Jump to content

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

Recommended Posts

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? இந்த நாட்டில் உல்லாசப் பயணிகள் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருககின்றன.

ஆனால் ஒன்றை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன். இங்கு பயணிகளாக வருபவர்கள் கைநிறையப் பணம் கொண்டு வந்தால்தான், இங்குள்ள செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடியும். எங்கும் அப்படித்தானே என்று நீங்கள் வாதாடலாம். ஆனால் இந்த நாட்டில் எல்லாமே கொஞ்சம் விலை அதிகம்….
 
இங்கே மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்ட மொழி..நீங்கள் ஜெனிவா சென்றால் பிரான்ஸ் நாட்டுக்குள் கால்வைத்து விட்டோமோ என்று எண்ண வைப்பது போல எல்லாமே பிரெஞ் மயம். ஜேர்மன் மொழி அறிவும், ஆங்கில மொழி அறிவும் உங்களுக்கு கைகொடுக்கும்.
சுவிட்சர்லாந்து,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம்,சுவிட்சர்லாந்து நாட்டில்,சுவிஸ் நாட்டில்,சுவிட்சர்லாந்து,சுவிற்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்தில்,சுவிட்ஸர்லாந்தின்,சுவிற்சலாந்து சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

ஏரிகளுக்கு பிரபல்யமான இந்த நாட்டில், ஜெனிவா ஏரி அழகின் உச்சத்தை தொடுவது. மேலை நாட்டவர்களுக்கு Windsurfing, water skiing, kayaking விளையாட்டுகளுக்கு பொருத்தமான இடம்.

  சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

நகருக்குள் நுழைந்தால் ஐ.நா.சபை அமைப்பு உங்களை வரவேற்கும். Palais des Nations என்று அழைக்கப்படும், ஐ.நா.சபையின் ஐரோப்பிய தலைமையகம் இங்கேதான் இருக்கின்றது.

நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடமிது..

நியூயோர்க் நகரின் தலைமை அலுவலகத்திறகு அடுத்து மிகப் பெரியது இந்த சுவிஸ் பிரிவுதான்.. வருடாவருடம் 25000க்கு மேற்பட்ட சர்வதேசப் பிரதிநிதிகள் இங்கு வந்து போகிறார்கள்.

நீங்கள் ஒரு தினத்தை இங்கு கழிக்கலாம். மறக்க முடியாத அனுபவமாக அது இருக்கும். உல்லாசப் பயணிகள் இங்கு குழுவாக வந்தால், இவர்களுடன் ஒரு வழிகாட்டி அனுப்பப்படுவார். இவர் அழகான விளக்கங்களைச் சொல்லி எம்மை எல்லா இடங்களுக்கும் கூட்டிச் செல்வார்.

International Red Cross and Red Crescent Museum

இந்த அருங்காடசியகத்தை நீங்கள் தவறவிட வேண்டாம். வாஷிங்டனிலுள்ள Holocaust Museum ருவண்டாவிலு்ளள Genocide Museum,Yad Vashem Jerusalem Holocaust Museum போல, மக்கள் பட்ட அவலங்களை பட்டவர்த்தனமாக சொல்லும் அருங்காட்சியகம் இது..

சுவிட்சர்லாந்து,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம்,சுவிட்சர்லாந்து நாட்டில்,சுவிஸ் நாட்டில்,சுவிட்சர்லாந்து,சுவிற்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்தில்,சுவிட்ஸர்லாந்தின்,சுவிற்சலாந்து சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

பாசெல் உலகம்

ஜெர்மன் மொழியைப் பேசும், பழமையும் புதுமையும் நிறைந்த பிரதேசம் .. ஜேர்மனியை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எல்லையாகக் கொண்டது. மிதிவண்டியில் சென்று பொருட்களை ஜேர்மன் எல்லையில் விலைமலிவாக வாங்க எமக்கு வசதியளிக்கும் பிரதேசம்..

இங்குள்ள ரைன் நதியும், கப்பல் பயணமும் நீங்கள் தவற விடக்கூடாதது.

