Jump to content

வாரிசு விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
927841.jpg  
 

தொழில் போட்டிக்கும், குடும்ப உறவுகளுக்கும் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் ‘வாரிசு’ வாய்க்கப்பெற்றால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

ஜெயபிரகாஷ் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (பிரகாஷ்ராஜ்), ராஜேந்திரன் குரூப் ஆஃப் கம்பெனிக்கும் (சரத்குமார்) இடையே தொழில் போட்டி வலுத்து வருகிறது. இதனிடையே, தொழிலதிபர் ராஜேந்திரன் தனக்குப் பிறகு தனது தொழிலை ஏற்று நடத்த தனது மகன்களில் திறமையான ஒருவரை அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருக்கிறார். மற்றொருபுறம் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கும் விஜய் ராஜேந்திரன் (விஜய்) தனது பெற்றொரின் 60ஆம் கல்யாணத்திற்காக மீண்டும் வீட்டின் படியேற, அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. இறுதியில் ராஜேந்திரன் தனது அடுத்த தொழில் வாரிசை கண்டறிந்தாரா? விஜய் ஏன் வீட்டிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்? அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன? - இதை சென்டிமென்டாக சொல்லியிருக்கும் படம்தான் ‘வாரிசு’.

மிரட்டும் நடன அசைவுகள், புது ஹேர்ஸ்டைல், ‘க்யூட்’ முகபாவனைகளால் தோற்றத்தில் அழகூட்டி வயதை வெறும் ‘எண்’ என மீண்டும் நம்ப வைத்திருக்கிறார் விஜய். ‘ரஞ்சிதமே’ பாடலின் கடைசி நிமிடங்களில் சிங்கிள் ஷாட்டில் அவரது ஆட்டம் திரையரங்கை ஆர்ப்பரித்து அலறவிடுகிறது. குழந்தைத் தனமான சில பாவனைகளும், அதற்கேற்ற உடல்மொழியும், ‘தீ’ தளபதி பாடலில் அவரின் நடையும் ரசிகர்களுக்கு ‘பொங்கல்’ விருந்து.

ராஷ்மிகா மந்தனாவின் பங்கு கதைக்கும், கதையின் பங்கு ராஷ்மிகாவுக்கும் தேவைப்படாதது வம்சிக்கு புலப்படாமல் போனது ஏனோ?. காதலுக்காகவும், பாடலுக்காகவும் மட்டுமே வந்து செல்கிறாரே; தவிர பெரிய வேலையில்லை. சரத்குமாரின் நடிப்பு அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை அதற்கே உண்டான மென்சோகத்துடன் கடத்தியிருந்தது. தவிர பிரகாஷ்ராஜ், பிரபு, யோகிபாபு, ஷாம், ஸ்ரீகாந்த், ஜெய சுதா உள்ளிட்டோர் கொடுத்த வேலையை செய்கின்றனர்.

‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்ற அடைமொழியை உறுதியிட்டு எழுதும் அளவிற்கு சென்டிமென்ட் காட்சிகளை திகட்ட திகட்ட கொடுத்திருக்கிறார் இயக்குநர் வம்சி. படத்தின் முதல் பாதியில் வரும் ‘அம்மா’ பாடலும், அதற்கான சூழ்நிலையும், விஜய்க்கும் அவரது அம்மாவுக்குமான சென்டிமென்ட்டும் ஈர்க்கிறது. வழக்கமான இன்ட்ரோ பாடல், கண்டதும் காதல் என க்ளிஷேவாக தொடங்கும் படத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியில் சிஜி துருத்திக்கொண்டு நிற்பது நெருடல்.

மொத்த படத்தையும் தமனின் இசை திரைக்கதையுடன் இணைந்து காட்சிகளை உந்தி அடுத்தடுத்த கட்டங்களுக்கு தள்ளி பலம் சேர்க்கிறது. குறிப்பாக ‘தீ தளபதி’ பாடலின் விஷுவல்ஸ் அதற்கான விஜய்யின் மாஸான நடை நிச்சயம் ரசிகர்களுக்கு காட்சி விருந்து. பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும், கதை ஓட்டத்திலிருந்து விலகி திணிக்கப்பட்டிருப்பது பலவீனம். யோகிபாபுவுக்கும் - விஜய்க்குமான கனெக்‌ஷன் கைகொடுக்கிறது. சில இடங்களில் விஜய் முயற்சித்திருக்கும் காமெடிகள் புன்முறுவ வைக்கின்றன.

