Jump to content

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

https://tamilwin.com/article/tamilarasu-party-in-kilinochchi-1674208494

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

சிறீதரன் தலைமையில் வேட்புமனு தாக்கல்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன் தினம் (18.01.2023) வேட்புமனு கையளிக்கப்பட்டுள்ளது.

கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேசசபைகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தலைமையில் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம் | Tamilarasu Party In Kilinochchi

தமிழரசு கட்சி சார்பில் சுயேட்சையாக களமிறங்கிய குழு

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உபட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேசசபைகளில் சுயேட்சை குழுவாக ஒன்றிணைந்து போட்டியிட தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் உள்ளிட்ட ஏராளமான கட்சி ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைமை இம்முறை ஆசனப்பங்கீடு விடயத்தில் கட்சிக்காக கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை புறம்தள்ளி, தகுதியானவர்களுக்கு இடம்கொடுக்காமல் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் ஆசன ஒதுக்கீடுகளை மேற்கொண்டமையால் அதிருப்தி அடைந்த தொண்டர்கள் தனிவழியே தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்து மிகப்பெரும் மக்கள் ஆதரவோடு சுயேட்சை குழு 1 இன் மூலம் களத்தில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம் | Tamilarasu Party In Kilinochchi

முரண்பாடு

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் சார்பில் கரைச்சி மற்றும் பச்சிளைப்பள்ளிக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் எனக்கூறி சுயேட்சைக் குழுவாக வேட்பு மனு தாக்கலொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் இருக்கின்ற முரண்பாடு காரணமாக கிளிநொச்சியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் குறித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதவாளர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமை காரணமாக அவரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பாளர்கள் மற்றும் தேர்தலில் கட்சியில் அங்கத்துவம் கொடுக்காதவர்களை இணைத்து சுயேட்சை குழுவின் வேட்புமனுத்தாக்கல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழரசு கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் கிளிநொச்சியில் மூன்று சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழலில் எதிர்வரும் நாட்களில், இத்தேர்தல் முறையில் ஒரு சிக்கல் இருப்பதால் இவ்வாறான தேர்தல் உத்தி என்பது தொழிநுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் எடுக்கப்பட்டவையே அன்றி எமக்குள் எந்தவொரு விரிசலோ பிரிவினையோ இல்லை என ஊடக அறிக்கை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.  

தொடக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்கள் பிளவுப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இப்படியான தொடர் பிளவுகள் தமிழரசுக் கட்சயின் வட்டார தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம் | Tamilarasu Party In Kilinochchi

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம் | Tamilarasu Party In Kilinochchi

பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு கையளிப்பு.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு இன்றையதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்மை வேட்பாளரான, பூநகரி பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் உட்பட, வட்டார ரீதியாக 11 பேர் மற்றும் பொது வேட்பாளர்களாக 10 பேர் உள்ளடங்கலான 21 வேட்பாளர்களை நியமித்து, அதற்குரிய வேட்புமனுவை பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான கெளரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று காலை (2023.01.20) கிளிநொச்சி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்துள்ளார்.

அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் கடந்த புதன்கிழமை(18) கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம் | Tamilarasu Party In Kilinochchi

கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் இரு சபைகளுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்தது தமிழரசுக் கட்சி

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம் | Tamilarasu Party In Kilinochchi

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம் | Tamilarasu Party In Kilinochchi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தவனத்தில் ஒரு ஆண்டி .......... போட்டுடைத்தானாம். பிறருக்கு வெட்டிய பள்ளம் தான் விழும் குழியாயிற்று!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

நந்தவனத்தில் ஒரு ஆண்டி .......... போட்டுடைத்தானாம். பிறருக்கு வெட்டிய பள்ளம் தான் விழும் குழியாயிற்று!

எல்லாப் புகழும்…. ஆபிரஹாம் சுமந்திரனுக்கே… 😂 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

எல்லாப் புகழும்…. ஆபிரஹாம் சுமந்திரனுக்கே… 😂 🤣

அப்படியே சேரக்கடவது!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி ஒன்று கேள்விப்பட்டியளோ! தமிழரசுக்கட்சி புறக்கணித்த ஜெய் சங்கர் சந்திப்பு  ஏதோ ஆப்பு இறுக்கிப்போட்டார்கள் போலிருக்கிறது. அவசரஅவசரமாக நரியார் சுமந்திரன் சம்பந்தன் இத்யாதிகளை அழைத்து சட்டுபுட்டென்று அவசர முடிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அவர்கள் கழன்ற பின் பிடித்திருந்த சனியன் விலகுதோ என எண்ணத்தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நந்தவனத்தில் ஒரு ஆண்டி .......... போட்டுடைத்தானாம். பிறருக்கு வெட்டிய பள்ளம் தான் விழும் குழியாயிற்று!

