Jump to content

ஐயோ சாமி தைப் பொங்கல் எனக்கு வேணாம்! - வீமன்


Recommended Posts

ஐயோ சாமி தைப் பொங்கல் எனக்கு வேணாம்!
=====================================
நான் சின்னப் பொடியனா இருந்தபோது நாங்கள் எங்கள வயலில நெல்லு விதைச்சுப் பராமரிச்சு அறுவடை செய்தம். தை மாதம் புது அரிசி போட்டுப் பொங்கிச் சந்தோசமா சாப்பிடுவம். பிறகு கோவிலுக்குப் போவம், அப்பிடியா சொந்தக்காரர் வீட்டுக்குப் போவம். பிறகு பொங்கல் திண்ட தியக்கத்தில கொஞ்ச நேரம் நித்திரை கொண்டிட்டுப் பின்னேரம் பருத்தித்துறைக் கடற்கரைக்குப் பட்டம் பார்க்கப் போவம். இப்பிடி ஒரு பிரச்சினை இல்லாமத்தான் எங்கட தைப்பொங்கல் கொண்டாட்டம் இருந்தது.
 
தைப்பொங்கல் உழவர் பெருநாள், சூரியனுக்கு நன்றி சொல்லுற நாள் அடுத்தநாள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுற நாள் என்ற புரிதல்தான் எனக்கு இருந்தது. பிறகு கொஞ்சக்காலம் போக, 1935இல் தமிழ்நாட்டில, பச்சையப்பன் கல்லூரியில கூட்டம் வைச்சத் தமிழ் அறிஞர்கள் தையிலதான் தமிழருக்கு புதுவருசம் எண்டு முடிவெடுத்ததா திரும்பவும் கொஞ்சப்பேர் கதைக்க வெளிக்கிட்டினம்.
 
பாரதிதாசன் எண்ட கவிஞர் சொன்ன நாலு வரியையும் வைச்சுக் கொண்டு சித்திரையல்ல புதுவருடம், தை ஒன்றே தமிழரின் புதுவருசம் என்று கம்பு சுத்தத் தொடங்கிட்டினம். சித்திரையில புதுவருசம் கொண்டாடுறவன் முட்டாள் என்று நக்கல் வேறை. அதைப் பாத்து என்ர நாட்டில உள்ளவங்களும் இந்த விசயத்தை ஒவ்வொரு வருசமும் கதைக்கிற விவாதப் பொருளாவே மாத்திட்டாங்கள். தைப் பொங்கலுக்கு பால் பொங்குதோ இல்லையோ, உவங்கள் பொங்கல் உந்த விவாதப் பொங்கலை வைக்க மறக்கிறேல்லை.
 
உந்தப் பிரச்சினையைக் கெட்டியாப் பிடிச்சுக் கொண்ட தமிழர்களின் கட்டுமரம் கலைஞர் தாத்தாவும் தன்ர விழுந்த செல்வாக்கை தூக்கி நிறுத்தலாமெண்டு பிளான் பண்ணி 2008 இல் இனிமேல் தை 01ம் தேதிதான் தான் புதுவருசம் எண்டு சட்டமே போட்டுவிட்டார். என்ன பிரயோசனம்? மூன்றே வருசத்திலேயே திரும்பப் பதவிக்கு வந்த ஜெயலலிதா பருத்தி மூட்டை கோடவுனிலயே இருக்கட்டும் என்று சொல்லி, சித்திரையில்தான் புதுவருசம், தையில இல்லையென்று சொல்லிப் போட்டா. நாட்டாமை தீர்ப்பை மாத்து எண்டு சிலர் சத்தம் போட்டாலும் ஒண்டுமே செய்ய முடியேல்லை.
ஆனால் கட்டுமரம் ஐயாவுக்கு முன்னமே, 90களில ஈழத்தில பொடியளும் தை மாதம்தான் தமிழருக்கு புதுவருசம் தொடங்குதெண்டு அறிவிச்சவை எண்டு என்ர கூட்டாளி சொல்லுறான். ஆனால் அதையும் எல்லாரும் பின்பற்றினதாத் தெரியேல்லை.
 