Rhine River, Basel

இங்குள்ள ஆபரணக் கண்காட்சியகம் வருடாவருடம் உலக நாடுகளைக் கவர்ந்திழுப்பது. Baselworld என்று இதற்கு பெயர். உலகின் தலை சிறந்த கடிகாரங்கள் முதல், பல்வகையான அணிகலன்களை் இந்த நாளை அலங்கரிக்கும்.

சுவிட்சர்லாந்து,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம்,சுவிட்சர்லாந்து நாட்டில்,சுவிஸ் நாட்டில்,சுவிட்சர்லாந்து,சுவிற்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்தில்,சுவிட்ஸர்லாந்தின்,சுவிற்சலாந்து சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

Basel City

100 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்ள வரும் இந்தக் கண்காட்சி, அனேகமாக ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறும். நகரமே திருவிழாக் கோலம் பூண்டு விடும். ஹாட்டல்கள் எல்லாம் நிரம்பி வழியும்..

சுவிட்சர்லாந்து,சுவிட்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம்,சுவிட்சர்லாந்து நாட்டில்,சுவிஸ் நாட்டில்,சுவிட்சர்லாந்து,சுவிற்சர்லாந்தின்,சுவிட்சர்லாந்தில்,சுவிட்ஸர்லாந்தின்,சுவிற்சலாந்து சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

இவ்வளவோடு நிறுத்தி விடுகிறேன்.. காரணம் பட்டியல் நீள்கின்றது. பார்த்து ரசிக்க இங்கு இடங்களுக்கு பஞ்சமே இல்லை. தன்னிடம் வந்த எந்தப் பயணியையும் ஏமாற்றாதது இந்த நாடு!

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் ஏராளமான இடங்கள் இருக்கின்ற.. அவற்றை ஒரு தொகுப்பாக இன்னொரு பதிவில் பார்க்கலாம். 

 SOURCE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் மிக அழகான நாடு அதில் மாற்றுக்கருத்து கிடையாது பார்க்க பார்க்க திகட்டாது . ஆனால் மாலை ஆறு ஏழு மணியானதும் ஊரடங்கு சட்டம் போட்டது போல் ஊர் அடங்குவது பிடிக்காத ஒன்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, SwissTamil said:

சுவிட்சர்லாந்து நாட்டில் சுற்றுலா சென்றால் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் எவை? இந்த நாட்டில் உல்லாசப் பயணிகள் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருககின்றன.

பார்க்கக்கூடிய அழகான நாடு. ஆனால் விலைதான் அதிகம்.

இணைப்பிற்கு நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

பார்க்கக்கூடிய அழகான நாடு. ஆனால் விலைதான் அதிகம்.

இணைப்பிற்கு நன்றி.

அதுதான் மாதத்தில் ஒருநாள் டொச்லாண்டு சொப்பிங் என்று சுவிஸ் கூட்டம் ஜெர்மனில் வருகை தருகினமே நம்மாட்கள் மட்டும் அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அதுதான் மாதத்தில் ஒருநாள் டொச்லாண்டு சொப்பிங் என்று சுவிஸ் கூட்டம் ஜெர்மனில் வருகை தருகினமே நம்மாட்கள் மட்டும் அல்ல .

இத்தாலி பக்கம் இருக்கிறவையள் இத்தாலிக்கு போய் சாமான் சக்கட்டையள் வாங்குவினமாம்.
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இத்தாலி பக்கம் இருக்கிறவையள் இத்தாலிக்கு போய் சாமான் சக்கட்டையள் வாங்குவினமாம்.
 
பின்னே பூலோகத்தின் சொர்க்கத்தில் வாழுவது என்றால் சும்மாவா ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

இலங்கையின் வடகிழக்கில் இருந்து விளை பொருள்களை இங்கு புலம்பெயர் நாடுகளில் விற்க  முடியவில்லை எனும் ஆதங்கம் பலருக்கும் உண்டு சமீபத்தில் இந்த குழுமத்தில் தான் என்று நினைக்கிறேன் யாழில் இருந்து 200 லாரிகள் தென்னிலங்கையை நோக்கி பயணித்து தமிழர்கள் சுபிட்சமாக என்று எழுதப்பட்டது. மறைநீர் என்ற பொருளாதார முக்கிய எமன் எம்முன் உள்ளான் ஒருகிலோ சின்ன வெங்காயம் எமது வீட்டை அடைய 12ஆயிரம் லீற்றர் தண்ணீர் சிலவாகுது எனும் உண்மை தெரிந்தால் இப்படி ஆதங்க பட மாட்டம் மறை நீர் இதனால் பயனடைபவர் யார் தொடரும் ......கூகிளில் இதை மறைத்து வைத்து உள்ளார்கள் .

