Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, விசுகு said:

அவர்களது மாவீரர் வாரம் மற்றும் விளக்கேற்றல்  பூ தூவுதல் என்பன  சைவ  சமயத்தின் தொடர்ச்சி என்றாலும்

சாதி மதம் எல்லாம் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தது. 
தூக்கி தலையில் வைக்க வில்லை. 
அது அந்த கடவுளுக்கும் தெரியும். 

Bild

  • Replies 128
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted

யாரோ யூரியூப்பிலும் உழைக்கலாம் என்றார்கள். அவர்களுக்காக.......

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, பையன்26 said:

முத‌லாவ‌து ப‌ருத்திதுறையில் வ‌சிக்கும் கிருஷ்னா

இர‌ண்டாவ‌து விடியோவில் இருப்ப‌து ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வ‌சிக்கும் அனுஷ்கான் , அனுஷ்கான் சைவ‌ ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ர்............

கிருஷ்னா மூல‌ம் ப‌ல‌ குடும்ப‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌ உத‌விக‌ள் போய் இருக்கு நான் பார்த்த‌ ம‌ட்டில் அவ‌ர் ம‌த‌ம் பார்த்து உத‌வுவ‌தாய் தெரிய‌ வில்லை...............எல்லாருக்கும் பொதுவாய் உத‌வுகிறார்

அவேன்ட‌ குடும்ப‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் இப்போது எல்லாரும் சைவ‌ ம‌த‌த்தில் இருந்து அல்லொலியா ம‌த‌த்துக்கு மாறி விட்டின‌ம்............

கிருஷ்னாவிட‌ம் ப‌ல‌ர் செல்லி இருக்கின‌ம் இப்ப‌டி உத‌வி செய்ய‌ போகிற‌ இட‌த்தில் ம‌த‌ம் ப‌ற்றி க‌தைக்க‌ கூடாது என்று அதை அவ‌ர் ஒழுங்காய் க‌டை பிடிக்கிறார்..................
என‌க்கு உந்த‌ ம‌த‌ம் மாறி கேலி கூத்துக‌ள் போடுவ‌து பிடிக்க‌வே பிடிக்காது , 

ஒவ்வொரு வ‌ருட‌மும் அவேன்ட‌ பிற‌ந்த‌ நாளுக்கு உந்த‌ கூத்து போட்டால் ப‌ல‌ரின் வெறுப்புக்கு ஆள் ஆகுவின‌ம்...........

சாண‌க்கிய‌ன் க‌ல‌ந்து கொண்ட‌து அனுஷ்கானின் பிற‌ந்த‌ நாளில்............அனுஷ்கான் சிறு வ‌ய‌து முத‌லே ஏழை எளிய‌ குடும்ப‌த்தில் இருந்து வ‌ந்த‌வ‌ர்..............அவ‌ரின் வாழ்வில் முத‌ல் முறை கேக் வெட்டி பிற‌ந்த‌ நாள் கொண்டாடின‌து என்று சொல்லி இருக்கிறார்

காசு கொடுத்து தான் ம‌க்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌னும் என்றால் அது அந்த‌ ம‌த‌த்துக்கு தான் அழுக்கு................

நான் அவ‌ர்க‌ளை ஆத‌ரிக்க‌ கார‌ண‌ம் எம‌க்காக‌ போராடின‌வ‌ர்க‌ளை புல‌ம்பெய‌ர் நாட்டு  எலிக‌ள் கைவிட்ட‌ நிலையில் முன்னாள் போராளிக‌ளின் குடும்ப‌த்துக்கு இவ‌ர்க‌ள் மூல‌மாய் த‌ன்னும்  உத‌விக‌ள் போய் சேருது

நானும் இவ‌ர்க‌ள் மூல‌ம் உத‌வி செய்து இருக்கிறேன்...........என‌க்கு ஆதார‌த்தை காட்டி இருக்கின‌ம்..........நான் பெரிசா க‌தைப்ப‌து கிடையாது காசு அனுப்பி போட்டு சொல்லுவேன் அந்த‌ குடும்ப‌த்துக்கு  இந்த‌ உத‌விய‌ கொண்டு போய் குடுங்கோ என்று................

ஒரு நாள் கூலி வேலைக்கு போனால் 1500 இருந்து 2000 ரூபாய் கொடுக்கின‌ம்..................கிருஷ்னா ம‌ற்று அனுஷ்கான்  ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் அந்த‌ உத‌விய‌ ச‌ரியா நேர‌த்தில் ச‌ரியான‌ ஆட்க‌ளிட‌ம் கொண்டு போய் கொடுக்கின‌ம்.............

