Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார்.

தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். 

ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியக சட்டத்தை கொண்டு அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வன்மையான முறையில் அடக்கப்படுவது இயல்பாக இடம்பெறுகிறது.

விடுதலை புலிகள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கும்,போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.

12 ஆயிரம் விடுதலை புலிகள் போராளிகள் சுயமாகவே இராணுவத்தில் சரணடைந்தார்கள். புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.ஆகவே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களையும்,விடுதலை புலிகள் போராளிகளையும் ஒரு கோணத்தில் பார்க்க முடியாது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் பணிகள் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே போதைப்பொருள் அடிமையானவர்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்.

நாட்டு மக்கள் ஏழ்மை நிலையில் உள்ள போது மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.போதைப்பொருள் கடத்தல்,ஏ.டி.ம் நிதி மோசடி,தங்க நகை அறுத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்பாடுகளில் பொலிஸார் ஈடுப்படுகிறார்கள்.

பாதாள குழுவினர் சுதந்திரமாக மனித படுகொலை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமாக உள்ளதுடன் நாடு அழிவை நோக்கிச் செல்கிறது.

நாட்டு மக்கள் பட்டினியால் வாழும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் அரசியல் நோக்கத்திற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையான நிறைவேற்ற முயற்சிக்கிறார்.

தெற்கு அரசியல்வாதிகள் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி வடக்கு மக்களிடம் பொய்யுரைக்கிறார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையற்ற பிரச்சினை தோற்றம் பெறும்.ஆகவே இந்த பாவ செயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் பிரச்சினை தோற்றம் பெறும் - பொன்சேகா | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பிழம்பு said:

வாங்கடா வாங்க ... எல்லாரும் வரிசையா வந்து உங்கட அரதப்பழசான பௌத்த பாசிஸ பேரினவாத சிந்தனை சிதறல்களை கொட்டிவிட்டு போங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, பிழம்பு said:

நாட்டு மக்கள் பட்டினியால் வாழும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் அரசியல் நோக்கத்திற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையான நிறைவேற்ற முயற்சிக்கிறார்.

நாட்டு மக்களின் இன்றைய இந்த நெருக்கடிக்கு நிலைக்கு என்ன காரணம்? அதுக்கும் பன்மூன்றாம் திருத்தச் சட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பதை மக்களுக்கு விளக்க முடியுமா இவர்களால்? அதாவது தமிழனுக்கு அதிகாரம் வழங்கினால்; அவனது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது, தட்டிப்பறித்து வயிறு வளக்க முடியாது என்று சும்மா இருந்து அரசியல் செய்யும் வியாதிகள் கூறும் பொய்க்குற்றச்சாட்டு. மக்கள் யாரும் அதைப்பற்றி பேசவில்லை, இவர்கள் தங்கள் பழைய ஆயுதத்தை கையிலெடுத்து நாட்டை கொழுத்த முயற்சிக்கிறார்கள். கடைசியில் எல்லோராலும் கடன் இல்லாமல் கைவிடப்பட்டு தமிழன் காலில் விழ வேண்டி வரும். ஆனால் ஒன்று எங்கள் அரசியல்வாதிகள் இருக்கும்வரை உங்களுக்கு அந்த நிலை வராது என்று தெரிந்தே ஆடுகிறீர்கள். தமிழனுக்கு ஏதாவது தீர்வுப் பேச்சு எடுத்தாலே நீங்கள் ஒற்றுமையாய் முறியடித்து விடுவீர்கள், அதே நேரம் நம்மவர் பலநூறு கிளைகளாய் பிரிந்து உங்கள் திட்டங்களை செயற்படுத்தி விடுவார்கள்.          

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Sasi_varnam said:

வாங்கடா வாங்க ... எல்லாரும் வரிசையா வந்து உங்கட அரதப்பழசான பௌத்த பாசிஸ பேரினவாத சிந்தனை சிதறல்களை கொட்டிவிட்டு போங்கோ.

அப்படி ஒரே வரிசையில் போட்டுவிட்டு நகரப்படாது 
இவருக்கு தான் கூத்தமைப்பின் தலைமையில் குத்தோ குத்து என்று குத்தி அவரை குளிர்வித்து 
ஈழ தமிழர்கள் மற்றும் கூத்தமைப்பு வால்கள் அகமகிழ்ந்து நின்றவர்கள் என்பதை மறக்கக்கூடாது.
பொன்சியின் இப்படியான கருத்துக்கள் ஈழத்தமிழர்களும் அவர்களது அரசியல் தலைமையும் எவ்வளவு பெரிய அரசியல் மூடர்கள் என்பதற்கு சான்று பகர்கின்றன, பொன்சி இப்படி அடிக்கடி போட்டுத்தாக்க வேண்டியது அவசியம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, அக்னியஷ்த்ரா said:

பொன்சியின் இப்படியான கருத்துக்கள் ஈழத்தமிழர்களும் அவர்களது அரசியல் தலைமையும் எவ்வளவு பெரிய அரசியல் மூடர்கள் என்பதற்கு சான்று பகர்கின்றன, பொன்சி இப்படி அடிக்கடி போட்டுத்தாக்க வேண்டியது அவசியம் 

நீங்கள் அப்பிடியெல்லாம் அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்கோ! அவர்கள் ரொம்ப விசுவாசம், நம்பிக்கை உடையவர்கள். எங்களுக்குத்தான் அவர்களை புரிந்துகொள்ள முடியவில்லை.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.