத்தவரை ராஜரட்ணத்துக்கு என்ன உணவு பிடிக்கும் உங்களுக்கு என்ன ஜூஸ் பிடிக்கும் என்று நீங்களோ  அவரோ கூறமுடியாது. அதை இங்கிருக்கும் சிலர்தான் எழுதமுடியும் என்ற புரிந்துணர்வு இருந்தாலே  போதும் தேவையில்லாத அலட்டல்களை குறைப்பதுக்கு. இந்த திரியை இவ்வளவு தூரம்  நீடுவதுக்கு  இதில் ஒன்றுமே இல்லை.

ஒன்றில் அவர் குற்றவாளி 
அல்லது நிரபராதி 

திரி இந்த அளவுக்கு நீளுவத்துக்கு அடிப்படை காரணமே இங்கு கருத்து எழுதும் யாருக்கும் வழக்கில் என்ன நடந்தது என்பது முழுமையாக  தெரியாது என்பதுதான்.   ஆனால் இவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காலம் 2009 பொருளாதார நெருக்கடி காலத்தின் பின்னர் வந்திருந்தது என்பது உண்மையே. இவர்களின் நெட்வெர்க் அந்த  அளவிற்கு விரிசலாகவும் ஆழமாகவும் இருந்தது. ஒரு சிறிய உதாரணத்துக்கு இன்டெல் நிறுவனத்தின் இரண்டாம் நிலை அதிகரிக்கும் இவர்களுக்கு தகவல் கொடுக்கும் இந்திய பெண்ணுக்கும் பாலியல் தொடர்பு  இருந்தது  ஒவ்வொரு குவாடடர் ரிலீஸின் லாப நஸ்ட கணக்கு இன்டெல் Intel வெளியிடுவதுக்கு முன்பே இவர்களுக்கு  தெரிந்துகொள்வதால்  அதன் முன்பே பங்குகளை வாங்குவது/விற்பதை செய்துவிடுவார்கள். 

இதில் சிக்குபட்ட பல இந்தியர்கள் மாஸ்டர்,  பி ஏஜ் டி முடித்து பிரபல நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில்  இருந்து நல்ல வசதியா வாழ்ந்துகொண்டு இருந்தவர்கள்   மேலும் மேலும் பணத்துக்கு ஆசைப்பட்டு  இருந்ததையும் இழந்தவர்கள். இதை நாங்கள் நல்ல படிப்பினையாக ஞாபகத்தில் வைத்திருப்பது எதிர்காலத்துக்கு  நன்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

டெஸ்லாவின் பங்கு விலைச்சரிவையும், insider trading ஐயும் ஒன்றாக போட்டு குழப்பவும் தேவையில்லை( டெஸ்லா விடயத்தில் price manipulation அல்லது insider trading இருந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை). பங்கு ஏறும், இறங்கும் - எப்போதும் ஏறுமுகமாக இருக்கும் பங்கு என்று எதுவும் இல்லை. 

 

 

முக்கியமான தகவல் 
நான் இதுவரை முன்னணி நிறுவனங்களின் பங்குகள் இறங்காது எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என்று 
எண்ணி கொண்டு இருந்தேன். புது வருட பிறப்புடன் புது தகவலும் கிடைத்து இருக்கிறது நன்றி !

நான் என்ன எழுதினேன் என்று வாசித்து இருக்கலாம் என்று எண்ணுகிறேன் 
நடுத்தர ஏழை வர்க்க மக்களின் 200 பில்லியன் பணம் கை மாறி உள்ளதையே சுட்டி காட்டி இருந்தேன்.
இந்த 200 பில்லியன் டெஸ்லாவின் கணக்கு சோர்ட் செல் Short sell கணக்கு இன்னொரு 150 பில்லியன் இருக்கும் 

இலங்கையின் மொத்த கடனே வெறும் 35 பில்லின்தான் 

புதுவருட வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Maruthankerny said:

முக்கியமான தகவல் 
நான் இதுவரை முன்னணி நிறுவனங்களின் பங்குகள் இறங்காது எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என்று 
எண்ணி கொண்டு இருந்தேன். புது வருட பிறப்புடன் புது தகவலும் கிடைத்து இருக்கிறது நன்றி !