அக்கா நீங்க‌ள் ஊரில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி செய்து பாருங்கோ அதுக்கு பிற‌க்கு தெரியும் நீங்க‌ள் ப‌ட‌ போகும் அவ‌மான‌ங்க‌ள் ம‌ற்றும் வேத‌னைக‌ள் இன்ன‌ல்க‌ள் க‌ஸ்ர‌ங்க‌ள் ............இவைக‌ளை க‌ட‌ந்து தான் அவ‌ர்க‌ளின் ப‌ய‌ன‌ம் தொட‌ர்கிற‌து..................எதுவாயினும் தூற்றாம‌ல் இருப்போம் அக்கா..............❤️🙏

அனுசன் இப்போ கொஞ்ச மாதங்கள் உதவி திட்டங்களில் இணைந்தவர்.கிருஷ்ண்ணா ஆரம்பத்திலிருந்தே உதவி திட்டம் தான் நாமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.இன்னும் சொல்லப் போனால் அனுசனை விட கிருஷ்ணாவைப் பார்க்கும் போது கவலையாகவும் இருப்பது ...ஆனாலும் நான் கதைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவரோடு நேரடியாவே பேசிக் கொள்கிறேன்.எனக்கு யாரையும் பிழை பிடிக்க வேணும் என்ற நோக்கம் அல்ல..அதே நேரம் நாங்களும் சுனாமியோடு ஆரம்பித்து இன்னும் எனது கை கொடுத்துக் கொண்டே இருக்கிறது பையா..இந்த வருடமும் மட்டு மாவட்டதிலிருந்து பல்கலைக்கு போக இருக்கும் ஒரு மாணவியின் கல்விச் செலவை ஏற்று இருக்கிறேன்.நன்றி.

  • Like 2
  • Thanks 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, MEERA said:

முதலில் உன்னை திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும்-  விவேகானந்தர்

ஒரு விழிப்புலனற்ற மூதாட்டி மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பேருந்தில் ஏறினார், பாவம் யாரும் அவருக்கும் தமது இருக்கையினை வழங்கவில்லை, ஆனால் ஒருவர் மட்டும் அந்த மூதாட்டியில் இரக்கப்பட்டு தனது இருக்கையினை கொடுத்தார்.

அந்த  செயலுக்காக அவர் வேலை செய்த மனிதாபிமானம் அற்ற நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டது. 

ஏனென்றால் அவர் அந்த பேருந்தின் ஓட்டுனர்.

சில விடயங்களை பயன்படுத்தும் இடத்திற்கேற்ப அதன் அர்த்தங்களும் மாறுபடும்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரதி said:

உங்களிடம் ஒரு கேள்வி ...தமிழ் மட்டும் கதைப்பதால் தமிழன் ஆகி விட முடியுமா?...தமிழரின் அடையாளம் என்ன?

தமிழர்கள் தம்மை தேசமாக உணர்ந்து, தமிழ்த்தேசியம் பேசினால்,  அங்கு தமிழை தாய்மொழியாக கொண்ட அனைத்து மதத்தினரும் அடக்கம். அப்படியில்லை ஒரு மதத்திற்குள் தமிழரைச் சுருக்க நினைத்தால் தமிழ் தேசியம், தமிழ் தேசம் என்ற சொல்லுக்கு அரத்தமே இல்லை.  தேசமாக  பரிணமிக்க தகுதியற்ற ஒரு சிறிய, “இனக்குழு” என்ற வரையறைக்குள் வந்துவிடுவோம். 

 ரதி அக்கா இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழர்கள் தேசிய இனமா?  அல்லது ஏதோ ஒரு நாட்டுக்குள் அண்டி வாழும்  வாழும்   ஒரு சிறிய இனக்குழுவா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, MEERA said:

இதையே போய் அல்லேலூயா ஆட்களிடம் கேளுங்கள், யேசு தான் கடவுள் மற்றவைகள் எல்லாம் பிசாசு என்பார்கள்.

இத்தனைக்கும் சைவத்திலிருந்து மதம் மாறியவர்கள்.

அது தவறு தான்.  ஆனால், தமது சைவ சமயத்தினரான, தாங்கள் வணங்கும் அதே கடவுளை நம்பும்  சக மனிதர்களை பிறப்பினால் தாழ்த்தி, அவர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்காமல் கடவுளை அண்ட விடாமல் செய்ததும், இன்றும் அதை மறைமுக டெக்கினிக்கலாக நடைமுறைப்படுத்தும் செயல் மட்டும் நியாயமானதா?  அதை விட மோசமானதா? 

Edited by island
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, vasee said:

ஒரு விழிப்புலனற்ற மூதாட்டி மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பேருந்தில் ஏறினார், பாவம் யாரும் அவருக்கும் தமது இருக்கையினை வழங்கவில்லை, ஆனால் ஒருவர் மட்டும் அந்த மூதாட்டியில் இரக்கப்பட்டு தனது இருக்கையினை கொடுத்தார்.

