Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பலூன் போல வயிறு வீங்குவது ஏன்? சிகிச்சை என்ன?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

அதிகம் சாப்பிடாமலேயே முழுமையாக நிரம்பிய உணர்வுடன் பலூன் போல வயிறு இருப்பது மிகவும் பொதுவான ஒன்று.

அடிவயிற்றின் அளவு அதிகரிப்பது, வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த மாற்றத்துடன் கூடுதலாக, வயிற்று வலி போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில காரணங்களை நம்முடைய உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்தே நிவர்த்தி செய்யலாம். சில காரணங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் காணப்படும் பிரச்னை மற்றும் புற்றுநோய் போன்றவற்றின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

 

இதை எதிர்கொள்ள எந்தப் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும் மற்றும் எந்த அறிகுறி இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

வாயு

குடலில் வாயு அதிகமாக இருப்பதுதான் அடிவயிற்றில் வீக்கம் ஏற்படுவதற்கான பொதுவான காரணம். சில உணவுகள் மற்றும் பானங்கள் இதற்கு காரணம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

வயிறு வீங்கியது போல உணர மற்றொரு பொதுவான காரணம் மலச்சிக்கல். மலச்சிக்கல் என்பது குடல் இயக்கம் சார்ந்தது மட்டுமல்ல. நீங்கள் மலம் கழிக்க சிரமப்பட்டால், உங்கள் மலம் இறுகி இருந்தால், மலம் கழிக்கும் போது குடல் காலியானதாக உணரவில்லை என்றால் நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம் என்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ மையம்.

நீண்ட நேரம் மலம் வெளியேறாமல் இருக்கும் போது, பாக்டீரியா எண்ணிக்கை அதிகரித்து, அவை அதிக வாயு மற்றும் வீக்கத்தை உருவாக்குகின்றன.

பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிப்பு

பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிறுகுடலில் பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிப்பதும் வயிறு வீக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.

பெருங்குடலில் உள்ள குடல் பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவை சிறுகுடலுக்குச் செல்கின்றன. இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, குடல் செயல்பாடுகளை சீராக்கி வாயுக்களை உறிஞ்சும் மற்ற பாக்டீரியாக்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும்.

பாக்டீரியா எண்ணிக்கை அதிகரிப்பிற்கு அடிவயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகான சிக்கல் அல்லது டைவர்டிகுலிடிஸ் போன்ற நமது செரிமான அமைப்பில் ஏற்படும் சில சிக்கல்கள் காரணமாக இருக்கலாம் என்று மயோ கிளினிக் தெரிவிக்கிறது.

குடல் எரிச்சல் செரிமான அமைப்பை பாதிக்கக் கூடிய மிகவும் பொதுவான நிலையாகும். இது வாயு, வயிறு வீக்கம் மட்டுமில்லாமல் வலி, பிடிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது.

குடல் எரிச்சலுக்கு என்ன காரணம் என்பதில் தெளிவு இல்லாவிட்டாலும் கூட, மன அழுத்தம், மரபியல், குடல் வழியாக உணவு வேகமாக செல்கிறதா அல்லது மெதுவாக செல்கிறதா என்பன போன்ற பல்வேறு காரணிகளுடன் இது தொடர்புடையது என பிரிட்டன் தேசிய சுகாதார சேவை கூறுகிறது.

வயிற்று தசைகள் மற்றும் அதன் இயக்கத்தை பாதிக்கும் காஸ்ட்ரோபரேசிஸ் போன்ற நோய்களும் நம் வயிறு வீங்குவதற்கு மற்றொரு காரணம்.

காஸ்ட்ரோபரேசிஸிற்கு என்ன காரணம் என்பதில் தெளிவில்லை. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்கள், மனச்சோர்வு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தலாம் என்று மயோ கிளினிக் கூறுகிறது.

ஒவ்வாமை மற்றும் ஹார்மோன்கள்

சில நேரங்களில் உணவு ஒவ்வாமையும் வயிறு வீக்கத்திற்கு காரணமாக இருக்கலாம்.

லாக்டோஸ், பிரக்டோஸ், கோதுமை போன்ற கார்போஹைட்ரேட்டுகள், பருப்பு வகைகள் ஆகிய உணவுகள் வயிறு வீக்கத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது, க்ளூட்டன் உட்கொள்ளும் போது நோயெதிர்ப்பு மண்டலம் அதன் சொந்த திசுக்களைத் தாக்கும் ஒரு நிலையான செலியாக் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம், க்ளூட்டன் என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு ஆகிய தானியங்களில் காணப்படும் புரதம்.

இது சிறுகுடலை சேதப்படுத்தி, ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதை சிக்கலாக்குகிறது. மேலும், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது.

மாதவிடாய் சுழற்சிக்கு காரணமான ஹார்மோன்களால் ஏற்படும் வீக்கமும் வயிறு வீக்கத்திற்கு காரணம். நான்கில் மூன்று பெண்கள் மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் வீக்கத்தை அனுபவிப்பதாக கிளீவ்லேண்ட் கிளினிக் கூறுகிறது.

