Jump to content

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு: கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள், தலைநகரில் தொடரும் போராட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு: கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள், தலைநகரில் தொடரும் போராட்டம்

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு

பட மூலாதாரம்,FREDRIK SANDBERG/TT/EPA-EFE/REX/SHUTTERSTOCK

23 ஜனவரி 2023, 06:41 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தின்போது இஸ்லாமிய மதத்தில் புனிதமாகக் கருதப்படும் குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவத்தை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இது “கேவலமான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று துருக்கி தெரிவித்துள்ளது.

ராஜ்ஜீய மட்டத்தில் துருக்கிக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து வருகிறது.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஸ்வீடனிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சனின் துருக்கி பயணத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் இப்போது அதன் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் இழந்துவிட்டதாக துருக்கி அரசு கூறுகிறது.

பால் ஜான்சன் சமூக ஊடக வாயிலாக, “நேற்று நான் ஜெர்மனியின் ராம்ஸ்டீனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் ஹூலுசி அகாரை சந்தித்தேன். அங்காராவில் நடக்கும் சந்திப்பைத் தற்போதைக்கு ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “துருக்கியுடனான ஸ்வீடனின் உறவு எங்களுக்கு மிகவும் முக்கியமானது. பாதுகாப்பு தொடர்பான பொதுவான பிரச்னைகளைப் பற்றி மீண்டும் பேசுவோம் என்று நம்புகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

குர்ஆன் கடவுளின் வார்த்தைகள் அடங்கிய நூல் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். அவர்கள் அதைப் புனிதமாகக் கருதுகின்றனர். குர்ஆனை வேண்டுமென்றே சேதப்படுத்துவதையோ அதை அவமதிப்பதையோ அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

ஸ்வீடனுக்கு துருக்கியுடனான உறவு ஏன் முக்கியமானது?

நேட்டோ ராணுவ கூட்டணியில் சேர்வதற்கு ஸ்வீடன் விரும்புகிறது. ஆனால், நேட்டோ உறுப்பினரான துருக்கி அதற்கு எதிராக உள்ளது.

நேட்டோவில் உறுப்பினராக இருப்பதால், வேறு நாடுகள் அந்தக் கூட்டணியில் இணைவதை துருக்கியால் எதிர்க்கவும் நிறுத்தவும் முடியும்.

ரஷ்யா-யுக்ரேன் போர் தொடங்கிய பிறகு, ஸ்வீடனும் ஃபின்லாந்தும் நேட்டோ உறுப்பினர் ஆவதற்கு விண்ணப்பித்தன.

அதற்கு துருக்கியின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து, ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் துருக்கிக்கு எதிராக வலதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களின்போது, தீவிர வலதுசாரி கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவரான ராஸ்மஸ் பலுதன், ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியே சனிக்கிழமையன்று குர்ஆன் பிரதியை எரித்தார்.

கடந்த ஆண்டு நேட்டோவில் இணைவதற்கு ஸ்வீடனும் ஃபின்லாந்தும் முன்வைத்த கோரிக்கையை துருக்கி எதிர்த்தது.

நேட்டோவில் ஸ்வீடன் இணைவதை துருக்கி எதிர்க்கவில்லை என்பதை ஸ்வீடன் பாதுகாப்பு அமைச்சரின் துருக்கி விஜயம் சுட்டிக்காட்டும் என்று நம்பப்பட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

குர்திஷ் தொழிலாளர் கட்சி போன்ற ஆயுதமேந்திய குர்திஷ் குழுக்களை ஆதரிப்பதை நிறுத்தி, ஆயுதங்களை விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று துருக்கி கூறுகிறது. துருக்கி, ஐரோப்பிய யூனியன் போன்ற பகுதிகளில் குர்திஷ் தொழிலாளர் கட்சி போன்ற குர்திஷ் ஆயுதமேந்திய குழுக்கள் பயங்கரவாத குழுக்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், ஸ்வீடன், ஃபின்லாந்து போன்ற நோர்டிக் நாடுகளில் அவற்றுக்குத் தடை விதிக்கப்படவில்லை.

குர்திஷ் தொழிலாளர் கட்சியின் சில உறுப்பினர்களுக்கு ஸ்வீடன் இடம் கொடுத்துள்ளதாக துருக்கி கூறுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை ஸ்வீடன் மறுத்து வருகிறது.

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு

பட மூலாதாரம்,ERDEM SAHIN/EPA-EFE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு,

துருக்கியில் ஸ்வீடன் தூதரகம் முன்பாக அந்நாட்டின் கொடியை எரித்த போராட்டக்காரர்கள்

விமர்சிக்கும் துருக்கி

துருக்கி, இஸ்லாமிய பெரும்பான்மை உடைய நாடு. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் இந்தச் சம்பவத்தை விமர்சித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் “தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும்” இது நடந்துள்ளது எனத் தெரிவித்தது.

“கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் முஸ்லிம்களை குறி வைத்து நம்முடைய புனிதமான விஷயங்களை அவமதிக்கும் இந்த முஸ்லிம் விரோத செயலை அனுமதிக்கும் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமோஃபோபியா, இனவெறி, பாகுபாடு ஆகியவை ஐரோப்பாவில் எச்சரிக்கை மணியை அடிக்கும் நிலையை எட்டியுள்ளன என்பதற்கு குர்ஆன் எரிப்பு சம்பவம் மற்றொரு சான்று என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க ஸ்வீடன் அரசாங்கம், “தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் டொபையாஸ் பில்ஸ்ட்ரோம் இந்தச் சம்பவம் “திகிலூட்டக்கூடியது” எனக் கூறினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்வீடனில் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் அதற்காக, இங்குள்ள அரசோ அல்லது நானோ ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை,” என்று பதிவிட்டார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பான ஓ.ஐ.சி.யும் எதிர்ப்பு

ஓஐசி பொதுச் செயலாளர் ஹிசின் பிரஹிம் தாஹாவும், ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகம் முன்பாக குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ளார். இவையனைத்தும் ஸ்வீடன் அதிகாரிகளின் அனுமதியுடன் நடந்ததாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 4
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 4

பாகிஸ்தான் என்ன சொல்கிறது?

இந்த விவகாரத்திற்கு, “ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு சம்பவத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்று பாகிஸ்தான் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

“இந்த அறிவில்லாத, ஆத்திரமூட்டும் இஸ்லாமிய வெறுப்பு செயல் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களை எந்த வகையிலும் கருத்து சுதந்திரம் என்றோ சட்டபூர்வமான செயல் என்றோ கூற முடியாது. இஸ்லாம் அமைதியின் மதம். இஸ்லாமியர்கள் அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். இந்தக் கொள்கையை அனைவரும் மதிக்க வேண்டும்,” என்றார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 5
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 5

இஸ்லாமிய வெறுப்பு, சகிப்புத்தன்மை இல்லாமை, வன்முறையைத் தூண்டும் முயற்சிகளுக்கு எதிராகத் தீர்வு காண முன்வருமாறு மற்ற நாடுகளுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரிஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஸ்வீடனில் வலதுசாரி பயங்கரவாதிகள் மேற்கொண்ட, புனித குர்ஆனை அவமதிக்கும் செயலைக் கடுமையாகக் கண்டிக்க வார்த்தைகள் போதாது. உலகெங்கிலும் உள்ள ஒன்றரை பில்லியன் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் புண்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 6
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 6

சௌதி அரேபியா, கத்தார் கடும் கண்டனம்

சௌதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளும் இதற்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்திற்கு சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

சௌதி வெளியுறவு அமைச்சகம் “விவாதங்கள், சகிப்புத்தன்மை, சகவாழ்வை ஊக்குவிப்பதில் சௌதி அரேபியா நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும், வெறுப்பையும் பயங்கரவாதத்தையும் நிராகரிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 7
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 7

போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதித்த ஸ்வீடன் அதிகாரிகளையும் கத்தார் விமர்சித்துள்ளது.

“இது இரண்டு பில்லியன் உலக முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டும் மிகவும் தீவிரமான சம்பவம். கத்தார் மத அடிப்படையிலான அனைத்து வெறுப்புப் பேச்சுகளையும் திட்டவட்டமாக நிராகரிக்கிறது,” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரஸ்பர புரிந்துணர்வைப் பற்றிப் பேசிய கத்தாரின் வெளிவிவகார அமைச்சகம், வெறுப்பு, பாகுபாடு, வன்முறை ஆகியவற்றைக் கண்டிப்பதற்கான பொறுப்பைக் கையில் எடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 8
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 8

ஸ்வீடனில் தொடரும் போராட்டங்கள்

குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம் ஸ்டாக்ஹோமில் நடந்த போராட்டங்களின்போது துருக்கிய அதிபர் ரிசெப் தையிப் அர்டோனின் உருவபொம்மை விளக்கு கம்பத்தில் தொங்கவிடப்பட்டது.

ஸ்வீடன் பிரதமர், “ஸ்டாக்ஹோமில் துருக்கிய அதிபரின் பொம்மையைத் தலைகீழாகத் தொங்கவிட்டவர்கள், நேட்டோவில் இணைவதற்கான ஸ்வீடனின் முயற்சிகளுக்குத் தீங்கு விளைவிக்க விரும்புவதாக” கூறினார்.

கடந்த ஆண்டும், ராஸ்மஸ் பலுதன் குர்ஆனை எரிக்கப் போவதாக மிரட்டி பல பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து ஸ்வீடனில் போலீசாருக்கும் கோபமடைந்த  தீவிர வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்தன.

https://www.bbc.com/tamil/articles/cx7gl470p6zo

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

ஆகா… இனி கொஞ்ச நாளைக்கு, தலைப்பு செய்திகளுக்கு இனி பஞ்சம் இராது. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Well played Putin 👏🏾.

பிரெக்சிற், டிரம்ப் தேர்வு போன்ற ஜனநாயகத்தை கொண்டே ஜனநாயக நாடுகளில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் copybook புட்டின் நகர்வு இது.

சுவீடன் நேட்டோவில் இன்னும் சேராதபோதும் உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்கிறது.

அத்தோடு துருக்கி பின்லாந்துக்கு ஓகே சொன்னாலும் சுவீடனை குருதிப்போராளிகளை காட்டி நேட்டோவில் சேர்க முடியாது என்கிறது.

இடையில் புகுந்து விளையாடுகிறார் முன்னாள் உளவாளி😎.