அந்த  செயலுக்காக அவர் வேலை செய்த மனிதாபிமானம் அற்ற நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டது. 

ஏனென்றால் அவர் அந்த பேருந்தின் ஓட்டுனர்.

சில விடயங்களை பயன்படுத்தும் இடத்திற்கேற்ப அதன் அர்த்தங்களும் மாறுபடும்தானே.

இதைத் தான் நாங்களும் சொல்கிறோம்

நாம் வாழும் ஐரோப்பிய நாடுகளில் கூட எந்த நிலையிலும் மதத்தை விட்டு கொடுக்கமாட்டார்கள். இந்த நாட்டில் இது தான் மதம் என்று இருக்கிறார்கள். இது கட்சிகளின் கொள்கை அல்ல அரச கொள்கை.

 தமிழர் மட்டுமே எல்லாவற்றையும் கழட்டி கொடுத்து விட்டு அம்மணமாக நிற்கிறான். அது தேவையில்லை என்றே நினைக்கிறேன். நன்றி 

11 hours ago, பையன்26 said:

 ..........என‌க்கு முன்னாள் என்ர‌ ம‌த‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்தினா 

அவைக்கு உரிய‌ பாணியில் ப‌தில் இருக்கும் அதில் எந்த‌ அச்ச‌மும் இல்லை..............

கோயிலுக்கு பொங்க‌ல் வைத்து சைவ‌ க‌ட‌வுளை கும்பிட்ட‌ கூட்ட‌ம் அப்ப‌டி க‌தைக்கின‌ம் என்றால் அது அவ‌ர்க‌ளின் அறியாமை.......................

இதைத் தானே ராசா நானும் எழுதுகிறேன். நன்றி 

1 hour ago, island said:

அது தவறு தான்.  ஆனால், தமது சைவ சமயத்தினரான, தாங்கள் வணங்கும் அதே கடவுளை நம்பும்  சக மனிதர்களை பிறப்பினால் தாழ்த்தி, அவர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்காமல் கடவுளை அண்ட விடாமல் செய்ததும், இன்றும் அதை மறைமுக டெக்கினிக்கலாக நடைமுறைப்படுத்தும் செயல் மட்டும் நியாயமானதா?  அதை விட மோசமானதா? 

செருப்பு கடித்தால் காலையே மாற்றணும் என்கிறீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

என்ன மீரா இது, அவர்கள் ஏனைய கிறிஸ்தவர்களையும் கூட இப்படித்தான் சொல்கிறார்கள்.

அமெரிகா, யூகே, நைஜீரியா எங்கேதான் இவர்களின் ரோதனை இல்லை?

இப்ப எங்களில் பிரேமாநந்தா, நித்தியாநந்தா, சக்குரு எண்டு ஒரு லூசு கூட்டம் அலையுது என்பதால் எங்கள் எல்லாரையும் அப்படி எண்டு சொல்ல ஏலாதுதானே?

நன்றி கோசான், நான் எல்லா மதங்களையும் ஏனைய கிறீஸ்தவர்களையும் சேர்த்து தான் கூறுகிறேன். ஆனால் நீங்களும் இன்னும் சிலரும் சைவ சமயத்திற்கு மட்டுமே ஆதரவாக நான் எழுதுவதாக நினைக்கிறார்கள்.

எங்கு நான் சார்ந்த சமயம் தாக்கப்படுகிறதோ அங்கு எனது கருத்து காரசாரமாக வைக்கப்படும்.

3 hours ago, vasee said:

ஒரு விழிப்புலனற்ற மூதாட்டி மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பேருந்தில் ஏறினார், பாவம் யாரும் அவருக்கும் தமது இருக்கையினை வழங்கவில்லை, ஆனால் ஒருவர் மட்டும் அந்த மூதாட்டியில் இரக்கப்பட்டு தனது இருக்கையினை கொடுத்தார்.

அந்த  செயலுக்காக அவர் வேலை செய்த மனிதாபிமானம் அற்ற நிறுவனம் அவரை வேலையிலிருந்து நீக்கி விட்டது. 

ஏனென்றால் அவர் அந்த பேருந்தின் ஓட்டுனர்.

சில விடயங்களை பயன்படுத்தும் இடத்திற்கேற்ப அதன் அர்த்தங்களும் மாறுபடும்தானே.

அந்த ஓட்டுநர் தனது நிலையை அதுவரை அறிந்திருக்கவில்லை தனது கடமையையும் உணரவில்லை.

உனை நீ அறி.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

நீங்கள் இங்கே எழுதியது அண்ணனுக்கான அரசியல் என ஒத்து கொண்டமைக்கு நன்றி.