நான் என்ன எழுதினேன் என்று வாசித்து இருக்கலாம் என்று எண்ணுகிறேன் 
நடுத்தர ஏழை வர்க்க மக்களின் 200 பில்லியன் பணம் கை மாறி உள்ளதையே சுட்டி காட்டி இருந்தேன்.
இந்த 200 பில்லியன் டெஸ்லாவின் கணக்கு சோர்ட் செல் Short sell கணக்கு இன்னொரு 150 பில்லியன் இருக்கும் 

இலங்கையின் மொத்த கடனே வெறும் 35 பில்லின்தான் 

புதுவருட வாழ்த்துக்கள் 

புது வருட வாழ்த்துகள். தொட்டதெல்லாம் துலங்கட்டும்.

நான் பங்கு விலை ஏற்றம் பற்றி எழுதியது நீங்கள் சொன்ன retail investors ற்கு. 

ஆனால் 200 பில்லியன் பரிமாற்றத்தில் (இதில் நீங்கள் சொம்னபடி உயரத்தில் வித்து விட்டு - பின் short பண்ணியவர்கள் இரெட்டிப்பு லாபம் அடைந்திருப்பார்கள் )

(இன்னும்) யாரும் மாட்டவில்லை. மாட்டினால் அவர்கள் அடுத்த ராஜ். மாட்டாமலும் போகலாம். 

பலர் மாட்டுவதில்லை என்பதால் மாட்டியவர், மாட்டியது நியாயம் இல்லை என்றாகாதுதானே. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

புது வருட வாழ்த்துகள். தொட்டதெல்லாம் துலங்கட்டும்.

நான் பங்கு விலை ஏற்றம் பற்றி எழுதியது நீங்கள் சொன்ன retail investors ற்கு. 

ஆனால் 200 பில்லியன் பரிமாற்றத்தில் (இதில் நீங்கள் சொம்னபடி உயரத்தில் வித்து விட்டு - பின் short பண்ணியவர்கள் இரெட்டிப்பு லாபம் அடைந்திருப்பார்கள் )

(இன்னும்) யாரும் மாட்டவில்லை. மாட்டினால் அவர்கள் அடுத்த ராஜ். மாட்டாமலும் போகலாம். 

பலர் மாட்டுவதில்லை என்பதால் மாட்டியவர், மாட்டியது நியாயம் இல்லை என்றாகாதுதானே. 

 

இந்த திரியை இனியும் வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்க தேவையில்லை என்று நினைக்கிறன் 

யாரும் மாட்ட போவதில்லை 
இந்த பகல் கொள்ளைக்கு சடடம் அனுமதிக்கிறது 

சுருக்கமாக சொல்லப்போனால் பகல் கொள்ளை கர்களினதுதான் 
அரசு நீதிமன்று எல்லாம். பிரிடிஸிடம் 13 ஸ்டேட்ஸ் இருந்து பிரிந்த போது பொருளாதாரத்துக்கு என்ன செய்வது என்று ஜோர்ஜ் வாசிங்டன் மற்றும் ஏனையோரும் யோசித்துக்கொண்டு இருந்தபோது. ஒரு குதிரை வண்டியில் 5 பேர்கள் வந்து இறங்கி தமது ஆலோசனைகளை வழங்கி அதை தாமே பார்த்துக்கொள்வதாகவும் உறுதி கொடுத்து இருக்கிறார்கள். 

