Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

chat gpt என்றால் என்ன ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னுரை :

பொதுவாக தற்பொழுது அனைத்தும் பொறிமுறையை நோக்கியே செல்கின்றது. அடிப்படையில் நமது வழக்கமான கடமைகளில் சிரமம் ஏற்பட்டால், உதவியை எண்ணி பிறரிடமே அணிவகுத்துச் செல்கிறோம். இதன் அடிப்படையிலேயே பொறிமுறையைத் தேட வழிவகுத்தது.சமீபத்தில் Open AI மூலம் Chat-GPT ஐ அறிமுகப்படுத்திய பிறகு, பயனர்களின் ஒத்திசைக்கப்பட்ட விளைவுகள் மற்றும் அவர்களின் பயன்பாடுகள் மாறுகிறது.இந்த புதிய அறிமுகம் மேம்பட்ட பல அம்சங்களுடன் வருகிறது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது, இதில் பயனர்கள் உரையாடல் வடிவத்தில் முழுமையாக கருத்துக்களை நிரப்புகிறார்கள். இது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும், இதில் மனிதர்களின் பரபரப்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அதாவது உரையாடல் முறையில் பதிலளிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

CHAT-GPT என்றால் என்ன?

openais-groundbreaking-chatbot-what-is-c

இது GPT-3.5 அடிப்படையில் Open AI ஆல் வடிவமைக்கப்பட்ட மொழி மாதிரியின் நீண்ட வடிவமாகும். தொழில்நுட்பத்திற்கும் பயனருக்கும் இடையிலான உரையாடல் வடிவத்தைக் குறிக்கும்.உரையாடல் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டு மிகவும் மேம்பட்ட பயனுள்ள மாதிரியாக இது கருதப்படுகிறது. இது பயனருக்கு மெய்நிகர் வாழ்க்கையை உருவாக்குகிறது. இந்த நீண்ட மொழி வடிவம் பயனர் சரியான ஒன்றை முடிப்பதற்கு முன் யோசனைகள், எண்ணங்கள் அல்லது சொற்களின் வரிசையைக் கொண்டுவருகிறது. இது கூடுதல் அடுக்குடன் சேர்க்கப்படுகிறது, இது Chat-GPTயின் திறனை உருவாக்குவதற்கும் பயனர்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.பிழைத்திருத்தப்பட்ட சிக்கல்களை மேம்படுத்துவதற்கும் உதவுவதற்காக பயனர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. (RLHR).

 

CHAT-GPT -யின் வரலாறு :

Chat GPT ஆனது முதலில் சான் பிரான்சிஸ்கோவின் Open AI இன் செயற்கை நுண்ணறிவு டெவலப்பர்களால் உருவாக்கப்பட்டது. ஓபன் AI அதன் ஆழமான கற்றல் மாதிரியான DALL-E க்கு நன்கு அறியப்பட்டதாகும், படங்கள் உரைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுவதே இதன் சிறப்பு அம்சம் . அதன்படி, அதே மாதிரி மற்றும் புதிய மேம்பாடுகளுடன், Open AI உரையாடல் படிவத்தை Chat-GPT ஐ அறிமுகப்படுத்துகிறது. தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் இந்த மாடலுக்கான கூட்டாண்மை மற்றும் முதலீடு ஆகிய இரண்டிலும் மைக்ரோசாப்ட் உடன் கைகோர்பது மேலும் நம்பிக்கை அழிக்கின்றது.

CHAT-GPT -யின் வடிவமைப்பு :

Chat-GPT-OpenAI.webp

Chat- GPT ஆனது (LLM) பெரிய மொழி மாதிரியின் வழியில் பயிற்றுவிக்கப்படுகிறது. LLM என்றால் அதாவது , இந்த மாதிரியானது அடுத்த வார்த்தை அல்லது தொடரின் வாக்கியத்தைக் கணிக்கப் பயிற்றுவிக்கப்பட்டதாகும், இது முழுப் பத்தி அல்லது உள்ளடக்கத்தின் பக்கத்தையும் உருவாக்கும் வகையான தானியங்கு நிறைவாகவும் செயல்படுகின்றது.

Standford பல்கலைக்கழகத்தின் படி GPT.3, 175 பில்லியன் அளவுருக்கள் மற்றும் 570 ஜிகாபைட் உரையில் பயிற்சி பெற்றுள்ளது. மேலும் இது GPT.2 உடன் ஒப்பிடும்போது மாதிரியின் செயல்பாடுகள் வேறுபடுவதனை கண்டுபிடித்துள்ளனர்.அதாவது GPT. 2 பயணாளர்கள் உபயோகத்தின் போது குறைகளை சீர் அமைப்பதில் கால தாமதம் கொண்டது. ஆனால் GPT. 3-யிடம் அப்படியான தாமதங்கள் ஏதும் இருக்காது என்று உறுதி அளித்துள்ளனர்.