மழை நீரை கடலில் கலக்க விடாமல் சேமித்தாலே பல பிரச்சனைகள் தீரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

மழை நீரை கடலில் கலக்க விடாமல் சேமித்தாலே பல பிரச்சனைகள் தீரும்.

அட சாமியார் அதுக்கு பதிலும் போட்டாயிற்றா /😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, SwissTamil said:

International Red Cross and Red Crescent Museum

7 hours ago, SwissTamil said:

பாசெல் உலகம்

இன்னும் பார்க்கவில்லை

7 hours ago, SwissTamil said:

Rhine River, Basel

ரைன் நதியை பாசலில் பார்க்கவில்லை ஆனால் அல்ப்ஸ் அடிவாரத்திற்கு சற்று கீழே Chur நகருக்கு அருகில் பார்த்தேன். பளிங்கு போல் இருக்கும் நதி நீர். அவ்வளவு சுத்தம்.

7 hours ago, SwissTamil said:

Basel City

ஆக்கத்துக்கு நன்றி. நான் பார்த்த இடங்கள். பார்க்க விரும்பும் இடங்கள் உங்கள் லிஸ்டில் வருகிறதா? வேறு இடங்கள் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

ரைன் நதியை பாசலில் பார்க்கவில்லை ஆனால் அல்ப்ஸ் அடிவாரத்திற்கு சற்று கீழே Chur நகருக்கு அருகில் பார்த்தேன். பளிங்கு போல் இருக்கும் நதி நீர். அவ்வளவு சுத்தம்.

Bild

குப்பன்: தம்பி சுவீஸ் போயிருக்கிறார் எண்டு அடிச்சு சொல்லுறன்
சுப்பன்: எப்புர்ரா
குப்பன்: தம்பி சுவீஸ் தண்ணி தெளிவு,பளிங்கு  எண்டேக்கையே உனக்கு விளங்கியிருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

Bild

குப்பன்: தம்பி சுவீஸ் போயிருக்கிறார் எண்டு அடிச்சு சொல்லுறன்
சுப்பன்: எப்புர்ரா
குப்பன்: தம்பி சுவீஸ் தண்ணி தெளிவு,பளிங்கு  எண்டேக்கையே உனக்கு விளங்கியிருக்க வேணும்.

🤣. அட நீங்கள் லண்டன் வந்து தேம்ச எட்டி பார்த்த ஆள்தானே? எப்படி இருக்கும் கலர்.

கங்கை, காவிரி, மகாவலி இன்னும் நான் பார்த்த எல்லா ஆறும் இப்படித்தான் மண்நிறமாய் இருக்கும் (வைகையில் வெறும் மண் மட்டும்தான்🤣).

விவரண படங்களில்தான் இப்படி பளிங்கு போல் ஓடும் ஆறுகளை இமாலய பகுதியில் இருப்பதாக பார்த்துள்ளேன்.

நேரில் பார்த்தது சுவிசில்தான். பார்த்து கொண்டே இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, SwissTamil said:

எல்லாமே பிரெஞ் மயம். ஜேர்மன் மொழி அறிவும், ஆங்கில மொழி அறிவும் உங்களுக்கு கைகொடுக்கும்.

நன்றி.

என்ன தமிழை விட்டுடீங்க. உங்கை லண்டன் பக்கம் வந்தால், ஒரு பெற்றோல் ஸ்டேஷன் போனால், தமிழில பேசி விபரம் பெறலாம். அதேபோல சுவிஸ்சிலும் இருக்கும். நம்ம ஆட்கள் முகம் அப்படியே தமிழர் என்று சொல்லுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

நன்றி.

