Jump to content

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 எண்ணம் எதுவாக இருந்தாலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கூறியிருக்க வேண்டுமல்லவா? இல்லை, அது பத்திரிகைகள் கூறுகின்றன நாங்கள் அப்பிடியில்லை, பத்திரிக்கைகளே அப்படி செய்தி போடாதீர்கள் என்று கண்டித்தாரே, 

இதுதான் நான் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து களமிறங்குகிறது தமிழரசுக்கட்சி என்கிற தலைப்பில் பதிந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரும் காலங்களில் ரணில் அல்லது அயல்நாட்டு இராஜதந்திரிகள் தமிழர் பிரச்சனை பற்றி பேச எமது தரப்பினரை அழைத்தால் அனைத்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தனி தனியாக செல்லவேண்டும். அலுவலகத்தில் அல்லது வரவேற்பு அறையில் இப்படியான கூட்டங்கள் நடக்க வாய்ப்பே இல்லை பெரிய மண்டபங்களில்தான் சந்திப்புகளையும் கூட்டங்களையும் நிகழ்த்தவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேற்காலங்களில் பேச்சுக்கே இடமிருக்காது போலிருக்கிறது. ரணில் எடுத்தவுடன் பேசுகிறேன் எல்லோரும் ஒற்றுமையா வாங்கோ என்றார், பின் முகவரை தனியாக சந்தித்து பேசினார். "சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி." என்பதுபோல ஏற்கெனவே பத்துக்கட்சி இப்போ அது பிரிந்து  பலபிரிவுகளாய் நிக்கினம். இனி யாரோட யார்  பேசுறது? தாடியர் அரச பக்கம், அப்படி ஏதாவது தப்பிப்பிழைத்தாலும் தட்டிப்பறித்து சிங்களத்தின் காலடியில் காணிக்கை ஆக்கிவிடுவார். இனிமேல் பேச்சுவார்த்தை தீர்வு வெறுங்கனவுதான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

50 வருசமாய் பேச்சுவார்த்தைகள் நடத்தி என்னத்தை கண்டது? இப்படியே சிதறி அழிஞ்சு போவதுதான் நியதி எண்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. :crying_face:

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தங்கள் பிரதிநிதிகளாய் வடகிழக்கில் தமிழரை தெரிந்து தேர்தலில் நிறுத்துவார்கள் இப்போதைக்கு, அதன்பிறகு அவர்களையும் அப்புறப்படுத்திவிட்டு தாங்களே நேரடியாகவே இறங்குவார்கள், அதுவரை பேச்சுவார்த்தையும், முகவர்களின் உதவியும் தேவை. அப்புறம் இதெல்லாம் தேவையற்றது. உங்களுக்கு நினைவிருக்குமென்று நினைக்கிறன், தாடியர் கடந்த ஒரு தேர்தலில் தன் சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாமல் சிங்கள கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவர். அது முன்னோட்டம் பின்வரும் நாடகங்களுக்கு.

அங்காலை பாருங்கோ! இலங்கையின் சுதந்திர விழாவுக்கு இந்திய கொடியை வடக்கில் ஏற்றி மகிழ்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். ஏன் என்று கேட்க ஆளில்லை. தெற்கிலேதான் கொண்டாட்டம் அங்கேயே கொண்டுபோய் ஏத்தலாமே? "நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலுங்கூட மிதிக்கும் என்பது உண்மைதானே?"

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.