இணையத்தில் குறியீடு மற்றும் தகவல்களைப் பற்றி அதிகம் விவாதிப்பதில் அதிக அளவு தரவுகளைப் பற்றி இது பயிற்றுவிக்கப்படுகிறது. இதனால் அரட்டைகளுக்கு ஏற்ப பதிலளிக்கும் உரையாடல் பாணியை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது மனித பின்னூட்டங்களால் பயிற்சியளிக்கப்படுகிறது, இதனால் AI அடுத்த வார்த்தைகள் கணிப்புகளில் LM மீது அதிக கவனம் செலுத்துகிறது.

இது உயர் பொறியாளர்களால் (LABELLERS) GPT-3 மற்றும் InstructGPT என்னும் இரண்டு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது chat-GPT இன் “உடன்பிறப்பு மாதிரி” என்றும் அழைக்கப்படுகிறது. GPT-3 ஐ விட பயனர்களின் பதில்களுக்கு InstructGPT மிகவும் உண்மை மற்றும் உறுதியான பதில்களை கொடுக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், ஆனால் மேலும் ஏற்படும் சில பிழைத்திருத்தங்களுக்கு சில மேம்பாடுகள் தேவைப்படுகின்றன என்றும் அறிக்கைகளில் விளக்கியுள்ளனர்.

மற்றொரு வடிவத்தில், AI ஆல் பயனர்களுக்கு, தேர்வுமுறை பதில்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தும் AI என்பது வெவ்வேறு பதில்களுக்கு இடையேயான மனித ஒப்பீடுகள் என்று பயிற்றுவிக்கப்பட்டுள்ளது, இதனால் மனிதர்கள் திருப்திகரமான பதில்கள் என்று கணிப்பதில் இயந்திரம் செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

CHAT-GPT- யின் வரையறைகள் :

open-ai-Chat-GPT-1024x683.jpeg

இது பொறிமுறையைப் பயன்படுத்துவதற்கான செயல்முறையாக இருந்தாலும், Chat-GPT பதில்களின் வரம்புகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. தேவயற்ற வார்த்தை மற்றும் கடுமையான பதில்களையும் தவிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் பதில்களின் தரம் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகளின் தரத்தைப் பொறுத்தது. மேலும் பயனாளர்களின் நலனையே மையமாக கொண்டு பதில்அளிக்கும் முறை Open AI மூலம் பயிற்சிகள் சிறந்த அம்சங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.AI வழங்கும் அனைத்து பதில்களும் எப்போதும் உண்மையாகவும் சரியானதாகவும் இருக்கும் என்று நம்பப்படுவதில்லை, எனவே இது நம்பிக்கையற்றது.என்றும் மேற்பார்வையிடப்பட்ட பயிற்சி மாதிரியை தவறாக வழிநடத்துகிறது என்றும் நம்பப்படுகிறது, ஏனெனில் Chat-Gpt சிறந்த பதில்கள் மாதிரியை மட்டுமே சார்ந்துள்ளது, மாறாக Chat-Gpt பயனர்க்கு என்ன தெரியும் அல்லது விரும்புகிறார் என்பதைப் பொறுத்தது அல்ல.

CHAT-GPT -யின் உபயோகம் :

Chat-GPT இன் பயன்பாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பயனர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற ஆர்வமாக உள்ளது மற்றும் ஆராய்ச்சி முன்னோட்டக் காலத்தில் இது முற்றிலும் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அதைப் பற்றி Open AI ஆனது 500$ பரிசுகளுடன் பல்வேறு போட்டியுடன் சந்தைபடுத்தியுள்ளது.இது பொதுமக்களை பயன்பாட்டிற்காக ஊக்குவிக்கும் செயலாக இருந்தாலும் பிழைத்திருத்தங்கள் பற்றிய அவர்களின் கருத்துக்கள் மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட மாதிரியை விளம்பரப்படுத்தவும் உதவுகின்றது.

முடிவுரை :

இது பெரும்பாலும் கூகுளுடன் ஒப்பிடப்படுகிறது,Chat-Gpt தற்போது GOOGLE KILLER என்றே பார்க்கப்படுகிறது. கூகுள், ஓபன் ஏஐ, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், தம் தொழில்நுட்பங்களை மக்களிடம் நேரடியாக எடுத்துச் செல்கின்றன. ஆம் Open AI இன் Chat-GPT ஆனது ஒரு வித்தியாசமான அரட்டை முறையைக் கொண்டுவருகிறது. பொதுவாக மக்கள் தங்கள் சூழ்நிலையைக் கையாள்வதில் பீதியடைந்து, மற்றவர்களின் உதவிக்காக அல்லது மற்றவர்களின் ஆலோசனைக்காக பதிலை தேடுவார்கள். இதனால் விவேகமான கேள்விகள் Open AI இன் புதிய Chat-Gpt.3 மூலம் நிறைவேற்றப்படுகின்றன. அலெக்சா அல்லது சிரி முன்னேற்றங்களை விட Chat-Gpt போன்ற தொழில்நுட்ப நண்பரைக் கொண்டிருப்பது மிகவும் உற்சாகமானது. அதே சமயம் குழந்தைகளின் வீட்டு பாடங்கள் மாணவர்களின் exam போன்ற பல விதமாக இது உதவுவதனால் அவர்களை சோம்பேறி ஆக்கும் நிலைக்கும், அவர்களை சிந்திபதிலிருந்து தடுத்துள்ளது. இது இளைய சமுதாயத்தினரின் வளர்ச்சிக்கு சிக்கலாகவே அமையக்கூடும்.அதன்படி, “தேவையில் இருக்கும் நண்பன் உண்மையில் நண்பன்தான், தேவையிலுள்ள நண்பன் உண்மையில் ஒரு தொழில்நுட்ப நண்பன் என்று உறுதியாக மாற்றப்பட்டான்” என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

https://www.10factstamil.com/2023/01/what-is-chat-gpt-in-tamilthe-google-killer.html