ஆக இந்த அரசியலுக்காக மதத்தை இழுத்து வந்திருக்கிறீகள் என்பது தெளிவு.

இத்தனைக்கும் மட்டுவில் இருந்து வீடியோ போட்ட அந்த பையன் சைவமாம்🤣.

சாணாக்கியனின் ஆதரவாளர் என்பதால் அவரை மதமும் மாத்தியாச்சு🤣.

ஆனால் இந்த அம்பாறை, மட்டகளப்பு பகிடி விட வேண்டாம். 

மட்டகளப்பில் போட்டி கூட என அம்பாறை போனதும், அங்கேயும் அண்ணர் ஒரு சீட்டை எடுக்க முடியாமல் போனதுக்கு கூட்டமைப்பும், சாணக்ஸ்சும் காரணம் என்பதும் வெளிப்படை. 

ஏன் சம் என்ன லூசா? தானே ஒரு பட்டை போடும் சைவ பழமாக இருந்த படி, கிறீஸ்தவர்களை மட்டும் தன் கட்சியில் சேர்க்க? லொஜிக் உதைக்குதே?

9 hours ago, goshan_che said:

1. ஏற்று கொண்டு விட்டீர்கள்

2. இல்லை எனக்கு ஆதாரம் தேடும் அவசியம் இல்லை. இவர்கள் மதம்மாற்றிகள் என கூறும் நீங்கள் ஆதாரம் தாருங்கள்.

ஆனால் 

நீங்கள் கேட்காமலே பையனும், சபேசனும் உண்மை எது என வடிவாக எடுத்து சொல்லி விட்டார்கள்.

3.  இருவரும் ஒரே கருத்து சந்தோசம்

4. திணிப்பது கூடாது என்பதுதான் எல்லார் நிலையும். ஆனால் திணிப்பதை நிறுவுங்கள் முதலில்.

5. இல்லை. நீங்கள் இதே பதிலில் முதலாம் பந்தியில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமே - இங்கே சாணக்ஸ்சுக்கு எதிராக எழுதிய ஒரே காரணம் அண்ணனுக்கு முட்டு கொடுப்பது மட்டுமே என்பதை ஐயம் திரிபுற விளக்கிவிட்டது.

அப்ப நல்லாத்தான் இருந்தார்கள். 2009 க்கு பிறகுதான் இந்த கூத்தல்லாம்🤣.

ஹாஹா...உங்களுக்கு நிறைய தெரியும் என்று நினைத்திருந்தேன் ...ஒன்றுமே தெரியாது என்று புரிந்து கொண்டேன்...இதற்கு முதலும் இப்படி சில திரிகளில் நழுவி இருக்கிறீர்கள் ...வேலை மினக்கெட்டு உங்களுக்கு கருத்து எழுதின என்னை சொல்லோணும் ...உங்களுக்கும் , இங்கு இருக்கும் சிலருக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை ...ஒரு வட்டத்தை போட்டு விட்டு அப்படி தான் இருக்கு என்று அண்ணாந்து படுத்து கொண்டு வானத்தை பார்ப்பவர்கள் நீங்கள் ...அப்படியே இருங்கள் ..நன்றி ..வணக்கம் 
பி;கு ; நான் யாயினி இணைத்த காணொளியில் இரண்டாவது இருப்பவரை பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்பதையு கவனத்தில் எடுக்கவும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, MEERA said:

நன்றி கோசான், நான் எல்லா மதங்களையும் ஏனைய கிறீஸ்தவர்களையும் சேர்த்து தான் கூறுகிறேன். ஆனால் நீங்களும் இன்னும் சிலரும் சைவ சமயத்திற்கு மட்டுமே ஆதரவாக நான் எழுதுவதாக நினைக்கிறார்கள்.

எங்கு நான் சார்ந்த சமயம் தாக்கப்படுகிறதோ அங்கு எனது கருத்து காரசாரமாக வைக்கப்படும்.

அந்த ஓட்டுநர் தனது நிலையை அதுவரை அறிந்திருக்கவில்லை தனது கடமையையும் உணரவில்லை.

உனை நீ அறி.

அதே...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, island said:

அது தவறு தான்.  ஆனால், தமது சைவ சமயத்தினரான, தாங்கள் வணங்கும் அதே கடவுளை நம்பும்  சக மனிதர்களை பிறப்பினால் தாழ்த்தி, அவர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்காமல் கடவுளை அண்ட விடாமல் செய்ததும், இன்றும் அதை மறைமுக டெக்கினிக்கலாக நடைமுறைப்படுத்தும் செயல் மட்டும் நியாயமானதா?  அதை விட மோசமானதா? 

