Jump to content

ஆறுமாதத்திற்குள் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய திட்டம் - மத்திய வங்கி ஆளுநர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆறுமாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கதெரிவித்துள்ளார்.

இலங்கை தனது அனைத்து கடன் மீள்கொடுப்பனவையும் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உள்ளது அடுத்த ஆறுமாதங்களிற்குள் கடன்மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தமாதம் சிறந்த முன்னேற்றங்கள் காணப்படுகின்றன இந்தியா ஏற்கனவே நிதி உத்தரவாதத்தை வழங்கியுள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சீனா ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து விரைவில் உத்தரவாதம் கிடைக்கும் என அவர் எக்கனமிக் அவுட்லக் 2023 என்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைத்தால் நாங்கள் பின்னர் வர்த்தக மற்றும் இரு தரப்பு கடன்வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை ஆறுமாதங்களிற்குள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்,என தெரிவித்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் கடன் மறுசீரமைப்பிற்கான காலஅட்டவணையே முக்கிய  பிரச்சினையாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடன்பேண்தகுதன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இலங்கை பேண்தகு வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும் எனவும்மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் கழக நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆறுமாதத்திற்குள் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய திட்டம் - மத்திய வங்கி ஆளுநர் | Virakesari.lk

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.