58 minutes ago, தமிழ் சிறி said:

எல்லாப் புகழும்…. ஆபிரஹாம் சுமந்திரனுக்கே… 😂 🤣

இது பெரியதொரு நாடகம்.

இதன் உண்மைத் தன்மை அறிய விரும்புவோர் @nunavilan   இணைத்த இந்த காணொளியைப் பாருங்கள்.

ஒருகட்சி எப்படி தனது ஆட்களை சுயேட்சையாக களமிறக்கி போனஸ் ஆசனம் எடுக்கிறதென்பதை கூட்டமைப்பு ஆளெ விலாவாரியாக கூறுகிறார்.

கிழக்கில் முஸ்லீம்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்படியான வேலைகளை தமிழரசு இப்போ தான் செயல்படுத்தி பார்க்க போகிறது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, satan said:

செய்தி ஒன்று கேள்விப்பட்டியளோ! தமிழரசுக்கட்சி புறக்கணித்த ஜெய் சங்கர் சந்திப்பு  ஏதோ ஆப்பு இறுக்கிப்போட்டார்கள் போலிருக்கிறது. அவசரஅவசரமாக நரியார் சுமந்திரன் சம்பந்தன் இத்யாதிகளை அழைத்து சட்டுபுட்டென்று அவசர முடிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அவர்கள் கழன்ற பின் பிடித்திருந்த சனியன் விலகுதோ என எண்ணத்தோன்றுகிறது.

இதுவோ அந்த செய்தி... (முகநூலில் சுட்டது)

நேற்றுமாலை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை திடீரென அழைத்து சத்தித்த ஜனாதிபதி ரணில், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இணக்கம் தெரிவித்தார்.

அதன் முதல்கட்டமாக மாகாண DIGகளின் எண்ணிக்கை 10ஆக குறைக்கப்பட்டு, அவர்கள் மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.

வடக்கில் தொல்லியல், வனவளத்துறை, பாதுகாப்பு துறை என்பன கையகப்படுத்தியுள்ள காணிகள் விரைவாக விடுவிக்கப்படும் வகையில் திங்கட்கிழமை அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும்.

குருந்தூர்மலை, தென்னமரவாடி, திரியார் போன்ற தமிழர்களின் பாரமரிய காணிகளில் அத்துமீறி போடப்பட்ட எல்லைக் கற்கள் நீக்கப்படும்.

இன்னபிற தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இணங்கப்பட்டதாக எம். ஏ. சுமந்திரன் எமக்கு சொன்னார்.

நன்றி முகநூலுக்கு..உண்மை பொய் தெரியவில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரிவித்தவை நடைபெறுமா என்பது அடுத்த கேள்வி. பேசுவோம் .... பேசுவோம் என்று நாட்களை கடத்திய நரியாரை தட்டியெழுப்பிய சக்தி என்ன? அதுவும் இவ்வளவு அவசரமாக. ஏதோ செய்வது போல் அவசரம் காட்டுவதற்கு ஒரு காரணமிருக்கும் அது என்ன? ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன சரத்துகள்...நல்லா கத்தினவை...அப்ப நாளைக்கு என்ன செய்யப் போகினமாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியம் உடைந்து தமிழரசுக்கட்சி துடைத்தெறியப்பட்டு சிங்கள பேரினவாதக்கட்சிகள் காலூன்றி அந்தக்கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் நேரம் நெருங்குகிறது. அதன்பின் மக்களின் அரசியல் அபிலாசைகள் அழிந்து, அன்றாட வாழ்வுபோராட்டமாக மாறிவிடும் தமிழர் வாழ்வு. இதற்குத்தான் குறிக்கோளற்ற சம்பந்தன் எங்கோ கிடந்ததை கூட்டி வந்து தன் நாட்டாமையை காட்டி மக்களை நடுத்தெருவில் விட்டு பெருமையை தேடிக்கொள்ளட்டும். கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இருக்குதா அந்த மனிதனுக்கு? வாறதை கொட்டி விடுவேன் பிறகு நிர்வாகத்தை குற்றஞ்சொல்வார்கள். "தேரையனார் இளநி உண்ணார் பழி சுமப்பார்." என்கிற கதையாய் விடும். எனக்கு பாடம் எடுக்க வரிசையில் வருவார்கள் உணர்ச்சியற்றவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

நேற்றுமாலை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை திடீரென அழைத்து சத்தித்த ஜனாதிபதி ரணில், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இணக்கம் தெரிவித்தார்.