ஆம் நிச்சயம் அது தவறு. மாற்றத்தினை உள்ளிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

இதுவரை அன்றும் சரி இன்றும் சரி மதமாறிய எவராவது (சாதீய ரீதியில்) என்னை கோவிலுக்குள் விடவில்லை அதனால் மதம் மாறினேன் என்று கூறி இருக்கிறார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, MEERA said:

ஆம் நிச்சயம் அது தவறு. மாற்றத்தினை உள்ளிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

இதுவரை அன்றும் சரி இன்றும் சரி மதமாறிய எவராவது (சாதீய ரீதியில்) என்னை கோவிலுக்குள் விடவில்லை அதனால் மதம் மாறினேன் என்று கூறி இருக்கிறார்களா? 

அல்லது மதம் மாறிய பின்னர் தமது வீடுகளில் சாதியை துறந்திருக்கிறார்களா??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, island said:

தமிழர்கள் தம்மை தேசமாக உணர்ந்து, தமிழ்த்தேசியம் பேசினால்,  அங்கு தமிழை தாய்மொழியாக கொண்ட அனைத்து மதத்தினரும் அடக்கம். அப்படியில்லை ஒரு மதத்திற்குள் தமிழரைச் சுருக்க நினைத்தால் தமிழ் தேசியம், தமிழ் தேசம் என்ற சொல்லுக்கு அரத்தமே இல்லை.  தேசமாக  பரிணமிக்க தகுதியற்ற ஒரு சிறிய, “இனக்குழு” என்ற வரையறைக்குள் வந்துவிடுவோம். 

 ரதி அக்கா இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழர்கள் தேசிய இனமா?  அல்லது ஏதோ ஒரு நாட்டுக்குள் அண்டி வாழும்  வாழும்   ஒரு சிறிய இனக்குழுவா? 

நாங்கள் வெளிநாடுகளில் இருக்கிறோம் ...என்ன தான் இந்த நாட்டு கடவுசீட்டு வைத்திருந்தாலும்  சிறிலங்கன் பிறிட்டிஸ், சிறிலங்கன் பிரென்ஞ் என்று தான் எங்களை அடையாளப்படுத்துவார்கள்...இலங்கையர் என்பது எமது பொது அடையாளம்...தமிழ் பேசும் முஸ்லிம்களும் சரி, சைவத்திலிருந்து பிரிந்து போன கிறிஸ்தவர்களும் சரி அவர்கள் என்ன தான் பிரிந்து போனாலும் அவர்களுக்கு என்று ஒரு அடையாளம் இருக்கும் அந்த அடையாளம் சைவம் என்பதும்,அதன் பாரம்பரியம் என்பதும் என் கருத்து .
அதாவது தமிழரின் பாரம்பரியம்,பண்பாடு,கலாச்சாரம் என்பன அவர்கள் என்ன மதமாயிருந்தாலும் சைவத்தோடு தொடர்பு பட்டே காணப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, விசுகு said:

அல்லது மதம் மாறிய பின்னர் தமது வீடுகளில் சாதியை துறந்திருக்கிறார்களா??

எனக்கு தெரிந்த மதம் மாறிய நகைத் தொழில் செய்யும் ஒருவர் தனது business card / visiting card இல் தனது பெயருக்கு பின்னால் “பத்தர்” என்று இணைத்துள்ளார். அத்துடன் தாம் பரம்பரை பரம்பரையாக பத்தர் ஆட்கள் என்று கூறியே வியாபாரம் செய்வார்.

இந்த பச்சோந்திக் கள்ளக் கூட்டம் எதுவும் செய்யும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, MEERA said:

எங்கு நான் சார்ந்த சமயம் தாக்கப்படுகிறதோ அங்கு எனது கருத்து காரசாரமாக வைக்கப்படும்

மாவீரர் சார்ந்த நிகழ்வுகள் சைவசமயத்தை பின்பற்றியதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, MEERA said:

எங்கு நான் சார்ந்த சமயம் தாக்கப்படுகிறதோ அங்கு எனது கருத்து காரசாரமாக வைக்கப்படும்.

அதே🙏. இதை யாரும் மதவாதம் என்று நினைத்தால் அதைப்பற்றி எனக்கு கவலையே இல்லை!

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, யாயினி said:

அனுசன் இப்போ கொஞ்ச மாதங்கள் உதவி திட்டங்களில் இணைந்தவர்.கிருஷ்ண்ணா ஆரம்பத்திலிருந்தே உதவி திட்டம் தான் நாமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.இன்னும் சொல்லப் போனால் அனுசனை விட கிருஷ்ணாவைப் பார்க்கும் போது கவலையாகவும் இருப்பது ...ஆனாலும் நான் கதைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவரோடு நேரடியாவே பேசிக் கொள்கிறேன்.எனக்கு யாரையும் பிழை பிடிக்க வேணும் என்ற நோக்கம் அல்ல..அதே நேரம் நாங்களும் சுனாமியோடு ஆரம்பித்து இன்னும் எனது கை கொடுத்துக் கொண்டே இருக்கிறது பையா..இந்த வருடமும் மட்டு மாவட்டதிலிருந்து பல்கலைக்கு போக இருக்கும் ஒரு மாணவியின் கல்விச் செலவை ஏற்று இருக்கிறேன்.நன்றி.

