Jump to content

என் நாட்டிற்காக_நான்_உயிர்விடலாம் ஆனால்_நீங்க_உயிர்விடக்கூடாது..!


Recommended Posts


என் நாட்டிற்காக_நான்_உயிர்விடலாம்
ஆனால்_நீங்க_உயிர்விடக்கூடாது..! 

 

318315106_3344900555724098_1673183826809

 

(சதாம் ஹுஸைனுக்கு சமையல் காரனாய் பணியாற்றிய தமிழ்நாடு, கீழக்கரை காஜா மொய்தீன் கூறியது)
சதாம் ஹுஸைனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றிய கீழக்கரையைச் சேர்ந்த காஜா மொய்தீன் - ''மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...'' - என சதாம் ஹுஸைனை பற்றிக் கூறியபடி கண்கலங்குகிறார், கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன்.
சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர், தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார்.
காஜாமொய்தீனை புதுப்பேட்டையி லுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனயில் தனது சமயல் அனுபவங்களைப் பற்றிக் கூறத் தொடங்கினார்.
''நான் சதாம் மாளிகையில் சமையல் காரராகச் சேர்ந்த முதல்நாள் சமையல றைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கே டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் என்னிடம் காலை, மதியம் இரவுக்கான மெனுக்களை ஆர்டர் கொடுத்தார்.
இப்படித் தினமும் நானும் அவற்றைச் செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன். அவரை நான் அரண்மனை மானேஜர் என்று நினத்திருந்தேன்.எனக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால், உடன் பணிபுரிபவர்களிடம் கை ஜாடை மூலம் பேசிக்கொள்வேன்.
வேலையில் சேர்ந்து பதினைந்து நாட்கள் கழிந்து ஓரளவிற்கு அவர்கள் மொழியைத் தெரிந்துகொண்டு,
"தினமும் எனக்கு சமயல் ஆர்டர் கொடுக்கிறாரே... அவர்தான் மானேஜரா?" என்றேன்.
''இல்லை அவர்தான் சதாம்'' என்று பதில் வந்தவுடன் வியந்தேன்.
சதாமிற்கு இந்திய மக்கள் என்றால் உயிர். இந்திராகாந்தியை தன்னுடய சகோதரி என்றுதான் கூறுவார்.
இந்திரா சுடப்பட்டு இறந்தவுடன் ஈராக்கில் பணியாற்றிக் கொண்டி ருந்த அனைத்து சீக்கியர்களையும் 'தன்னுடைய சிஸ்டரைக் கொன்றவர் கள்' என்று குற்றம்சாட்டி சிறையில் வைத்துவிட்டார்.
பிறகு இந்திய தூதரகம் தலையிட்டு, 'சுட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று தெளிவுபடுத்தியபிறகு பத்து நாட்கள் கழித்து அனைவரையும் விடுவித்தார்.
அவருக்கும் நம்ம ஊர் சமையல் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ரசம் என்றால் உயிர். விதவிதமான ரசம் செய்வேன். சாதத்தில் ஊற்றி விரும்பிச் சாப்பிடுவார்.
டீயில் சர்க்கரை போட்டுக் கொள்ள மாட்டார். அதற்குப் பதில் தேன் ஊற்றிச் சாப்பிடுவார்.
மதியம் சாதம், சிக்கன், ஃப்ரைட் காய்கறிகள்...
இரவு 9 மணிக்கு ஃப்ரூட் சாலட் ரொட்டி சிக்கன் ஃப்ரை சாப்பிடுவார்.
பிரியாணி என்றால் அவருக்கு உயிர். அவருக்கு நான் 40 வகையான பிரியாணிகளைச் செய்து கொடுத்து அவர் பாராட்டைப் பெற்றிருக்கிறேன்.
ஒரு நாள் சதாம் என்னிடம் 'நான் டெல்லியில் சிஸ்டர் இந்திராகாந்தி யச் சந்தித்தேன். அப்போது நடந்த அந்த விருந்தில், முக்கோண வடிவில் ஒரு ஸ்நாக் கொடுத்து இருந்தார்கள். அது ரொம்ப நல்லா இருந்தது. அதைச் செய்து தர முடியுமா?' என்று கேட்டார்.
அது என்னவென்று புரியாமல் குழம்பி ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன். அது வேறொன்றுமில்ல. நம்ம 'சமோசா'தான்!
ஒருநாள் இருநூறு சமோசா செய்து கொடுத்து அனுப்பினேன். அவரது உறவினர்கள் அனைவரும் அதைச் சாப்பிட்டு அசந்து விட்டார்கள். சதாம் உசேன் அரண்மனயில் எந்தச் சமையல்காரரயும் ஆறுமாதத்திற்கு மேல் வைத்திருக்க மாட்டார்கள்.
காரணம் சதாமின் எதிரிகள் எப்படியாவது சமையல்காரரை ப்ரயின் வாஷ் செய்து பண ஆசைகாட்டி, உணவில் 'ஸ்லோ பாய்சனை'க் கலக்கச் செய்துவிடுவர் என்பதால்...
ஒரு நாள் அரண்மனையிலிருந்து சமையலுக்கு வேண்டிய காய்கறிகள் வாங்க கடைவீதிக்குச் சென்றேன். நான் அரண்மனை காரில் போய் இறங்கியவுடன் சிலர் என்னிடம் வந்து
''எப்படியாவது சதாம் சாப்பாட்டில் ஸ்லோபாய்சன் கலந்துவிடு. உனக்கு பலகோடி பணம் தருகிறோம்'' என்றார்கள். நான் அதை முழுமயாக மறுத்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தேன்.
அவர்கள் மிரட்ட ''என் உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டேன்' என்று கூறிவிட்டு காரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் சதாம் என்ன அழைப்பதாகக் கூறினார்கள். நான் சென்றேன்.
என்னை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
"ரொம்ப நன்றி மொய்தீன்" என்று அவர் சொன்னபோது, எனக்கு ஒன்றும் புரியவில்ல. பிறகுதான் 'எனது சட்டையில் மைக்ரோசிப் டேப் மாட்டிவிட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் மீது அவருக்கு அபார நம்பிக்கை!
வளைகுடா போரின்போது சதாம் என்னிடம்,
"மொய்தீன் நீங்கள் உங்கள் நாட்டுக்குத் திரும்பி விடுங்கள். உங்களை நம்பி குடும்பத்தினர் நிறையப்பேர் இருப்பார்கள். தயவு செய்து கிளம்புங்கள்'' என்றார்.
நான் மறுத்தேன். ஆனால் அவர் விடவில்லை. ''நான் எனது நாட்டிற்கும் மண்ணிற்கும் உயிரைவிடலாம். நீங்கள் விடக்கூடாது. கிளம்புங்கள்..!' என்று வற்புறுத்தினார்.