அன்றில் இருந்து இன்றுவரை பெடரல் ரேசெர்வே எமது அரசுக்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் ட்ரில்லியன் கணக்கில் அள்ளி கொட்டுது ........அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று யாருக்கும் தெரியாது. தற்போதுகூட பெட்ரோல் விலை ஏறும்போது பிரசிடண்ட் பைடன் ரெசெர்வில் இருந்து திறந்து விடுவதாக  200-300 மில்லியன் பேரல்கள் எண்ணையை திறந்துவிடுவார் ........ரெசெர்வில் எவ்வளவு என்னை இருக்கு எங்கு இருக்கு என்று யாருக்கும் தெரியாது. இப்ப்டிடியே உலகை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பிகு

1. ராஜ்ஜுக்கு நாம் நன்றியாக இருக்க வேண்டுமா?

அவரிடம் ஒரு இனமாக உதவி பெற்றுள்ளோமா? ஆம்.

அப்படியாயின் ராஜ் என்ன செய்தாலும் அவர் எமக்கு செய்தது - இல்லை என்றாகாது. இது தனி வாழ்விலும் நடக்கும் விசயம்தான்.

ஆனால் நமது நன்றி உணர்வுக்காக அவரை வெள்ளை அடிக்க தேவையில்லை.

2. அப்புறம் penal reform எல்லாம் பெரிய சப்ஜெக்ட். ராஜுக்கு கூட இதில் அதிக புரிதல் இல்லை என்பது அவர் பேட்டியை பார்த்த போது புரிந்தது. 

அவர் புத்தகத்தில் எழுதியது, நாம் டிவி, யூடியூப்பில் பார்த்ததை வைத்து இதை ஓரளவுக்கு மேல் புரிய முடியாது - இதனிடையே ஏனைய கருத்தாளருக்கு சட்டம் தெரியாது, வெள்ளையின அடிமை புத்தியில் எழுகுகிறார்கள் என்பதெல்லாம் - just silly.

ம்ம்....

கொஞ்சம் அலுவல் இருக்கு பிறகு சந்திப்போம்... 👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

திரி இந்த அளவுக்கு நீளுவத்துக்கு அடிப்படை காரணமே இங்கு கருத்து எழுதும் யாருக்கும் வழக்கில் என்ன நடந்தது என்பது முழுமையாக  தெரியாது என்பதுதான்.  

நீண்ட கருத்துக்கு நன்றி, மருதர்.

சில உள் விடயங்களை புரியாமல், லிங்குகளை வைத்துக்கொண்டு விதண்டாவாதம் பேசும் போது என்னதான் செய்வது?

சரி, ராஜ் கொழும்பு சென்றத்துக்கும், சிங்கள அரசியல் தலைவர்களை சந்தித்ததும் வேறு ஒரு காரணம் உண்டு.

சிவபெருமான் என்பவர் பற்றி மேலே குறித்து இருந்தேன்.

இவர் நியூயார்க் காரர் அல்ல. நியூஜெர்ஸி காரர். இவர் மேலதிகமாக இன்னோர் வேலையையும் செய்து இருக்கிறார்.

இலங்கை ராஜபக்சே அரசுடன் இணைந்து, நியூஜெர்ஸியில் 30 இலங்கையர்கள் ஒரு சிவில் வழக்கு போட காரணமாக இருந்துள்ளார். அதன் படி, ராஜ், புலிகளுக்கு கொடுத்த பணத்தினால், தமது உறவினர்கள், பயங்கரவாதத்தினால் கொல்லப்பட காரணமாக இருந்துள்ளார் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த 30 பெரும் சிங்களவர்களா அல்லது தமிழர்களும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இது பெரிய தலைவலியினை ராஜ்க்கு கொடுத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்குக்கு, சிவபெருமான் கொழும்பில் இருந்து வந்து சாட்ச்சி அளித்து போயுள்ளார்.

இதுபோலவே, கோத்தா மேல், லசந்தா மகள், மற்றும் ஒரு கனேடிய தமிழர் போட்ட சிவில் கேஸ் லாஸ்ஏஞ்சல் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காரணம் தண்ட செலவு. கோத்தாவின் பெயரில் ஒரு சதமும் அமெரிக்காவில் இல்லை.