ந‌ன்றி அக்கா............உங்க‌ளின் ம‌னதை நோக‌டிக்கும் நோக்கில் நான் அப்ப‌டி எழுத‌ வில்லை அத‌ நினைவில் வைத்து இருங்கோ

ம‌கிழ்ச்சி அக்கா நீங்க‌ளும் உங்க‌ளால் முடிந்த‌ உத‌வியை அந்த‌க் கால‌ம் தொட்டு செய்திட்டு வ‌ருவது..............🙏🙏🙏

உப்பு வித்து தாயை வ‌ள‌க்கும் ம‌க‌ன் அந்த‌ காணொளிய‌ வெளி உல‌கிற்கு கொண்டு வ‌ந்த‌து அனுச‌ன்..............அந்த‌ காணொளிய‌ பார்த்த‌ புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் உற‌வுக‌ள் அவ‌ர்க‌ளின் அத்த‌னை விருப்ப‌ங்க‌ளை பூர்த்தி செய்தார்க‌ள்...............அப்ப‌டி த‌மிழீழ‌ நில‌ப்ப‌ர‌ப்பில் எத்த‌னையோ குடும்ப‌ம் க‌ண்ணீரோடு வ‌றுமையில் வாடின‌ம்...........கிருஷ்னா அனுச‌ன் எத்த‌னை இர‌வு ஒழுங்காய் தூக்க‌ம் இல்லாம‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்டு ப‌ல‌ ம‌க்க‌ளுக்கு உத‌வி இருக்கின‌ம்.............புல‌ம்பெய‌ர் நாட்டில் போதையில் மித‌க்கும் கூட்ட‌ம் இவ‌ர்க‌ளுக்கு அசிங்க‌மான‌ பானியில் குர‌ல் ப‌திவு அனுப்பிற‌து..................இப்ப‌டி ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளை அவ‌மான‌ங்க‌ளை தாண்டி தான் அவ‌ர்க‌ளின் உத‌வி ப‌ய‌ண‌ம் தொட‌ருது...............உண்மைய‌ சொல்ல‌னும் என்றால் அனுச‌ன் ம‌ற்றும் கிருஷ்னாவின் காணொளிய‌ பார்த்து விட்டுத் தான்  தூங்குவேன்.............சில‌து க‌ண்ணீரோடும் தூங்குவேன் எம் ம‌க்க‌ள் ப‌டும் க‌ஸ்ர‌த்தை நினைச்சு 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, விசுகு said:

இதைத் தானே ராசா நானும் எழுதுகிறேன். நன்றி 

ம‌த‌ம் மாறுவ‌து அவ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ முடிவு அண்ணா
ம‌த‌ம் மாறி போட்டு  
எந்த‌ ம‌த‌த்தில் இருந்து வ‌ந்தார்க‌லோ அந்த‌ ம‌த‌த்தை ப‌ற்றி கேவ‌ல‌மாய் க‌தைச்சால் அவ‌ர்க‌ள் ம‌னித‌ வேட‌த்தில் இருக்கும் மிருக‌ங்க‌ள்😡😡😡.............அவைய‌ அசிங்க‌ப் ப‌டுத்த‌ நீண்ட‌ நேர‌ம் எடுக்காது ஒரு வார்த்தை போதும்..........அதோடு அவ‌ர்க‌ளின் வாயில் இருந்து ஒரு  வார்த்தை கூட‌ வ‌ராது...............பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு...........என்ர‌ பொறுமைய‌ சோதிச்சா பிற‌க்கு என்னை விட‌ கெட்ட‌வ‌னை அவ‌ர்க‌ளின் வாழ் நாளில் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம்

ம‌த‌ம் மாறிட்டிங்க‌ள் ம‌த‌ம் மாறின‌ அந்த‌க் க‌ட‌வுளுக்கு த‌ன்னும் இனி  உண்மையும் நேர்மையுமாய் இருங்கோ என்று தான் சொல்லுவேன் , அத‌ விட்டு எங்க‌ட‌ க‌ட‌வுள்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி கொச்சை ப‌டுத்தி க‌தைக்க‌ நானும் இட‌ம் கொடுக்க‌ மாட்டேன் நீங்க‌ளும் இட‌ம் கொடுக்க‌ கூடாது...........