அதன் முதல்கட்டமாக மாகாண DIGகளின் எண்ணிக்கை 10ஆக குறைக்கப்பட்டு, அவர்கள் மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவுள்ளனர்.

வடக்கில் தொல்லியல், வனவளத்துறை, பாதுகாப்பு துறை என்பன கையகப்படுத்தியுள்ள காணிகள் விரைவாக விடுவிக்கப்படும் வகையில் திங்கட்கிழமை அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படும்.

குருந்தூர்மலை, தென்னமரவாடி, திரியார் போன்ற தமிழர்களின் பாரமரிய காணிகளில் அத்துமீறி போடப்பட்ட எல்லைக் கற்கள் நீக்கப்படும்.

முன்னர் வடக்கையும் கிழக்கையும் இணைத்ததை உயர் நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்து. இப்ப ரணிலர் கொடுப்பதை பின்னர் யாரோ ஒருவர் அதற்கெதிராக உயர் நீதிமன்றில் வழக்கு தொடுத்து வெல்லுவார். ஊருக்கு போற பிளானை இந்தவருசமும் கான்சல் பன்னவேண்டிதான் வரப்போகுதுபோலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புலவர் said:

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளுக்கு விமோசனம் இல்லை. இப்பிடியே ஆளை ஆள் கடிச்சு சீரழிந்து சாகவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

கன சரத்துகள்...நல்லா கத்தினவை...அப்ப நாளைக்கு என்ன செய்யப் போகினமாம்..

ஓகஸ்ட் 9 புரட்சி! சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் - ஐபிசி தமிழ்

தென்னரசி - தாரகம் - தமிழ்ச் செய்தி ஊடகம்

விடுதலைப் புலிகள் தொடர்பில் பொன்சேகா எச்சரிக்கை - ஐபிசி தமிழ்

கன சரத்துகள் என்று நீங்கள் சொல்ல, முதலில் விளங்கவில்லை. 
சரத் வீரசேகர, சரத் பொன்சேகா...  ஆகியோரை குறிப்பிட்டீர்கள்  என்ரூ இப்போ புரிந்தது.
வேறை... சரத் இருந்தால்... எடுத்து விடுங்கள். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இது பெரியதொரு நாடகம்.

இதன் உண்மைத் தன்மை அறிய விரும்புவோர் @nunavilan   இணைத்த இந்த காணொளியைப் பாருங்கள்.

ஒருகட்சி எப்படி தனது ஆட்களை சுயேட்சையாக களமிறக்கி போனஸ் ஆசனம் எடுக்கிறதென்பதை கூட்டமைப்பு ஆளெ விலாவாரியாக கூறுகிறார்.

கிழக்கில் முஸ்லீம்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்படியான வேலைகளை தமிழரசு இப்போ தான் செயல்படுத்தி பார்க்க போகிறது.

யாழில் உங்களை தவிர யாரும் பார்த்திருப்பார்கள் என நம்புகிறீர்களா?

நான் நீங்கள் அந்த திரியில் போட்ட கமென்டை பார்த்தபின், வீடியோவை பார்த்தேன். 

சிறி நேசனும், நிக்சனும் கூட இந்த தொழில்நுட்ப முறை/சுயேட்சையை இறக்குவதன் பின்னால் உள்ள காரணங்கள் நியாயமானதே என்பதை ஏற்கிறார்கள்.

அதை பங்காளிகளுக்கு அறிவித்த விதத்ததில்தான் சும்மின் தாந்தோன்றித்தனம் புலப்படுவதாக சொன்னார் நிக்சன்.

ஆனால் இதை எல்லாம் சீர்தூக்கி பார்க்கும் அளவில் யாழ்வாசிகள் இப்போ இல்லை. 

இதை எடுத்து சொல்லப்போனால் நம்மைத்தான் ரவிண்டு கட்டி அடிப்பார்கள்🤣.