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ChatGPT என்பது என்ன? இதைக் கண்டு கூகுள் அஞ்சுகிறதா?

சாட்ஜிபிடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் அனைவரது கவனமும் குவிந்திருந்த நேரத்தில், கடந்த நவம்பர் 30-ஆம் தேதி செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாகக் கருதப்படும் ஒரு புதிய குழந்தை சாட்ஜிபிடி(ChatGPT) பிறந்தது.

 

இதற்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று பலரும் வியந்து கூறுகிறார்கள். இது சற்று அதிகப்படியானதாக இருந்தாலும், இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.

இந்தப் புதிய தொழில்நுட்பம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது போன்றே, மிகவும் நேர்த்தியாகக் கட்டுரைகளை உருவாக்குகிறது. இதில் சில பிழைகளும் குறைகளும் இருந்தாலும், இதன் நிரூபிக்கப்பட்ட திறனும் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறும் பாராட்டுடன் பயத்தையும் ஏற்படுத்துகிறது.

சாட்ஜிபிடி குறித்த விமர்சனங்களில் உள்ள ‘அச்சுறுத்தல்’ என்ற வார்த்தையைக் கூர்ந்து நோக்கினால் இது தெரியும். மனிதனின் உரை போலவே ஒரு போலியை உருவாக்கக்கூடிய இதன் திறன் பிரச்னையை உருவாக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

 

படைப்பாற்றல், கற்றல் மற்றும் கல்வி, வேலை, டிஜிட்டல் பாதுகாப்பு, ஏன் ஜனநாயகத்திலும் கூட இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது அண்மையில் வெளியான தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரை.

 

ஒரு மனிதனால் இதுவரை கூறப்பட்டு வந்த கருத்துகள், இனி ஒரு ரோபோட்டால் உருவாக்கப்பட்ட ஒரு வாதமாக இருக்கலாம்.

ChatGPT என்பது என்ன?

ChatGPT என்பது அடிப்படையில் ஒரு மெய்நிகர் ரோபோ (சாட்போட்) ஆகும். இது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறது, எழுதிக் கொடுக்கப்பட்ட பணிகளை முடிக்கிறது, சரளமாக உரையாடுகிறது, மேலும் தனிப்பட்ட பிரச்னைகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்குகிறது

 

விஷயங்களை உருவாக்குவதற்கான உங்கள் சாத்தியக்கூறுகள் மகத்தானவையாகின்றன.

எடுத்துக்காட்டாக, சிக்கன் கறி தயாரிப்பது எப்படி என்று உங்களுக்குக் கற்பிக்க முடியும். உங்களுக்கு வேலை பெறுவது, கவிதை எழுதுவது, கல்விக்கான கட்டுரைகள் மற்றும் நீண்ட நாட்களாக நீங்கள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பருக்குச் சமரசக் கடிதம் எழுதுவது போன்றவற்றைப் பற்றிய ஆலோசனைகளையும் இது வழங்க முடியும்.

 

வாலி போலக் கவிதை எழுதச் சொன்னால் எழுதித் தரும். காய்ச்சலடிக்கிறது விடுப்புக் கடிதம் வேண்டும் செய்து தரும். இதெல்லாம் ஒரு நொடியில் நடந்துவிடும். சில குறைகள் இருக்கலாம். ஆனால் இது நிச்சயமாக உங்களுக்கு வியப்பைத் தரும்.

சாட்ஜிபிடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன் எனப்படும் SEO.ai வழங்கும் தகவல்கள்படி, சுமார் 100 மொழிகளில் சாட்ஜிபிடி கிடைக்கிறது. ஆங்கிலத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படும் இதன் திறன் மற்ற மொழிகளைப் பொருத்து மாறுபடலாம்.

