Jump to content

புடின் தோல்வியடைந்தால் உலகதிற்கு அது நல்ல நேரம் – பிரிட்டன் முன்னாள் பிரதமர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புடின் தோல்வியடைந்தால் உலகதிற்கு அது நல்ல நேரம் – பிரிட்டன் முன்னாள் பிரதமர்

2-28.jpg

பிரிட்டன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் தலைநகர் கீவ்ற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் பிரதமரை உக்ரைன் அதிபர் வோல்மியுர் ஜெலென்ஸ்கி வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனில் ரஷ்யப் படைகள் பின்வாங்கிய பகுதிகளையும் போரினால் சேதமடைந்த பகுதிகளையும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தோல்வியடைந்தால், அது உக்ரைனுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் நல்ல நேரமாக அமையும் என பிரித்தானிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த பயணத்தின் போது கூறியது உலகம் முழுவதும் பலத்த விவாதத்தை உருவாக்கியுள்ளது.

தனது ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க பிரித்தானியா எந்தவொரு ஆதரவையும் வழங்க தயாராக இருப்பதாக பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
 

https://akkinikkunchu.com/?p=236072

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

புடின் தோல்வியடைந்தால் உலகதிற்கு அது நல்ல நேரம் – பிரிட்டன் முன்னாள் பிரதமர்

எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்லை......எப்பிடி உலத்துக்கு நல்ல நேரம் மிஸ்டர் ஜோன்சன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2023 at 09:33, குமாரசாமி said:

எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்லை......எப்பிடி உலத்துக்கு நல்ல நேரம் மிஸ்டர் ஜோன்சன்?

உலகம், global எனும் பொது, அவர்களின் சிந்தனாவாதம், மேற்கை சுற்றியது -  - இது பல்துருவ முனைக்கு நகர முயலும் உலகில் இருக்கும் அதிகார மட்டதில்  உள்ள  கருத்து, நம்பிக்கை போராட்டம் - மேற்கை சுற்றியது என்ற யதார்த்தத்தை தக்க வைக்க முனைகிறது மேற்கு.

அண்மையில், ஓய்வு பெட்ரா சிங்கப்பூரின் பிரதமரே சொல்லி இருந்தார் - பல் துருவ முனைக்கு நகரும் உலகை மேற்கு ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறது - அனால், தவிர்க்க முடியாதது என்று - சிங்கப்பூர் அமெரிக்காவில் ஓர் வால். (ஓய்வு பெட்ரா பின் சொல்வதால் - பதவியில் இருக்கும் போது நிலை சொல்லித்தெரியவேண்டியதில்லை.)

நேட்டோ / மேற்கு என்ர, உக்கிரைன் என்ற புலிவாலை பிடித்து உள்ளது.


அனால், தற்செயலாக, நேட்டோ புலி வலசை  விட்டால், அல்லது புலியை ஒருவாறு ரஷ்யா ஒரு கூண்டுக்குள்   கொண்டுவந்து, என்ர  ராசா நீ இங்கே இருந்தா உனக்கும் சுகம், எனக்கும் சுகம் , எல்லாருக்கும் சுகம் என்ற நிலை வரும் என்றால் (  (முழு உக்கிரனையும் ருசியா பிடிப்பது அல்ல, உக்கிரைன் ருசியா காலில் விழுவதும் அல்ல).

நேட்டோ ஐ கடிக்கப்போகும் புலி  உக்கிரனை விட பிரமாண்டமானது - இதன் பரிமாணம் பூகோள அரசியல் நலன்கள், பொருளாதார நலன்கள்,  நேட்டோ /  மேற்கு இருக்கும் கேட்டு கேள்வி இல்லாத வளக்குவிவு, நேட்டோ இந்த நிலைப்பாட்டை ஏற்காத நாடுகள் உருவாகும் பொருளாதார கூட்டணி, டாலருக்கான கேள்வி (கேட்டு கேள்வி இல்லாத அமெரிக்காவின் கடன் பெறக்கூடிய தகுதி) .. என்று நீண்டு செல்லும். 

எல்லாம் ஒரேயடியாக நடைபெறும் என்பது அல்ல.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.