பிகு

ஆனால் தமிழரசு எடுக்கும் இந்த அணுகுமுறை கொஞ்சம் high risk tactic என எனக்கு படுகிறது. இதன் தார்பரியம் பற்றி மக்களுக்கு யாரும் தெளிவூட்டாமல், பிரிந்து போனவர்கள் இதை ஒரு உடைவாக சித்தரித்து வாக்கு கேட்கும் போது,

நேரடித்தேர்வு, பட்டியல் தேர்வு இரெண்டிலும் எல்லா தமிழ் தேசிய கட்சிகளும் மண்ணை கவ்வ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதை வாக்காளருக்கு தெளிவாக விளங்கபடுத்தி, கட்சி, சுயேட்சை குழு, வாக்காளர் யாவரும் ஒரே கூட்டில் செயல்பட்டால் இது கைமேல் பலன் தரும். அதைதான் முஸ்லிம்கள் செய்கிறார்கள். ஆனால் இங்கே அந்த ஒருங்கிணைப்பு இல்லை எனும் போது இது பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகவே வாய்ப்பு அதிகம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அதை பங்காளிகளுக்கு அறிவித்த விதத்ததில்தான் சும்மின் தாந்தோன்றித்தனம் புலப்படுவதாக சொன்னார் நிக்சன்.

இதைத் தான் நெறியாளர் கேட்கும் போது 70 வருட அனுபவசாலிகள் ஆமல்ல என்கிறார்கள்.

ஒரு சின்ன விடயத்திலேயே இவ்வளவு கோட்டை விடுகிறார்கள்.

இவர்களெல்லாம் எமது தலைவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழரசுக்கட்சி  பிளவு ◌பட்டதா?
அது  எப்பொழுது ஒன்றாக  இருந்தது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

யாழில் உங்களை தவிர யாரும் பார்த்திருப்பார்கள் என நம்புகிறீர்களா?

நான் நீங்கள் அந்த திரியில் போட்ட கமென்டை பார்த்தபின், வீடியோவை பார்த்தேன். 

சிறி நேசனும், நிக்சனும் கூட இந்த தொழில்நுட்ப முறை/சுயேட்சையை இறக்குவதன் பின்னால் உள்ள காரணங்கள் நியாயமானதே என்பதை ஏற்கிறார்கள்.

அதை பங்காளிகளுக்கு அறிவித்த விதத்ததில்தான் சும்மின் தாந்தோன்றித்தனம் புலப்படுவதாக சொன்னார் நிக்சன்.

ஆனால் இதை எல்லாம் சீர்தூக்கி பார்க்கும் அளவில் யாழ்வாசிகள் இப்போ இல்லை. 

இதை எடுத்து சொல்லப்போனால் நம்மைத்தான் ரவிண்டு கட்டி அடிப்பார்கள்🤣.

பிகு

ஆனால் தமிழரசு எடுக்கும் இந்த அணுகுமுறை கொஞ்சம் high risk tactic என எனக்கு படுகிறது. இதன் தார்பரியம் பற்றி மக்களுக்கு யாரும் தெளிவூட்டாமல், பிரிந்து போனவர்கள் இதை ஒரு உடைவாக சித்தரித்து வாக்கு கேட்கும் போது,

நேரடித்தேர்வு, பட்டியல் தேர்வு இரெண்டிலும் எல்லா தமிழ் தேசிய கட்சிகளும் மண்ணை கவ்வ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதை வாக்காளருக்கு தெளிவாக விளங்கபடுத்தி, கட்சி, சுயேட்சை குழு, வாக்காளர் யாவரும் ஒரே கூட்டில் செயல்பட்டால் இது கைமேல் பலன் தரும். அதைதான் முஸ்லிம்கள் செய்கிறார்கள். ஆனால் இங்கே அந்த ஒருங்கிணைப்பு இல்லை எனும் போது இது பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகவே வாய்ப்பு அதிகம்.