என்ன தமிழை விட்டுடீங்க. உங்கை லண்டன் பக்கம் வந்தால், ஒரு பெற்றோல் ஸ்டேஷன் போனால், தமிழில பேசி விபரம் பெறலாம். அதேபோல சுவிஸ்சிலும் இருக்கும். நம்ம ஆட்கள் முகம் அப்படியே தமிழர் என்று சொல்லுமே.

இதென்ன கோதாரியாய் கிடக்கு...லண்டன் பெற்றோல் செட் பொட்டுக்கேடெல்லாம் வெளியிலை வரப்போகுது போல கிடக்கு 😂

பெரிய பிரித்தானியாவுக்கு ஏழரைச்சனி போல கிடக்கு :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

நன்றி.

என்ன தமிழை விட்டுடீங்க. உங்கை லண்டன் பக்கம் வந்தால், ஒரு பெற்றோல் ஸ்டேஷன் போனால், தமிழில பேசி விபரம் பெறலாம். அதேபோல சுவிஸ்சிலும் இருக்கும். நம்ம ஆட்கள் முகம் அப்படியே தமிழர் என்று சொல்லுமே.

பெரிய பிரித்தானியாவில் இரண்டு பவுண்டுக்கு   ஒரு மணிநேரம் வேலை செய்வார்கள்.....ஆனால் சுவிற்சர்லாந்து இல்   இப்படி அடி மாட்டுச் சம்பளத்துக்கு எந்தவொரு தமிழரும் வேலை செய்யவில்லை உறுதி படுத்துகிறேன் 🤣

17 minutes ago, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு...லண்டன் பெற்றோல் செட் பொட்டுக்கேடெல்லாம் வெளியிலை வரப்போகுது போல கிடக்கு 😂

பெரிய பிரித்தானியாவுக்கு ஏழரைச்சனி போல கிடக்கு :cool:

அங்கே முதலாளி..தொழிலாளர்கள்....இருபகுதியும்.  தமிழர்கள் தான் ....இரண்டு பவுண்டுகளுக்கு மணித்தியாலத்துக்கு  வேலைவாய்ப்பு உண்டு போக விரும்பினால்   உதவி செய்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

பெரிய பிரித்தானியாவில் இரண்டு பவுண்டுக்கு   ஒரு மணிநேரம் வேலை செய்வார்கள்.....ஆனால் சுவிற்சர்லாந்து இல்   இப்படி அடி மாட்டுச் சம்பளத்துக்கு எந்தவொரு தமிழரும் வேலை செய்யவில்லை உறுதி படுத்துகிறேன் 🤣

அங்கே முதலாளி..தொழிலாளர்கள்....இருபகுதியும்.  தமிழர்கள் தான் ....இரண்டு பவுண்டுகளுக்கு மணித்தியாலத்துக்கு  வேலைவாய்ப்பு உண்டு போக விரும்பினால்   உதவி செய்வார்கள் 

முதலாவது பொட்டுக்கேடு வெற்றிகரமாக தரையிறங்கி விட்டது...🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

பின்னே பூலோகத்தின் சொர்க்கத்தில் வாழுவது என்றால் சும்மாவா

😄

இப்போது தான் விளங்கியது ஏன் பூலோக சொர்க்கம் என்று சுவிச்சலாந்தை  சொல்கிறார்கள்.  
யேர்மனிக்கு சொப்பிங் போகலாம்.
இத்தாலிக்கு சொப்பிங் போகலாம். அதோடு விசுகு அய்யாவின் நாட்டிற்கும் சொப்பிங் போகிறார்களாம்.