சுவீடன் அரசு கெட்டிகாரர் எண்டால், குரானை எரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதன் மூலம் துருக்கியை நெருங்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வழமையாக தை மாதங்களில் கடுமையாகப் பெய்யும் பனிப்பொழிவு  இம்முறை  மிகவும் காலம் தாழ்த்தியுள்ளது. 

இதனால் இந்த ஆண்டுக்கான  கனடாவின் பயிர்ச்செய்கைக்கு பாரிய பாதகம் ஏற்படுமென அஞ்சப்படுகிறது. 

பனிப்பொழிவை  இல்லாதொழித்த முன்னாள் உளவாளியும் இன்நாள் ரஸ்ய தலைவருமான விளாடிமிர் புடின் காரணமாக இருக்கிறார் என Sun tabloid தெரிவித்துள்ளது. 

கனடாப் பிரதமர் சஸ்டின் ரூடோ ஏதாவதொரு வழியில்  பனிப்பொழிவை ஏற்படுத்தி புடினின் திருவிளையாடல் கனடாவில் எடுபடாது என நிரூபித்து கனேடிய விவசாயிகளின் மனங்களை நெருட  வேண்டும். 

🤨

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சஸ்டின் இந்த பனிப்பொழிவு விடயத்தில் கவனமெடுப்பாராக.....:rolling_on_the_floor_laughing:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உக்ரேனின் நிலப்பரப்பைத் தனதாக்கும் நோக்கத்தை  போலந்து கொண்டிருந்தது. "

போலந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர். 👇

Poland considered partitioning Ukraine – former FM

Prime Minister Mateusz Morawiecki has denied the claim, urging Radoslaw Sikorski to retract and “weigh his words”
 
Poland considered partitioning Ukraine – former FM

©  Gabrielle Lurie/San Francisco Chronicle via Getty Images

Former Polish Foreign Minister Radoslaw Sikorski has suggested that the government in Warsaw considered partitioning Ukraine in the first weeks of the military conflict between Kiev and Moscow. His comments came in an interview with Radio ZET on Monday, prompting a strong retort from the country’s prime minister, Mateusz Morawiecki.

Sikorski was asked if the ruling Law and Justice (PiS) government had ever entertained the idea of dividing up Ukraine. He replied by stating that there was “a moment of hesitation in the first 10 days of the war, when we all didn’t know how it would go, that maybe Ukraine would fall.”

“Had it not been for the heroism of Ukrainian President Vladimir Zelensky and the help of the West, things could have been different,” Sikorski said.

His remarks soon drew a reaction from Polish Prime Minister Mateusz Morawiecki, who accused Sikorski of behaving “like a Russian propagandist.”

“The former foreign minister must weigh his words. I expect these disgraceful statements to be withdrawn. I call on the opposition to dissociate themselves from Radoslaw Sikorski's declaration,” Morawiecki tweeted.

Ukraine’s defeat may lead to WWIII – EU state's PM

It is not the first time Sikorski has been at odds with the government in Warsaw. In September, the ex-minister tweeted “Thank you, USA”alongside a photo of a massive gas leak caused by the sabotage of Russia’s Nord Stream pipelines in the Baltic Sea. 

Sikorski further congratulated those responsible for the act, saying the severe damage caused to the natural gas pipelines would force Russia to talk to Poland and Ukraine if it wanted to continue delivering gas to Europe. “Good work,”he concluded in a second tweet. He later deleted both tweets.

Russia responded to the former FM’s post by calling it an “official statement” confirming the Nord Stream incident was a “terrorist attack.” It still remains unclear who exactly was behind the sabotage as both Ukraine and Washington and its allies have denied responsibility.

https://www.rt.com/news/570363-poland-fm-ukraine-partition/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

Well played Putin 👏🏾.

பிரெக்சிற், டிரம்ப் தேர்வு போன்ற ஜனநாயகத்தை கொண்டே ஜனநாயக நாடுகளில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் copybook புட்டின் நகர்வு இது.

சுவீடன் நேட்டோவில் இன்னும் சேராதபோதும் உக்ரேனுக்கு ஆயுதம் கொடுக்கிறது.

அத்தோடு துருக்கி பின்லாந்துக்கு ஓகே சொன்னாலும் சுவீடனை குருதிப்போராளிகளை காட்டி நேட்டோவில் சேர்க முடியாது என்கிறது.

இடையில் புகுந்து விளையாடுகிறார் முன்னாள் உளவாளி😎.

சுவீடன் அரசு கெட்டிகாரர் எண்டால், குரானை எரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அதன் மூலம் துருக்கியை நெருங்க வேண்டும். 

Turkish President Recep Tayyip Erdogan has warned Sweden that it should not expect his backing to join NATO following the burning of the Quran outside Ankara’s embassy in Stockholm during a protest.
 
குர் ஆன் ஏரிப்பின் பின், சுவீடன் நேட்டோவில் இணைய தன் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்க கூடாது என்று அறிவித்தார், துருக்கியின் அதிபர் எர்டோகான்.

https://www.aljazeera.com/amp/news/2023/1/23/erdogan-to-sweden-dont-expect-turkish-support-for-nato-bid

பிகு

நேற்றைய கருத்து, நாளைய செய்தி.

