Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயம்

By T. SARANYA

23 JAN, 2023 | 04:26 PM
image

இலங்கையில் கிட்டத்தட்ட 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக இலங்கையின் உயிர்பல்வகைமை செயலகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிர்பல்வகைமை  செயலகத்தின் பணிப்பாளர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன் சீன ஊடகம், சின்ஹுவாவிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையானது 435 வகையான பறவையினங்களைக் கொண்ட  உயிர்பல்வகைமை  பெருக்கத்தின் முக்கிய இடமாக இருப்பதாகவும், 2022 ஆம் ஆண்டின் சிவப்பு தரவுப் புத்தகத்தில் நாடளாவிய ரீதியிலான ஆய்வின் போது இது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அபேகோன் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மனிதர்கள் அவற்றின் வாழ்விடங்களை சேதப்படுத்துவதால் பறவைகள் அழியும் அபாயத்தை எதிர்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிவப்பு தரவு புத்தகம் என்பது அழிந்து வரும் மற்றும் அரிய வகை தாவரங்கள், விலங்குகளை பதிவு செய்யும் பொது ஆவணமாகும்.

https://www.virakesari.lk/article/146515

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.