படத்தின் மிகப் பெரிய பிரச்னை, அதன் மையக்கதை. விஜய்க்கும் சரத்குமாருக்கும் இடையிலான பிரச்சினையை காட்டியிருக்கும் விதம் அழுத்தமில்லாமல் இருப்பதுதான். அதேபோல வில்லனாக வரும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் பலவீனமான எழுத்து சுவாரஸ்யமில்லாமல் கடக்கிறது. படத்தின் தொடக்கத்தில் ‘சூர்யவம்சம்’ காட்சிகள் நினைவுக்கு வர, பின், ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ எட்டிப் பார்க்கிறது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தைப் பார்க்கும் உணர்வும் எழாமலில்லை. காரணம், அந்தப் படத்தின் கேங்க்ஸடருக்கு பதிலாக கார்ப்பரேட் தொழிலை பின்புலமாக வைத்தால் ‘வாரிசு’ கதை ஒட்டிவிடுகிறது. அப்பா - மகன்கள், அண்ணன் தம்பிகளுக்கிடையிலான சென்டிமென்ட் காட்சிகள் மூட்டையில் திணிக்கும் துணியைப் போல பிதுங்கி புடைத்திருக்கிறது.

கணிக்கக்கூடிய கதையுடன் காட்சிகளாகவும் எளிதில் கணிக்க முடிவதால் சுவாரஸ்யம், விறுவிறுப்புக்கு வறட்சி நிலவுகிறது. தேவையில்லாத இடங்களில் பாடல்களும், சண்டைக் காட்சிகளும், போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் வாக்குப் பதிவு என கூறி வைக்கப்பட்ட காட்சி ஒன்றும் சோதிக்கிறது. விஜய் நடித்த முந்தைய படங்களின் வசனங்களை ரீமேடாக்கியிருப்பது சில இடங்களில் கைகொடுக்கிறது. பல இடங்களில் ‘கிறிஞ்ச்’ ஆகியிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் சிறப்புத் தோற்றம் ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் அதீத செயற்கை ஆக்‌ஷன் காட்சிகள் தெலுங்கு படங்களை நினைவூட்டுகின்றன.

குறிப்பாக, விஜய் போன்ற பெரிய நடிகர் ஒருவரின் படத்தில் சிறுபான்மையினர் ஒருவரை குற்றவாளியாக்கி, எளிய மக்களை மாணவிகளை கடத்துபவர்களாக காட்டும் காட்சிகள் அறப்பிழைகள். படத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் அறிமுக காட்சியும், இன்டர்வல் காட்சியும் எந்த பாதிப்புமில்லாமல் கடக்கிறது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும், பிரவீன்கே.எல் படத்தொகுப்பும் மொத்த படத்துக்குமான ஆறுதல்.

மொத்தத்தில் இந்த வாரிசை கண்டு ரசிகர்கள் கொஞ்சலாமே தவிர, மற்றவர்கள் அஞ்சாமல் இருக்க முடியுமா என்பது கேள்வியே.

வாரிசு Review: பாட்டு, டான்ஸ், ஃபைட், சென்டிமென்ட் எல்லாம் இருக்கு. ஆனால்..? | Varisu Review: Song, dance, fight, sentiment are all there. But - hindutamil.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் சினிமா பார்க்காம‌ விட்டு க‌ண‌ கால‌ம்

 

த‌மிழ் திரை உல‌கில் இப்ப‌ என்ன‌ ந‌ட‌க்குது என்று துப்ப‌வ‌ர‌வாய் தெரியாது 🤣😁😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

த‌மிழ் சினிமா பார்க்காம‌ விட்டு க‌ண‌ கால‌ம்

 

த‌மிழ் திரை உல‌கில் இப்ப‌ என்ன‌ ந‌ட‌க்குது என்று துப்ப‌வ‌ர‌வாய் தெரியாது 🤣😁😂 

ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த கூச்சலுக்குள் நித்திரை கொண்டு படம் முடியும்  நேரத்தில் நித்திரையால் எழுந்தேன்.

அதனால் எனக்கும் தெரியாது அந்த திரை உலகில் என்ன நடக்குதென ஆனால் இரண்டு பெரிய நடிகர்களின் படமும் தேறாது என சொல்கிறார்கள்.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vasee said:

ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த கூச்சலுக்குள் நித்திரை கொண்டு படம் முடியும்  நேரத்தில் நித்திரையால் எழுந்தேன்.

அதனால் எனக்கும் தெரியாது அந்த திரை உலகில் என்ன நடக்குதென ஆனால் இரண்டு பெரிய நடிகர்களின் படமும் தேறாது என சொல்கிறார்கள்.