மாறாக ராஜ் அப்படி இல்லை. ஆகவே, இப்போது ஆட்சி மாறியுள்ள நிலையில், சிங்கள அரசினை சந்திக்க போனதன் பின்னணி எதுவென புரியும் என்று நினைக்கிறேன். இந்த வழக்கினை வாபஸ் வாங்கினால், இலங்கையில் முதலிடுவேன் என்று பேசி இருக்கலாம்.

சிலவேளை, சிவபெருமானையும் சந்தித்து பேரம் பேசி இருக்கலாம்.

அவர் மீது தவறு, தவறல்ல என்பது வேறு. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஈழ ஆதரவாக கொடுத்த நிதியின் காரணமாக, இந்த சிவில் வழக்கு போடப்பட்டு உள்ளது. 

அதன் காரணமாகவே, அவருக்கு ஆதரவு எனது ஆதரவு

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

 அவர் மீது தவறு, தவறல்ல என்பது வேறு. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது, ஈழ ஆதரவாக கொடுத்த நிதியின் காரணமாக, இந்த சிவில் வழக்கு போடப்பட்டு உள்ளது. 

அதன் காரணமாகவே, அவருக்கு ஆதரவு எனது ஆதரவு

அதே

புலிகளின் வரவுகள் மற்றும் சொத்துக்களை முடக்குவது என்ற தீர்மானத்தின் முதல் குண்டு இவர் மீது தான். நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இந்த திரியை இனியும் வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்க தேவையில்லை என்று நினைக்கிறன் 

ஒத்து கொள்கிறேன்.

ஒரு விசயம். ராஜ் செய்த பங்களிப்பை கருத்தில் கொண்டு, முதலாம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிந்து விட்டு விலகி இருந்தேன்.

ஆனால்,

பாவம் ராஜ்.

அவருக்கு வெள்ளை அடிக்கிறோம் எண்டு வெளிகிட்டு, குறுக்கு விசாரணை செய்து - நோண்டி நொங்கு எடுத்து விட்டிருக்கு.

நீங்கள் சொன்ன மற்ற விடயம் பற்றி உண்மையாக எனக்கு எந்த விளக்கமும் இல்லை. என் C1 ஜோக்குகளை வாபஸ் வாங்கி கொள்கிறேன்🙏🏾.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

ஒத்து கொள்கிறேன்.

ஒரு விசயம். ராஜ் செய்த பங்களிப்பை கருத்தில் கொண்டு, முதலாம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிந்து விட்டு விலகி இருந்தேன்.

ஆனால்,

பாவம் ராஜ்.

அவருக்கு வெள்ளை அடிக்கிறோம் எண்டு வெளிகிட்டு, குறுக்கு விசாரணை செய்து - நோண்டி நொங்கு எடுத்து விட்டிருக்கு.

நீங்கள் சொன்ன மற்ற விடயம் பற்றி உண்மையாக எனக்கு எந்த விளக்கமும் இல்லை. என் C1 ஜோக்குகளை வாபஸ் வாங்கி கொள்கிறேன்🙏🏾.

நன்றி 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1..ஒருவர் வங்கியில் எடுத்த கடனை கட்டி முடிப்பாராயின் .....அவர்   கடன் அற்றவர் அவ்வாறான நிலையில் அவருடன் நம்பிக்கையுடன் கொடுங்கல்  வாங்கல்கள் செய்கிறோம். 