என்ன‌ நோக்கத்துக்கு ம‌த‌ம் மாறினார்க‌ளோ அதை அவ‌ர்க‌ள் பின் ப‌ற்றுவ‌து அவ‌ர்க‌ளுக்கு ந‌ல்ல‌ம் அதை விடுத்து ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து.........த‌ங்க‌ளை தாங்க‌ளே முட்டாள் கூட்ட‌ம் என்று நிருபிப்ப‌துக்கு ச‌ம‌ம் 😏
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரதி விசுகு நீங்கள் தமிழர் வரலாற்றை குறிப்பிட்ட காலத்துக்கு அப்பால் பின்னோக்கி படித்து பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.. சைவம் தமிழர்களுக்குள் வரமுன்னரே தமிழும் தமிழர்களும் ஆசியாவில் தழைத்தோங்கிய தொன்மைக்குடிகள்… திருவள்ளுவர்கால்த்தில்கூட சைவமதம் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை.. இயற்கையை வழிபடத்தொடங்கியதுதான் தமிழர்களின் முதல் வழிபாடு என்று நினைக்கிறேன்.. இந்த காணொளியில் கூட சைவத்துக்கு முதல் தமிழர்களிடம் இருந்த ஒரு மதத்தை பற்றி பேசுகிறது.. இப்படி எத்தனை எத்தனை எத்தனை தமிழர் வழிபாட்டு முறைகள் இரக்கமற்ற பலநூறு அரசர்களின் படையெடுப்பில் அழிந்து போயிருக்கும்.. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இயற்கையை வழிபடத்தொடங்கியதுதான் தமிழர்களின் முதல் வழிபாடு என்று நினைக்கிறேன்..

இதுதான் உண்மை. எனக்குத்தெரியவே பல கிராமங்களில் மரங்களுக்கு கீழ் கல்லை வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறேன். தைப்பொங்கல் கூட இயற்கை வழிபாடுதான்.இன்றோ அதெல்லாம் மெல்ல மெல்ல அழிந்து விட்டது. 

இன்று அந்த மரங்களுக்கு கீழ் இருந்த வைரவருக்கும் காளி அம்மனுக்கும் கோபுரங்கள்,மடங்கள் கட்டி வழிபடுகின்றார்கள். அப்படி வழிபட்டாலும் ஐயர் வைத்து பூசை செய்கின்றார்கள். சைவ வழக்கப்படி ஐயர் என்று ஒருவர் இல்லை. எமது கடவுளை நாமே தொட்டு வணங்குவதுதான் சைவத்தின் சிறப்பு.

கோவில்களை பெரிதாக கட்டிவிட்டு ஐயரை வைத்து பூஜை செய்வதும், சக மனிதரை சாதியெனும் பெயரில் வெளியே நிற்க வைப்பதும் சைவமல்ல. அது யாரோ அடக்கு முறையாளர்கள் கொண்டுவந்த முறை.

என்னை நானே திருத்தாமல் நான் சைவத்தின் தூண் எனவும்,சைவத்தை குறைத்து சொன்னால் நான் காரசாரமாகிவிடுவேன் என மிரட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது நண்பர்களே😁. முதலில் ஊரில் உள்ள கோவில்களில் சாதி முறையை ஒழியுங்கள். நீங்கள் வழிபடும் தெய்வத்தின் மூலஸ்தானத்திற்கு செல்ல வழியை பாருங்கள். அதன் பின் நான் சைவன் என சொல்லுங்கள்.🤣

  • Like 8
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, குமாரசாமி said:

👍🏼👍🏼👍🏼 உண்மையை உறைக்க சொன்ன குமாரசாமி அண்ணாவுக்கு வாழ்த்துகள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

இங்கு யாருமே புனிதர்கள் இல்லை தாத்தா அப்படி யாரும் வாதிடவும் வரவில்லை...ஆனால் நிறைய தவறுகள் நடக்கிறது என்பதை மட்டுமே சுட்டிக் காட்ட முயற்சி..தவறு என்று தெரிந்தாலும் புரிந்தாலும் கண்டும் காணாமல் போய் விடும் பாங்கில் எல்லோரும் என்றால் நாம் நம் போக்கில் போவதை விட வேறு வழி..நாட்டுக்கு கஸ்ரப்பட்டவர்களுகுக்கு நல்லது செய்கிறார்கள் என்பதற்காக அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள இயலாது..அதே நேரம் அவர்ளும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவியவரகள் தான் இன்று நாம் இந்து சாமியை கும்பிடுவதில்லை என்று வெளிப்படையாக எத்தனையோ இடத்தில் சொல்லி இருக்கிறார்கள்..இது எனது தவறான கண்ணோட்டம் அல்ல..சரியான தருணம் வந்தால பார்ப்போம்..நன்றி.

