Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மது அருந்திவிட்டு இந்த மருந்துகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மது அருந்திவிட்டு இந்த மருந்துகளைச் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நியால் வீட் மற்றும் ஜெசிகா பேஸ்
  • பதவி,பிபிசி
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்
மது

பட மூலாதாரம்,GETTY IMAGES

நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் போதோ அல்லது ஏதாவது சிறப்புமிக்க நாளைக் கொண்டாடும் போது நாம் மது அருந்த நினைப்போம்.

ஆனால், மது அருந்தியிருக்கும் போது சில மருந்துகளை எடுத்துக்கொள்வது நம்முடைய உடலை பல வகைகளில் பாதிக்கும்.

மதுவோடு மருந்துகள் எடுத்துக்கொள்வதால் சிலருக்கு மருந்து சரியாக வேலை செய்யாமல் போகலாம், சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விளைவுகளும் நேரலாம்.

நீங்கள் மருத்து எடுத்துக்கொள்பவராக இருந்து மது அருந்த நினைத்தால் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

 

நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து நேரடியாக வயிற்றுக்குச் செல்கிறது.

அங்கிருந்து உடல் அதை கல்லீரலுக்கு அணுப்புகிறது. மருந்து ரத்தத்தில் கலப்பதற்கு முன்பாக அவை உடைக்கப்படுகின்றன.

நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு டோஸேஜ் மருந்தும் கல்லீரலில் இந்த செயல்முறைக்கு உள்ளாகின்றன.

நீங்கள் மது அருந்தும் போது அதுவும் கல்லீரலில் உடைக்கப்படுவதால் அவை உங்கள் ரத்தத்தில் கலக்கும் மருந்தின் அளவை பாதிக்கலாம்.

 

சில மருந்துகள் கூடுதலாக உடைக்கப்பட வேண்டியிருக்கும், சில மருந்துகள் குறைவாக உடைக்கப்பட வேண்டியிருக்கும்.

நீங்கள் எடுத்துக்கொண்ட மதுவும், மருந்தும் ஒன்றையொன்று சந்திக்குமா அல்லது என்ன மாதிரியான விளைவை அவை ஏற்படுத்தும் என்பது பல காரணிகளைச் சார்ந்தது.

நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து மற்றும் மதுவின் அளவு, உங்களது வயது, பாலினம், மரபியல், உடல்நலம் ஆகியவை அதில் முக்கிய காரணிகள்.

குறிப்பாக, பெண்கள், வயதானவர்கள் மற்றும் மற்ற நோயுடையவர்கள் இதனால் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

எந்த மருந்தை மதுவுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது?

மருத்துவர் பரிந்துரைத்த மருந்து அல்லது இயற்கை மருந்து என்ற வேறுபாடு இல்லாமல் பல மருந்துகள் மதுவுடன் எடுத்துக்கொள்ளும் போது பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

மருந்துகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தூக்கம், கோமா, மரணம்

மதுவுடன் மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மெதுவாக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது, இவை அனைத்தும் சேர்ந்து உங்களை தூக்கத்தில் ஆழ்த்தலாம். உங்கள் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பைக் குறைக்கலாம். சில தீவிர நிகழ்வுகளில், கோமா மற்றும் மரணத்திற்கும் வழிவகுக்கலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இந்த வகை மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதுதான் இவை ஏற்பட வாய்ப்புள்ளது.

மனச்சோர்வு, பதற்றம், வலி, தூக்கக் கோளாறுகள், ஒவ்வாமை, சளி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது மது அருந்தாமல் இருப்பது சிறந்தது அல்லது குறைவான அளவில் அருந்துவது நல்லது.

கூடுதல் விளைவுகள்

சில மருந்துகள் மதுவுடன் கலக்கும் போது குறிப்பிட்ட அந்த மருந்தின் விளைவு கூடுதலாக இருக்கலாம்.

உதாரணமாக, தூக்க மாத்திரை சோல்பிடெம்மை மதுவுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது.

இதன் பக்கவிளைவு அரிதானது. ஆனால், தீவிர விளைவுகள் ஏற்படும் போது தூக்கத்தில் உண்பது, தூக்கத்தில் நடப்பது போன்ற தீவிரமான விளைவுகளாக அவை இருக்கலாம்.

உயர் ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில மருந்துகள் குறிப்பிட்ட வகை மதுவுடன் மட்டுமே எதிர்வினையாற்றக்கூடியது.