பெண் ஹார்மோன்கள் பல காரணங்களுக்காக வீக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, திரவத்தைத் தக்கவைக்க காரணமான ஈஸ்ட்ரோஜனும், புரோஜெஸ்ட்டிரோனும் நமது வயிற்று தசைகளின் இயக்கத்தை துரிதப்படுத்தலாம் அல்லது மெதுவாக்கலாம். இது வாயு உருவாகவும், மாதவிடாய்க்கு சற்று முன்பு கருப்பை பெரிதாகவும் காரணமாகிறது.

நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வீக்கம், கருப்பை புற்றுநோய் போன்ற தீவிரமான நிலையின் அறிகுறியாக இருக்கலாம். எனவே இது தொடர்பான பரிசோதனைகளை வழக்கமாக்கிக் கொள்வது அவசியம்.

வீக்கத்தை குறைப்பது எப்படி?

வீக்கத்தை குறைப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வயிறு வீக்கத்திற்கான காரணம் உங்களுக்குத் தெரியாவிட்டால், நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

செரிமானத்தை மேம்படுத்த வழக்கமான உடற்பயிற்சியையும், வயிற்றில் இருக்கும் காற்றை வெளியேற்ற வலமிருந்து இடமாக மசாஜ் செய்வதையும் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை பரிந்துரைக்கிறது.

மலச்சிக்கல் இருப்பது போல உணர்ந்தால், பழங்கள், காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் அவசியம்.

குளிர்பானங்கள், ஆல்கஹால், காஃபின், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றுடன் பதப்படுத்தப்பட்ட உணவுகள், முட்டைக்கோஸ், பீன்ஸ் அல்லது பருப்பு போன்ற அதிக வாயு உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

உணவு உண்ணும் போது காற்றை விழுங்குவதைத் தவிர்க்க வாயை மூடிக்கொண்டு மென்று சாப்பிட வேண்டும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் அதிக உணவு எடுத்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

உங்களுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக நினைத்தால், நீங்கள் சந்தேகிக்கும் உணவுகளை படிப்படியாக குறைத்து, ஒவ்வொரு உணவிற்குப் பிறகும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மதிப்பாய்வு செய்துபாருங்கள்.

எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்?

வயிறு வீக்கம் தானாகவே சரியாகிவிடும் அல்லது நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்து சரி செய்யலாம். வயிறு வீக்கம் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் அதன் பின்னணியில் தீவிரமான பிரச்னை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆனால், வாழ்க்கை முறையில் மாற்றம் செய்தும் வீக்கம் குறையவில்லை என்றாலோ அல்லது வேறு அறிகுறிகளுடன் அவை தொடர்ந்தாலோ மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

வயிற்றுப்போக்கு, தொடர்ச்சியான அல்லது கடுமையான வயிற்று வலி, ரத்தத்துடன் கூடிய மலம் அல்லது மலத்தின் நிறத்தில் மாற்றங்கள், எடை குறைவு, பசியின்மை அல்லது மிக விரைவாக வயிறு நிறைந்த உணர்வு, வயிறு மற்றும் மார்பில் அசௌகரியம் ஆகியவை நம்மை எச்சரிக்கும் அறிகுறிகள் என்கிறது மயோ கிளினிக்.

வயிறு வீக்கம்: சாப்பிடாமலேயே வயிறு வீங்குவது ஏன்? சிகிச்சை என்ன? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 20டாலர் கட்டி அதே உங்கள் கேள்வி விடையை கூகிள் மொழி பெயர்ப்பு உதவியுடன் . ஹாய் செல்லம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றிச் சொல்ல முடியுமா? நீங்கள் அதை இரண்டு பத்திகளில் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக ஆண்டு மற்றும் இரண்டாவது விவரங்கள் கொடுக்க.     நிச்சயமாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கோரியபடி இரண்டு நெடுவரிசைகளில் உள்ள தகவல் இங்கே: ஆண்டு விவரங்கள் 1983 இலங்கை இராணுவத்தின் மீது தமிழ் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான இனப் பதற்றம் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்வு பரவலான தமிழர் விரோதக் கலவரங்களுக்கு வழிவகுத்தது, இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1987-1989 இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் மோதலுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தமிழ் போராளி குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், IPKF சில தமிழ் குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது, IPKF மற்றும் போராளிகளுக்கு இடையே கடுமையான சண்டைக்கு வழிவகுத்தது. 1990 விடுதலைப் புலிகள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1991-1995 இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தது, இரு தரப்பினரும் கொடூரமான தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளனர். 2002 இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஓரளவு அமைதியான காலகட்டத்திற்கு வழிவகுத்தது. 2006 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு பெரும் தாக்குதலை நடத்தியதால் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் சண்டை தொடங்கியது. 2009 இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த மோதலில் 70,000 முதல் 80,000 பேர் வரை உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328345
  • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
  • மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328336
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.