 

அமெரிக்காவில் 2015-ல் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஈலான் மஸ்க் (முரண் காரணமாக 2018-ல் இதிலிருந்து வெளியேறினார்) ஆகியோரால் தொடங்கப்பட்ட ஓபன் ஏஐ என்னும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இது உருவான ஐந்த நாட்களிலேயே 10 லட்சம் பயனாளர்களைத் சென்றடைந்தது. இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் இந்த மாதிரியின் பயிற்சிக்கும் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இப்போதைக்கு ‘சோதனை மற்றும் ஆய்வு’ காலத்தில் இது அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்று ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, எதிர்காலத்தில் இதன் மூலம் வருமானம் ஈட்டும் வழிகளை ஆய்வு செய்ய நிபுணர்களுக்கு உதவும். இந்தக் கால கட்டத்தில் இது தவறான தகவலைத் தர வாய்ப்புள்ளது என்றும் இதன் டேட்டா ஹிஸ்டரி 2021 வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

தகவலைத் தருவதில் கூகுளுக்கு இருக்கும் ஆதிக்கத்திற்கு இது ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டாலும், இது தரும் தகவல்கள் தற்சமயம் மிகவும் தவறாக இருக்கின்றன. உதாரணமாக, பிரேசில் குறைந்த பட்சம் ஐந்து ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளதாக இது கூறுகிறது. ஆனால், பிரேசில் ஒரு சிறிய விருதைக்கூட வாங்காத நாடு.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் சாட்ஜிபிடி ஒரு மைல்கல்-ஏன்?

ஆற்றல் மிக்க டெக்ஸ்ட் (உரை) அடிப்படையிலான ஏஐ செயலிகள், மிகப் பெருமளவிலான தரவுகளைச் சேமித்து வைத்தும், வாக்கியத்தின் சிறப்பான அமைப்பைக் கண்டறிய அல்காரிதம்களைப் பயன்படுத்தியும் செயலாற்றுகின்றன.

 

இவை லார்ஜ் லேங்க்வேஜ் மாடல்ஸ் (LLMs) என்றழைக்கப்படுகின்றன.

 

"மென்பொருள் பயிற்சியின் போது, இந்த சாட் பாட்டிடம், “ஒரு சிலிண்டர் என்பது என்ன?” போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன. தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்களின் பதில்களை விவரிக்கிறார்கள். சாட்பாட்டின் பதில் தவறாக இருந்தால், சரியானவை உட்புகுத்தப்பட்டுக் கற்பிக்கப்படுகின்றன. இது மற்ற சூழ்நிலைகளுக்குத் தாமாகவே அனுப்பப்படுகின்றன.” என்கிறார் பேராசிரியர் ஆல்வரோ மச்சாடோ டயஸ்.

வார்த்தைகளின் பயன்பாட்டின் சூழலைப் புரிந்துகொள்வதற்கும், உரைகளின் சிறந்த ஒருங்கிணைப்பை அனுமதிப்பதற்கும் ஏற்கனவே ஒரு முறையைப் பயன்படுத்தினாலும், முந்தைய நிரல்கள் பயனருக்குச் சரியான பதிலளிக்கவில்லை அல்லது செயற்கையாக இருந்தது.

 

ChatGPT மனிதனுடன் நெருக்கமாகப் பேசக் கற்றுக்கொண்டது.

 

மொழி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் மனிதக் கருத்து மூலம் கற்றலை வலுப்படுத்தும் (Reinforcement of Learning through Human Feedback-RLHF) நுட்பத்தைப் பயன்படுத்துவதே இந்தத் திட்டத்தைத் தனித்துக் காட்டுகிறது என்று மச்சாடோ டயஸ் கூறுகிறார்.

 

பொறியாளர்கள் "வெகுமதி" மற்றும் "தண்டனை" முறைகளைப் பயன்படுத்தி கணினிக்கு மிகவும் விரும்பத்தக்க தொடர்பு வடிவங்களைக் கற்பிக்கின்றனர். இது ஒரு ஃபைன் ட்யூனிங் செயல்முறை.

 

"நடைமுறையில், பொறியாளர்கள் அல்காரிதம் வழங்கிய பதில்களை அவற்றின் பொருத்தத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்துகிறார்கள். இந்தத் தர வரிசையின் அடிப்படையில் கற்றுக்கொள்வதற்கான திட்டத்தை ஊக்குவிக்கிறார்கள். இதன் விளைவாக, மாற்று வழிகளைக் காட்டிலும் மிகவும் பொருத்தமாகவும் ஆழமாகவும் தோன்றும் உரை வெளியிடப்படுகிறது." என்று மச்சாடோ டயஸ் கூறுகிறார்.

 

தவறுகளை ஒப்புக்கொள்ளவும், தவறான அனுமானங்கள் குறித்துக் கேள்வி எழுப்பவும் பொருத்தமற்ற கோரிக்கைகளை நிராகரிக்கவும் ChatGPTக்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், வெள்ளையின அல்லது ஆசிய ஆண்கள் மட்டுமே நல்ல விஞ்ஞானிகளாகின்றனர் என்று கூறும் ஒரு புரோகிராமை எழுத வைக்க முடிந்தது.

 

இது சம்பந்தமாக மேம்பாட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், நிரல் "சில சமயங்களில் சிக்கலான வழிமுறைகளுக்கு பதிலளிக்க அல்லது ஒருபக்கச் சார்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது" என்று OpenAI கூறுகிறது.

 

இந்தச் சோதனைக்கட்டத்தில் சேகரிக்கப்பட்ட தரவு இதை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

இது கற்றலுக்கும் படைப்பாற்றலுக்கும் அச்சுறுத்தலா?