ஆனால் இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் இல்லை. மூளையை 10% பாவித்தாலே போதும், என்ன நடக்குது என்பதை ஊகித்துவிடலாம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எர்டோகனின் உரையின் முக்கிய பகுதிகள். ஆங்கில மொழிபெயர்ப்புடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான் குடியில் கறுப்புக்கொடி காட்டவில்லையோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமை சதிவேலையாக இருக்கலாம்: அமெரிக்கா கூறுகிறது

By SETHU

24 JAN, 2023 | 03:41 PM
image

சுவீடனில் ஆர்ப்பாட்டமொன்றின்போது, புனித குர்ஆன் எரிக்கப்பட்ட வெறுக்கத்தக்க செயலானது ஒரு சதிநடவடிக்கையாக இருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹோமிலுள்ள துருக்கிய தூதரகத்துக்கு முன்னால் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, சுவீடன் - டென்மார்க் வலதுசாரி அரசியல்வாதியான ரஸ்முஸ் பலுதான் புனித குர்ஆனை எரித்தார்.

இச்சம்பவத்துக்கு ஐநா, துருக்கி, கத்தார், இந்தோனேஷியா, சவூதி அரேபிh, கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகள் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளன. 

இச்சம்பவத்துக்கு எதிராக யேமன் மற்றும் ஈராக்கில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

சுவீடனின் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சனும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். 'கருத்துச் சுதந்திரமானது எமது ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ளது. ஆனால், சட்டபூர்வமான ஒன்று பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதல்ல. பலருக்கு புனிதமானதாக உள்ள நூல்களை எரிப்பது அவமரியாதையான செயற்பாடு' என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், பலருக்கு புனிதமானதாக உள்ள நூல்களை எரிப்பது மிகவும் அவமரியாதைக்குரிய செயற்பாடு. இது வெறுக்கத்தக்கது' என்றார்.

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு அதன் அங்கத்துவ நாடான துருக்கியின் ஆதரவை சுவீடன் கோரியுள்ளது. 

இந்நிலையில்,  புனித குர் ஆன் எரிப்பு நடவடிக்கையானது துருக்கிக்கும் சுவீடனுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்த விரும்புவர்களின் சதியாக இருக்கலாம் எனவும் நெட்பிரைஸ் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/146584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஏராளன் said:

சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமை சதிவேலையாக இருக்கலாம்: அமெரிக்கா கூறுகிறது

அசடு முகத்தில் கிலோ கணக்கில் வழிகிறது😜.

துடைச்சிகோங்கோ மாமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி துருக்கி வால் ஏன் இப்படி ஆடுது?!

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

அது சரி துருக்கி வால் ஏன் இப்படி ஆடுது?!

எல்லாம் புட்லர் கொடுத்த வரம்.

பொருளாதாரம் அதள பாதாளத்தில், எல்லைகளில் பிரச்சனை என பல விடயங்களில் சிக்கு பட்டு, அமெரிக்காவோடு முரண்பட்டு கொண்டு நிண்டவர் எர்டோகன்.

புட்லர் மொக்குதனமாய் உக்ரேனில் இறங்க தருணம் பார்த்து தன் profile ஐ உயர்த்தி கொள்கிறது துருக்கி.

முன்பே ரஸ்யாவும், ஒட்டமான் பேரரசும் இந்த பிராந்தியத்தில் போட்டிதான்.

இடையில் ரஸ்யாவின் கை ஓங்கி இருந்தது.

புட்லரின் மொக்கு நகர்வை தனக்கு சாதகமாக பல முனைகளில் பயன்படுத்தி, ஈரோசியாவில் ரஸ்யாவுக்கு நிகரான சக்தி என்ற நிலையை அடைய முனைகிறது துருக்கி.

தனிப்பட்டு, அடுத்து வரும் தேர்தலில் எர்டோகானும் நல்ல பலனை அனுபவிப்பார்.

புட்லர் நேட்டோவுக்க்கு விலாசம் காட்ட வெளிகிட்டு, சீனா, துருக்கியிடம் உள்ளதையும் பறி கொடுக்கிறார்.

இதில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக நன்மை அடைவது, துருக்கியே.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

யேர்மனி ஆயுதங்கள் உள்ள போய் மெல்ல மெல்ல நேட்டோ உள்ளவந்து சாத்த தொடங்க (போரை கனகாலத்துக்கு நீடிக்க விட முடியாது) தொப்பி மாறி பிரளும் போல..?

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

யேர்மனி ஆயுதங்கள் உள்ள போய் மெல்ல மெல்ல நேட்டோ உள்ளவந்து சாத்த தொடங்க (போரை கனகாலத்துக்கு நீடிக்க விட முடியாது) தொப்பி மாறி பிரளும் போல..?

இருக்கலாம்.

ஆனால் ரஸ்யா ஒரு சக்தியாக இருக்கும் வரை துருக்கி நேட்டோ(அமெரிக்கா)வின் சீலைதலைப்பில் தொங்கியபடிதான் இருக்கும்.

அதேபோல் ரஸ்யா ஒரு சக்தியாக இருக்கும் வரை நேட்டோவும் துருக்கியை சகித்து கொள்ளும். 