6 hours ago, Kandiah57 said:

அங்கே முதலாளி..தொழிலாளர்கள்....இருபகுதியும்.  தமிழர்கள் தான் ....இரண்டு பவுண்டுகளுக்கு மணித்தியாலத்துக்கு  வேலைவாய்ப்பு உண்டு

கந்தையா அண்ணா அப்போ தமிழீழம் வந்தால் இப்படி தானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

அங்கே முதலாளி..தொழிலாளர்கள்....இருபகுதியும்.  தமிழர்கள் தான் ....இரண்டு பவுண்டுகளுக்கு மணித்தியாலத்துக்கு  வேலைவாய்ப்பு உண்டு போக விரும்பினால்   உதவி செய்வார்கள் 

அதெல்லாம் அந்த காலம் இப்பவெல்லாம் ஸ்கூல் ரன் பள்ளிக்கு பிள்ளைகளை ஏத்தி இறக்கும் வாடகைக்கார் வருமானம் +வெள்ளி சனி போன்ற பிசி நாள்களில் வாடகைக்கார் வருமானமும் சேர்த்தால் மாத வருவாய் நாலு தாண்டுது என்கிறார்கள் ஆனேகமா இப்படியான வாடகைக்கார் ஓடுபவர்கள் ஜெர்மனியில் இருந்து லண்டன் வந்த தமிழ் ஆட்கள் இன்னும் ஒரு கொசுறு ஸ்கூல் ரன் பணம் கொடுப்பதே கவுன்சில்தான் இடையில் ஒரு புரோக்கர் எஜன்ட்  வரிகிரி இல்லாமல் எப்படி கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

ஓ...அப்படியா?.  நன்றிகள் பல   பெருமாள் ஜேர்மனியில் வாழும் இலங்கை தமிழர்கள் லேசுப்பட்டவர்களில்லை. 1985 -1990.   ஆண்டுகளுக்கு இடையில் இங்குள்ள தொலைபேசி புத்துகளில்  ஐந்து மார்க்கை வைத்து  கொண்டு ஒரு சின்ன இலரேனிக் சாதனத்தின்  துணையைக்கொண்டு  திரும்பத....திரும்ப பல முறைகள் அந்த குற்றியை எடுத்து   போட்டு   மணித்தியாலக் கணக்கில் தொலைபேசி கதைப்பார்கள..இந்த நடவடிக்கைகள் தொலைபேசி புத்துக்களை நவீன மயமாக்கல் செய்துவிட்டது......அதுவரை தொலைதொடர்பு நிறுவனம்   தங்களின் தொலைபேசி புத்துகளின் குறைபாடுகள்  பற்றி அறிந்திருக்கவில்லை       இந்த வேலையை செய்தவர்கள் பத்தாம் வகுப்பு கூட பாஸ் பண்ணியதில்லை  🤣🤣.   டேய் ஜேர்மனிய உங்களை விட நாங்கள் வல்லுநர்கள் என்று எடுத்து காட்டிவிட்டார்கள். 👍. எனவே… இந்தமாதிரி வரி ஏய்ப்பு எல்லாம் அவர்களுக்கு கை வந்தகலை  ....நம்ம ஆக்கள் தானே என்று    ஜேர்மனியிலிருந்து வந்தவர்களுடன். அதிகம் நெருங்கி பழகிவிடாதீர்கள் 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2023 at 15:15, குமாரசாமி said:

இதென்ன கோதாரியாய் கிடக்கு...லண்டன் பெற்றோல் செட் பொட்டுக்கேடெல்லாம் வெளியிலை வரப்போகுது போல கிடக்கு 😂

பெரிய பிரித்தானியாவுக்கு ஏழரைச்சனி போல கிடக்கு :cool:

On 8/1/2023 at 15:32, Kandiah57 said:

பெரிய பிரித்தானியாவில் இரண்டு பவுண்டுக்கு   ஒரு மணிநேரம் வேலை செய்வார்கள்.....ஆனால் சுவிற்சர்லாந்து இல்   இப்படி அடி மாட்டுச் சம்பளத்துக்கு எந்தவொரு தமிழரும் வேலை செய்யவில்லை உறுதி படுத்துகிறேன் 🤣

அங்கே முதலாளி..தொழிலாளர்கள்....இருபகுதியும்.  தமிழர்கள் தான் ....இரண்டு பவுண்டுகளுக்கு மணித்தியாலத்துக்கு  வேலைவாய்ப்பு உண்டு போக விரும்பினால்   உதவி செய்வார்கள் 

On 8/1/2023 at 23:10, பெருமாள் said:

