Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிஞர் கா மு ஷெரிப் - பாட்டும் நானே,பாவமும் நானே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர். கவிஞர் கா மு ஷெரிப்.

கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர்.


கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள்.
எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் நம் தாய் தமிழ் நாட்டில்!
---+++++-------

கா.மு.ஷெரீப் ...

இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..!

ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை, 
நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..!

அந்தப் பாடல் :
“ஏரிக்கரையின் மேலே 
போறவளே பெண்மயிலே…!”
.
ஆம்...
இப்படி ஒரு சில தேர்தெடுத்த திரைப்படப் பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் !
.
சுமார் இருபது வருடங்களுக்குமுன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து , சில இனிய நினைவுகளை , சமீபத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது .
.
சொன்னவர் சன் டி.வி. வீரபாண்டியன் !

இதோ , வீரபாண்டியன் சொன்ன சில விஷயங்கள் :
.
“இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண் ; காதலன் கைவிட்டுவிட்டான்.
.
பெண்ணின் தகப்பனார் கவி கா.மு.ஷெரீப்பின் நேசத்துக்குரிய நண்பர். 
இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார். 
"குடும்ப மானம் கப்பலேறிவிடும்!" என்று குமைந்தார்.
.
" வேறு வழியில்லை. கருவைக் கலைக்க மருத்துவச்சி உதவியை நாட இருக்கிறேன் ” என்று கதறினார்.
.
ஷெரிப் என்ன சொன்னார் தெரியுமா ?

"உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" 

என்று சொல்லி , தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிலிருக்கும் வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.
.
குழந்தை பிறந்ததும் , அந்தப் பெண்ணைச் சத்தமின்றி அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். 
.
பிறந்த அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி , வளர்த்து ஆளாக்கினார். 
.
அப்போது, "இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?' என ஏகடியம் புரிந்தவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.”
.
# நெகிழ்ந்து போனேன் 
வீரபாண்டியன் சொன்னதைப் படித்து விட்டு !
.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் , 
பிற சமயத்தாரையும் மதித்துப் போற்றக்கூடிய பக்குவமான அன்பு இதயம் கொண்டவராக , 
அன்னை மனம் கொண்டவராக இருந்திருக்கிறார் கா.மு. ஷெரிப்.

"அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள் 
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை.”
.
இதுவும் கா. மு. ஷெரிப் எழுதிய பாடல்தான் ..!
.
# அந்தப் பாடலில் கா. மு. ஷெரிப் எழுதியிருப்பார் :

“துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்”
.
# இந்த வார்த்தைகள் அன்னைக்கு மட்டும் அல்ல..!
மதம் தாண்டி மனித நேயம் கொண்ட கா. மு. ஷெரிப் போன்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் பொருந்தும் !

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.

 ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.

 ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம்.

 இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.
.
# வாழ்க
 கா.மு.ஷெரிப் புகழ் ..!
வளர்க மனித நேயம்.!
--------++++---------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவர் எழுதிய இன்னும் சில பாடல்கள்:
ஆடும் மயிலே ஆட்டம் எங்கே பாடும் குயிலே பாட்டு எங்கே - துளசி மாடம்
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன் - சிவகாமி
மல்லியக்கா மல்லியக்கா எங்கடிபோறே - மக்களை பெற்ற மகராசி
என்னைபோலே பாக்யசாலி யாரே உலகிலே - நல்ல தங்கை
எங்கிருந்தோ இங்கு வந்தரதியே - முல்லை வனம்
சரியென்று நீயே ஒருவார்த்தை சொன்னால் சந்தோசமாக வாழலாம் - முல்லை வனம்
வேட்டி கட்டின பொம்பளே - கல்யாணம் செய்துக்கோ
எங்கும் நிறை பரம்பொருள் ஒன்றே - கல்யாணம் செய்துக்கோ
வாழ்வது போனாலும் வறுமையே வந்தாலும் நீ துயர்கொள்ளாதே - மாங்கல்யம்
வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே தீபநன்நாளை அன்பாக கொண்டாடுவோம் - கூண்டுக்கிளி

இப்படி பல ....

பொதுவாக கவி கா.மு. செரிப் அவர்களின் "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் எசும் வையகம் இது தானடா" என்ற பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சிறப்பானவை. ஆயினும் திருவிளையாடல் படத்தில் வரும் "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற பாடலை செரிப் அவர்கள்தான் இயற்றினார் என்பதை மறுக்கும் பல எதிர் கருத்துகளும் உண்டு.