துருக்கியின் அமைவிடம் அப்படி - குறிப்பாக ரஸ்யாவின் கடல் வாசலின் திறப்பு துருக்கியிடம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதுக்கு மேல எழுதமுடியாது

இரு தரப்பும் துருக்கியை குந்தில வைத்திருப்பது இதனால் தான். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2023 at 21:06, goshan_che said:

ஆனால் இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் இல்லை.

ராக்கெட் ஏவும் முக்கிய தனிம சுரங்கம் இரண்டாவது கண்டு பிடித்து கனிமம் எடுக்க துவங்கி விட்டார்கள் சுவீடன் காரர்கள் இனி ஐரோப்பாவில் சுவீடன் யார் என்பது புரியும்  உங்களுக்கு .

அந்த கனிமம் மிக முக்கியம் நேட்டோவுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

ராக்கெட் ஏவும் முக்கிய தனிம சுரங்கம் இரண்டாவது கண்டு பிடித்து கனிமம் எடுக்க துவங்கி விட்டார்கள் சுவீடன் காரர்கள் இனி ஐரோப்பாவில் சுவீடன் யார் என்பது புரியும்  உங்களுக்கு .

அந்த கனிமம் மிக முக்கியம் நேட்டோவுக்கு .

அப்படியா? அப்ப இனி ஸ்வீடனே வேண்டாம் எண்டாலும் நேட்டோ விடாது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

யேர்மனி ஆயுதங்கள் உள்ள போய் மெல்ல மெல்ல நேட்டோ உள்ளவந்து சாத்த தொடங்க (போரை கனகாலத்துக்கு நீடிக்க விட முடியாது) தொப்பி மாறி பிரளும் போல..?

உங்கள் அல்லது மேற்குலகு பார்வையில் புட்டின் விசரன் என்றால்.....´??????

அமெரிக்கா வெருட்டுவது போல் புட்டினும் சிவப்பு பொத்தானை அழுத்துவேன் என மிரண்ட்டால்!!?!?!?!?!?

பேச்சுவார்த்தை நல்லதா? ஏட்டிக்கு போட்டியாக ஆயுதங்களை பரிமாறுவது நல்லதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்திய சுவீடன் குர்றான் எரிப்பு என்பது ஓரிரு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. அதன்  தொடர்ச்சியாக தற்போதைய நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. 👇

(எங்கட மேதாவிகளுக்குத்தான் tabloits ஐ விட்டால் வேறு போக்கிடம் கிடையாது என்றால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்குமா இந்த நிலை )

நன்றியுள்ள பிராணி எங்கெல்லாம் போஸ்ரைக் காணுகிறதோ அங்கெல்லாம் உடனே காலைத் தூக்குவதுபோல, உலகில் எங்கெல்லாம் ஒரு பிரச்சனை ஆரம்பமாகிறதோ அதனையெல்லாம் ரஸ்யாவின் மீதும் புடின் மீதும் ஏசுவது வேலையற்றோருக்குரிய வேலையாகிவிட்டது. 

2022 Sweden riots

For the 1943 Easter Riots in Sweden, see Easter Riots.

Riots occurred in several Swedish cities in April 2022, primarily against police who were stationed to protect events planned by Danish politician Rasmus Paludan. The motivation for the violence was ostensibly Paludan's plan to burn a Quran; however, the police suspect that the event was used by criminal groups to target police.[6] Two-thirds of those injured were police officers.[7]

2022 Sweden riots
AP04 17 2022 000002B.jpg
A city bus burning on the street in Malmö, Sweden, on 16 April 2022
Date
15 April 2022 – 17 April 2022
Location
Sweden
Resulted in Charges brought against both rioters[1] and Rasmus Paludan[2]
Parties to the civil conflict
Rioters
Casualties and losses
3+ injured[4]
    • 14 members of the public injured
    • More than 20 vehicles damaged or destroyed
    • 47 people sentenced in court of law[5]
 
TimelineEdit

In April 2022, Paludan applied for permission for several rallies in Sweden which involved Quran burning. Regional police permitted some rallies and banned or moved others, depending on local circumstances.[15][16]

On 14 April, crowds rioted in the city of Linköping, attacking police vehicles and burning a car. Twelve police officers were injured and four of their cars set on fire by angry mobs in Örebro. Social media posts showed men breaking the windows of police cars as they screamed the Takbir.[17] Paludan successfully burned a Quran the next day in Rinkeby, causing more riots.[18]

An attempt to hold a gathering in Malmö on 16 April by Paludan was interrupted after people threw stones. Paludan was hit by a rock and the attackers were driven off with pepper spray.[19] Rioters also torched a bus in the city overnight.[20][8]

A ceremony to burn the Quran was set to take place in Landskrona, Scania, on 17 April, but was moved to Malmö by the police to prevent unrest. However, rioters in Landskrona stoned and set fire to vehicles, causing extensive property damage and intentionally obstructing traffic.[19] Police fired at them with ricochets in response, injuring three.[21]By the time the day had ended, widespread damage against both police and civilian property had occurred, including one school in Rosengård, Malmö, that had been set on fire.[22][13][23]

More than 200 people were involved in the violence and more than 40 people were arrested.[24] At least 104 police officers[25] and 14 members of the public were injured and more than 20 vehicles were damaged or destroyed.[24] At least one uninvolved civilian was also injured.[18]

முழுமையான தகவ்லுக்கு 👇

https://en.m.wikipedia.org/wiki/2022_Sweden_riots

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

1 - உங்கள் அல்லது மேற்குலகு பார்வையில் புட்டின் விசரன் என்றால்.....´??????

