Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

 

அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது – வெலிஓயா மக்கள் எச்சரிக்கை!

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம். இவ்வாறு ஹட்டன், வெலிஓயா – 22 ஆம் தோட்ட பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

ஹட்டன், வெலிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார்.

சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை.

வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையிலேயே இதற்கு மேலும் மக்கள் சாவதற்கு இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறார்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டே பயணிப்பதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம். இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை. எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம்.” – எனவும் தோட்ட மக்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டனர்.

https://athavannews.com/2023/1318529

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுதானே கடந்த தேர்தலில் உங்கள் தலைவர்  (செந்தில் தொ(**)ண்டைமான்) சொன்னாரே எனக்கு வாக்குப்போடுங்கோ நான் மலையகத்தைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என பல பத்து வருடங்களாக பூட்டன் பேரன் இப்போது செந்தில் தொண்டைமான் ஆகியோருக்கு மலைப்யகத்தை அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டு தெருவில நிண்டு கத்தினமாம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல விடயம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Elugnajiru said:

அதுதானே கடந்த தேர்தலில் உங்கள் தலைவர்  (செந்தில் தொ(**)ண்டைமான்) சொன்னாரே எனக்கு வாக்குப்போடுங்கோ நான் மலையகத்தைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என பல பத்து வருடங்களாக பூட்டன் பேரன் இப்போது செந்தில் தொண்டைமான் ஆகியோருக்கு மலைப்யகத்தை அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டு தெருவில நிண்டு கத்தினமாம். 

அவர் ஜீவன் தொண்டைமான் இங்க சனத்தை பேக்காட்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு, காளைகள் வளர்த்து, கரவானில் கொண்டு திரியிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மலையகத்துக்கும், இலங்கைக்கும் இவருக்கும் என்ன தொடர்பு. வாரிசு அரசியலின் பெறுபேறு. 

Born: November 9, 1994 (age 28 years)
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Sasi_varnam said:

மலையகத்துக்கும், இலங்கைக்கும் இவருக்கும் என்ன தொடர்பு. வாரிசு அரசியலின் பெறுபேறு. 

Born: November 9, 1994 (age 28 years)

Millhill, LSE யில் படித்ததாக சொல்லிகொள்ளும்  சஜித் பிரேமதாசவுக்கும், அம்பாந்தோட்டைக்கும்,

Grays Inn இல் குப்பை கொட்டியதாக சொல்லும் கஜன் பொன்னம்ப்லத்துக்கும் யாழ்பாணத்துக்கும்,

என்ன தொடர்போ அதே தொடர்புதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Nathamuni said:

அவர் ஜீவன் தொண்டைமான் இங்க சனத்தை பேக்காட்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு, காளைகள் வளர்த்து, கரவானில் கொண்டு திரியிறார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் வளர்த்து A/Cகரவானில் கொண்டு திரிபவர் செந்தில் தொண்டைமான்.
சிங்கப்பூராக்குவேன் என சொன்னது ஜீவன் தொண்டைமானாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதொகாவின் உறுப்பினர்களுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

இதொகாவின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில்...
இரண்டு கதிரையில் இருக்கும், செந்தில் தொண்டமான்.
அவ்வளவு  கதிரை ஆசை... 😂 🤣

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.