 

 

Edited by vanangaamudi
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அம்ரித்பால் சிங்: 'ஐஎஸ்ஐ தொடர்பு, வெளிநாட்டு நிதி பரிவர்த்தனை' என சந்தேகம் எழுப்பும் பஞ்சாப் போலீஸ் - இதுவரை நடந்தவை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, அம்ரித்பால் சிங் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பிடிப்பதற்கான நடவடிக்கையை பஞ்சாப் போலீசார் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் தொடர்ந்தனர். இதுவரை, ‘வாரிஸ் பஞ்சாப் டி’ செயல்பாட்டாளர்கள் மீது ஆறு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பஞ்சாப் காவல்துறை தலைமையக தலைவர் (ஐ.ஜி) சுக்செயின் சிங் கில், தல்ஜித் கால்சி, பசந்த் சிங், குர்மீத் சிங் புக்கன்வாலா, பக்வந்த் சிங், அமிர்த் பாலின் மாமா ஹரிஜீத் சிங் ஆகியோர் அசாமின் திப்ருகார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஹர்ஜீத் சிங் என்பவர் அசாமுக்கு செல்லும் வழியில் இருப்பதாகவும் கூறினார். போலீஸாரின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டுள்ள தல்ஜித் சிங் கால்சி, அமிரித்பால் சிங்குக்கு நெருக்கமானவர் மற்றும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புக்கு நிதி வழங்குபவர்.   அம்ரித்பால் சிங்கின் மாமா ஹர்ஜீத் சிங், ஓட்டுநர் ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீஸிடம் சரண் அடைந்தனர். ஜலந்திரின் ஷால்கோட்டில் மார்ச் 19-20ஆம் தேதி இரவில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று ஜலந்தர் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஸ்வரன்தீப் சிங் கூறுகிறார். ஹர்ஜீத் சிங் துபையில் தொழில்முறை டிரான்ஸ்போர்ட்டர் தொழிலை செய்து வருகிறார். மேலும், அம்ரித்பால் சிங் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆடம்பர சொகுசு காரையும் பறிமுதல் செய்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர். அந்த கார், ஹர்ஜீத் சிங் வசம் இருந்துள்ளது. இந்த ஐந்து பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று கூறிய அவர், பஞ்சாப் அமைதியான மாநிலம் என்றும், பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதுவரை கைதானவர்கள் எத்தனை பேர்? அம்ரிபால் சிங் தொடர்புடைய வன்முறை விவகாரத்தில் இதுவரை 114 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் வன்முறை நடந்த முதல் நாளிலேயே 78 பேரை போலீஸார் பிடித்தனர். இரண்டாம் நாளில் 34 பேரும் மூன்றாம் நாளில் 2 பேரும் பிடிபட்டனர். அனைவரும் மாநிலத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தவர்கள் என்று காவல்துறை ஐ.ஜி கில் தெரிவித்தார். "இந்த வழக்கில் வெளிநாட்டு நிதி மற்றும் ஐஎஸ்ஐ தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் பஞ்சாப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்," என்கிறார் ஐ.ஜி கில். அம்ரித்பால் சிங் விவகாரத்தில் இதுவரை நாம் அறிந்தவை மற்றும் பதிலளிக்கப்படாத கேள்விகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:- “நாங்கள் ஏன் காலிஸ்தான் கோரிக்கையை முன் வைக்கிறோம்?” – அம்ரித்பால் சிங் நேர்காணல்5 மார்ச் 2023 'நான் இந்தியன் இல்லை' - இந்தியாவுக்கு அச்சத்தை விளைவிக்கும் இந்த மத போதகர் யார்?1 மார்ச் 2023 அம்ரித்பால் சிங்: யார் இந்த மத போதகர்? திடீரென இவர் பிரபலம் அடைந்தது எப்படி?2 மார்ச் 2023 கடந்த சில நாட்களில் என்ன நடந்தது? அம்ரித்பால் சிங் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி கைது செய்யும் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் போலீஸ் ஐ.ஜி சுக்செயின் சிங் கில் தெரிவித்தார். பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, சனிக்கிழமை பிற்பகல் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஷாகோட்-மால்சியன் சாலையில் 'வாரிஸ் பஞ்சாப் டி' (WPD) இன் செயல்பாட்டாளர்கள் ஏழு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மாநில அளவிலான நடவடிக்கையின் போது இதுவரை ஒரு '.315' போர் ரைபிள், ஏழு 12 போர் ரைபிள்கள், ஒரு ரிவால்வர் மற்றும் 373 லைவ் கார்ட்ரிட்ஜ்கள் (பயன்படுத்தப்படாத தோட்டா பேழைகள்) உட்பட 9 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, ஜலந்தர் போலீசார் உரிமை கோரப்படாத ஆடம்பர சொகுசு வாகனம் ஒன்றையும் மீட்டுள்ளனர். இந்த வாகனத்தை அம்ரித்பால் சிங் தப்பியோட பயன்படுத்தியதாக போலீசார் கூறுகின்றனர். கைவிடப்பட்ட வாகனத்தில் இருந்து .315 போர்த்துப்பாக்கி, 57 தோட்டாக்கள், வாள் மற்றும் வாக்கி-டாக்கி பெட்டி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. சில உள்நாட்டு