உதாரணமாக, மனச்சோர்வுக்கான ஃபெனெல்சைன், டிரானில்சிப்ரோமைன் மற்றும் மோக்ளோபெமைடு, ஆன்டிபயாடிக் லைன்சோலிட் போன்ற சில மருந்துகள், பர்கின்சன் நோய்க்கான செலிகிலின் மற்றும் புற்றுநோய்க்கான புரோகார்பசின் ஆகியவை அதிக அளவு டைரமைன் கொண்டுள்ள மதுவிடன் கலக்கும் போது பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இது சில நேரங்களில் ரத்த அழுத்தத்தின் அளவை அபாயகரமான அளவிற்கு அதிகரிக்கச் செய்யலாம்.

நீடிக்கும் விளைவுகள்

சில மருந்துகள் மதுவை கல்லீரல் சிதைக்கும் விதத்தில் குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அத்தகைய மருந்துகளோடு மது அருந்தினால், குமட்டல், வாந்தி, முகம் மற்றும் கழுத்துப் பகுதி சிவத்தல், மூச்சுத் திணறல் அல்லது தலைச்சுற்றல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இதயம் இயல்பை விட வேகமாக துடிக்கலாம் அல்லது ரத்த அழுத்த அளவு குறையலாம்.

இதன் விளைவுகள் மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்திய பிறகு, மது அருந்தும் போதும் ஏற்படலாம்.

உதாரணமாக, மெட்ரோனிடசோல் மருந்தை எடுத்துக்கொள்ளும் போது மட்டுமில்லாமல் அடுத்த 24 மணி நேரத்திற்கும் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

கடுமையான தோல் அழற்சி போன்ற தோல் நோய்களைச் சரிசெய்யவும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு தோல் புற்றுநோயைத் தடுக்கவும் அசிட்ரெடின் பயன்படுத்தப்படுகிறது.

அசிட்ரெடினிடன் மதுவை எடுத்துக்கொள்ளும் போது அது எட்ரெடினேட்டாக மாறுகிறது.

எட்ரெடினேட் பிறவிக் குறைபாட்டை ஏற்படுத்த வல்லது என்பதால் இது மிகவும் கவனிக்க வேண்டியது.

நீங்கள் குழந்தை பெற்றெடுக்கும் வயதுடைய பெண்ணாக இருந்தால், மருந்து எடுத்துக்கொள்ளும் போதும், அதை உட்கொள்வதை நிறுத்திய இரண்டு மாதங்களுக்குப் பிறகும் மது அருந்துவைதைத் தவிர்க்க வேண்டும்.

மது மற்றும் மருந்து பற்றிய தவறான புரிதல்

மது

பட மூலாதாரம்,GETTY IMAGES

மது மற்றும் மருந்து பற்றிய தவறான புரிதல்களில் கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் போது மது அருந்தக் கூடாது என்பதும் ஒன்று.

கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்ளும் போது மது அருந்துவது முற்றிலும் பாதுகாப்பானது. இது பிறப்புக்கட்டுப்பாட்டை நேரடியாக எந்த வகையிலும் பாதிக்காது.

தினமும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளும் போது மட்டும்தான் கருத்தடை மாத்திரை வீரியமாகச் செயல்படும்.

மது சிலருக்கு வாந்தி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும் என்பதால் மருந்து எடுத்துக்கொண்ட மூன்றே மணி நேரத்தில் வாந்தி எடுத்தால், கருத்தடை மருந்தால் எந்தப் பலனும் கிடைக்காது. இதனால் கரு உருவாவதற்கான வாய்ப்பும் அதிகம்.

மது மற்றும் ஆன்டிபயாடிக்ஸ்

ஆன்டிபயாடிக்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக்கொள்ளும் போது மது அருந்தக் கூடாது என்ற தவறான புரிதலும் உள்ளது.

இது மெட்ரோனிடசோல் மற்றும் லைன்சோலிட் ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தும்.

இதைத் தவிர்த்து மற்ற ஆன்டிபயாடிக்ஸின் செயல்பாட்டை மது எந்த வகையிலும் பாதிக்காது என்பதால் இது பாதுகாப்பானதே.

ஆனால், ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக்கொள்ளும் போது முடிந்த அளவிற்கு மதுவைத் தவிர்த்துவிடுவது நல்லது.

வயிற்றுவலி, தலைச்சுற்றல் மற்றும் தூக்கமின்மை போன்ற ஒரே மாதிரியான பக்க விளைவுகளை ஆன்டிபயாடிக்ஸும் மதுவும் கொண்டிருப்பதால், இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்தும் போது இந்தப் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

https://www.bbc.com/tamil/articles/c88g763z0nxo

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.