உள்ளுராட்சி தேர்தலில்n வட்டாரத்திற்கு 60 வீதமும் கட்சிக்கு  40 வீதமும் என்ற முறை இருப்பதால்  தொழில்நுட்ப ரீதியாகப் பிரிந்து கேட்பது சுயேட்சைக் குழுவாக நின்று தெுர்தலின் பின் ஒன்று சேர்வது அதிக ஆசனங்ககைளைப் பெறுவது உறுதியான ஆட்சி அமைக்க உதவும் என்று சுமத்திரன் சொல்கிறார். இது ஒரு வேளை சரியாக இருக்கலாம். ஆனால் அதை சுமத்திரன் சொல்வதால்தான் இவ்வளவு பிர்சசினைகளும் வருகின்றது.தமிழரசக்கட்சி கூட்டமைப்பு அங்கத்துவக் கட்சிகளை ஒருபோதும் மதிப்பதில்தில்லை.அவர்களைக் கழட்டி விடுவதற்கே முயற்சி செய்கின்றது;. அந்த வகையில் இது கொள்கையளவில் சரியான பரிசோதனை முயற்சிஎன்றாலும். அதை உரிமுறையில் மக்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை. மேலும் அதைச சொல்லும் சுமத்திரனின் கடந்த கால நம்பகத்தன்மையற்ற பேச்சுக்கள் இதை எப்படி நம்புவது என்ற சந்தேகத்தைக் கொடுக்கும். லேுத் ரெலோவுக்கும் புளொட்டுக்கும் யாழ்மாவட்டத்தில் பெரிய வாக்கு வங்கி இல்லாதிருப்பது தமிழரசுக்கு ஆறுதலளிக்கும் விடயமாயினும் அந்த வாக்குகளை ஏனைய  கட்சிகள் பகிர்ந்து கொண்டகல் நிலமை சிக்கலாகும். இந்தப் பரிசோதனை முயற்சி தோல்கியுற்றால் தமிழரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

இதை மிக இலகுவாக கையாண்டு இருக்கலாம்.

அணி ஒன்று - ததேகூ - இதில் எல்லா கட்சிகளும் இடம்பெறும். இடப்பங்கீடு வழமை போலவே.

அணி இரெண்டு - சுயேட்ச்சை குழு - இதிலும் ததேகூ இல் உள்ள எல்லா கட்சிகளும் இடம்பெறும். இடப்பங்கீடும் அதே முறையில்.

இப்போ 40, 60 இரெண்டு முறையிலும் கூட்டமைப்பு வேட்பாளர் (அணி1, 2) வெல்ல வாய்ப்பு உள்ளதில் அதிகமகாக இருக்கும்.

இதை மக்களுக்கு எடுத்து சொன்னால் அவர்களும் புரிந்து கொண்டு வாக்களித்திருப்பர்.

ததேகூ வை உடைக்க வேண்டிய தேவையும் வந்திராது.

இதை சுமந்திரனோ, செல்வமோ, சித்தரோ யோசிக்காமல் விட்டார்களா?

அல்லது இதை சாக்காக வைத்து சுமந்திரன் தமிழரசின் பலத்தையும், ஏனையோர் தத்தம் பலத்தையும் பரிட்சிக்க முயல்கிறார்களா?

சுய நலனும், கட்சி நலனும் இன நலனை மேவி நிற்கிறது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

முற்றிலும் சரி. ஆனால் இப்பொழுது குழப்பம் மேலும்மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இதை மிக இலகுவாக கையாண்டு இருக்கலாம்.

அணி ஒன்று - ததேகூ - இதில் எல்லா கட்சிகளும் இடம்பெறும். இடப்பங்கீடு வழமை போலவே.

அணி இரெண்டு - சுயேட்ச்சை குழு - இதிலும் ததேகூ இல் உள்ள எல்லா கட்சிகளும் இடம்பெறும். இடப்பங்கீடும் அதே முறையில்.

இப்போ 40, 60 இரெண்டு முறையிலும் கூட்டமைப்பு வேட்பாளர் (அணி1, 2) வெல்ல வாய்ப்பு உள்ளதில் அதிகமகாக இருக்கும்.

இதை மக்களுக்கு எடுத்து சொன்னால் அவர்களும் புரிந்து கொண்டு வாக்களித்திருப்பர்.

ததேகூ வை உடைக்க வேண்டிய தேவையும் வந்திராது.

இதை சுமந்திரனோ, செல்வமோ, சித்தரோ யோசிக்காமல் விட்டார்களா?

அல்லது இதை சாக்காக வைத்து சுமந்திரன் தமிழரசின் பலத்தையும், ஏனையோர் தத்தம் பலத்தையும் பரிட்சிக்க முயல்கிறார்களா?

சுய நலனும், கட்சி நலனும் இன நலனை மேவி நிற்கிறது.