அதெல்லாம் அந்த காலம் இப்பவெல்லாம் ஸ்கூல் ரன் பள்ளிக்கு பிள்ளைகளை ஏத்தி இறக்கும் வாடகைக்கார் வருமானம் +வெள்ளி சனி போன்ற பிசி நாள்களில் வாடகைக்கார் வருமானமும் சேர்த்தால் மாத வருவாய் நாலு தாண்டுது என்கிறார்கள் ஆனேகமா இப்படியான வாடகைக்கார் ஓடுபவர்கள் ஜெர்மனியில் இருந்து லண்டன் வந்த தமிழ் ஆட்கள் இன்னும் ஒரு கொசுறு ஸ்கூல் ரன் பணம் கொடுப்பதே கவுன்சில்தான் இடையில் ஒரு புரோக்கர் எஜன்ட்  வரிகிரி இல்லாமல் எப்படி கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை .

On 9/1/2023 at 04:29, Kandiah57 said:

ஓ...அப்படியா?.  நன்றிகள் பல   பெருமாள் ஜேர்மனியில் வாழும் இலங்கை தமிழர்கள் லேசுப்பட்டவர்களில்லை. 1985 -1990.   ஆண்டுகளுக்கு இடையில் இங்குள்ள தொலைபேசி புத்துகளில்  ஐந்து மார்க்கை வைத்து  கொண்டு ஒரு சின்ன இலரேனிக் சாதனத்தின்  துணையைக்கொண்டு  திரும்பத....திரும்ப பல முறைகள் அந்த குற்றியை எடுத்து   போட்டு   மணித்தியாலக் கணக்கில் தொலைபேசி கதைப்பார்கள..இந்த நடவடிக்கைகள் தொலைபேசி புத்துக்களை நவீன மயமாக்கல் செய்துவிட்டது......அதுவரை தொலைதொடர்பு நிறுவனம்   தங்களின் தொலைபேசி புத்துகளின் குறைபாடுகள்  பற்றி அறிந்திருக்கவில்லை       இந்த வேலையை செய்தவர்கள் பத்தாம் வகுப்பு கூட பாஸ் பண்ணியதில்லை  🤣🤣.   டேய் ஜேர்மனிய உங்களை விட நாங்கள் வல்லுநர்கள் என்று எடுத்து காட்டிவிட்டார்கள். 👍. எனவே… இந்தமாதிரி வரி ஏய்ப்பு எல்லாம் அவர்களுக்கு கை வந்தகலை  ....நம்ம ஆக்கள் தானே என்று    ஜேர்மனியிலிருந்து வந்தவர்களுடன். அதிகம் நெருங்கி பழகிவிடாதீர்கள் 🤣

இந்த பொட்டுகேடுகளை எல்லாம் இணைக்கும் பொதுக்காரணி யாது🤣?

பதிலை சொன்னால் சொந்த இனத்தை பழிப்பதாக சொல்லி விடுவார்கள்😎

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2023 at 23:29, Kandiah57 said:

எனவே… இந்தமாதிரி வரி ஏய்ப்பு எல்லாம் அவர்களுக்கு கை வந்தகலை  ....நம்ம ஆக்கள் தானே என்று    ஜேர்மனியிலிருந்து வந்தவர்களுடன். அதிகம் நெருங்கி பழகிவிடாதீர்கள் 🤣

என்ன கந்தையா இழப்பு அதிகம் போல.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில் வீட்டு வாடகை அதிகம்.. சம்பளமும் அதிகம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சுவிசில் வீட்டு வாடகை அதிகம்.. சம்பளமும் அதிகம்..

ஓணாண்டி ஊரில் தமிழ் படிக்கிறீர்களா. ? இப்போது நன்றாகவே எழுதுகிறீர்கள்.......முன்பு உங்களின் தமிழ் எழுத்தை வாசித்து விளங்கிகொள்ள   கடினமாக இருந்தது 😆.  தோட்ட செய்கை எப்படி போகிறது.....பூத்து காய்க்க தொடங்கி விட்டதா?.   சொல்லுங்க வந்து பிடிங்கி சமைத்து சாப்பிடுவோம். 🤣😆

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.