வழமையா எங்கடை ஆக்களுக்கு தாங்கள் நினைச்சதைச் செய்ய முடியாமப் போனா அதை யாரிட்டையாவது புலம்புறதுதானே வழமை. அதுதான் கொஞ்சக் காலமா உவங்கள் எல்லாரும் சமூக வலைத்தளத்தில ஒவ்வொரு வருசமும் வம்புப் பொங்கல் வைக்கிறாங்கள். நானும் உந்த இரண்டு பக்கமும் பேசி ஒரு முடிவுக்கு வருமெண்டு இவ்வளவு காலம் இருந்து பாத்தால் ஒரு முடிவையும் உவங்கள் எடுக்கிறதாத் தெரியேல்லை.
 
இந்தப் பிரச்சினை ஒருபக்கம் இருக்க, இப்ப கொஞ்சக் காலமா தமிழ்நாட்டில எப்பிடியாவது தாமரையை மலரச் செய்ய வேணும் எண்டு வேட்டியை மடிச்சுக் கொடுக்குக் கட்டிக் கொண்டு திரியுற கும்பல் கொஞ்சநாளா தைப்பொங்கல் இந்துக்களின் பண்டிகை எண்டு புதுசா ஒரு போர்த்தேங்காயை உருட்டி விளையாடுறாங்கள். அதுக்கு இலங்கையில இருந்தும் புலம்பெயர் நாட்டில இருந்தும் கனபேர் முண்டு குடுக்கிறாங்கள். உந்தக் காவி கட்டுற பாவியள் ஈழத் தமிழரை தங்கட வெறிக்கு ஊறுகாயா பாவிக்கிறாங்கள் எண்டு சொன்னாலும் இவங்கள் கேக்கிறாங்கள் இல்லை. உவங்கள் எல்லாருக்கும் தனக்குத்தான் எல்லாம் தெரியும் எண்ட நினைப்பு.
 
உந்த இந்திய சங்கிகள் செய்யுற ஆக்கினை போதாதெண்டு இப்ப அவங்கட வாலைப் பிடிச்சு தொங்கிற ஈழத்து சங்கிகள் கொஞ்சபேர் இலங்கையில காலம் காலமாக தைப்பொங்கல் கொண்டாடுற சில கிறிஸ்தவ சகோதரங்களை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறாங்கள். எங்கட தைப்பொங்கலை இவை ஏன் கொண்டாடுகினம் என்று Facebookஇல பிராது குடுத்துத் திரியுறாங்கள். இது தமிழரின்ர, குறிப்பாச் சொன்னால் உழவர் திருநாள், மதம் சார்ந்த பண்டிகை இல்லையடா என்று சொன்னால் குறுக்கால போவார் காதிலையும் வாங்கிறாங்கள் இல்லை.
 
இது போதாதெண்டு இப்ப புதுசா ஒரு பிரச்சினையைக் கிளப்பி விட்டிருக்கிறாங்கள். இந்த முறை இலங்கையில 15ம் திகதிதான் தைப்பொங்கல் வருகுது, அதெப்படி கனடாக்காரர் 14 ம் திகதியே பொங்கலைக் கொண்டாடினவை எண்டு ஒரு தமிழ் இணைய இதழ் ஆசிரியர் கேட்டிருக்கிறார். உடன நிறையப்பேர் அங்க வந்து கும்மியடிச்சு கனடாக்காரரை, குறிப்பாச் சொன்னா கனடாவில இருக்கிற ஐயர்மாரை குற்றவாளிக் கூண்டிலையும் ஏத்தி விட்டிருக்கினம். உது ஐயர்மார் செய்யுற விளையாட்டாம். தங்கட விருப்பத்துக்கு தேதிகளை மாதத்தில் சனத்தை ஏமாத்திக் காசு பறிக்கிறாங்களாம்.
அந்தப் பதிவில ஒருத்தர் உந்தப் தைபொங்கல் நாள் எப்பிடி மாறுதெண்டு பெரிய விஞ்ஞான விளக்கமே குடுத்திருந்தார். இந்திய பஞ்சாங்க நேரக் கணக்கீட்டுப்படி சூரியன் ஒவ்வொரு வருசமும் மகர ராசிக்குள்ள நுழைய 20 நிமிசங்கள் பிந்துறாராம். அதாலை, 72 வருசத்தில சூரியன் ஒருநாள் பிந்தித்தான் மகர ராசிக்குள்ள நுழைவாராம். இதுவரை, 1934 இல இருந்து 2007 வரை ஜனவரி 14 இலதானாம் பொங்கல் வந்தது. 2008 – 2081 வரையும் ஜனவரி 15இலதானாம் பொங்கல் வரும்.
ஆனால் இதில என்ன பகிடி எண்டால் இவர் சொன்ன 2007இல் இலங்கையில 14இல தைப்பொங்கல் வரேல்லை. 15இலதான் கொண்டாடினவை. அதேமாதிரி இவர் சொன்னபடி 2009, 2010, 2013, 2014, 2017, 2021 எண்ட ஆறு வருசமும் இலங்கையில அவர் சொன்ன 15ம் தேதி பொங்கல் வரேல்லை, 14ம் திகதிதான் பொங்கல் வந்தது.
 