2009க்கு முன் 2009க்கு பின் என்று பார்த்தா தாத்தா

2009க்கு முன் ஈழ‌த்தில் ப‌ல‌ கோயில்க‌ளில் எல்லா ஜாதிக்கிறார்க‌ளும் வ‌ந்து போகும் நிலை இருந்த‌து

எதை நாம் இல்லாம‌ ப‌ண்ண‌ ஆசை ப‌டுகிறோம் அத‌ மீண்டும் சிங்க‌ள‌ கைகூலிக‌ள் மீண்டும் உருவாக்கிறாங்க‌ள்...............ம‌று ப‌டியும் ஊரில் கோயிலுக்கு ஜாதி முறை மெது மெதுவாய் வ‌ருது

இதுக்கு எப்ப‌டி முற்றுப் புள்ளி வைப்ப‌து தாத்தா 😔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, யாயினி said:

இங்கு யாருமே புனிதர்கள் இல்லை தாத்தா அப்படி யாரும் வாதிடவும் வரவில்லை...ஆனால் நிறைய தவறுகள் நடக்கிறது என்பதை மட்டுமே சுட்டிக் காட்ட முயற்சி..தவறு என்று தெரிந்தாலும் புரிந்தாலும் கண்டும் காணாமல் போய் விடும் பாங்கில் எல்லோரும் என்றால் நாம் நம் போக்கில் போவதை விட வேறு வழி..நாட்டுக்கு கஸ்ரப்பட்டவர்களுகுக்கு நல்லது செய்கிறார்கள் என்பதற்காக அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள இயலாது..அதே நேரம் அவர்ளும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவியவரகள் தான் இன்று நாம் இந்து சாமியை கும்பிடுவதில்லை என்று வெளிப்படையாக எத்தனையோ இடத்தில் சொல்லி இருக்கிறார்கள்..இது எனது தவறான கண்ணோட்டம் அல்ல..சரியான தருணம் வந்தால பார்ப்போம்..நன்றி.

அவர்கள் ஒரு சிலர் இந்து சாமியை கும்பிடாமல்  விடுவதால் இந்து  சாமிக்கு எந்த நட்டமும் இல்லை.  உங்களுக்கும் நட்டம் இல்லை எதற்காக நீங்கள் கவலை கொள்கின்றீர்கள்.  

நீங்கள் கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை. நமக்கு விரும்பியதில் நம்பிக்கை கொள்வது போல் அவர்களும் செய்யட்டுமே. 

தமிழர் என்ற தேசிய இனத்துக்குள் இவ்வாறான குறுகிய மனப்பானையான  சண்டைகள் எதற்கு?  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதித் தமிழர்களின் வரலாறு நெடுக இடையில் ஆரியர்களால் செருகப்பட்ட பிள்ளையாரோ சரஸ்வதியோ விஸ்ணுவோ கடவுளாக இருந்ததில்லை.. அண்ணமார் கருப்பசாமி எல்லைக்காத்தான் வைரவர் என்று மக்களை காப்பாற்ற மடிந்தவர்களையே கடவுளாக்கிய நன்றிமறவாதவர்கள் அவர்கள்.. அந்த நீட்சிதான் புலிகளும் தமிழ் மக்களும் மாவீரர்களை போற்றுவதும்.. எப்படியும் அந்த ஆதி இரத்தத்தின் ஒரு துளியாவது எமது உடலில் ஓடும் அல்லவா..

10 minutes ago, பையன்26 said:

த‌மிழ‌ர்க‌ள் சில‌ர் பிற‌ந்த‌தில் இருந்தே க‌ற்றோலிக் ம‌த‌த்தில் இருக்கின‌ம்.............ஆனால் அவ‌ர்க‌ள் ம‌த‌த்தை ப‌ற்றி பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது................ஆனால் பிராட்டு வேலைக‌ள் ஊத்த‌ செய‌ல்க‌ள் செய்த‌ த‌றுத‌லைக‌ள் ம‌த‌ம் மாறி பாத‌ர் வேச‌ம் போட்டு ஊரை ஏமாத்துக‌ள் அதோடு சிறுவ‌ய‌தில் இருந்து கும்பிட்ட‌ தெய்வ‌ங்க‌ளை அசிங்கப் ப‌டுத்துதூக‌ள்

இதைத்தான் இந்துமதத்தில் இருக்கும் பிராட்டு வேலைகள் ஊத்த செயல்கள் செய்த தறுதலைகள் சாமியார் வேசம் போட்டு ஊரை ஏமாத்துதுகள்.. உ+ம் நித்தி, ஜக்கி, கல்கி.. 

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.