2 - அமெரிக்கா வெருட்டுவது போல் புட்டினும் சிவப்பு பொத்தானை அழுத்துவேன் என மிரண்ட்டால்!!?!?!?!?!?

3 - பேச்சுவார்த்தை நல்லதா? ஏட்டிக்கு போட்டியாக ஆயுதங்களை பரிமாறுவது நல்லதா?

1- புட்டினை யாரும் விசரன் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு செயலாலும் அவரே காட்டிக் கொடுக்கிறார்

2- விசரன் தான் முதலில் அழுத்தவேண்டி வரும் என்றார். இப்ப அழுத்தி தான் பாரேன் என்றவரை வந்து விட்டது. அழுத்துவாரா?????

3- பழைய இடத்தில் நின்று தானே பேசவேண்டும். கெடு குடி சொல் கேளாது நீங்கள் அறியாததா??? 

எனக்குள் இருக்கும் ஒரே ஒரு கவலை

எப்படி இருந்த ரசியா??

எப்படி இருந்த புட்டின்????

இப்படி ஆக்கியவன் விசரன் தானே.

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

1- புட்டினை யாரும் விசரன் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு செயலாலும் அவரே காட்டிக் கொடுக்கிறார்

2- விசரன் தான் முதலில் அழுத்தவேண்டி வரும் என்றார். இப்ப அழுத்தி தான் பாரேன் என்றவரை வந்து விட்டது. அழுத்துவாரா?????

3- பழைய இடத்தில் நின்று தானே பேசவேண்டும். கெடு குடி சொல் கேளாது நீங்கள் அறியாததா??? 

எனக்குள் இருக்கும் ஒரே ஒரு கவலை

எப்படி இருந்த ரசியா??

எப்படி இருந்த புட்டின்????

இப்படி ஆக்கியவன் விசரன் தானே.

உலகில் இப்படியான ஞானோதயங்கள் எல்லா தலைவர்களுக்கும் தோன்றியிருந்தால் இன அழிவுகளும் உயிர் அழிவுகளும்  வீண் அலைச்சல்களும் தோன்றியிருக்காதல்லவா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

உலகில் இப்படியான ஞானோதயங்கள் எல்லா தலைவர்களுக்கும் தோன்றியிருந்தால் இன அழிவுகளும் உயிர் அழிவுகளும்  வீண் அலைச்சல்களும் தோன்றியிருக்காதல்லவா? :cool:

எல்லோருக்கும் தோன்றுமா என்று தெரியாது

ஆனால் தோன்றினால் நல்லது

தோன்றணும் என்று வேண்டுவோம் பாடுபடுவோம்

நன்றியண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் மசூதி- துருக்கிய தூதரகம் முன்பு குரான் எரிப்பு!

டென்மார்க் மசூதி- துருக்கிய தூதரகம் முன்பு குரான் எரிப்பு!

இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் கோபன்ஹேகன் மசூதிக்கு அருகிலும், டென்மார்க்கில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியேயும் முஸ்லிம்களின் புனித நூலின் பிரதிகளை எரித்துள்ளார்.

டேனிஷ் மற்றும் சுவீடிஷ் குடியுரிமை பெற்ற தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான ராஸ்மஸ் பலுடன், ஏற்கனவே ஜனவரி 21ஆம் திகதி ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு போராட்டத்தை நடத்தி துருக்கி அரசாங்கத்தை கோபப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் ஒரு மசூதியின் முன்பும், கோபன்ஹேகனில் உள்ள துருக்கிய தூதரகத்தின் முன்பும் முஸ்லிம்களின் புனித நூலான குர்ரானை எரித்தார்.

மேலும், சுவீடன் நேட்டோவில் அனுமதிக்கப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடருவதாக உறுதியளித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து டென்மார்க் தூதர் துருக்கிய வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார்.

அங்கு துருக்கிய அதிகாரிகள் இந்த ஆத்திரமூட்டும் செயலுக்கு வழங்கப்பட்ட அனுமதியை வன்மையாகக் கண்டித்துள்ளனர், இது ஒரு வெறுப்புக் குற்றத்தை தெளிவாகக் கொண்டுள்ளது’ என கூறினர்.

தூதரிடம், டென்மார்க்கின் அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அனுமதி ரத்து செய்யப்படும் என்று துருக்கி எதிர்பார்க்கிறது என்றும் கூறப்பட்டது.

துருக்கியின் வெளியுறவு அமைச்சகம் பின்னர் பலுடானை இஸ்லாத்தை வெறுப்பவர் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது மற்றும் அவர் ஆர்ப்பாட்டத்தை நடத்த அனுமதிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது.

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பிறகு சுவீடன், ஃபின்லாந்துடன் சேர்ந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது, ஆனால் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் துருக்கி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். எனினும், சமீபத்திய எதிர்ப்புகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

அதற்கு முன்பே, குர்திஷ் ஆயுதக் குழுக்கள், ஆர்வலர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என்று கருதும் பிற குழுக்களை ஒடுக்க இரு நாடுகளுக்கும் துருக்கி அழுத்தம் கொடுத்தது.

https://athavannews.com/2023/1322114

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

குர்ஆன் எரிக்கப்பட்டது பற்றிய ஐ.நா. தீர்மானத்தில் இந்தியா என்ன செய்தது?