சாட்ஜிபிடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மாற்றங்கள் அல்லது மாற்றங்களின் அச்சுறுத்தல் ஏற்கனவே வேலைவாய்ப்பில் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. பத்திரிகை போன்ற உரையை நம்பியிருக்கும் துறைகளில் மிக அதிக மாற்றங்கள் வந்து வேலை வாய்ப்பே இல்லாமல் போகலாம்.

 

ChatGPTஇன் கோட் ஜெனரேஷன் திறன், ப்ரொகிராமிங் துறையிலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

 

புதிய தொழில்நுட்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் கல்வித்துறை தான் ChatGPTஇன் சிக்கல்களுக்கான சாத்தியக்கூறுகளையும் உணர்ந்து வருகிறது.

மாணவர்கள் தங்கள் பணிகளுக்கு ஆயத்த பதில்களைக் கண்டறிய இதைப் பயன்படுத்தத் தொடங்கியதையடுத்து, இது வெளியான ஒரு மாதத்திற்குள் நியூயார்க்கில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுக் கருவிகளில் இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டது.

மாணவர்கள் தங்களுடைய அசைன்மென்டுகளை தயாரிப்பதால், இந்தியாவிலும் சில பல்கலைக்கழகங்கள் இதைத் தடை செய்திருக்கின்றன.

ChatGPT இலிருந்து உருவான உள்ளடக்கத்தைக் கண்டறிய OpenAI ஒரு குறியீட்டையும் உருவாக்கி வருகிறது. சாட்பாட் ஒரு உரையை உருவாக்கியதற்கான சாத்தியக்கூறைத் துல்லியமாகக் கணக்கிடும் அல்காரிதம்கள் ஏற்கனவே உள்ளன.

 

அப்படியே நகலெடுப்பது தவிர, மனிதக் கற்றலின் கட்டமைப்பில் இது தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவுகிறது. உதாரணமாக, முன்னுரை, பொருளுரை, முடிவுரை என்று ஒழுங்கு படுத்தி நேர்த்தியாக ஒரு கட்டுரை எழுதும் ஆற்றல் பாதிக்கப்படுமா?

"AI உடனான தொடர்பு காரணமாக, உலகத்துடனான நமது புரிதல் மற்றும் உறவை மாற்றியமைக்கும் சிந்தனையின் அல்காரிதமைசேஷன் குறித்து நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன்," என்கிறார் மச்சாடோ டயஸ்.

"நவீன வரலாற்றில் இது மிகப்பெரிய மனநிலை மாற்றமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மனிதனின் தொழில்நுட்ப, கலாச்சாரக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், நரம்பியல் ரீதியாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக, மனித மூளை அளவு மெதுவாக சுருங்கி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. " என்று கூறும் ‘செயற்கை நுண்ணறிவு: பூஜ்ஜியத்திலிருந்து மெட்டாவெர்ஸ் வரை’ என்ற புத்தகத்தின் ஆசிரியரும், ரியோ கிராண்டே டோ சுல்-ன் போன்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழக பேராசிரியருமான மார்த்தா கேப்ரியல், நவீன காலத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் உறுதிப்படுத்துகிறார்.

 

"இந்த சூழலில் பதில்களைவிடக் கேள்விகள் தான் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. எப்படிக் கேட்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதை அறிய, என்ன வித்தியாசம் என்பது இனி பதில்கள் அல்ல, ஆனால் கேள்விகள். நீங்கள் எப்படி கேட்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி கேட்பது என்று தெரிந்து கொள்ள, பகுத்தறிவுச் சிந்தனை வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

மனிதப் படைப்பாற்றலின் எதிர்காலம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இல்லாத உள்ளடக்கத்தை உருவாக்குவது குறித்த ஒரு கவலையும் நிலவுகிறது.

 

OpenAI அமைப்பின் வருகைக்குப் பத்து நாட்களுக்குப் பிறகு, சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒரு வடிவமைப்பாளர் ஒரு வார இறுதிக்குள் உரை மற்றும் விளக்கங்கள், படங்கள் ஆகியவற்றுடன் கூடிய குழந்தைகள் இதழ் ஒன்றை சாட்ஜிபிடி மற்றும் மிட் ஜர்னி(படங்கள் மற்றும் விளக்கங்களை உருவாக்கும் ஒரு ப்ரொகிராம்) என்ற தளங்களின் உதவியுடன் வெளியிட்டுள்ளார்.

 

"இன்னும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் கருத்துத் திருட்டுப் பிரச்சினை. ChatGPT போன்ற மாடல்களின் பயிற்சியானது இணையத்தில் கிடைக்கும் செய்திகள், புத்தகங்கள் மற்றும் வலைப்பதிவுகள் போன்றவற்றின் அடிப்படையிலானது என்பதால், அது தரும் தீர்வுகள் அதற்கான கிரெடிட் வழங்கப்படாமலேயே சில நபர்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம்.” என்று லிமா கூறுகிறார்.

 

"ஆக்கப்பூர்வமான பகுதிகளில், ஆசிரியர்களுக்கான இந்த அங்கீகாரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கூடுதலாக, எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற ஆதாரங்களை அறியாததால், போலிச் செய்திகளைப் போல, சார்பு அல்லது பொய்களை அடையாளம் காண்பதும் இதில் கடினமாகிறது."

