Jump to content

மரமேறிகளின் வாழ்க்கையை சொல்லும் நெடுமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரமேறிகளின் வாழ்க்கையை சொல்லும் நெடுமி

KaviJan 16, 2023 11:52AM
3d8ed324-ac72-49f3-b2f3-5f0c4ef53047.jpg

சுனாமி வந்தாலும், புயல் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள். மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான்.

திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானோர் உள்ளனர். 

குறிப்பாகக் கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கின்றனர்

அதனால், அவர்களுக்கு ஏற்பட்டவலிகளும் துயர ஓலங்களும் வெகுஜன மக்களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்து போய்விட்டன.

தங்களின் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து கொண்டிருந்த அந்த லட்சக்கணக்கான குடும்பங்களின் ஒரு பிரதிநிதியாக ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் வாழ்வியலைப் பேசும் படம் ‘நெடுமி’

எப்படிக் காளைகளைக் காப்பாற்ற ஜல்லிக்கட்டு இயக்கமாக உருவெடுத்ததோ அதுபோல் நமது ஆதி பண்பாட்டின் தொடர்ச்சியாக நம் கண் முன் உயிர் சாட்சியாக நிற்கும் பனை மரங்களைக் காப்பாற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டியது கடமையாகிறது. 

ஊருக்கு ஊர் எல்லை காப்பான்களாக நின்று கொண்டு கற்பக விருட்சம் போலப் பலனைத்தரும் பனைமரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்துகிறது நெடுமி.

இப்படத்தை நந்தா லக்ஷ்மன் எழுதி இயக்கியுள்ளார். கண் முன் கண்ட கதையையும் வாழ்வியலையும் மனதில் பதியம் போட்டு திரை நுட்பம் கலந்து நெடுமி படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் நாயகனாக பிரதீப் செல்வராஜ் நடித்துள்ளார் .நாயகியாக அபிநயா நடித்துள்ளார். 

இவர்கள் தவிர ப்ரீத்தி ரமேஷ், வாசு, கிசோர் மணி, குழந்தை நட்சத்திரங்கள் சரத்ராஜ், ராம்கி, நடித்துள்ளனர். 

உதவி இயக்குநர் தினேஷ் டேவிட், முரளிதரன் வெங்கடேசன் ஆகியோரும் நடித்துள்ளனர். குட்டிப் புலி படத்தில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலக்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் இயக்குநர் நந்தா லக்ஷ்மன். அந்த ஊருக்கு அருகில் உள்ள புதுப்பாக்கம் என்கிற கிராமம் கதைக்குப் பொருத்தமாக அமையவே முழு படத்தையும் அங்கேயே முடித்துள்ளார்கள்.

மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? அவர்களது வலிகள் என்ன? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் வகையில் இந்தக் கதை உருவாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜாஸ் ஜே. பி. விஷ்வா மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

படம் பற்றி இயக்குநர் நந்தா லக்ஷ்மன் கூறுகையில், “பனை மரங்களைச் சார்ந்து வாழ்க்கை நடத்திய 10 லட்சம் குடும்பங்கள் இன்று மிகவும் சிரமத்துக்குள்ளாகி சொல்ல முடியாத சோகத்தை நெஞ்சில் தேக்கி வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

அரசின் கள் இறக்கத் தடை சட்டத்தால் இவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட வலி அவர்களுக்குள் மௌனமாக உறங்கிக் கொண்டிருக்கின்றது. 

அந்த வலியைத் திரைப்படத்தில் பதிவு செய்யும் முயற்சி தான் இது. சொல்லத் தயங்கி சொல்ல மறந்த அந்த வலியை நான் ஒரு படமாக எடுத்துள்ளேன். திருப்தியாக வந்துள்ளதாக நம்புகிறேன்.

இந்தப் படத்தைப் பத்து முறை நாங்கள் நண்பர்களுக்குத் திரையிட்டுக் காட்டினோம். படத்தைப் பற்றி பலரும் விமர்சித்தாலும் பல்வேறு கருத்துக்கள் சொன்னாலும் 80% பேர் படத்தில் ஓர் உயிரோட்டம் உள்ளது என்று பாராட்டினார்கள். 

அந்தப் பாராட்டு தான் எங்களை முன்னகர்த்திக் கொண்டு செல்லும் சக்தியாக இருக்கிறது. பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருக்கலாம், இன்னும் செலவு செய்து பிரமாண்டமாக எடுத்திருக்கலாம் என்று பலரும் பலவிதமாகச் சொன்னாலும், அந்த உயிரோட்டம் இருப்பதை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். 

இதுவே எங்களுக்கு பெரிய நம்பிக்கை அளித்தது. ஒரு திரைப்படத்திற்கு தேவையானது அந்த நம்பிக்கைதானே?

சினிமா பற்றிய கனவுகளுடன் இருக்கும் பல இளைஞர்கள் கரம் கோர்த்து ஒரு குழு முயற்சியாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதில் தனிநபர் யாரும் உரிமை கொண்டாடாத அளவிற்கு கூட்டாக, குழுவாக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறோம்.

அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

இப்படத்தை ஹரிஷ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம். வேல்முருகன் தயாரித்துள்ளார்.

 

 

https://minnambalam.com/cinema/nedumi-narrates-the-life-of-tree-dwellers/

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்துவரும் இக் கலைஞர்களின் முயற்சிகள் பலனளிக்க வேண்டும்.......!  😁

பகிர்வுக்கு நன்றி கிருபன்.......!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.