குரான் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இராக்கின் மொசூலில் குர்ஆன் பிரதியுடன் ஆர்ப்பாட்டம் செய்த பெண்

14 ஜூலை 2023

கடந்த ஆண்டு, பா.ஜ.க.-வின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான நுபுர் ஷர்மா, முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததற்கு இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (OIC) அதிருப்தி தெரிவித்ததையடுத்து, அவர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

நுபுர் ஷர்மா தொடர்பாக OIC ஆட்சேபனை தெரிவித்தது மட்டுமின்றி இஸ்லாமிய நாடுகளும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டன. இதனால் இந்தியாவுக்கு ஒரு சங்கடமான சூழ்நிலை உருவானது.

இப்போது ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட ஓஐசியின் கண்டனத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது.

இந்தியாவின் ஆதரவைப் பற்றி, தி இந்து ஆங்கில நாளிதழின் இராஜதந்திர விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர், "ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு எதிரான இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் (OIC) தீர்மானத்தை இந்தியா ஆதரித்துள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவு ஆகிய நாடுகளும் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன," என எழுதியுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் மற்றும் பாலஸ்தீனம் கொண்டு வந்த இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 28 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் பதிவாகின. ஏழு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சீனா, இந்தியா, கியூபா, தென்னாப்பிரிக்கா, யுக்ரேன் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்தன.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கோஸ்டாரிகா, மாண்டினீக்ரோ உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்காவும் இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

சிலி, மெக்சிகோ, நேபாளம், பெனின், பராகுவே போன்ற நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்த அவர்களின் பார்வைக்கு எதிரானது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்தன.

குரான் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

குர்ஆன் எரிப்பு சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வன்முறைகள் வெடித்தன

பாகிஸ்தானின் நோக்கம் என்ன?

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் நாட்டு தூதர் கலீல் ஹஷ்மி, யாருடைய கருத்துச் சுதந்திரத்தை எதிர்க்கும் நோக்கமும் தங்களுக்கு இல்லை என்று கூறினார்.

உலக நாடுகளின் கருத்துச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இத்தீர்மானத்தின் நோக்கம் என்றும் அரசுகளின் சிறப்புக் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையே சமநிலை இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், "உண்மையில் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் புனித குர்ஆனையோ அல்லது வேறு எந்த மத நூலையோ பகிரங்கமாக இழிவுபடுத்துவதைக் கண்டிக்க விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.

“இந்த சம்பவத்தை எதிர்க்கும் அரசியல், சட்ட, தார்மீக தைரியம் இந்த நாடுகளுக்குள் இல்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து எதிர்பார்க்கக்கூடிய குறைந்தபட்ச விஷயம் என்னவென்றால் அது இந்த சம்பவத்தை கண்டித்திருக்க வேண்டும்.” என்றும் கூறினார்.

அதே சமயம், ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனத் தூதர் சென் ஷு, “இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்து வருகிறது,” என்று இத்தீர்மானத்தை தனது நாடு ஆதரித்ததை நியாயப்படுத்தினார். சில நாடுகளில் குர்ஆன் எரிப்பு சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடந்து வருகின்றன என்றும், ஆனால் இந்த நாடுகள் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்ற அவர்களின் கொள்கைப்படி எதையும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குரான் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,

தீவிர வலதுசாரிகளால் முஸ்லிம்கள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் கிளம்பிய எதிர்ப்பு

இத்தீர்மானம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி மிச்செல் டெய்லர் பேசிய போது, இந்த விவகாரத்தில் தனது நாட்டின் அக்கறையை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

அவர், “இந்தப் பிரச்சினையில் மேலும் விவாதம் தேவை என்று நான் நம்புகிறேன். நாம் ஒன்றாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம்," என்றார்.

கடந்த மாதம் ஸ்டாக்ஹோம் மசூதிக்கு வெளியே குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக இந்தக் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

குர்ஆனை எரிக்க ஸ்வீடன் அதிகாரிகள் இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவரை அனுமதித்ததை அடுத்து இஸ்லாமிய உலகில் பெரும் கோபம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய நாடுகள் கோரிக்கை விடுத்தன.

குர்ஆன் எரிப்பு சம்பவம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி செவ்வாய்கிழமை கூறுகையில், "இந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதை கூர்ந்து கவனிக்கவேண்டும். இது வகுப்புவாத வெறுப்பு, பாகுபாடு மற்றும் வன்முறையை தூண்டுவதற்காக செய்யப்பட்டது. இது அரசுகளின் ஒப்புதலுடன் நடக்கிறது. இப்படி செய்பவர்கள் தங்களுக்கு எதுவும் ஆகாது என்று நினைக்கிறார்கள்," என்றார்.