 

"படைப்பாற்றல் என்பது அசாதாரணமான மற்றும் பொருத்தமான இரண்டு சேர்க்கைகளிலிருந்து எழுகிறது. அல்காரிதம்கள் சேர்க்கைகளை உருவாக்குவதற்கான சாதனங்களாக இருப்பதால், படைப்பாற்றல் தூண்டுதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்கிறார் மச்சாடோ டயஸ்.

 

"மறுபுறம், அல்காரிதம்கள் செயல்படும்போது, அவை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத பேட்டர்ன்களை உருவாக்க முனைகின்றன, நமது ஒருங்கிணைந்த புரிதல், அதாவது நமது படைப்பாற்றல் விரிவுபடுத்தப்படுகிறது" என்றும் அவர் கூறுகிறார்.

 

"நமது சிந்தனையை விரிவுபடுத்துவதற்குத் தொழில்நுட்பம் ஒரு நம்பமுடியாத கருவியாக இருக்கும், ஏனெனில் எண்ணற்ற கருதுகோள்கள், வடிவங்கள், தீர்வுகள் ஆகியவற்றைக் குறுகிய காலத்தில் சோதித்து நமது கருதுகோள்களைச் செம்மைப்படுத்தவும், நமது கேள்விகளை மேம்படுத்தவும் முடியும்" என்பது மார்த்தா கேப்ரியல் நம்பிக்கை.

 

"இருப்பினும், தார்மீகமின்றியும் நெறிமுறைகளைக் கருத்தில் கொள்ளாமலும் இந்த அமைப்புகளை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துபவர்களுக்கு இது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம். இது ஒரு தனிநபருக்கு மட்டுமல்லாமல் மனித குலத்துக்கே அச்சுறுத்தலாகலாம்” என்கிறார் மார்த்தா கேப்ரியல்.

ChatGPT என்பது என்ன? எப்படிப் பயன்படுத்துவது? - BBC News தமிழ்

Edited by நிழலி
எழுத்துப் பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

எடுத்துக்காட்டாக, சிக்கன் கறி தயாரிப்பது எப்படி என்று உங்களுக்குக் கற்பிக்க முடியும். உங்களுக்கு வேலை பெறுவது, கவிதை எழுதுவது, கல்விக்கான கட்டுரைகள் மற்றும் நீண்ட நாட்களாக நீங்கள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பருக்குச் சமரசக் கடிதம் எழுதுவது போன்றவற்றைப் பற்றிய ஆலோசனைகளையும் இது வழங்க முடியும்.

How to make Chicken Curry?
 
 
 

Chicken Curry is a popular dish made with chicken cooked in a spicy sauce made of a blend of spices and tomatoes. Here is a simple recipe to make it:

Ingredients:

  • 1 pound boneless chicken, cut into pieces
  • 1 onion, chopped
  • 2 garlic cloves, minced
  • 1 tablespoon grated ginger
  • 1 tablespoon tomato paste
  • 1 tablespoon curry powder
  • 1 teaspoon turmeric
  • 1 teaspoon cumin
  • 1 teaspoon coriander
  • Salt and pepper, to taste
  • 1 cup chicken broth
  • 1 can of diced tomatoes
  • Fresh cilantro, for garnish

Instructions:

  1. In a large pan, heat some oil over medium heat.
  2. Add the chopped onions and cook until soft and translucent, about 5 minutes.
  3. Add the minced garlic and grated ginger and cook for another minute.
  4. Stir in the tomato paste, curry powder, turmeric, cumin, coriander, salt, and pepper. Cook for a minute or two, until fragrant.
  5. Add the chicken pieces to the pan and cook until browned on all sides, about 5 minutes.
  6. Pour in the chicken broth and diced tomatoes. Bring the mixture to a boil, then reduce the heat to low.
  7. Cover the pan and simmer the curry for 20-25 minutes, or until the chicken is fully cooked and tender.
  8. Serve hot with rice or flatbread and garnished with fresh cilantro. Enjoy!

https://chat.openai.com/chat

 

ஏற்கனவே  யாழில் வில்லங்கமான தேடல்களுக்கும் முக்கியமாக யாழில் எழுதபடும்  மருத்துவம் சமபந்தமான கருத்துக்களை சரிபார்க்கவும் உபயோகித்து கொண்டு இருக்கிறேன் .

 
Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ChatGPT க்கு போட்டியாக.. கூகிள்.. Chatbot bard ai ஐ அறிமுகம் செய்திருக்கிறது. எனினும்.. bard தவறான தகவல்களையும் உள்ளடக்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ChatGPT க்கு போட்டியாக.. கூகிள்.. Chatbot bard ai ஐ அறிமுகம் செய்திருக்கிறது. எனினும்.. bard தவறான தகவல்களையும் உள்ளடக்குவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அவசர அவசரமாக பிறந்த செயற்கை குழந்தை அப்படித்தான் இருக்கும் சாட் ஜீபிரி  கொடுக்கப்பட்ட தகவல்களில் இருந்து சிந்தித்து தகவல்களை தருகின்றது அதில் 2022 பின் நடந்த நிகழ்வுகளை சொல்லாது அதற்கு முன் என்றால் ஆள் வெளுத்து வாங்குவார் அதிலும் கடினமான கணித கேள்விகள் ஆளுக்கு பிடிக்காது மருத்துவம் சம்பந்தமானது என்றால் ஆளுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி  ஆனால் கூகிளின் பாராட் அல்காரிதம் வேறு இன்னும் கொஞ்ச காலம் போகணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ChatGPT உடன் தமிழில் ஒரு சிறு உரையாடல்!

