Jump to content

12 மில்லியன் டொலர் இழப்பு: உசைன் போல்ட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிதி மோசடி…


Recommended Posts

12 மில்லியன் டொலர் இழப்பு: உசைன் போல்ட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிதி மோசடி…

 

0x0-1024x683.jpg

உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட், முதலீட்டு நிறுவனம் ஒன்றில் பல மில்லியன் டொலரை முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், ஜமைக்காவின் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்ட குறித்த முதலீட்டு நிறுவனம், கடந்த ஜனவரி 12ஆம் திகதி ஓர் அறிக்கை வெளியிட்டது.

அதில், “வங்கியின் முன்னாள் ஊழியர் ஒருவர் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த விஷயத்தைச் சட்ட அமலாக்கத்துறைக்கு அனுப்பியிருக்கிறோம். அந்த ஊழியரின் மோசடியால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து சொத்துகளைப் பாதுகாக்கவும், நெறிமுறைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இந்த மோசடி சம்பவத்தில் உசைன் போல்ட்டின் கணக்கும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஆய்வுசெய்துவருகிறோம். இந்த மோசடியில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகளும் நீதிக்கு முன் கொண்டுவரப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து வெளியான தகவலில், உசைன் போல்ட்டின் 12 மில்லியன் டொலர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்பட்டது.

Who can fill the track void left by Usain Bolt's retirement? | The Japan Times

இது தொடர்பாக உசைன் போல்ட்டின் வழக்கறிஞர், முதலீட்டு நிறுவனத்தில், கணக்கில் உசைன் போல்ட் 12 மில்லியன் டொலரை இழந்திருக்கிறார். தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாராக இருக்கிறோம். இப்போது கணக்கில் வெறும் 12,000 டொலர் மட்டுமே இருக்கிறது. அவர் தற்போது இழந்திருக்கும் தொகை அவருடைய வாழ்நாள் சேமிப்பாகும். நிறுவனம் நிதியைத் திருப்பித் தராவிட்டால், நாங்கள் இந்த விடயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம். உசைன் போல்ட் தன்னுடைய பணத்தை மீட்டு நிம்மதியாக வாழக்கூடிய வகையில், இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நாட்டின் நிதிப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.

உசைன் போல்ட் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே ஓட்டப்பந்தய விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவர் பல நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருந்துவருகிறார் எனபது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/234680

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உசைன் போல்ட்…  சீட்டு கம்பெனியில் காசு போட்டிருக்கிறார் போலை.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உசைன் போல்ட்…  சீட்டு கம்பெனியில் காசு போட்டிருக்கிறார் போலை.

சின்னசின்ன கம்பனிகளில் வட்டி கூடுதலாக வருமென்றோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

சின்னசின்ன கம்பனிகளில் வட்டி கூடுதலாக வருமென்றோ?

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, வாழ்நாள் சேமிப்பே போய் விட்டது.🤔
12 மில்லியன் டொலரை ஆட்டையை போட்டு விட்டு,
12 ஆயிரம் டொலரை கைச்செலவுக்கு விட்டிருக்கிறார்கள். 😂

Edited by தமிழ் சிறி
  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................    
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.