இந்த உத்தியை முஸ்லீம் கட்சிகள் செய்கிறார்கள் என்று தெரிந்தும் இவர்கள் பிரிந்து நின்றபடியால் வேறு ஏதாவது காரணமாகவும் இருக்கலாம்.

பெட்டி பரிமாறி இருக்கலாம்

இந்தியா சொல்லு பரிமாறி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

யாழில் உங்களை தவிர யாரும் பார்த்திருப்பார்கள் என நம்புகிறீர்களா?

எனது ஒரு பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன், அதாவது நோக்கம் சரி தெரிவித்த விதம் பிழை என. அதை  இப்போது தேடுகிறன் கண்டு பிடிக்க முடியவில்லை. இதை அறிந்தே  வாக்குகளை பிரிக்கும் வேலைகளை செய்கிறார்கள் என்று தாடியர் அங்கலாய்க்கிறார் தொடக்கத்திலிருந்து. இவர்களது பிழையான அணுகுமுறை, செயற்திறன் அற்ற அரசியலே இவ்வளவு அந்நிய கட்சிகளையும் உருவாக்கி மக்களை அவர்கள் பின்னால் விரட்டியது. சும்மா அப்படி சொல்லிவிட முடியாது, எஜமான் திட்டத்துக்காய் செயற்படுகிறார்கள், மக்களின் அபிலாசைகளை இல்லாதொழிக்க செயற்படாமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை. சரியான ஒரு கோடரிக்காம்பை தெரிந்தெடுத்து தமிழருக்குள் செருகியிருக்கிறது சிங்களம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகுதியற்ற தலைவர்களை ஏன் கட்சியில் மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்? தாம் தகுதியற்றவர்கள் என்று தெரிந்தும் ஏன் போட்டியிட அடம்பிடிக்கிறார்கள், சண்டை பிடிக்கிறார்கள், வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்? 

கோத்தா சொன்னார்; தாங்கள் தகுதியற்றவர்கள் என்று விரட்டியடித்து விட்டு மீண்டும் ஏன் தெரிந்தீர்கள் என்று மக்களை கேள்வி கேட்டார். விரட்டியடித்து விட்டார்கள் என்று  தெரிந்து கொண்டும் மீண்டும் குளறு படிகளை செய்து, மக்களுக்கு லஞ்சம் கொடுத்து, ரோஷமில்லாமல் கதிரையில் குந்தியிருந்து மக்களை குற்றம் சொல்பவர்களை என்ன சொல்வது? பல வருடங்களுக்கு முன் இங்கு பதிந்துள்ளேன், இன்னும் சில வருடங்களில் தமிழ்த்தேசியம் அழிந்து  சிங்களம் வலுவாக  தன் கட்சிகளோடு காலூன்றி இந்த அல்லக்கைகள் எல்லாம் மக்களோடு மக்களாக விரிசையில் நின்று சிங்களகட்சிக்கு வாக்குப்போடும் காலம் வரும் அல்லது தேர்தலே இல்லாத நிலையும் தோன்றலாம். அதற்காகவே இவர்கள் உழைக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்கே விளங்காத, விளங்கப்படுத்தாத ஒரு முறையை சாதாரண மக்கள் எப்படி கண்டுணர்ந்து இவர்களை தெரிவு செய்ய முடியும் என இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? செயற்திறனுமில்லை, சிந்திக்கும் திறனுமில்லை மக்களை குழப்பும் செயலை மட்டும் திறமையாக செய்கிறார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

எனது ஒரு பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன், அதாவது நோக்கம் சரி தெரிவித்த விதம் பிழை என. அதை  இப்போது தேடுகிறன் கண்டு பிடிக்க முடியவில்லை.

நீங்கள் தேடுவது இதற்குள் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் தேடுவது இதற்குள் இருக்கும்.

இது இல்லை. பரபரப்பாக போய்க்கொண்ண்டிருக்கும்போது எழுதிய ஞாபகம். எந்த தலைப்பு என்று மறந்துவிட்டேன். அதாவது இவர்களை அழைத்துப்பேசி த.தே. கூட்டமைப்பின் சின்னத்தை பாவிக்கக்கூடாது என்று போட்ட உத்தரவு தலைப்பில் இருக்குமோ தெரியவில்லை. சரி, அது கிடக்குது. இப்போ எல்லோருக்கும் தெரிந்தாயிற்று அது போதும்.  இருந்தாலும் முயற்சி செய்த உங்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.