உரையாடியது நான்தான்!

 

large.FDCFD3EF-0F82-488C-8D8A-A67A6ACF1AC5.png.0b9db73c121824d44852f37a3641c7f3.png

 

large.622AA400-0982-475F-BEDA-93AEE55B50F4.png.ec663a8f5dc953004804ab271598dba0.png

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ChatGPT என்பது என்ன? கூகுளின் கதை முடிந்ததா?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
சாட்ஜிபிடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

மனிதனைப் போலவே சிந்தித்து பதில் கூறும் ஒரு மென்பொருளைப் பற்றிய பேச்சைத் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக தொழில்நுட்ப உலகில் அதிகமாகக் கேட்க முடிகிறது. அதன் பெயர் ChatGPT

இதற்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று பலரும் வியந்து கூறுகிறார்கள். உலகின் வருங்காலம் இதுதான் என்கிறார்கள். சற்று அதிகப்படியானதாக இருந்தாலும், இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.

கல்வி, வேலை வாய்ப்பு, பொழுதுபோக்கு, சினிமா, இலக்கியம் என அனைத்திலும் இதைப் பயன்படுத்த முடியும்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் மனிதனைப் போன்றே பதில்களைத் தருகிறது. புரியாதவற்றை விளக்குகிறது. சில பிழைகளும் குறைகளும் இருந்தாலும், இதன் திறனும் எதிர்காலத்தில் மேம்படுத்தப்படக்கூடிய வாய்ப்புகளும் உண்மையிலேயே வியக்க வைக்கிறது. இன்னொரு பக்கம் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

 

சாட்ஜிபிடி என்றால் என்ன, இதை எப்படி பயன்படுத்துவது, இதற்கு என்னவெல்லாம் தெரியும், இதைக் கண்டு சிலர் அஞ்சுவது ஏன் என்பது பற்றியெல்லாம்தான் இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

ChatGPT என்பது என்ன?

ChatGPT என்பது அடிப்படையில் ஒரு மெய்நிகர் ரோபோ. செயற்கை நுண்ணறிவுடன் இது செயல்படுகிறது. "ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்னிங் டிரான்ஸ்ஃபார்மர்" என்ற தொழில்நுட்பம்தான் GPT.

ஏற்கெனவே இதுபோன்ற செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் பல்வேறு வகையான சாட்பாட்கள் இருக்கின்றன. படம் வரைவது, புகைப்படங்களை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வகையான செயலிகளில் உள்ளன. அவற்றில் இது புதிய வரவு.

இது அரட்டையடிக்கும் மென்பொருளைப் போன்றதுதான். உங்கள் இணைய உலவியில் இதைப் பயன்படுத்தலாம். செல்போன்களிலும், கணினியிலும் இது வேலை செய்யும்.

உங்களது கேள்விகளையோ, பணிகளையோ கொடுத்தால் அது சில நொடிகளில் உங்களுக்கு ஒரு நிபுணரைப் போல பதிலைக் கொடுக்கும்.

அமெரிக்காவில் 2015-ல் சாம் ஆல்ட்மேன் மற்றும் ஈலான் மஸ்க் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஓபன் ஏஐ என்னும் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. இது உருவான சில நாட்களிலேயே 10 லட்சம் பேர் இதைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்பதால் இது பரபரப்பாகப் பேசப்பட்டது.

ChatGPT-ஐ பயன்படுத்த கட்டணம் எவ்வளவு?

இப்போதைக்கு இது இலவசம்தான். 'சோதனை மற்றும் ஆய்வு' காலத்தில் இது அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என்று ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதற்கு கட்டணம் செலுத்த நேரிடலாம்.

ChatGPT என்னவெல்லாம் செய்யும்?

இது மனிதர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் மனிதர்களைப் போன்றே பதிலளிக்க முற்படுகிறது. எழுதிக் கொடுக்கப்பட்ட பணிகளை முடிக்கிறது. சரளமாக உரையாடுகிறது. தனிப்பட்ட பிரச்னைகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்குகிறது

எடுத்துக்காட்டாக, சிக்கன் கறி தயாரிப்பது எப்படி நீங்கள் கேட்டால், அது உங்களுக்குச் சொல்லித்தரும். கவிதை எழுதுவது, கட்டுரைகள் வரைவது, நீண்ட நாட்களாக நீங்கள் தொடர்பில் இல்லாத ஒரு நண்பருக்குச் சமரசக் கடிதம் எழுதுவது போன்றவற்றைப் பற்றிய ஆலோசனைகளையும் இது வழங்க முடியும்.