மேலும், ''அரண்மனையில் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்; தூக்கிச்செல்ல முடியாவிட்டால் ஒரு லாரியில் ஏற்றி அனுப்புகிறேன்'' என்று கூறி அப்படியே செய்தார்.
நான் கிளம்புவதற்குமுன் ஒரு பெரிய 'பண்டலை'க் கொடுத்து,
''எந்தக் காரணம் கொண்டும் விமானத்தில் இதைப் பிரிக்கக் கூடாது. உங்கள் வீட்டுக்குப் போய்த்தான் பிரிக்க வேண்டும்'' என்றார்.
எனக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து பாக்தாத்திலிருந்து மும்பை கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றார்கள்.
வீட்டிற்கு வந்து சதாம் கொடுத்த பண்டலை பிரித்துப் பார்த்தேன். உள்ளே அமெரிக்க டாலர்கள்...'' கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக் கொள்கிறார் காஜாமொய்தீன்.
பி.கு.: புகைப்படத்தில், சதாம் ஹுசைன் குடும்பத்துடன் சேர்ந்து உணவு உண்ணும் காட்சி)
(Tamilnadu, who worked as a cook for Sadam Hussain, said Kaza Moideen)
Kaza Moideen of Keelkarai, who served as a cook for Saddam Hussain for many years - unjustly killed a great man... '' - Kazamoideen of Kazamoydeen of Kazakarai is in tears as Saddam Hussain said.
He has served as a cook for Sadam Usain for many years, now he owns a fast food hotel in Thiruvallikeni, Chennai.
Met Kajamoideen at his house in Pudupettai. Saddam started talking about his religious experiences at Palace.
They took me to the kitchen on the first day when I joined Saddam Palace as a chef.
Someone dressed as a tiptop there ordered me morning, afternoon night menus.
I used to make them everyday like this. I thought he was the palace manager. Since I don't know that country language, I talk to my colleagues with my hands.
Fifteen days after joining work, knowing their language,
"He orders me cooking everyday... Is he the manager ? " I said.
I was surprised when the reply came "No, he is Sadam".
Sadam loves Indian people. He will call Indira Gandhi as his sister.
Indira jailed all Sikhs working in Iraq after being shot dead by Indiraq for 'killing his sister'.
Then the Indian Embassy intervened and freed everyone ten days later after clarifying 'no connection between the shooters and them'.
He also loves our town cooking. That too is Rasam means life. Will make a variety of juices. Pour in rice and eats it.
He will not put sugar in tea. Instead he will pour honey and eat.
Afternoon rice, chicken, fried vegetables...
Fruit Salad Bread Chicken Fry at 9pm.
Biryani means his life. I made him 40 types of biryani and got his appreciation.
One day sadam told me 'I met sister indira gandhi in delhi. At the party that happened then, they gave a triangle snack. That was so good. Can it be done ? ' He asked for that.
Confused not knowing what it is and finally found a way. It was nothing else. It is our 'Samosa'!
One day I made two hundred samosas and sent it. All his relatives ate it and were amazed. Saddam Usain Palace will not keep any cook for more than six months.
Because Saddam's enemies will somehow brainwash the cook and crave for money, mix 'slow poison' in food...
Went to the shop street to buy vegetables from the palace for cooking. When I got down in the palace car, someone came to me
''Mix slowboison in the saddam meal somehow. They said we'll give you billions of money. I totally refused it and warned them severely.
I got in the car and returned to the palace after they threatened "I won't make it even if I die". Shortly said what Saddam called. I went.
He hugged me tight.
When he said "Thank you so much Moideen" I didn't understand. And then only I found out they have a microchip tape stuck in my shirt.
He has tremendous confidence in me after this show!
Sadam with me during gulf war,
"Moideen you return to your country. There will be many family depending on you. "Please leave" he said.
I refuse to say no. But he didn't give up. "I can give my life for my country and my land. You should not give up. Get off..! ' He insisted that.
And he did so by saying, "Take things you want to the palace; if you can't carry, I will carry you in a truck."
Giving me a big 'bundle' before I leave,
''Not parting on a plane for any reason. He said go to your house and separate"
They arranged a separate flight for me and drove me from Baghdad to Mumbai.
Came home to split the bundle of Sadam. US dollars inside... Kazamoideen wipes his eyes after saying.
P. K. : In photo, Saddam Hussain eating with family)
 
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.