இரான், சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சர்கள் சர்தாரியின் இந்த நிலைப்பாட்டுக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் குர்ஆன் எரிப்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சவுதி அரேபியா, சவுதி உள்ளிட்ட பல நாடுகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளை அடுத்து இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

"இந்த தீர்மானம் உலகெங்கிலும் உள்ள மதங்கள், கலாச்சாரம் ஆகியவற்றை மதிக்கும் சர்வதேச அணுகுமுறையை ஆதரிக்கிறது. அதே நேரத்தில், சர்வதேச சட்டங்கள் மனித விழுமியங்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதங்களையும் இது உறுதிப்படுத்துகிறது," என்று சவுதி அரேபியா தெரிவித்தது.

இது போன்ற பிரச்னைகளைச் சரிசெய்ய பேச்சுவார்த்தை மேற்கொள்ளுதல் மற்றும் சகிப்புத்தன்மையை பேணி காப்பது தொடர்பான நடவடிக்கைகளை சவுதி அரேபியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், வெறுப்பு மற்றும் தீவிரவாதத்தை பரப்பும் எந்த ஒரு முயற்சியையும் எதிர்க்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்தது.

குரான் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குர்ஆன் எரிப்பு சம்பவத்தைக் கண்டித்து முஸ்லிம் பெண்கள் நடத்திய போராட்டம்

கண்டனத் தீர்மானத்தை எந்த நாடுகள் ஆதரித்தன?

இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், அல்ஜீரியா, அர்ஜென்டினா, பொலிவியா, கேமரூன், கியூபா, எரிட்ரியா, காபோன், காம்பியா, ஐவரி கோஸ்ட், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மலாவி, மலேசியா, மாலத்தீவு, மொராக்கோ, கத்தார், செனகல், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, சூடான், உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன.

ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், கோஸ்டாரிகா, செக் குடியரசு, பின்லாந்து, லிதுவேனியா, லக்சம்பர்க், மாண்டினீக்ரோ, ருமேனியா ஆகிய நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்தன.

குரான் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,

தி இந்து ஆங்கில நாளிதழின் ராஜதந்திர விவகார ஆசிரியர் சுஹாசினி ஹைதர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு

என்ன நடந்தது? பதிலுக்கு இஸ்லாமிய நாடுகள் என்ன செய்தன?

கடந்த மாதம், பக்ரீத் பண்டிகையின் போது, இராக்கிய குடியேற்றவாசி ஒருவர், ஸ்டாக்ஹோம் மசூதிக்கு வெளியே குர்ஆன் பிரதியைக் கிழித்து, தீ வைத்து எரித்தார்.

இந்த சம்பவத்திற்கு வளைகுடா நாடுகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தானின் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

2020 ஆம் ஆண்டில், டென்மார்க்கில் ஒரு தீவிர வலதுசாரிக் குழு குர்ஆன் பிரதியை எரித்தது.

முன்னதாக, ஸ்வீடனின் தெற்கு நகரமான மால்மோவில் குர்ஆன் எரிப்பு சம்பவம் நடந்தது.

கடந்த மாதம் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அல்-அமிர் அப்துல்லாயன், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய நாடுகளை கேட்டுக் கொண்டார்.

குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தாரின் சர்வதேச ஒத்துழைப்புக்கான இணை அமைச்சர் லோலா ரஷித் அல் காதர், இது முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளிடையே வெறுப்பை பரப்பி, கோடிக்கணக்கான மக்களின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல் என்று கூறினார்.

கருத்துச் சுதந்திரம் சில சமயங்களில் இதுபோன்ற கருத்தை ஏற்கச் சொல்கிறது, ஆனால் அதை ஏற்க முடியாது என்று கத்தார் கூறியது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிர்வாகம் புனித குர்ஆன் அவமதிப்பு மற்றும் முஸ்லிம்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஸ்வீடன் நாட்டின் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது.

குரான் மீதான இந்தியாவின் நிலைப்பாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

குர்ஆன் எரிப்பைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம்

ஆனால், இந்தத் தடையால் ஸ்வீடன் நாட்டிற்குச் சொந்தமான எந்த அமைப்புகளின் பணிகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு ஸ்வீடன் தூதரகம் இது வரை இல்லை என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

ஆனால் ஆப்கானிஸ்தானுக்கான ஸ்வீடன் குழுவினர் அங்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பதற்காக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இக்குழுவினர் 25 லட்சம் நோயாளிகளுக்கு மருத்துவ வசதி செய்துகொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக ஓ.ஐ.சி.யின் கண்டனத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான ஓஐசி இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. OIC பொதுச்செயலாளர் ஹிசென் பிரஹிம் தாஹா 2022 டிசம்பரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம் ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை விடுத்திருந்தார்.

நுபுர் ஷர்மா விவகாரத்தில் OIC-யின் அறிக்கைக்கு இந்தியா கோபத்தை வெளிப்படுத்திய போதிலும், பின்னர் அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து ஆளும் பாஜக நடவடிக்கை மேற்கொண்டது.

OIC இன் முழுப் பெயர் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு. இது 57 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் ஒன்றாக இணைந்து ஏற்படுத்திய அமைப்பாகும். இந்த அமைப்பில் சவுதி அரேபியா மற்றும் நட்பு நாடுகள் அதிக ஆதிக்கம் செலுத்துவதாக கருதப்படுகிறது.

https://www.bbc.com/tamil/articles/crgln23xwk3o

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.