கூகுளின் கதை முடிந்ததா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கணினி நிரல்களை எழுதுவது, தவறுகளைக் கண்டறிவது போன்றவையும்கூட இந்த மென்பொருள் கருவியால் சாத்தியம்.

வாலி போலக் கவிதை எழுதச் சொன்னால் எழுதித் தரும். காய்ச்சலடிக்கிறது விடுப்புக் கடிதம் வேண்டும் செய்து தரும். உங்கள் காதலுக்கான வழிமுறைகளைக் கூடச் சொல்லித் தரும். இவை போன்ற கேள்விகளுக்கெல்லாம் நொடிகளில் பதில் தருவதுதான் இதன் சிறப்பு. சில குறைகள் இருக்கலாம். ஆனால் இது நிச்சயமாக உங்களுக்கு வியப்பைத் தரும்.

ChatGPT எப்படிச் செயல்படுகிறது?

முன்னரே கூறியதுபோல இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஒரு மெய்நிகர் ரோபோ. முழுவதும் டெக்ஸ்ட், அதாவது உரை அடிப்படையிலானது. அதனால் பெருமளவிலான தகவல்களைச் சேமித்து வைக்க முடியும். ஏற்கெனவே இருக்கும் வாக்கியங்களைப் புரிந்து கொள்வதற்கான அல்காரிதம்களைப் பயன்படுத்தி கேள்விகளுக்கு விடை அளிக்கின்றன.

இதற்கு பயிற்சியளிக்கும்போது, சில கேள்விகள் கேட்கப்பட்டு, வல்லுநர்கள் தரும் பதில்கள் உள்ளிடப்படுகின்றன. வழக்கமான பயனர்கள் கேட்கும் கேள்விகளில் இருந்தும் இது கற்றுக் கொள்கிறது. அது பதில் தவறாக இருந்தால், சரியான பதில் உள்ளிடப்படுகின்றன.

ஒரு மொழி எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் இதற்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. அதன்மூலம் கேள்விகளைப் புரிந்துகொண்டு விடையளிக்கிறது.

ChatGPT - இல் உள்ள குறைபாடுகள் என்னென்ன?

தகவல்களைக் கொண்டு வந்த தருவதில் கூகுளுக்கு இருக்கும் தனி ஆதிக்கத்திற்கு இது ஓர் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆனாலும் இது தரும் தகவல்கள் பலவும் தற்சமயம் மிகவும் தவறாக இருக்கின்றன.

உதாரணமாக, ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாராவது நோபல் பரிசு பெற்றிருக்கிறார்களா என்று கேட்டால், வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பதில்களைத் தருகிறது. அவற்றில் பெரும்பாலானவை தவறாக இருக்கின்றன.

கூகுளின் கதை முடிந்ததா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆங்கிலத்தைத் தவிர தமிழ் போன்ற பிற மொழிகளில் இதன் வாக்கிய அமைப்புகள் தவறாக இருக்கின்றன.

ChatGPT கல்விக்கும் படைப்பாற்றலுக்கும் அச்சுறுத்தலா?

ChatGPT - இன் புரோகிராம் எழுதும் திறன், மென்பொருள் துறையிலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இத்தகைய தொழில்நுட்பத்தால் கல்வித்துறை தான் அதிகமாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் பணிகளுக்கு இதைப் பயன்படுத்தத் தொடங்கியதையடுத்து, நியூயார்க்கில் கல்வி நிறுவனங்களில் இது தடை செய்யப்பட்டது.

மாணவர்கள் தங்களுடைய அசைன்மென்டுகளை இதன் மூலம் தயாரிப்பதால், இந்தியாவிலும் சில பல்கலைக்கழகங்கள் இதைத் தடை செய்திருக்கின்றன.

கூகுளின் கதை முடிந்ததா

பட மூலாதாரம்,EPA

அப்படியே நகலெடுப்பது தவிர, மனிதக் கற்றலில் இது தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவுகிறது. உதாரணமாக, முன்னுரை, பொருளுரை, முடிவுரை என்று ஒழுங்கு படுத்தி நேர்த்தியாக ஒரு கட்டுரை எழுதும் மனிதர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

இன்னும் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் கருத்துத் திருட்டுப் பிரச்சினை. ChatGPT போன்ற மாடல்களின் பயிற்சியானது இணையத்தில் கிடைக்கும் செய்திகள், புத்தகங்கள் மற்றும் வலைப்பதிவுகள் போன்றவற்றின் அடிப்படையிலானது. அதனால் அது தரும் தீர்வுகள் மற்றவர்களால் ஏற்கெனவே வெளியிடப்பட்ட காப்புரிமை கொண்ட தகவல்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம்.

தகவல்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்ற ஆதாரங்களை அறியாததால், போலிச் செய்திகளைப் போல, பக்கச் சார்புடைய அல்லது தவறான தகவல்களை அடையாளம் காண்பதும் இதில் கடினமாகிறது. போலிச் செய்திகளும் பரவக்கூடும் என நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/science-64701126

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.