விஜய்யின் படம் என்று சொல்ல என்ன பயம் 🙂

Link to comment
Share on other sites

59 minutes ago, vasee said:

ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த கூச்சலுக்குள் நித்திரை கொண்டு படம் முடியும்  நேரத்தில் நித்திரையால் எழுந்தேன்.

அதனால் எனக்கும் தெரியாது அந்த திரை உலகில் என்ன நடக்குதென ஆனால் இரண்டு பெரிய நடிகர்களின் படமும் தேறாது என சொல்கிறார்கள்.

நீங்கள் நித்திரை கொண்டது  உஙகளின் உடல் நலத்துக்கு நன்மை பயர்க்கும்.  படத்தில் பெரிதாக எதையும் மிஸ் பண்னி இருகக மாட்டீர்கள்.🙂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புளுசட்டை மாறன் இதுவரைக்கும் ஒரு படத்தையாவது நல்லதாய் சொன்னது கிடையாது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nunavilan said:

நீங்கள் நித்திரை கொண்டது  உஙகளின் உடல் நலத்துக்கு நன்மை பயர்க்கும்.

நாங்கள் சிலர் ஒரு முறை தமிழ்படம் ஒன்றை amazon ல் வாடகைக்கு எடுத்து விட்டு படம் ஓடி கொண்டிருந்தது நாங்கள் சிப் சாப்பிட்டு கொண்டு கதைத்து கொண்டிருந்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த கூச்சலுக்குள்

இந்தியாவில் தங்கள் ஹீரோவிற்கு கூச்சல் போடுவது மாதிரி அவஸ்ரேலியாவிலும் தமிழர்கள் செய்கிறார்களே ☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்தியாவில் தங்கள் ஹீரோவிற்கு கூச்சல் போடுவது மாதிரி அவஸ்ரேலியாவிலும் தமிழர்கள் செய்கிறார்களே ☹️

 

7 hours ago, ரதி said:

விஜய்யின் படம் என்று சொல்ல என்ன பயம் 🙂

இந்த விடயங்களுக்கு பதில் சொல்வேனென்று நம்புகிறீர்களா?

5 hours ago, குமாரசாமி said:

இந்த புளுசட்டை மாறன் இதுவரைக்கும் ஒரு படத்தையாவது நல்லதாய் சொன்னது கிடையாது.

துணிச்சலாக தனக்கு தோன்றுவதை எந்தவித சமரசமின்றி சொல்கிறார்.

6 hours ago, nunavilan said:

நீங்கள் நித்திரை கொண்டது  உஙகளின் உடல் நலத்துக்கு நன்மை பயர்க்கும்.  படத்தில் பெரிதாக எதையும் மிஸ் பண்னி இருகக மாட்டீர்கள்.🙂

வீட்டில்தான் கொஞ்சம் பிரச்சினையாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த கூச்சலுக்குள் நித்திரை கொண்டு படம் முடியும்  நேரத்தில் நித்திரையால் எழுந்தேன்.

4 hours ago, vasee said:

துணிச்சலாக தனக்கு தோன்றுவதை எந்தவித சமரசமின்றி சொல்கிறார்.

 

நீங்கள் படம் பார்க்கப்போய் சிறிது நேரத்திலேயே தூங்கி விட்டீர்கள் என்கிறீர்கள்.அப்புறம் எப்படி படம் ச்ரியில்லை என முடிவுக்கு வந்தீர்கள்?

புளூசட்டை மாறனும் திரைப்படத்தை பார்க்காமல் தான் விமர்சனம் செய்கின்றாரோ என் எண்ணத்தோன்றுகின்றது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

நீங்கள் படம் பார்க்கப்போய் சிறிது நேரத்திலேயே தூங்கி விட்டீர்கள் என்கிறீர்கள்.அப்புறம் எப்படி படம் ச்ரியில்லை என முடிவுக்கு வந்தீர்கள்?

 

On 13/1/2023 at 08:20, vasee said:

அதனால் எனக்கும் தெரியாது அந்த திரை உலகில் என்ன நடக்குதென ஆனால் இரண்டு பெரிய நடிகர்களின் படமும் தேறாது என சொல்கிறார்கள்.

நான் சொல்வதாக சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

நான் சொல்வதாக சொல்லவில்லை.

 

On 12/1/2023 at 22:20, vasee said:

ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்திற்கு சென்றிருந்தேன் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே அந்த கூச்சலுக்குள் நித்திரை கொண்டு படம் முடியும்  நேரத்தில் நித்திரையால் எழுந்தேன்.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.