தோட்டாக்களையும் மீட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பஞ்சாபில் போராட்டங்கள் பட மூலாதாரம்,ANI பஞ்சாபில், அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக குவாமி இன்சாஃப் மோர்ச்சாவின் சில செயல்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மொஹாலியில் உள்ள விமான நிலைய சாலையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. அந்த இடத்தில் 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உள்ளனர். இதுவரை அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. விமான நிலையத்திற்கு செல்லும் சாலையின் ஒரு பகுதி போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், கர்னாலில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் ஹரியாணா சீக்கியர்களை மார்ச் 21ஆம் தேதி கர்னாலில் ஒன்றுகூடி அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது. இதன் காரணமாக சண்டீகர் மற்றும் பஞ்சாபின் பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மூன்றாவது நாளாக காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இராக்கில் சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் - இருபது வருடங்களுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏஜென்சி மோசடி: கனடாவாழ் இந்தியர்கள் பலரது எதிர்காலம் கேள்விக்குரியதாகிறதா?5 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்மா லக்ஷ்மிக்கு சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டு5 மணி நேரங்களுக்கு முன்னர் பஞ்சாபில் இப்போது நிலைமை என்ன? அம்ரித்பால் சிங் விவகாரம் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புடன் தொடர்புடைய இமான் சிங் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்ரித்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது. பதற்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாநில உள்துறை செல்பேசி இணைய சேவையை சனிக்கிழமை முதல் இடைநிறுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாடு மார்ச் 21ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை தொடரும். விடை தெரியாத கேள்விகள் பட மூலாதாரம்,GETTY IMAGES அம்ரித்பால் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளதாக போலீசார் கூறி வருகின்றனர். சனிக்கிழமையன்று, அம்ரித்பால் சிங் ஷாகோட்டின் குருத்வாரா சாஹிப்பில் இருப்பதாக சில ஊடக தகவல்கள் வந்தன. ஆனால், அன்று மாலையே அவர் தப்பியோடிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அம்ரித்பால் சிங்கைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். அம்ரித்பால் எங்கு இருக்கிறார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அம்ரித்பால் சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை எவ்வளவு காலம் தொடரும் என்பதை பஞ்சாப் போலீசார் தெரிவிக்கவில்லை. பஞ்சாப் போலீசார் மத வழிபாட்டுத் தலங்கள், குறிப்பாக கிராமங்களில் உள்ள குருத்வாராக்கள் முன்பு நிறுத்தப்பட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது எந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஜலந்தர் காவல்துறையின் கூற்றுப்படி, வாரிஸ் பஞ்சாப் டி செயல்பாட்டாளர்கள் மீது சமூக அமைதியின்மையை உருவாக்குதல், உள்நோக்கத்துடன் கொலை செய்தல், காவல்துறை அதிகாரிகளைத் தாக்குதல் மற்றும் அரசு ஊழியர்கள் சட்டபூர்வமாக தங்களுடைய கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. அஜ்னாலா காவல் நிலையம் மீதான தாக்குதலுக்காக 'வாரிஸ் பஞ்சாப் டி' செயல்பாட்டாளர்கள் மீது 24-02-2023 தேதியிட்ட வழக்கு எண் 39 பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டாரா? பட மூலாதாரம்,GETTY IMAGES உள்ளூர் மற்றும் தேசிய ஊடகங்கள் பஞ்சாபில் நடக்கும் முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. கடந்த சனிக்கிழமையன்று, அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டு அசாமில் உள்ள திப்ருகாருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலையிலவ் சில ஊடக நிறுவனங்கள் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதாகக் கூறி, அது தொடர்பான தகவல்களை அவற்றின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தன. பிறகு அவற்றை நீக்கின. பஞ்சாப் காவல்துறை, அம்ரித்பால் சிங் கைது தொடர்பான செய்தி பொய்யானது என்றும் மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2vp4yrppzo
    • பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன் அண்ணா, வாழ்க வளத்துடன்.
    • இணையவனுக்கு,  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன் ......!   🌹
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.