அதுமட்டுமில்லை, உவரும் மற்றவையும் சொல்லுற மாதிரி இந்த வருஷம் மட்டும் இல்லை இதுக்கு முதலும் இலங்கையில ஜனவரி 15 பொங்கல் வந்த வருசங்களில கனடாவில 14ம் திகதி கொண்டாடுறது வழமை எண்டு இஞ்ச உந்தச் சடங்கு சம்பிரதாயங்களை இறுக்கமா பின்பற்றுற என்ர சொந்தக்காரர், நண்பர்கள் சொல்லிச்சினம். பொங்கல் மட்டுமில்லை, சதுர்த்தி விரதங்களும் ஒருநாள் முந்தி வருமெண்டும் அவை சொல்லிச்சினம். இதுக்குள்ள இரகுநாதர் பஞ்சாங்கம் எழுதுறவை இப்ப கனடாவுக்கு எண்டொரு பஞ்சாங்கக் கணிப்பை எழுதி விக்கிறாங்கள். இஞ்ச உள்ள சனம் அதைத்தான் பார்த்து இப்பிடிக் கொண்டாடுகினமாம். உந்த Facebook போராளிகள் இவ்வளவு நாளும் எங்க படுத்துக் கிடந்திட்டு இப்ப வந்து புதுசா பிரச்சினையைக் கிளப்புறாங்கள் எண்டும் கனடாச் சனம் கேக்குது.
 
மனிசனுக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கிற இந்தக் காலத்தில சந்தோசமா தைப்பொங்கலோட வருசத்தைத் தொடங்கலாம் எண்டு பாத்தா, இது தமிழரின் புத்தாண்டு எண்டு கொஞ்சப் பேர், இது இந்துக்களின் பண்டிகை எண்டு கொஞ்சப் பேர், இலங்கையில கிறிஸ்தவர் எப்பிடிப் பொங்கல் கொண்டாடலாம் எண்டு கொஞ்சப் பேர், இலங்கை, இந்தியாவில கொண்டாடுற நாளிலதான் புலம்பெயர் தமிழரும் பொங்கல் கொண்டாட வேணும் எண்டு கொஞ்சப் பேர் மாறிமாறி வழக்கு வைக்கிறாங்கள். எனக்கு இப்ப தைப்பொங்கல் எண்டாலே சீ எண்டு கிடக்கு! இப்ப கனபேரின்ர பிள்ளையளும், வை இஸ் திஸ் கொன்பியூசன் அம்மா எண்டு அம்மாமாரைக் கேக்கினமாம். இதெல்லாத்தையும் பாக்கேக்கை, ஐயோ சாமி தைப்பொங்கலே எனக்கு வேண்டாம் எண்டுதான் நினைக்கத் தோன்றுது.
 
ஐயோ சாமி தைப்பொங்கல் எனக்கு வேணாம்!
ஆளாளுக்கு என்னைக் குழப்பினது போதும்!!
 
  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன சாட்சியை நீ விலைபேசினால் 
அட நீ சொல்லு.. நீ மனுசனா.... அய்யோ சாமி.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் முன்னோர்கள் விட்ட தவறுகள். அதனால் அவர்கள் சந்ததிகள் தெளிவில்லாத வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்.

இனத்தையும் மதத்தையும் கட்டிக்காக்க வத்திக்கான் போல் ஒர் கண்டிப்பான அமைப்பை நிறுவியிருக்க வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை தைமாதம் மார்கழி பின்னேரம்  நாலு மணிக்கு 13திகதி ஆங்கிலதிகதியில்  ஐரோப்பாவில்   பிறப்பதால்  வந்த வினை .

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.