2..ஒரு நோயாளி மருத்துவம் செய்து சுகதேகி ஆகியவுடன்.   அவர் நோய்யற்றவர். ஆகிறார்   ....நாங்களும் நெருங்கி உறவுவாடுகிறோம்   

3....ஆனால் ஒரு நாட்டின் சட்டப்படி குற்றவாளி என. இனம்காணப்பட்டவர. தண்டனை அனுபவித்து  குற்றப்பணமும் கட்டிய பின்பும்  ....அவர். குற்றவாளியா.?அல்லது சுற்றவாளியா. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2022 at 10:19, Justin said:

தகவல்களுக்கு நன்றி. ராஜ் ராஜரட்ணம் தன் குற்றத்திற்குத் தண்டனை அனுபவித்து விட்டார், எனவே அவரைப் பற்றி மேலும் பேச எதுவுமில்லை. ஆனால், செய்த குற்றம், தண்டனை என்பவை பற்றி சில வெள்ளையடிப்பு முயற்சிகளும், தவறான தகவல்களும் மேலே சிலரால் பரப்பப் படுகின்றன. உண்மையான , பொது வெளியில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில்:

1. ராஜ் ராஜரட்ணம் அரசுடன் plea deal எதுவும் செய்யாமல் தண்டனையை ஏற்றுக் கொண்டார். அவர் தெரிவு அது. ஆனால், கூடப் பிடிபட்ட ஒரு இந்திய அமெரிக்கர் கையும் மெய்யுமாக ராஜரட்ணம் பிடிபட wire அணிந்து உதவினார். Plea deal- இது அமெரிக்க நீதித் துறையினால் மக்களின் வரிப்பணத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி விசாரணையை விரைவாக்கும் ஒரு முறையேயொழிய, அடிமைகளின் எசமான்களால் எழுதப் பட்ட அமெரிக்க சட்டத்தின் விளைவல்ல😅. இந்த முறை பற்றித் தான் ராஜரட்ணம் தன் நூலில் குறைப்படுகிறார். ஆனால், plea deals இல்லா விட்டால் ராஜரட்ணம் மட்டுமல்ல, எந்தப் பெரிய சுறாவையும் சின்ன மீன் போட்டுப் பிடிக்க இயலாமல் போகும், குற்றமே வியாபாரமாக மாறும்.

2. ராஜரட்ணம் சிறை மட்டும் செல்லவில்லை 93 மில்லியன் டொலர்கள் தண்டமும் கட்டினார். எனவே, குற்ற வழியில் கிடைத்த (illegal proceeds) பணத்தின் ஒரு பகுதியை இழந்திருக்கிறார்.

3. ராஜரட்ணம் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் நீதி மறு சீரமைப்புப் (judicial reform) பற்றிப் பேசுகிறார். அவர் பேசும் இந்த நீதி மறு சீரமைப்பு, கிம் கர்டாஷியன் பேசும் மறு சீரமைப்பை விட வித்தியாசமானது. Wall Street நிதி நிறுவனங்களை, கடும் சட்டங்கள் மூலம் அரசு கட்டுப் படுத்தக் கூடாது என்று வாதிடும் deregulation ஆதரவாளர்களும் ராஜரட்ணம் பேசும் நீதி மறு சீரமைப்பையே ஆதரிக்கின்றனர். இதற்கும், உண்மையில் சாதாரண அமெரிக்க மக்களுக்கு அவசியமான நீதி மறு சீரமைப்பிற்கும் எந்தத் தொடர்புகளும் இல்லை!.  

4. ராஜரட்ணம் அவர்களின் தண்டனை ஒரு இந்திய, யூத "ஷதி" என்று வாதிடும் சிலரும் இருக்கிறார்கள் (யாழில் அல்ல!). ராஜரட்ணத்தைக்  கையும் களவுமாகப் பிடித்த இந்திய அமெரிக்கரான பிரீத் பராரா, பிரபலமான, மிகவும் நேர்மையான ஒரு US attorney. SDNY இல் இவர் இருந்த போது, பல பணமுதலைகளைச் சிக்க வைத்து ஏராளமான தண்டப் பணம் கட்ட வைத்த கெட்டிக் காரர். எனவே, சதி என்பதை விட, ஒரு நீதியான விசாரணையில் ராஜரட்ணம் தண்டனை பெற்றார் என்பதே உண்மை.  

பல அறியாத தகவல்களை கூறியுள்ளீர்கள் நன்றி,

பொதுவாக நிதி நிறுவனங்கள் (சிறிய) வெறுமனே உள்வீட்டு தகவலின் அடிப்படையில் வர்த்தகம் செய்வதில்லை அத்துடன் தனிநபர்கள் சொந்த கணக்கினையும் பேணுவர் (பெரிய நிதி நிறுவனங்களில் அவ்வாறு செய்ய முடியாது.

வாடிக்கையாளாரின் கணக்கில் தேவையில்லாமல் விற்றல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவர் (கோல்ட்மன் சக்கிற்கு அதன் மூலம் பரிவர்த்தனை வருமானம் ஏற்படும்) பின்னர் புதிய பங்குகள்(IPO) சந்தையில் கோல்மன்ற் சக்கினால் விடப்படும் போது அதனை இந்த நிதி நிறுவனங்களுக்கு அதிகளவில் ஒதுக்குவார்கள் ஆனால் அதனை வாடிக்கையாளரின் கணக்கில் போடாமல் தமது சொந்த கணக்கில் போடுவார்கள் , அந்த பங்குகள் சந்தையில் விற்க வரும்போது ஐ பி ஓ வில் விற்கப்பட்டதனைவிட மிக அதிகளவில் பொதுவாக சந்தையில் விற்கப்படும், வாடிக்கையாளருக்கு நட்டம் குறித்த தனிநபர்களுக்கு இலாபம்.

மோசமான செய்திகள் கொண்ட தமது பங்குகளை சந்தை ஆரப்பிப்பதற்கு முன்னரே குறுக்கு வர்த்தகம் (Cross Trade) எனும் அடிப்படையில் வாடிக்கையாளரின் தலையில் கட்டிவிடுவார்கள்.

சந்தை விலையில் நல்ல விலையில் வாங்கப்படும் பங்குகளை தமதாக்கிவிட்டு மோசமான விலையில் வருவதனை வாடிக்கையாளர் கணக்கில் போட்டு விடுவார்கள்.

ஆனால் நிக் லீசன் தனிப்பட்ட  ரீதியில் இவ்வாறு தனக்கென சொந்த கணக்கினை வைத்திருக்கவில்லை.

initial margin / Variable margin இந்த திரைப்படத்தில் விள்க்கியுள்ளார்கள் அது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன் ( அதாவது வீட்டுக்கடன் போன்றது வீட்டின் விலை குரைந்தால் அதற்கு ஏற்ப குறைந்த பட்ச இருப்பை பேணுவது) மிக மோசமான பண முகாமைத்துவத்தினை கொண்டிருந்தமையால் மேலதிகமான பணம் (ஜப்பானிய நாணயம்) தேவைபட்டது(Margin call).

ஒரு வர்த்தகத்தில் இரு தரப்பு காணப்படும் ஒருவர் வாங்க வேண்டும் என்றால் இன்னொருவர் விற்கவேண்டும், சாதாரண நிலையில் வாங்கும் போது விலை அதிகரித்து விடும், சராசரி விலை அதிகரிக்கும் ஆனால் விலையினை குறைத்து மற்றவர்களது Stop loss இனை கவருவது அல்லது பதட்டத்தினை உருவாக்கி மற்றவரை விற்க தூண்டுவது இது அனைத்து சந்தைகளிலும் சரிவராது(Cost efficient) thin market எனும் நிலையில் சாத்தியப்படும், அதனை இரண்டு காட்சிகளினூடாக காட்டியிருப்பார்கள்.

மேலும் எனது கருத்து சரியா எனத்தெரியாது, ஒரு ஊகத்தினடிபடையில் படத்தின் கதையினை கூறியுள்ளேன்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.